வாருங்கள், Eswarathasan!

வாருங்கள் Eswarathasan, உங்களை வரவேற்கிறோம் ! :D

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> இருக்கும் பொத்தானை அழுத்தவும் .

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

-- சுந்தர் \பேச்சு 10:39, 27 நவம்பர் 2008 (UTC)Reply

பேச்சு:ஈஸ்வரதாசன் - இங்கே உங்கள் கருத்துக்கு நான் மறுமொழி இட்டுள்ளேன். கூடவே இங்கு தொடர்ந்து பங்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளேன். நன்றி. -- சுந்தர் \பேச்சு 10:39, 27 நவம்பர் 2008 (UTC)Reply

வானொலிக் கலை தொகு

ஈசுவரதாசன், வானொலிக்கலையும், இன அடையாளமும் என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரை விக்கிபீடியா கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருக்கவில்லை. வலைப்பக்கத்தில் நீங்கள் எழுதிய கட்டுரையை அப்படியே பிரதி பண்ணியிருக்கிறீர்கள். இக்கட்டுரையை வானொலிக் கலை அல்லது ஒலிபரப்புக் கலை பற்றிய தகவல் கட்டுரையாக நீங்கள் மாற்றி எழுத முயலுங்கள். உங்களுக்கு இங்கு பலரும் உதவக் காத்திருக்கிறார்கள். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 08:48, 28 நவம்பர் 2008 (UTC)Reply

மிக்க மகிழ்ச்சி அன்பரே! கவனத்தில் எடுத்து 'தொடர்பூடகவியல்' எனும் விடயத்தினூடாக 'ஒலிபரப்புக்கலை' 'வானொலிக்கலை'எனத்தொடரலாம். மீண்டும் சரியான முறையில் வடிவமைக்கவே அதை அப்படியே இட்டுவிட்டேன். ஆகவே ஏற்கனவே இடப்பட்ட விதம் குறித்து குறைவிளங்க வேண்டாம். --நேசமுடன்...சு.பா.ஈஸ்வரதாசன்.

ஈஸ்வரதாசன், வானொலிக்கலை, ஒலிபரப்புக் கலை பற்றிய உங்கள் நீண்ட கட்டுரைக்கு நன்றி. --செல்வா 14:37, 28 நவம்பர் 2008 (UTC)Reply

மிக்க மகிழ்ச்சி செல்வா. கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்கு. --நேசமுடன்...சு.பா.ஈஸ்வரதாசன்.19:23, 28 நவம்பர் 2008 (UTC)Reply

கட்டுரையைத் திருத்தி எழுதியமைக்கு நன்றிகள்.--Kanags \பேச்சு 20:58, 28 நவம்பர் 2008 (UTC)Reply

பேச்சுப் பக்கங்களில் கையொப்பமிட தொகு

 
இந்தப் பொத்தானை அமுக்கவும்

.

கட்டுரை மற்றும் திட்டப் பக்கங்களைத் தவிர, பேச்சுப் பக்கங்களிலும் பிற இடங்களிலும் கையொப்பம் இட ~~~~ என நான்குமுறை டில்டா என்னும் நெளிக்கோட்டை இடலாம் அல்லது நீங்கள் தொகுக்கும் பொழுது மேலே toolbar இல் உள்ள ஒரு பொத்தானை அமுக்கி இடலாம் (படம் அருகில் காட்டப்பட்டுள்ளது). மேலும், நீங்கள் இரண்டு (அல்லது மூன்று பெயர்களில்) பயனராக இணைந்துள்ளதாகத் தெரிகிறது. நீங்கள் விரும்பும் ஒரு பெயரை மட்டும் விக்கிப் பயனராக வைத்திருப்பது உங்களுடன் உரையாடுவதில் ஏனையோருக்கு இலகுவாக இருக்கும். நன்றி.--Kanags \பேச்சு 20:58, 28 நவம்பர் 2008 (UTC)

நல்லது அன்பரே! எனது முதல் பயனர் மின்னஞ்சல் முகவரியில் ஏதோ தவறேட்பட்டதனால், எனது புகுபதிகை மீண்டும் அனுப்புதலும் அதற்கேற்பவே அனுப்பப்பட்டமையே காரணம். Eswarathasan என்பது பயன்பாட்டிலிருக்கட்டும். மற்றது தவிர்க்கப்படட்டும். தமிழில் ஈஸ்வரதாசன் என மாற்ற முடிந்தால் நல்லது. மகிழ்ச்சி வணக்கம்.--நேசமுடன்...சு.பா.ஈஸ்வரதாசன். 21:41, 28 நவம்பர் 2008 (UTC)Reply

விக்கிப்பீடியாவுக்கு நல்வரவு, சில குறிப்புகள் தொகு

விக்கிப்பீடியாவுக்கு நல்வரவு ஈஸ்வரதாசன். விக்கி நடை அல்லது கட்டுரைகள் சில பண்புகளைக் கொண்டிருக்கும். அவை தொடர்பாக சில குறிப்புகள்.

  • ஒரு தலைப்பின் வரைவிலக்கணத்தை முதல் வரியில் அல்லது முதல் பந்தியில் தருவது நன்று.
  • உள்ளிணைப்பு, இடையிணைப்பு, வெளியிணைப்புகள் சகிதம் நாம் பல சொற்களின் மேற்பட்ட தகவல்களுக்கு தொடுப்பு தர முடியும். தகவல் பரப்பு பெரிதான கட்டுரைகளை நாம் பல கட்டுரைகளாக பிரித்து ஒரு பொதுக் கட்டுரையுடன் இணைக்க முடியும். எ.கா தமிழர் கட்டுரை பல முதன்மைக் கட்டுரைகளைக் கொண்ட ஒரு பொதுக் கட்டுரை. இங்கு எந்த அளவுக் கட்டுப்பாடும் இல்லை.
  • ஒரு பொதுவாக ஓரு கட்டுரையின் உள்தலைப்பை இணைப்பாக இடுவதில்லை. மாற்றாக அதே சொல்லு அந்த பந்தியில் வரும் இடத்தில் இணைப்பு தரலாம்.
  • இவற்றை உங்கள் கவனத்துக்கு எடுத்துவரது மட்டுமே எனது நோக்கம். புதுப்பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா எப்படி இயங்குகிறது என்று புரிய சில கட்டுரைகள் எடுக்கும். எனவே தொடர்ந்து பங்களியுங்கள். கேள்விகள் இருந்தால் கேளுங்கள், பயனர்கள் இயன்றவரை உதவுவர்.

நன்றி. --Natkeeran 22:26, 28 நவம்பர் 2008 (UTC)Reply

மிக்க மகிழ்ச்சி அன்பரே! நல்ல தகவல்கள் கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் பங்குண்டு. --நேசமுடன்...சு.பா.ஈஸ்வரதாசன். 10:47, 29 நவம்பர் 2008 (UTC)Reply

செயற்கை உயிரி தொகு

செயற்கை உயிரி பற்றிய உங்கள் செய்திக்கு நன்றி. இது ஒரு செய்திக் கட்டுரையாக இருப்பதால் இதனை விக்கிசெய்திக்கு மாற்றியுள்ளேன். இங்கு முதற் பக்கத்தில் அதற்கான தொடுப்பையும் இணைத்திருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 22:54, 21 மே 2010 (UTC)Reply

செய்தி தொகு

வணக்கம் ஈசுவரதாசன், நீண்ட காலத்துக்குப் பின் இந்தப் பக்கம்:) நீங்கள் பகுப்பு:கண்டுபிடிப்பாளர்கள் பக்கத்தில் இட்ட கட்டுரை விக்கிசெய்திக்கே பொருத்தமானது. நீங்களே அச்செய்தியை விக்கிசெய்தியில் எழுதலாம். அந்த இளம் விஞ்ஞானி பற்றிய தகவல்களை இங்கு விக்கிப்பீடியாவில் தனிக்கட்டுரையாகத் தாருங்கள். அவரைப் பற்றிய ஓரளவு தகவல்கள் இருந்தால் போதுமானது. மேலும், பகுப்புகளில் கட்டுரைகள் சேர்ப்பதில்லை. தனிக்கட்டுரைகளாக்கி கட்டுரையின் அடியில் பகுப்பைச் சேர்த்தால் அந்தப் பகுப்பினுள் கட்டுரை இணைக்கப்பட்டுவிடும். இதுதான் விக்கி நடைமுறை. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 22:58, 24 சூன் 2011 (UTC)Reply

நன்றி தொகு

வணக்கம் Kanags அவர்களே! உங்கள் விழிப்புத் தகவலுக்கு நன்றி நண்பரே! விடயத்தைக் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன். ஏதாவது குறைகள் இருப்பின் உதவிடுங்கள். நன்றி.--நேசமுடன்...சு.பா.ஈஸ்வரதாசன். 23:05, 24 சூன் 2011 (UTC)Reply

பங்களிப்பு வேண்டுகோள் தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:15, 21 சூலை 2011 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Eswarathasan&oldid=3184120" இலிருந்து மீள்விக்கப்பட்டது