வாருங்கள்!

வாருங்கள், Moorthy26880, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:55, 30 அக்டோபர் 2012 (UTC)

பாராட்டுகள்தொகு

எண்பதுகளில் வெளியான பல சுவையான திகில் படங்கள் பற்றி கட்டுரை எழுதியுள்ளீர்கள். அவை பழைய நினைவுகளைத் தூண்டுகின்றன. மேலும் பல கட்டுரைகள் எழுத என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.--சோடாபாட்டில்உரையாடுக 12:14, 31 அக்டோபர் 2012 (UTC)

வணக்கம்! தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி!--Moorthy26880 (பேச்சு) 16:53, 29 நவம்பர் 2012 (UTC)Moorthy

பால்கோவாதொகு

நண்பரே...நீங்கள் எழுதிய ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா கட்டுரையிலிருந்த 'செய்முறை', பால்கோவா கட்டுரைக்கு நகர்த்தப்பட்டுள்ளது. நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:48, 6 நவம்பர் 2012 (UTC)

வணக்கம்! கட்டுரையை முறைப்படுத்தியதற்கு நன்றி!--Moorthy26880 (பேச்சு) 16:53, 29 நவம்பர் 2012 (UTC)Moorthy

ஆங்கில எழுத்துகள்தொகு

வணக்கம் நண்பரே! நீங்கள் திரைப்படம் தொடர்பான பல கட்டுரைகளை ஆர்வமுடன் எழுதிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் ஆங்கில எழுத்துகளை பயன்படுத்துவது வழக்கத்தில் இல்லை. நீங்கள் எழுதிய கட்டுரைகளில் ஆங்கில முதலெழுத்தைப் (Initial) பயன்படுத்தி உள்ளீர்கள், முடிந்தவரை அவ்வாறு செய்வதை தவிர்க்கவும். மேலும் பல சிறப்பான கட்டுரைகளை எழுத என் வாழ்த்துகள். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:41, 7 நவம்பர் 2012 (UTC)

வணக்கம்! தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி!ஆங்கில முதலெழுத்தைப் பயன்படுத்தி உள்ளதை சுட்டியமைக்கு நன்றி. திருத்தங்கள் செய்துவிட்டேன்.--Moorthy26880 (பேச்சு) 16:53, 29 நவம்பர் 2012 (UTC)Moorthy

ஓடாதேதொகு

வணக்கம். சுஜாதாவின் புதினங்களை அயராது எழுதும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள். பேச்சு:ஓடாதே!(புதினம்) பார்க்கவும். உங்கள் பதிலை இங்கோ அல்லது அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலோ இடுங்கள். --Booradleyp (பேச்சு) 16:25, 29 நவம்பர் 2012 (UTC)

வணக்கம்! தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. ஓடாதே பக்கம் பற்றி சுட்டியமைக்கு நன்றி. திருத்தங்கள் செய்துவிட்டேன். விசா பதிப்பகத்தார் வெளிஇட்ட பிரதியே என்னிடம் உள்ளது. திருமகள் நிலையத்தார் மூலம் இந்நூலை விற்பனை செய்கிறார்கள்.--Moorthy26880 (பேச்சு) 16:53, 29 நவம்பர் 2012 (UTC)Moorthy

ஒரு சந்தேகம், வானம் வசப்படும் திரைப்படத்தின் கதை, சுஜாதாவின் எந்த நாவல்?--Booradleyp (பேச்சு) 16:48, 29 நவம்பர் 2012 (UTC) வணக்கம்! வானம் வசப்படும் திரைப்படத்தின் கதை, சுஜாதாவின் "இருள் வரும் நேரம் " என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.--Moorthy26880 (பேச்சு) 16:58, 29 நவம்பர் 2012 (UTC)Moorthy

எனது சந்தேகங்களைத் தீர்த்தமைக்கு நன்றி. இன்னுமொரு சந்தேகம். விக்ரம் திரைப்படம் சுஜாதாவின் எந்தப் புதினம்?--Booradleyp (பேச்சு) 17:07, 29 நவம்பர் 2012 (UTC) வணக்கம்! விக்ரம் திரைப்படம் சுஜாதாவின் விக்ரம் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.[ http://www.noolulagam.com/product/?pid=5594#details]. நன்றி.--மூர்த்தி (பேச்சு) 01:18, 12 சனவரி 2013 (UTC)

நன்றி மூர்த்தி. நீங்கள் விவரங்கள் தரும் வேகத்தையும் உங்கள் கட்டுரைகளையும் பார்க்கும் போது நீங்கள் சுஜாதாவின் ஆக்கங்கள் அனைத்தும் படித்திருக்கிருக்க வேண்டும். புத்தகங்கள் படிக்கும் வழக்கம் மெல்ல மெல்ல மறைந்து வரும் காலகட்டத்தில், உங்கள் வாசிப்புக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் உங்களிடமிருந்து அதிகளவு கட்டுரைகளை எதிர்நோக்கும்--Booradleyp (பேச்சு) 02:53, 30 நவம்பர் 2012 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
புயல் வேகத்தில் திரைப்படம் மற்றும் புதினம் தொடர்பான கட்டுரைகளை உருவாக்கி வருவதற்காக இப்பதக்கம் :) சண்முகம்ப7 (பேச்சு) 05:35, 5 திசம்பர் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி! நன்றி!--மூர்த்தி (பேச்சு) 01:18, 12 சனவரி 2013 (UTC)

படிமங்கள்தொகு

வணக்கம் மூர்த்தி, படிமங்களை பதிவேற்றம் செய்யும் பொது அவை நீங்கள் எடுத்த படிமம் எனில் பொதுவில் பதிவேற்றினால் அனைத்து விக்கித் திட்டங்களிலும் பயன்படுத்தலாம், மேலும் இங்கே பதிவேற்றும் போதும் அவற்றில் சரியான காப்புரிமை வார்ப்புருக்களையும் இணைக்கவும். உதவிக்கு பார்க்க விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம், விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும் அல்லது விக்கிப்பீடியா:காப்புரிமை வார்ப்புருக்கள்--சண்முகம்ப7 (பேச்சு) 05:42, 5 திசம்பர் 2012 (UTC)

வணக்கம் நண்பரே ! நீங்கள் குறிப்பிட்ட சுட்டிகளுக்கு நன்றி. அடுத்த முறை கோப்புகளைப் பதிவேற்றும் பொழுது கண்டிப்பாக கவனத்தில் கொள்கிறேன். நன்றி. தாங்கள் அளித்துள்ள பதக்கத்திற்கும் நன்றி.--Moorthy26880 (பேச்சு) 20:04, 7 திசம்பர் 2012 (UTC)மூர்த்தி

பதக்கம்தொகு

  விக்கிப்புயல் பதக்கம்
கட்டுரைகளை தொடர்ந்து படைத்துவரும் உங்களுக்கு நன்றி! உங்களைப் பற்றி கூடுதல் தகவல்களை உங்களின் பயனர் பக்கத்தில் தந்தால்... உங்களுடன் இணைந்து இன்னமும் சிறப்பாக செயல்பட இயலும்; நன்றி! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:22, 20 திசம்பர் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

வணக்கம்,

தாங்கள் அளித்த பதக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே ! --மூர்த்தி (பேச்சு) 03:36, 28 திசம்பர் 2012 (UTC)

மற்ற கட்டுரைகளுக்கு இணைப்பு தருவது குறித்து...தொகு

வணக்கம் நண்பரே!
மற்ற கட்டுரைகளுக்கு இணைப்பு தருவது குறித்து தங்களுக்கு நான் தரும் சில குறிப்புகள் (tips):

உதாரணங்கள்:

  1. ஜெய் சங்கர் என்பது அதிகாரப்பூர்வமான பெயராக இல்லாமல் ஜெய்சங்கர் என்பதே சரியாக இருக்கக்கூடும்.
  2. இங்கு பொதுவாக டி.ராஜேந்தர், எஸ்.எஸ்.சந்திரன் எனும் பெயர்கள் டி._ராஜேந்தர், எஸ்._எஸ்._சந்திரன் என்றே எழுதப்படும். அதாவது, ஒருவரின் பெயர், அவரின் 'பெயர் முதல் எழுத்து'டன் (with initial) எழுதப்பட்டால்... இடைவெளி விடப்படும்! (நான் உங்களின் கட்டுரையில் சரி செய்துள்ளேன்)
  3. 'தளபதி', இன்னொரு உதாரணம்! அதனை நீங்களே சரிசெய்து விட்டீர்கள்!
  4. *ராஜேந்தர்* என 'தேடு' கட்டத்தில் நீங்கள் அடித்துத் தேடினால்... பட்டியல் வரும். பிறகு பொருத்தமான கட்டுரைக்கு நீங்கள் இணைப்பு தரலாம்.

நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:38, 22 திசம்பர் 2012 (UTC)

வணக்கம் நண்பரே!

இணைப்புகள் பற்றிய தங்களது குறிப்புகள் பேருதவி புரிந்தன. எல்லாக் கட்டுரைகளையும் திரும்பவும் சரி பார்த்து இணைப்புகளை சேர்த்துவிட்டேன். மிக மிக நன்றி. --மூர்த்தி (பேச்சு) 03:28, 28 திசம்பர் 2012 (UTC)

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்புதொகு

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:18, 26 திசம்பர் 2012 (UTC)

தலைப்புகளில் இடைவெளிகள்தொகு

திரைப்படங்களின் தலைப்புகளில் ஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் ஓர் இடைவெளி தர வேண்டும். எ+கா: தர்மா(1998 திரைப்படம்) என்பது தர்மா (1998 திரைப்படம்) என எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 22:15, 26 திசம்பர் 2012 (UTC)

வணக்கம் நண்பரே, கட்டுரைத் தலைப்புகள் பற்றிய தங்களது கருத்தைக் கவனத்தில் கொண்டேன். தாங்கள் பக்கங்களை நகர்த்தியமைக்கு மிக்க நன்றி. மீதியுள்ள பக்கங்களை சரி செய்து விட்டேன். வேறு ஏதேனும் மாற்றங்கள் இருந்தாலும் தெரிவியுங்கள். நன்றி! --மூர்த்தி (பேச்சு) 03:31, 28 திசம்பர் 2012 (UTC)

குறிப்புதொகு

வணக்கம். பார்க்கவும்:பேச்சு:அபூர்வ சகோதரிகள், பேச்சு:சட்டம் சட்டம் --Booradleyp (பேச்சு) 14:37, 27 திசம்பர் 2012 (UTC)

வணக்கம் நண்பரே,

தாங்கள் குறிப்பிட்ட இரு பக்கங்களையும் சரி செய்து விட்டேன். திரைப்படங்களுக்கான கட்டுரைகளில் அதற்குரிய படங்களை இணைத்தமைக்கு மிக்க நன்றி. படங்களின் கோப்பை (போஸ்டர்) பதிவேற்றம் செய்கையில் இணையத்தில் இருந்து எடுத்தவைகளை எவ்வாறு குறிப்பிடுவது , GDFL-self என்று குறிப்பிடலாமா? - நன்றி.--மூர்த்தி (பேச்சு) 01:25, 12 சனவரி 2013 (UTC)

GDFL-self தர முடியாது. பதிலாக movieposter, DVDcover போன்ற வார்ப்புருவைத் தரலாம். வேறு பொருத்தமான வார்ப்புருக்களும் இருக்கலாம். தேட வேண்டும்.--Kanags \உரையாடுக 03:58, 28 திசம்பர் 2012 (UTC)

மேலே சுட்டப்பட்டுள்ளபடி நீங்களே உங்கள் கட்டுரைகளில் சுவரொட்டிப் படங்களை இணைத்து விடலாம். மற்றுமொரு வேண்டுகோள், நீங்கள் ஒரு திரைப்படத்தின் விவரங்களை எதிலிருந்து கையாள்கிறீர்களோ (புத்தகம் அல்லது இணையம்) அதனை மேற்கோள்களாகவோ அல்லது வெளி இணைப்புகளாகவோ கட்டுரையில் இணைத்து விடுங்கள்.--Booradleyp (பேச்சு) 04:56, 28 திசம்பர் 2012 (UTC)

வணக்கம் நண்பரே,

தங்கள் உதவிக்கு நன்றி. வெளி இணைப்புகளை திரைப்பட பக்கங்களில் இணைத்து விட்டேன். ஆங்கில விக்கியில் இருந்து பார்த்து எழுதிய பக்கங்களில் அதை வெளி இணைப்பாக கொடுக்கவில்லை. மேலும் நான் யூடூப் தளத்தில் பார்த்து எழுதிய திரைப்படங்களுக்கும் வெளி இணைப்பு தரவில்லை. --மூர்த்தி (பேச்சு) 01:25, 12 சனவரி 2013 (UTC)

வணக்கம் மூர்த்தி, நீங்கள் தொடங்கும் கட்டுரைகள் ஆங்கில விக்கியில் இருக்குமானால் ’ஏனைய மொழிகளில்’ பகுதிக்கு அதனை இணைப்பாகத் தந்து விடுங்கள். அது கட்டுரையை மேலும் வளர்த்தெடுக்க விரும்புவர்களுக்கு உதவியாக இருக்கும். டெல்லி கணேஷ் கட்டுரையில் ’தொகு’ -உள் சென்று பார்த்தீர்கள் என்றால் எல்லாவற்றுக்கும் கடைசியாக அந்த இணைப்பு இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள். த.வியில் உங்கள் பங்களிப்புகள் மேலும் வளர வாழ்த்துக்களுடன்--Booradleyp (பேச்சு) 04:02, 12 சனவரி 2013 (UTC)

பதக்கம்தொகு

  சிறப்புப் பதக்கம்
தமிழ்த் திரைப்படக் கட்டுரைகளை செவ்வனே உருவாக்கிவரும் உங்கள் உழைப்பைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 18:26, 29 திசம்பர் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

வணக்கம்,

தாங்கள் அளித்த பதக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே !−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து Moorthy26880 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. )--மூர்த்தி (பேச்சு) 01:26, 12 சனவரி 2013 (UTC)

செண்பக மூர்த்தி, சிங்கை வாழ் தமிழரான தாங்கள் திரைப்படங்கள் குறித்து கட்டுரை இயற்றி வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி ! தங்கள் விக்கிப் பணி சிறக்க வாழ்த்துகள் ! கருத்து இடும் போது கையொப்பமிட மறந்து விடாதீர்கள். நன்றி. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:18, 11 சனவரி 2013 (UTC)

வணக்கம் நண்பரே,

தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி. கையொப்பம் இடுவதை கவனத்தில் கொள்கிறேன். நன்றி ! ---மூர்த்தி (பேச்சு) 01:26, 12 சனவரி 2013 (UTC)

படிமம்:Tamil Actor Delhi Ganesh.jpgதொகு

வணக்கம் மூர்த்தி, உயிருடன் உள்ளவர்களின் படங்களை நியாயப் பயன்பாட்டின் கீழ் பயன்படுத்த இயலாது. எனவே படிமம்:Tamil Actor Delhi Ganesh.jpg நீக்கப்படும், இங்கு காப்புரிமை வார்ப்புருக்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. ஏதேனும் உதவி தேவையெனில் கேட்கவும். நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 16:37, 11 சனவரி 2013 (UTC)

வணக்கம் நண்பரே,

படிமங்களின் வார்ப்புருக்கள் பற்றி இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. இனி ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்டுத் தெரிந்து கொண்டு பதிவேற்றம் செய்கிறேன். மிக்க நன்றி! ---மூர்த்தி (பேச்சு) 01:29, 12 சனவரி 2013 (UTC)

நன்றிதொகு

  நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:16, 14 சனவரி 2013 (UTC)


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:35, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:02, 15 சனவரி 2013 (UTC)

திரைப்படம் குறித்த கட்டுரைகள்தொகு

வணக்கம் மூர்த்தி. தமிழ்த் திரைப்படக் கட்டுரைகளை செவ்வனே உருவாக்கிவருகிறீர்கள்.. பாராட்டுகள். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:52, 24 சனவரி 2013 (UTC)

வணக்கம் மூர்த்தி, தாங்கள் உருவாக்கி வரும் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் சில இருவரிக் கட்டுரைகளாக உள்ளன. இவ்வாறு ஏராளமான கட்டுரைகளை உருவாக்குவது எளிமை. ஆனால் பின்னர் அவற்றை விரிவாக்கும் போது அயற்சியைத் தரும்... மேலும் அவை எதிர்காலத்தில் நீக்கப்படலாம். எனவே நேரம் கிடைக்கும்போதே இக்கட்டுரைகளை விரிவாக்குங்கள்.. நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:07, 25 சனவரி 2013 (UTC)
கட்டுரைகளில் தகவல் பெட்டி மூலம் போதிய அளவு தகவல் தந்திருப்பதால் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. தகுந்த இடங்களில் ஆங்கில விக்கி இணைப்பும், வெளியிணைப்பும் தந்து எழுதியிருப்பதும் நன்று. IMDB இணைப்பு கிடைத்தாலும் தரலாம். தங்களின் தொடக்க கால கட்டுரைகளில் கதைச் சுருக்கம், படத்தின் விளம்பரப்படம் ஆகியவற்றைக் காண முடிகிறது. இது போன்ற தகவலையும் சேர்த்தால் நன்றாக இருக்கும். அப்புறம், சில புதினங்களின் தலைப்புகளில் (புதினம்) என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதே பெயரில் வேறு துறை குறித்த கட்டுரை எழுத வாய்ப்பு இருந்தால் மட்டும் இவ்வாறு செய்யலாம். இல்லாவிட்டால், வெறுமே புதினத்தின் பெயரை மட்டும் தலைப்பாக வைக்கலாம். நன்றி--இரவி (பேச்சு) 05:24, 25 சனவரி 2013 (UTC)
வணக்கம் நண்பர் பார்வதிஸ்ரீ ! தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. படங்களைப் பற்றிய மேலதிக தகவல்கள் சேகரித்த பின்னர் கண்டிப்பாக விரிவாக்கம் செய்கிறேன். நன்றி !---மூர்த்தி (பேச்சு) 03:02, 27 சனவரி 2013 (UTC)
வணக்கம் நண்பர் இரவி , தங்கள் கருத்துக்களும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. முதலில் நான் உருவாக்கிய புதினங்கள் பற்றிய பக்கங்களில் (புதினம்) என்று பிற பயனர்கள் மற்றம் செய்ததால் அது தான் முறை என்று எண்ணி எல்லாத் தலைப்புகளிலும் இணைத்து விட்டேன். தங்கள் கருத்தைக் கவனத்தில் கொள்கிறேன். நன்றி !--மூர்த்தி (பேச்சு) 03:02, 27 சனவரி 2013 (UTC)

படிமங்கள்தொகு

வணக்கம். திரைப்படங்கள் கட்டுரைகளில் படிமங்களைப் பதிவேற்றி இணைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. உண்மையைச் சொல்லப்போனால் நீங்கள் கட்டுரையை உருவாக்கும் வேகத்திற்கு ஈடுகொடுத்து படிமங்களை இணைக்க என்னால் முடியவில்லை. அதனால் சற்று மூச்சு வாங்கிவிட்டு, உங்கள் பேச்சுப் பக்கத்தில் வந்து நீங்களே இணைக்கலாமே எனக் கேட்கலாம் என்றிருந்தேன். நீங்களே இணைக்க ஆரம்பித்ததைப் பார்க்கும்போது அப்பாடா என்றிருக்கிறது. முடிந்தால் முன்புபோல சிறிதளவு கதைச் சுருக்கமும் சேர்க்கப் பாருங்கள். உங்களது கட்டுரைக்கு ஆ. வி இலும் கட்டுரை இருக்குமானால் நான் முன்பு கூறியுள்ளபடி அதனை ’ஏனைய மொழிகளில்’ என்பதற்குள் சேர்த்து விடுங்களேன். இதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கேளுங்கள். --Booradleyp (பேச்சு) 02:51, 27 சனவரி 2013 (UTC)

வணக்கம் நண்பரே, தாங்கள் படிமங்கள் ஏற்றி உதவியமைக்கு நன்றி. நானும் எனக்கு கிட்டும் படிமங்களைப் பதிவேற்றுக்கிறேன். பல திரைப்படங்கள் பற்றிய கதை விவரம் பார்க்கக் கிடைக்கவில்லை. கிடைக்கும் தகவல்கள் கொண்டு அவ்வப்போது விரிவுபடுத்துகிறேன். தங்கள் உறுதுணையான உழைப்புக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்!--மூர்த்தி (பேச்சு) 03:02, 27 சனவரி 2013 (UTC)
  திரைச் சூறாவளிப் பதக்கம்
திசம்பர் மாதத்தில் அதிகப்படியான கட்டுரைகளை உருவாக்கியதற்காக இந்தப் பதக்கம் :) --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:05, 31 சனவரி 2013 (UTC)

வணக்கம் நண்பரே, தாங்கள் அளித்த பதக்கத்திற்கு மிக்க நன்றி  ! தங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றிகள் பல !--மூர்த்தி (பேச்சு) 03:02, 2 பெப்ரவரி 2013 (UTC)

மாதம் 100 தொகுப்புகள் மைல்கள்தொகு

வணக்கம், Moorthy26880!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 06:34, 3 மார்ச் 2013 (UTC)

சனவரி மாதம் அதிக தொகுப்புகள் செய்த பயனர்தொகு

வணக்கம் மூர்த்தி ! சனவரி மாதத்தில் 369 கட்டுரைகளைத் தொடங்கியிருக்கிறீர்கள். விரைவில் ஆயிரம் கட்டுரைகளை எட்டிவிடுவீர்கள். அப்போது ஆயிரவர் பதக்கத்தை மகிழ்ச்சியுடன் வழங்கக் காத்திருக்கிறேன். நன்றி ! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:35, 3 மார்ச் 2013 (UTC)   விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:17, 10 மார்ச் 2013 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புதொகு


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:40, 10 மார்ச் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்புதொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

விக்கித்திட்டம் 100, 2015, அழைப்புதொகு

வணக்கம் Moorthy26880!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:51, 29 திசம்பர் 2014 (UTC)
அனைவரும் உங்கள் பங்களிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி.--இரவி (பேச்சு) 16:55, 11 சனவரி 2015 (UTC)

தானியங்கி வரவேற்புதொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:53, 7 மே 2015 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersதொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Moorthy26880&oldid=3184499" இருந்து மீள்விக்கப்பட்டது