மற்ற தலைப்புக்களுக்கும் வாருங்கள் தொகு

மூர்த்திக்கு, வொக்கலிகர் சமுதாயம் கட்டுரையை முதலில் தொடங்கினேன். அந்தக் கட்டுரை விரிவடைவதில் எனக்கு மகிழ்ச்சிதான். வொக்கலிகர் சமுதாயம் குறித்த தங்கள் பதிவுகள் அவ்வப்போது என்னால் சரி செய்யப்பட்டது. தற்போது தமிழ் விக்கிப்பீடியாவின் கலைக்களஞ்சியக் கட்டுரையின் அமைப்பு, நடை மற்றும் அதற்கான இணைப்புகள் போன்றவை குறித்துத் தெரிந்ந்திருக்கும் என நம்புகிறேன். தங்கள் கட்டுரை வொக்கலிகர் எனும் குறிப்பிட்ட எல்லைக்குள் இல்லாமல் தங்களுக்கு ஆர்வமுடைய பிற துறைகளிலும் இருந்தால் நன்றாக இருக்கும். வேறு தலைப்பிலும் கட்டுரையைத் தொடங்குங்கள். வாழ்த்துக்கள்.--Theni.M.Subramani 15:05, 18 மார்ச் 2010 (UTC)

தேனி சுப்பிரமணி அவர்களூக்கு நீங்கள் நீக்கிய பகுதியான "இவர்கள் கர்நாடகத்திலிருந்து வந்தவர்கள் என்று சொன்னாலும் இவர்கள் உண்மையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மாட்டிக்கொண்டவர்கள் " என்ற கருத்து ஏன் நீக்கப்பட்டது என தெரியவில்லை? 1.இவர்களும் தமிழர்கள்தான் என்று நான் நிறுவவில்லை 2.இவர்கள் "வந்தவர்கள்" என்றால் நாயுடு இனத்தவர்களைப் போல் ஏன் தமிழகத்தின் உட்பகுதியில் இல்லை. 3.எல்லைகளை பிரிக்கும்போது இதுதான் கர்நாடகா,இதுதான் தமிழ்நாடு என்று தீர்மானமாக பிரித்திருக்கவும் முடியாது.அதற்கு உதாரணம் கேரளா கன்னியாகுமாரி பிரிப்பு 4.உலகம் முழுவதும் இந்தமாதிரி எல்லைகளில் வாழும் மக்களின் நிலமை கொடுமையானது நாடுகளால்,இனங்களால்,மொழிகளால்,மதங்களால்,ஜாதிகளால் பிரிக்கப்பட்டு பலகோடி மக்கள் அடையாளங்களை இழந்து வேதனையுடன் வாழ்கிறார்கள்.

நீங்கள் சொல்வது போல் ஓர் எல்லைக்குள் இல்லாமல் தொடர்வதுதான் எனது விருப்பமும்.நன்றி.

மூர்த்தி தங்களுடைய கூற்று எனக்கு சரியாகப்படவில்லை. வொக்கலிகர் பெரும்பான்மையாக கர்நாடகாவிலிருந்து வந்தவர்களாகத்தான் இருக்க முடியும். தாங்கள் சொல்வது போல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது போல் மாட்டிக் கொண்டவர்கள் என்ற கருத்து சரியல்ல. தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு வொக்கலிகர் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாவட்டத்தின் எல்லையில் கர்நாடக மாநிலத்தின் எந்தப் பகுதியும் எல்லையாக இல்லையே... எல்லை என்பது ஒரு அரசு அமைப்பின் கட்டுப்பாடுகளே... நாம் அனைவரும் இந்தியர் என்ற நிலையில்தான் இருக்கிறோம்.

வொக்கலிகர் கட்டுரை தவிர தங்களுக்கு நல்ல அனுபவமுடைய துறையிலும் பிற துறையிலும் நல்ல தலைப்பில் பல கட்டுரைகளைத் தாருங்கள்...--Theni.M.Subramani 05:25, 21 மார்ச் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Moorthy.pb&oldid=497419" இலிருந்து மீள்விக்கப்பட்டது