வாருங்கள்!

வாருங்கள், G.Kiruthikan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:58, 1 சூன் 2012 (UTC)


படம் சேர்க்கும் போதுதொகு

வணக்கம் Kiruthikan. நீங்கள் படம் இணைக்கும் போது அக்கட்டுரையில் உள்ள மற்ற படங்களின் இடம் முடிந்தளவு இஅட்ம் மாறாதவாறு இணையுங்கள். இரட்டை விண்மீன்கள் கட்டுரையில் இடது பக்கம் அதற்கான விளக்கமும் வலது பக்கத்தில் அதற்கான படமும் இருந்தது. நீங்கள் இணைத்த படத்தால் அது கீழ் நகர்ந்துவிட்டது.

நீங்கள் படங்கள் இணைத்ததற்கும், மற்றவர்கள் கட்டுரைகளை விரிவுபடுத்துவற்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:46, 20 சூன் 2012 (UTC)

:படிமம்:Council Chamber of Parakramabahu I.jpg இன் பதிப்புரிமை என்ன?தொகு

படிமம்:Council Chamber of Parakramabahu I.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான பதிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா பதிப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. பதிப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்ற தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகுவிரைவில் நீக்கப்படும். உங்களுக்கு இத்தகவல்கள் தெரிந்திருப்பின் பதிப்புரிமை வார்ப்புரு ஒன்றைப் படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான வினாக்கள் இருப்பின் பதிப்புரிமை வினாக்கள் பக்கத்தில் கேட்கவும். சண்முகம்ப7 (பேச்சு) 15:32, 3 சூலை 2012 (UTC)

படிமப் பக்கத்தில் உள்ள தொகு பொத்தானை அழுத்தி தேவையான காப்புரிமை வார்ப்புருவை சேர்க்கலாம், மீளப் பதிவேற்ற வேண்டியதில்லை. அந்தப் படிமம் நீங்களே எடுத்தது எனில் {{PD-self}} வார்ப்புருவை இணைக்கவும். இல்லையேல் எங்கிருந்து எடுத்தது எனும் மூலத்தைக் குறிப்பிடவும்.--சண்முகம்ப7 (பேச்சு) 10:35, 7 சூலை 2012 (UTC)
இந்தப் படிமம் ஏன் பக்கவாட்டில் உள்ளது? நிமிர்த்தி மீண்டும் தரவேற்ற முடியுமா?--Kanags \உரையாடுக 11:09, 7 சூலை 2012 (UTC)

கதிதொகு

கிருத்திகன், சர்ச்சைக்குரிய கட்டுரைத் தலைப்புகளை மாற்றும் போது உரையாடிவிட்டு மாற்றுவதே விக்கிப்பண்பு. கதி கட்டுரையில் இது பற்றி உரையாடியிருக்கிறோம். உங்கள் கருத்துகளை அங்கு பதியுங்கள்.--Kanags \உரையாடுக 11:14, 3 ஆகத்து 2012 (UTC)

பாராட்டுகள்தொகு

சிம்போரசோ (எரிமலை) என்னும் கட்டுரையைப் பார்த்தேன். பாராட்டுகள். சில மாற்றங்கள் செய்துள்ளேன், தலைப்பையும் சிறிது மாற்றியுள்ளேன். அதன் பேச்சுப்பக்கத்தையும் பாருங்கள்.--செல்வா (பேச்சு) 21:38, 22 ஆகத்து 2012 (UTC)

நன்றிதொகு

கிருத்திகன், உங்களைப் பற்றிய தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி. தொடர்ந்து பங்களியுங்கள்.--Kanags \உரையாடுக 11:08, 24 ஆகத்து 2012 (UTC)

மூச்சுத் தொகுதிதொகு

பார்க்க: பேச்சு:மூச்சுத் தொகுதி.--Kanags \உரையாடுக 12:29, 26 ஆகத்து 2012 (UTC)

கிருத்திகன்! பேச்சு:மூச்சியக்கம் என்ற பக்கத்தில் விரிவாகி உரையாடி முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாருங்கள். அதன்படி, Breathing மூச்சுவிடல் எனவும், Respiration (Physiology) மூச்சியக்கம் எனவும், Cellular respiration உயிரணு ஆற்றல் பரிமாற்றம் எனவும் பெயரிடப்பட்டது. அதேநேரம் சுவாசம், சுவாசத் தொகுதி என்ற தலைப்புக்களில் வழிமாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.--கலை (பேச்சு) 10:11, 27 ஆகத்து 2012 (UTC)

இயற்கைக்கான உலகளாவிய நிதியம்தொகு

வணக்கம் கிருதிகன், நாம் தமிழ் விக்கியில் ஆங்கிலத்தில் தலைப்பிடுவதில்லை ஆதலால் உங்கள் கட்டுரை இப்பெயருக்கு இயற்கைக்கான உலகளாவிய நிதியம் நகர்த்தப்பட்டுள்ளது--சண்முகம்ப7 (பேச்சு) 15:36, 28 ஆகத்து 2012 (UTC)

தட்பவெப்பநிலைதொகு

இக்கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் தலைப்புப் பற்றி உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:57, 8 செப்டெம்பர் 2012 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
புதிய கட்டுரைகளை உருவாக்குவதுடன் உரையாடல்களிலும் ஆர்வத்துடன் பங்குபற்றுவதற்காக இப்பதக்கம்! மதனாகரன் (பேச்சு) 13:07, 11 செப்டெம்பர் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நொதுமி விண்மீன்தொகு

இம்மீன் நொதுமிக்களால் உண்டாவதில்லை. அதிக அழுத்தத்தில் மற்ற இரு அடிப்படைப் பொருட்களும் மாறிவிட/எகிறிவிட நொதுமிகள் மட்டும் இருப்பதால் நொதுமி விண்மீன் எனப்பெயர். அவை வெளியிடுவதே துடிப்பலை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:48, 20 செப்டெம்பர் 2012 (UTC)

முதுகெலும்பிதொகு

வணக்கம் கிருத்திகன், இலங்கை வழக்கு, தமிழக வழக்கு குறித்து ஒரு நினைவூட்டல். முதலில் கட்டுரை எந்த வழக்கில் எழுதப்படுகிறதோ அந்த வழக்கிலேயே இருத்தல்தான் தமிழ் விக்கி நடைமுறை என நினைக்கிறேன். அடைப்புக் குறிக்குள் மற்றொரு வழக்குச் சொல்லை தரலாம், நன்றி --சண்முகம்ப7 (பேச்சு) 10:53, 8 திசம்பர் 2012 (UTC)

பதக்கம்தொகு

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
அறிவியல் தொடர்பாக தொடர்ச்சியாக பல நல்ல கட்டுரைகளை ஆக்கி வரும் தங்களைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். கிருஷ்ணா (பேச்சு) 09:32, 10 திசம்பர் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்புதொகு

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும்.

வணக்கம் கிருத்திகன். நீங்கள் இலங்கையில் வதியும் மாணவர் ஆகையால் உங்கள் கட்டுரை ஏற்கப்படும் இடத்து, நேரடியாகப் பங்களிக்க முடியும் எனில் உங்கள் போக்குவரத்து/தங்கிடச் செலவுகள் ஒழுங்கமைப்பாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். நன்றி. --Natkeeran (பேச்சு) 19:37, 26 திசம்பர் 2012 (UTC)

உயிரினங்களின் பரிணாம வரலாறுதொகு

கிருத்திகனாரே நீங்கள் உயிரினங்களின் பரிணாம வரலாறு எழுதத் தொடங்கியதைக் கண்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது மிக முக்கியமான கட்டுரை. அதனால் இதை மேற்கோள்களோடு எழுத வேண்டும். எனக்கு இது முக்கியம் அவசியமான கட்டுரை. நான் பகுப்பு:தமிழகத்தில் கற்காலம் பகுதியில் உள்ள கட்டுரை போலவே பழங்காலங்களுக்கும் எழுத வேண்டும் என்ரு இருந்தேன். அதற்கு இக்கட்டுரை மிகவும் உதவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:51, 9 சனவரி 2013 (UTC)

நன்றிதொகு

  நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:09, 14 சனவரி 2013 (UTC)


அறிவியல் தமிழ் பங்களிப்பாளர்தொகு

வணக்கம், G.Kiruthikan!

தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவியல் தமிழ் கட்டுரைகள் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவியலைத் தமிழுக்கும், தமிழ் பேசுவோருக்கு அறிவியலையும் எடுத்துச்செல்வதில் உங்கள் பங்களிப்பு உதவியாக அமையும். கலைச்சொற்கள் உதவி தேவைப்படின் கலைச்சொல் ஒத்தாசை பக்கத்தில் கேளுங்கள். தமிழ் உசாத்துணைகள் உதவி தேவை எனின் :உசாத்துணைப் பக்கத்தில் கேக்கவும். உங்களுக்கு ஈடுபாடு இருக்கக் கூடிய மேலதிக இணைப்புகள்:

--Natkeeran (பேச்சு) 13:03, 25 ஏப்ரல் 2013 (UTC)

பள்ளி மாணவன்தொகு

தாங்கள் பங்களிப்புக்கள் பிரமிக்க வைக்கின்றன.மேலும் என்னைப்போலவே மாணவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி.அத்துடன் இப்பக்கத்தையும் பார்த்து விடவும்.மேலும் உமது பயனர் பக்கத்தில் நீர் விரும்பின் {{மாணவப் பயனர்}} எனும் வார்ப்புருவை இணைக்கலாம்.நன்றி -- :) நிஆதவன் ( உரையாட ) 06:58, 6 சூலை 2013 (UTC)

வணக்கம். உங்களைப் பற்றி மேலதிக தகவல்களை த்ந்தால் நன்று. இனிவரும் நாளிதழ் செய்திகளில் அதை இடம்பெற செய்யலாம். மாணவர் என்றால் பள்ளி மாணவரா? கல்லூரி மாணவரா? உங்கள் பெயரை தினமணியில் சேர்க்கவில்லை என்று மேலிடத்தில் இருந்து புகார் வந்துள்ளதால் தயை கூர்ந்து தகவல்களை விரைவில் தர வேண்டுகிறேன். இல்லை என்றால் மேலிடத்தின் கோவத்துக்கு அளாகலாம். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:24, 16 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டிதொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:52, 27 அக்டோபர் 2013 (UTC)

பள்ளி மாணவன்தொகு

விக்கிப்பீடியா:பள்ளி மாணவர்கள் இங்கு தங்களைப்பற்றிய விபரங்களைத் தர முடியுமா?, மேலும் கடந்த மூன்றாம் தவணைப் பரீட்சை யில் நீங்கள் பெற்ற புள்ளிகளை விரும்பினால் விக்கிப்பீடியா:பள்ளி மாணவர்கள்/பாடசாலைக் கல்விப் பெறுபேறுகள் இங்கு தந்து விடுங்கள்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:23, 26 திசம்பர் 2013 (UTC)

உரையாடல் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 06:33, 26 திசம்பர் 2013 (UTC)

அசைவு விபரியல்தொகு

இக்கட்டுரையைக் கவனிக்கிறேன். kinematics என்பதற்கு இது சரியான தமிழ்ச் சொல்லா எனத் தெரியவில்லை. உங்கள் கருத்தை அதன் உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 08:29, 26 திசம்பர் 2013 (UTC)


விக்கித்திட்டம் வானியலில் பங்கேற்க அழைப்பு


வணக்கம், G.Kiruthikan!

 • தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 • தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க ஓர் அரிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
 • இத்திட்டத்தில் இணைந்து வானியல் துறையில் பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
 • நீங்கள் இத்திட்டத்தை வளர்த்தெடுக்க பெரிதும் உதவுவீரகள் என நம்புகிறேன், ஆகவே இத்திட்டதிற்காக முன்னின்று உழைத்துச் செயற்பட உங்களை வேண்டுகிறேன்.
 • பங்காற்றும் வழிகளைப்பற்றி அறிய இப் பக்கத்தில் உள்ள பங்காற்றும் வழிகளில் உள்ள விடங்களைப் பற்றி வாசித்து பங்களிக்கும் முறைகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

வானியல், ஐஓ (சந்திரன்), செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம், கியூரியோசிட்டி தரையுளவி, சூரியக் காற்று என பல்வேறு வானியல்க் கட்டுரைகள் பலவற்றிலும் தங்கள் பங்களிப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது, ஆகவே தாங்களும் விக்கித்திட்டம் வானியலில் பங்கேற்று பிரகாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். -அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:13, 26 திசம்பர் 2013 (UTC)

செய்திதொகு

உங்களுக்கு இங்கு ஒரு செய்தி உள்ளது. பார்க்கவும். --நந்தகுமார் (பேச்சு) 19:31, 27 திசம்பர் 2013 (UTC)

நன்றிதொகு

  நன்றி!விக்கித்திட்டம் வானியலில் இணைந்து கொண்டதிற்கு நன்றி, இப்படியே உங்கள் உழைப்பு விக்கித்திட்டம் வானியலிற்காக மேலும் மேலும் தொடர வேண்டும். --திரைகடல் ஓடித் திரவியம் தேடு யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:12, 3 சனவரி 2014 (UTC)

உதவி:பக்கத்தை நகர்த்துதல்...தொகு

இங்கும் காணுங்கள்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:37, 30 சனவரி 2014 (UTC)


மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்தொகு

வணக்கம், G.Kiruthikan!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 07:57, 2 பெப்ரவரி 2014 (UTC)

  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

99தொகு

அண்ணா இதுவரை 99 கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி அசத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:04, 5 பெப்ரவரி 2014 (UTC)

  விருப்பம்; அமைதியான பங்களிப்பாளர்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
  விருப்பம் அது மட்டுமல்லாமல் பல முக்கிய கட்டுரைகளிலும் முக்கிய பங்கு எடுக்கிறார். வாழ்த்துக்கள் அண்ணா...--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:56, 7 பெப்ரவரி 2014 (UTC)


மாணவர் பங்களிப்பு -கருத்துக்கள்தொகு

கருத்துக்களை வரவேற்கிறேன்....--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:46, 9 பெப்ரவரி 2014 (UTC)

வணக்கம், G.Kiruthikan. உங்களுக்கான புதிய தகவல்கள் விக்கிப்பீடியா பேச்சு:பள்ளி மாணவர்கள் பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


பதக்கம்தொகு

  சிறந்த முக்கிய கட்டுரை உருவாக்குனர்
வணக்கம்! உங்களைப் போன்றே சிறந்த பல கட்டுரைகளை உருவாக்கிட எனக்கும் ஆசை! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:40, 20 ஏப்ரல் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

இவரது பங்களிப்புக்கு பதக்க மழை பெய்யவேண்டும்..... :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:02, 20 ஏப்ரல் 2014 (UTC)

பயனுள்ள கருவிதொகு

வணக்கம் கிருத்திகன், இந்த மாற்றத்தை என்ற கருவி கொண்டு ஐந்து செக்கன்களில் தொகுத்தேன். நீங்கள் இந்தக் கருவியைப் பயன்படுத்துவதில்லைப் போல் தெரிகிறது. இதனை உங்கள் விருப்பத்தேர்வுகளில் நிறுவுங்கள். மிக இலகுவாக விக்கியிடை இணைப்புகளை இணைக்கலாம். பார்க்க. உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 12:31, 24 ஏப்ரல் 2014 (UTC)

பூஞ்சைகள்தொகு

பூஞ்சணங்கள் தாவர இனத்தைச் சார்ந்தவை அல்ல என்று நீங்கள் கருத காரணம் என்ன? --≈ உழவன் ( கூறுக ) 08:04, 5 மே 2014 (UTC)

பதக்கம்தொகு

  அறிவியல் பதக்கம்
பாராட்டுகள்! அன்புடன்... மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:32, 9 மே 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

வாழ்த்துக்கள்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 14:38, 9 மே 2014 (UTC)

17 வயதில், இப்படியொரு எழுத்தாற்றலா?! நல்ல தமிழில் முழுமையான தகவல்களுடன் எழுதும் இவர், எந்தவித அலட்டலும் இல்லாது, தொடர்ந்து பங்களிப்பது - மிகப்பெரிய ஆச்சரியம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:43, 9 மே 2014 (UTC)

  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:56, 9 மே 2014 (UTC)

  விருப்பம், வாழ்த்துக்கள் அண்ணா.....--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:30, 9 மே 2014 (UTC)

அறிவியல் கட்டுரைகளை மிக ஆழமாக எழுதும் உங்களுக்கு எனது வாழ்த்துகளும் உரித்தாகுக.--Kanags \உரையாடுக 00:39, 10 மே 2014 (UTC)

உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!--G.Kiruthikan (பேச்சு) 05:56, 11 மே 2014 (UTC)

ஆங்கில அல்லது அறிவியல் பெயர்தொகு

அறிவியல் தொடர்பான நல்ல முழுமையான கட்டுரைகள் எழுதுவதற்கு எனது பாராட்டுகள். ஒரு சிறு பரிந்துரை: கட்டுரையின் ஆரம்பத்தில் கட்டுரைத் தலைப்பு வரும் பகுதியில் அதன் ஆங்கில அல்லது அறிவியல் பெயரை அடைப்புகளுக்குள் இடுவது வழக்கம். உங்கள் கட்டுரைகளில் அவை தரப்படுவதில்லை. குறிப்பாக கலைச்சொற்கள் இலங்கை, இந்திய வழக்கப்படி சில மாறுபட்டிருக்கலாம். எனவே இந்த ஆங்கிலப் பெயர்கள் தருவது மிக அவசியம். ஆங்கிலத்தில் எழுதித் தேடும் போது கட்டுரை விக்கி தேடுபொறியில் கிடைக்கும் என்பதும் ஒரு முக்கிய அனுகூலம். நன்றி.--Kanags \உரையாடுக 10:59, 29 மே 2014 (UTC)

இனிமேல் அவ்வாறே செய்கின்றேன். நன்றி.--G.Kiruthikan (பேச்சு) 11:10, 29 மே 2014 (UTC)

படிமங்கள் தமிழாக்கம்தொகு

கிருத்திகன், பொதுவகத்தில் உயிரியல் என்ற பகுப்புக்குள் பல படிமங்களத் தமிழ்ப்படுத்தித் தரவேற்றியுள்ளீர்கள். தமிழ்ப் படுத்தியதை விட, மூலப் படிமங்கள் உங்களுடையதா? அல்லது பொதுவகத்தில் ஏற்கனவேயுள்ள ஆங்கிலப் படிமங்களைத் தமிழ்ப்படுத்தினீர்களா? மூலப் படமும் உங்களுடையது என்றால் இப்போதுள்ள வார்ப்புரு சரியானது. அல்லாதுவிடின் அந்தப் படிமங்கள் வருங்காலத்தில் நீக்கப்படும் ஆபத்து உள்ளது. உங்கள் உழைப்பும் வீணாகிவிடும். உங்களுடைய மூலப் படிமம் இல்லாதுவிடின் எங்கிருந்து எடுக்கப்பட்டது, காப்புரிமையற்ற படிமமா என்பது கூறப்பட வேண்டும். நன்றி.--Kanags \உரையாடுக 09:38, 22 சூன் 2014 (UTC)

மூலப்படம் எதுவும் என்னுடையது அல்ல. ஒவ்வொரு படிமத்திலும் ta என்பதை நீக்கினால் மூலப்படம் வரும். ஆனால் மூலப்படங்கள் அனைத்திலும் grants anyone the right to use this work for any purpose, free to share, remix என்று இருந்து. எனவே நான் இவ்வாறு மொழிபெயர்த்தேன். தற்போது இதை எப்படி இப்பிரச்சினையைத் தீர்ப்பது என்றும் புரியவில்லை. நல்ல வழியைக் காட்டி உதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். படிம மொழிபெயர்ப்பில் வேறு என்னென்ன சிக்கல் உள்ளதோ தெரியவில்லை. அத்துடன் இனிமேல் ஆக்க உரிமையை எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்றும் கூறுங்கள். அறியத்தந்தமைக்கு நன்றி.--G.Kiruthikan (பேச்சு) 11:00, 24 சூன் 2014 (UTC)
மூலப் பிரதி காப்புரிமம் இல்லாது விடினும், மூலம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும். அப்படிமம் முழுவதும் உங்களுடையது என நீங்கள் உரிமை கோர முடியாது தானே:) இந்தப் படத்தைப் பாருங்கள். அல்லது அப்பகுப்பினுள் உள்ள வேறு படிமங்களையும் பாருங்கள். மேலதிக விளக்கம் அல்லது உதவி தேவையாயின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 12:07, 24 சூன் 2014 (UTC)
நன்றி, அனைத்திலும் மூலத்தை இடுகின்றேன்.--G.Kiruthikan (பேச்சு) 12:12, 24 சூன் 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் G.Kiruthikan!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:33, 30 திசம்பர் 2014 (UTC)
வணக்கம் கிருத்திகன். உங்களது இம்மாதத் தொகுப்புகளைக் காண மகிழ்ச்சி. தொடர்ந்து முனைப்புடன் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியரின் கூட்டு முயற்சியை வெற்றியடையச் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 16:46, 11 சனவரி 2015 (UTC)

பங்களிப்பு வீத மாற்றம்தொகு

இன்னும் சிறிது காலத்துக்கு (2016 ஆகஸ்ட்) வரை உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகும் முகமாக எனது பங்களிப்பு வீதம் மிகக் குறைவாக இருக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.--G.Kiruthikan (பேச்சு) 07:57, 28 மார்ச் 2015 (UTC)

  விருப்பம். உயர்தர சோதனையில் சிறப்புடன் வெற்றிபெற வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 08:11, 28 மார்ச் 2015 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1தொகு

 


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:29, 12 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவுதொகு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 19:44, 12 மார்ச் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
  • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
 • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
 • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
 • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:08, 30 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்புதொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
 • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
 • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
 • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:06, 21 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்புதொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

 • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
 • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
 • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
 • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
 • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:48, 31 மே 2017 (UTC)

படிமம்தொகு

File:Human skeleton front en.svg எனும் படிமத்தை தமிழாக்கம் (Human skeleton front tamil.png) செய்து இங்கு பதிவேற்றியுள்ளீர்கள். பொதுவில் பதிவேற்றுவது ஏற்புடையது. மேலும், மூலப் படிமம் "public domain" என்பதன் கீழ் பதிவேற்றப்பட்டிருக்க, அவ்வுரிமத்தின் கீழ் பதிவேற்றுவது ஏற்புடையது. இவ்வாறான பெறப்பட்ட படிமங்களின் மூலம் குறிப்பிடப்பட வேண்டும். இல்லாவிடின் நீக்கப்படலாம். நன்றி. --AntanO (பேச்சு) 03:28, 5 நவம்பர் 2017 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்புதொகு

அன்புள்ள கிருத்திகன்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 19:08, 18 மார்ச் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

GFDLதொகு

Hi!

Wikimedia Foundation Board decided in 2009 to stop using GFDL as a sole license per this resolution.

GFDL is not a good license because it makes it hard to reuse the images (and the articles where the image is used).

You have uploaded one or more files with GFDL. You can see the files in Category:Wikipedia license migration candidates. You can also click this link and scroll down to see your name.

If you are the photographer/creator you can help to relicense the file(s). You can do so by changing {{GFDL}} to {{self|GFDL|cc-by-sa-4.0}}.

If you are not the photographer/creator please check if you have added a source and author. --MGA73 (பேச்சு) 11:32, 6 சூன் 2021 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:G.Kiruthikan&oldid=3164694" இருந்து மீள்விக்கப்பட்டது