வாருங்கள்!

வாருங்கள், Hindustanilanguage, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:57, 20 மார்ச் 2013 (UTC)

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Hindustanilanguage!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--✍ mohamed ijazz ☪® (பேச்சு) 18:46, 27 ஏப்ரல் 2014 (UTC)

Your usernameதொகு

 விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். உங்கள் பயனர்பெயரான, "Hindustanilanguage", என்பது விக்கிப்பீடியாவின் பயனர்பெயர் கொள்கைக்கு முரணாக உள்ளதை நான் கவனித்தேன். ஒரு நிறுவனம், குழு, அமைப்பு, தயாரிப்பு அல்லது வலைத்தளத்தின் பெயரை குறிக்கும் பயனர்பெயரை நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்க. எடுத்துக்காட்டாக: "XYZ Company", "MyWidgetsUSA.com", மற்றும் "Trammel Museum of Art" போன்றவை அடங்கும்.

உங்கள் பயனர் பெயரானது எந்த நிறுவனத்திற்கோ, குழுமத்திற்கோ, அமைப்புக்கோ, தயாரிப்புக்கோ அல்லது இணையதளத்திற்கோ பரிந்துரைக்கவோ அல்லது விளம்பரப்படுத்தவோ கூடாது. உங்கள் பயனர் பெயரை பொருட்படுத்தாமல், நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால், விக்கிபீடியாவிற்கு பங்களிப்புச் செய்ய தயாராக இருந்தால், விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு உட்பட்டு புதுக்கணக்கை உருவாக்கலாம் அல்லது இங்கு சென்று பயனர் பெயரரை மாற்றுவதற்கு கோரிக்கை வைக்கலாம். உங்கள் பயனர் பெயர் எங்கள் கொள்கையை மீறுவதாக இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்றால், தயவுசெய்து இங்கே விவாதிக்கவும். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:29, 27 அக்டோபர் 2019 (UTC)

இந்தப் பெயரை வைத்துக் கொண்டு தான் அவர் பல மொழிகளிலும் பல ஆண்டுகளாகப் பங்களித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பெயரில் என்ன பிழை? தேவையற்ற இத்தகைய அறிவிப்புகளை விடுத்து, பயனுள்ள பணிகளில் கவனம் செலுத்த வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 11:02, 27 அக்டோபர் 2019 (UTC)
கவனிக்க - @Gowtham Sampath:--இரவி (பேச்சு) 11:03, 27 அக்டோபர் 2019 (UTC)
@Ravidreams: ஒரு நிர்வாகி என்ற முறையில், இப்பயனர் பெயர் எனக்கு சரியாக படாத காரணத்தால், அதற்கான விவரம், இப்பயனரிடம் கேட்டுள்ளேன். //இந்தப் பெயரில் என்ன பிழை? // Hindustanilanguage அதாவது தமிழில் இந்துஸ்த்தானி மொழி என்று அர்த்தம்? ஒரு மொழியின் பெயரானது, பயனர் பெயராக உள்ளதே, அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள தான் நான் இந்த அறிவிப்பு செய்தேன். இந்துஸ்த்தானி மொழி என்பது வட இந்தியாவில் பேசப்படும் மொழி, தமிழகத்தில் பேசப்படும் மொழியும் அல்ல, அறியப்படும் மொழியும் அல்ல. அப்படி இருக்கும் போது இந்துஸ்த்தானி மொழி பெயர் கொண்டவர், எப்படி தமிழில் பங்களிப்பு செய்வார், என்ற அடிப்படையில் தான், இந்த காரணத்தை நான் அவரிடம் கேட்டேன். அவர் அதற்கான காரணத்தை தெரிவித்தால், பிறகு ஏன் நான் அவரிடம் இதைப் பற்றி பேச போகிறேன். நான் ஒன்னும் அவரை தடை செய்து விடுவேன் என அச்சுறுத்தலோ, அவர் பங்களிப்பு செய்வதை தடுத்து விடவோ இல்லை. சாதாரணமாக இந்த பெயருக்கான காரணத்தை தெரிவியுங்கள் என்று, நான் இவரிடம் தான் கேட்டேன், உங்களிடம் நான் கேட்கவில்லையே. நீங்கள் ஏன் முந்தியடித்துக் கொண்டு, இங்க வந்து பேசுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

//தேவையற்ற இத்தகைய அறிவிப்புகளை விடுத்து, பயனுள்ள பணிகளில் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.//

நீங்கள் சொல்வதை பார்த்தால், நான் இந்த மாதிரியான அறிவிப்புகள் விடுவதையே வேலையாக வைத்திருப்பது போலவும், மற்ற பணிகள் ஏதும் செய்யாமல் இருப்பது போல தெரியுது.--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:28, 27 அக்டோபர் 2019 (UTC)

@கௌதம் 💓 சம்பத் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம், சுமார் 8 ஆண்டுகளுக்கு மேல் பிற மொழிகளில் பங்களிக்கும் ஒரு பயனரின் பெயரை மாற்ற ஒரு மொழியில் மட்டும் கூறுவது அவருக்கு வேடிக்கையாக இருக்கும். இந்த வேண்டுகோளை மறுபரிசீலனை செய்யவும். பயனர் விளக்கம் கண்டிப்பாகத் தேவையெனில் உங்கள் கேள்வியை ஆங்கில விக்கியில் கேட்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:20, 27 அக்டோபர் 2019 (UTC)
@Dineshkumar Ponnusamy: உங்களுடைய கருத்தை நான் நான் ஏற்கிறேன். நான் அனுப்பிய அறிவிப்புகளில், மூன்று வகையான அர்த்தங்கள் உள்ளன. 1) புதுக்கணக்கை உருவாக்க வேண்டல், 2) பயனர் பெயரை மாற்ற கோரிக்கை, 3) விவாதம் செய்தல். இதில் இப்பயனர் விவாதத்தை தேர்ந்தெடுத்து, நான் 8 மொழிகளில் இதே பயனர் பெயரில் பங்களிக்கிறேன், அதனால் தமிழ் மொழியிலும் இதே பெயரில் பங்களிக்கிறேன் என்று ஏதாவது காரணம் சொன்னால் வேலை முடிந்தது, பிறகு நான் என்ன இவர் பங்களிப்பு செய்வதற்கு, தடையாகவா இருக்கப்போகிறேன். எனக்கு தேவை இப்பெயருக்கான காரணம். இதே இந்த பயனர் பெயர் சாதாரணமாக, ஒரு நபரின் பெயராக இருந்திருந்தால், நான் ஏன் இந்த அறிவிப்பை செய்யப்போகிறேன். தங்களின் கருத்துக்கு நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:14, 27 அக்டோபர் 2019 (UTC)

இந்தப் பயனர் கடந்த 6 ஆண்டுகளில் மொத்தமே 27 பங்களிப்புகள் செய்திருக்கிறார். கடந்த ஒரு ஆண்டாக ஒரு பங்களிப்பும் செய்யவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பாதகமாகவோ நல முரணோ ஒரு பங்களிப்பும் செய்யவில்லை. இப்படிப்பட்ட ஒருவரைத் தேடிப் பிடித்து இப்படி அறிவிப்புகள் விடுவது வீண் வேலை என்பது என் கருத்து. இது போன்ற பணிகளை விடுத்து, தமிழ் விக்கிப்பீடியாவை மேம்படுத்தும் மற்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்தலாம். அப்படிப் பட்ட பல்வேறு வேலைகளை நீங்கள் ஏற்கனவே செய்து வருகிறீர்கள் என்பதையும் அறிவேன்.

//அப்படி இருக்கும் போது இந்துஸ்த்தானி மொழி பெயர் கொண்டவர், எப்படி தமிழில் பங்களிப்பு செய்வார், என்ற அடிப்படையில் தான், இந்த காரணத்தை நான் அவரிடம் கேட்டேன்//

ஒரே ஒரு சொல் கூட தமிழில் தெரியாமலும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்களிக்க முடியும். பல்வேறு மொழிகளில் செயற்படும் இத்தகைய விக்கிப்பீடியர்கள் உள்ளனர்.

பல்வேறு மொழிகளில் பல ஆண்டுகளாக, ஒரு இலட்சம் பங்களிப்புகள் செய்து வரும் தனக்கு ஏன் இத்தகைய அறிவிப்பு என்று புரியாமல் முகநூலில் முறையிட்டிருந்தார். அதனாலேயே நான் இங்கு கருத்து தெரிவிக்க வேண்டியதாயிற்று. உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியும் செயற்பாடுகள் பயனர்களை அயர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடும் என்ற புரிதலோடு, தேவையான விசயங்களில் மட்டும் கவனம் செலுத்துமாறு நிருவாகப் பணியாற்றுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 18:09, 27 அக்டோபர் 2019 (UTC)

@Gowtham Sampath:, சரியான காரணம் இல்லாமல் மற்ற பயனர்களின் கருத்துகளும் அடங்கிய ஒரு உரையாடலை நீக்காதீர்கள். இது போன்ற உரையாடல்களைக் கவனிப்பதன் மூலம் இருந்து மற்ற விக்கிப்பீடியர்களும் தங்கள் புரிதல்களை மேம்படுத்திக்கொள்வார்கள். நன்றி. --இரவி (பேச்சு) 18:49, 27 அக்டோபர் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Hindustanilanguage&oldid=2825134" இருந்து மீள்விக்கப்பட்டது