punctuation தொகு

நற்கீரன், முற்றுப்புள்ளிக்கு அடுத்து இரு இடைவெளிகள் விடுமாறு நிரோவுக்கு சொல்லி இருக்கிறீர்கள். ஆனால், ஒன்று விட்டால் போதுமானது என்று நினைக்கிறேன். இது குறித்து ஏற்கனவே எங்கோ உரையாடினோம். ஆனால், முடிவு எட்டவில்லை. இரு இடைவெளி விடுவது தட்டச்சுப் பலகை நடைமுறை என்றும் கணினிப்பக்க வடிவமைப்பில் அது தேவையில்லை என்றும் எங்கோ படித்த நினைவு.--ரவி 15:38, 30 செப்டெம்பர் 2006 (UTC)

அப்படி இருக்கலாம். ஏன் என்றால் html இரண்டு வெளிகளை வேறுபடுத்துவதில்லை. ஆனால் கட்டுரை எழுதும் பொழுது word பொதுவாக இரண்டு வெளிகளைத்தான் பயன்படுத்துவதாக தெரிகின்றது. குறைந்தது ஒரு வெளியாவது விட வேண்டும். அன்பே சிவம் கட்டுரையில் ஒரு வெளியும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது நிரோ அல்லாமல் வேறு பயனராகவும் இருக்கலாம். எனக்கும் முடிவாக ஒரு பதில் தெரியவில்லை! --Natkeeran 20:16, 30 செப்டெம்பர் 2006 (UTC)

ஒரு தொந்தரவும் இல்லை தொகு

நற்கீரன் ஒரு தொந்தரவும் இல்லை. பங்களிப்புகள் இப்போதாஇக்கு செய்ய முடியாதே தவிர இப்படியான வேலைகளை செய்ய நேரம் உள்ளது. மேலும் தேவையெனில் எனது பேச்சுப் பக்கத்தில் செய்தி விடவும் நான் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது விக்கியை பார்ப்பது வழக்கமாகும்.--டெரன்ஸ் \பேச்சு 04:38, 5 அக்டோபர் 2006 (UTC)Reply

என் புகைப்படத்தைப் பயன்படுத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மற்ற பயனர்களுக்கு உடன்பாடென்றால் எச்சிக்கலும் இல்லை. -- Sundar \பேச்சு 07:26, 5 அக்டோபர் 2006 (UTC)Reply

பிரபல மருத்துவர்கள் தொகு

http://www.expresshealthcaremgmt.com/20030915/profile01.shtml http://nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1902/ross-bio.html http://www.blonnet.com/life/2003/09/29/stories/2003092900180100.htm நான் பிரபல மருத்துவர் இல்லை :) (வருங்காலத்தில்) ஒரு வேளை பிரபல எழுத்தாளர் ஆகலாம் !!! புருனோ மஸ்கரனாஸ் 13:28, 6 அக்டோபர் 2006 (UTC)Reply

நான் கூற வந்த விஷயம் என்னவென்றால் "Notability Criteria for a Cinema Star and notability criteria for a doctor are different". There may be less than 50 doctors in India who are notable. But we have at least 200 persons from Cinema Industry in Tamil Nadu alone who are notable புருனோ மஸ்கரனாஸ் 17:33, 6 அக்டோபர் 2006 (UTC)Reply

நாட்டார் பாடல் தொகு

பார்க்க: பயனர் பேச்சு:Trengarasu#நாட்டார் பாடல். நீங்களும் உங்கள் பங்கிற்கு பின்லாந்து நாட்டார் பாடல்களைப் பற்றி தொகுக்கலாமே? -- Sundar \பேச்சு 10:25, 7 அக்டோபர் 2006 (UTC)Reply

பொதுவாக அவர்களாகவே இற்றைப்படுத்துவார்கள். இன்னும் தாமதம் ஆனால் பிரையானிடம் கேட்கலாம். -- Sundar \பேச்சு 06:48, 9 அக்டோபர் 2006 (UTC)Reply

அற்றிலா தொகு

ஹன் அரசன் அற்றிலா மொங்கோலியரல்லர். நான் முன்பொருமுறை மொங்கோலியப் பேரரசு தொடர்பில் கட்டுரையொன்றைத் தொடங்கியிருந்தமையால் நீங்கள் கிங்கிஸ் கானை நினைத்து மொங்கோலியப் பகுப்புக்குள் அற்றிலாவை இட்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகின்றது. அல்லது நாதான் தவறாக எண்ணுகிறேனா? --கோபி 16:08, 20 அக்டோபர் 2006 (UTC)Reply

ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். கிங்கிஸ் கானை என்றுதான் அற்றிலாவை நினைத்து விட்டேன். ஆனால், அவர்கள் இருவரும் ஹன் அரசர்கள் தானே, எப்படி தொடர்பில்லாமல் இருக்க முடியும். --Natkeeran 16:13, 20 அக்டோபர் 2006 (UTC)Reply

ஒருவர் khan. மற்றவர் hun. ஆனால் அற்றிலாவின் தோற்றம் மொங்கோலியரை ஒத்திருந்ததாம். --கோபி 16:17, 20 அக்டோபர் 2006 (UTC)Reply
நன்றி. European Huns தோற்றம் மொங்கலியர்களாகவும் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகின்றது. ஆனால், உறிதிப்படுத்தப்படவில்லை. எனினும் பகுப்பை நீக்கிவிடுகின்றேன். --Natkeeran 16:22, 20 அக்டோபர் 2006 (UTC)Reply

Mainpage redesign தொகு

natkeeran, since i did not get objection for main page redesign at Wikipedia பேச்சு:மாதிரி முதற்பக்கம், I went ahead with the changes. Even now, I have given the links for other wikimedia projects in the main page. added, there is a straight text link to wiktionary, our other main project. I am of the opinion that wikipedia sister template occupies a major portion of main page unnecessarily. I am planning to include more content for the readers and wanted to have more space and also keep the main page simple and slim..Please register your views at Wikipedia பேச்சு:மாதிரி முதற்பக்கம். we will do the needed changes.--ரவி 14:37, 24 அக்டோபர் 2006 (UTC)Reply


தமிழ்நாட்டுக் கிராமங்கள் தொகு

தமிழ்நாட்டுக் கிராமங்கள் --ரவி 14:51, 24 அக்டோபர் 2006 (UTC)Reply

நன்றி. --Natkeeran 14:51, 24 அக்டோபர் 2006 (UTC)Reply

if u r online can u please join the channel #tamil_wikimedia in IRC chat..I opened the channel newly and have to check it..i am online in gtalk ad yahoo messenger also..in case u have doubt how to join IRC..gotta test this channell..--ரவி 17:03, 24 அக்டோபர் 2006 (UTC)Reply

குதிரைப் பேரினம் தொகு

எனக்குத் தெரியவில்லை. நாய்ப் பேரினம், பூனைப் பேரினம் போன்றவற்றை செல்வா ஏற்படுத்தினார். எனவே அவர் உதவக்கூடும். --Sivakumar \பேச்சு 15:20, 30 அக்டோபர் 2006 (UTC)Reply

Translation regarding தொகு

Hi Natkeeran, Thanks for the suggestion. I realized that 'stub' shud be at the end myself. Regarding translate, I intend to translate some of these myself. Just that I didn't have means to type in Tamil when I marked them

-Balaji.

சமுதாய வலைவாசல் தொகு

நீங்கள் இடதுபுற சட்டத்திலுள்ள இணைப்பைக் கூறுகிறீர்களா? நானும் கவனித்தேன் (அவதானித்தேன்). வேறு எந்த சிக்கலாவது உள்ளதா? எந்த தொகுப்பு பதியப்படவில்லை? குறிப்பிட்டால் வழு பதியலாம்? -- Sundar \பேச்சு 11:45, 1 நவம்பர் 2006 (UTC)Reply

பயனர்களை நகர்த்துதல் தொகு

செல்வா, புதிய ஓர் கணக்கை ஆரம்பிக்க விரும்புவுவதாக அவரது பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். வேண்டுமானால் பயனர் கணக்கை நகர்த்திவிடலாமா?. இவ்வாறு ஆங்கில விக்கிபீடியாக்களில் செய்கிறார்கள். நிர்வாகிகள் மாத்திரமே செய்யக்கூடியது அவரிற்கு நிர்வாகப் பொறுப்பை வழங்கினால் அவரே செய்துகொள்வார் இல்லாவிட்டால் நாங்களும் செய்யலாம். இதனால அவரது பங்களிப்புப் பேணப்படும் இதற்கு முன்னர் ஒருதடவையும் நான் இதைச் செய்யவில்லை நான் செய்ததும் சரியா என்பது தெரியவில்லை. மயூரன் உருவாக்கிய சோதனைப் பயனரைச் சோதனைக்கான Testing பயனராக மாற்றியுள்ளேன்.--Umapathy 01:02, 3 நவம்பர் 2006 (UTC)Reply


User from நேபாளம் தொகு

  • Namaskaaram, pardon me for using English here but I have just started knowing about Tamil and the alphabets. So, it will take some time for me to learn it well. I am very grateful for the co-ordination and response that you presented to us in Nepal Bhasa wikipedia. We have just started so are sorry to say that we do not have many pages related to Tamil there yet. But with the co-ordination and benevolence of the two wikipediae, we do hope to increase articles related to Tamil. Thank you. --Eukesh 15:31, 5 நவம்பர் 2006 (UTC)Reply

தொடர்பியல் தொழில்நுட்பம் தொடர்பாடல் தொகு

தொடர்பாடல் சமூகவியல் புலத்தில் ஆயும் விடயங்கள் நிச்சயமாக வேறானதாகையால் நீங்கள் குறிப்பிட்டவாறான பகுப்பு மாற்றங்களைச் செய்து விடுங்கள். நன்றி. --கோபி 17:25, 5 நவம்பர் 2006 (UTC)Reply

நன்றி தொகு

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை என்றிருப்பது சரியாக உள்ளது. இத்தகைய கட்டுரைகளைக் கவனமெடுத்து அமைப்பதற்கு நன்றி. --கோபி 18:15, 10 நவம்பர் 2006 (UTC)Reply

இந்தித் திரைப்படங்கள் தொகு

ஹிந்தித் திரைப்படங்கள் ஏன் இந்தித் திரைப்படங்களாயின.இந்தி என்றார் indi என்பதனையல்லவா குறிக்கும். hindi ஹிந்தியல்லவா.--சக்திவேல் நிரோஜன் 15:06, 11 நவம்பர் 2006 (UTC)Reply

தொந்தரவிற்கு மன்னிக்கவும் அனைத்துமொழிப் புள்ளிவிபரங்கள் (அட்டவணை) இப்பகுதியினுள் என்னால் செல்ல இயலவில்லை.தங்களால் செல்ல இயல்கின்றதா.--சக்திவேல் நிரோஜன் 15:29, 11 நவம்பர் 2006 (UTC)Reply

தற்சமயம் இணைப்பு சரியாக இயங்கவில்லை. ஆங்கில விக்கியிலும் இணைப்பு சரியில்லை. ஆனால் அது சரியான இணைப்புத்தான். அவ்வப்பொழுது இன்றைப்படுத்துவார்கள். சற்று பொறுத்துத்தான் பார்க்க வேண்டும். நன்றி. --Natkeeran 15:33, 11 நவம்பர் 2006 (UTC)Reply

Re:taWpedia Assessment System: Quality and Importance Markers தொகு

Is it possible to provide some details as how we might be able to go about implementing Assessment System at taWpedia? Thanks. --Natkeeran 21:01, 18 நவம்பர் 2006 (UTC)Reply

Okay. Let me list what I have in mind:

  • Creating a "talk-page template". I am not able to create one due to my limited knowledge of writing in tamil language. I could create one in English if you want and you can translate it.
  • Parameters: The template will have class and importance parameters. More parameters can aded as needed (Examples: image-needed, collaboration-candidate, past-collabortion, map-needed, needed-infobox)
  • Usage: The template usage would be like follows:
{{Assessment department|class=A|importance=Top}}

Hope that explains. Let me know if you have more questions. Regards, Ganeshk 21:30, 18 நவம்பர் 2006 (UTC)Reply

Citizendium தொகு

I notice you you been adding links to Citizendium. I hope you understand Citizendium is not a Wikipedia partner, and Larry Sanger who started Citizendim is a vocal-critic of Wikipedia and had left Wikipedia due to differences with Jimbo Wales. Links to Citizendium should be restricted articles such Larry Sanger, Criticism of Wikipedia. It should be no way linked to our policies and guidelines. Regards, Ganeshk 23:23, 18 நவம்பர் 2006 (UTC)Reply

I agree it is healthy to watch for criticism. Competition is always good. They will be using Wikipedia articles as a base. Any changes they make can be pulled into Wikipedia since they are going to be GDFL. I guess we can co-exist. But, we should not give the perception that we support Citizendium. Thanks for removing the link from Policies and guidelines page. You have created that page in Wikipedia namespace. You can create it under article namespace and interwiki link to Criticism of Wikipedia. Regards, Ganeshk 00:07, 19 நவம்பர் 2006 (UTC)Reply
(my POV) I believe knowledge should be free for all to view and edit. I am not going to join Citizendium for sure. I do wish them the best for success. :) Regards, Ganeshk 00:11, 19 நவம்பர் 2006 (UTC)Reply

Citations and references தொகு

தற்போது வேலைப்பளு கூடுதலாக உள்ளது. விரைவில் எழுதுகிறேன். -- Sundar \பேச்சு 05:13, 21 நவம்பர் 2006 (UTC)Reply

பட்டியல்கள் தொகு

நற்கீரன், நீங்கள் ஆரம்பித்த சில பட்டியல்கள் மிகச் சிறியவையாக உள்ளன. உணவு தொடர்பான கட்டுரைகளில் ஒரே வசனத்தில் கொடுக்கக்கூடிய தக்வல்கள் தனிப்பக்கமாக உள்ளனவே என்று எண்ணத் தோன்றுகின்றது... உதாரணமாக கறி மூலிகைகள் பட்டியல், தானியங்கள் பட்டியல், கொட்டைகள் பட்டியல், கிழங்குகள் பட்டியல் போன்றவை....

இதுதவிர போன்றவற்றுக்குத் தனிப்பக்கங்கள் அவசியமா? சூழல் பேணல் செயல்பாடுகளின் பட்டியல், , தமிழ்த் திரைப்படக் கலை இயக்குனர்கள் பட்டியல், விளையாட்டுப் பொருட்கள் பட்டியல், தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்களின் பட்டியல் , தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களின் பட்டியல், ஹிந்தித் திரைப்பட நடிகர்களின் பட்டியல்...

குறிப்பாக ஹிந்தித் திரைப்பட நடிகர்களின் பட்டியல், தமிழ்த் திரைப்படக் கலை இயக்குனர்கள் பட்டியல், தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்களின் பட்டியல் போன்றவை மிக நீண்டவையாகவும் முழுமையற்றவையாகவும் பயனற்றவையாகவும் தொடரவே வாய்ப்பிருப்பதாக உணர்கிறேன்.

இது என் தனிப்பட்ட கருத்துத்தான். தொலைநோக்கு அடிப்படையில் உங்கள் கருத்தறிய ஆவல். நன்றி. --கோபி 16:59, 21 நவம்பர் 2006 (UTC)Reply

கருத்துக்களுக்கு நன்றி நற்கீரன். --கோபி 17:51, 21 நவம்பர் 2006 (UTC)Reply

Abt a South Asian project தொகு

Plz visit this page for the development of this project.--Eukesh 16:18, 24 நவம்பர் 2006 (UTC)Reply

உதவி தேவை - தமிழாக்கம் தொகு

'risk' என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் என்ன? 'project risk' அல்லது 'investment risk' என்னும் வாக்கியங்களை தமிழில் எப்படி மொழிபேர்ப்பது? உதவிக்கு நன்றி! --கேரளத் தமிழன் 23:09, 29 நவம்பர் 2006 (UTC)Reply

நன்றி! -கேரளத் தமிழன் 06:20, 5 டிசம்பர் 2006 (UTC)

திராவிடர் தோற்றம் தொகு

நக்கீரன், நீங்கள் ஆரியர் கட்டுரை தொடர்பான எனது கருத்துக் குறித்தே, எனது உரையாடல் பக்கத்தில், திராவிடர் தோற்றம் தொடர்பான குறிப்பை விட்டுள்ளீர்கள் எனக் கருதுகிறேன். உண்மையில் திராவிடர்களின் மூலம் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனால், எவையுமே உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. இவை அனைத்துமே கூடிய அளவுக்கு, speculation தான். ஆபிரிக்கா, மத்தியதரைக் கடல் பகுதி, தென்னிந்தியா, லெமூரியா என அவரவர்களுடைய கருத்துக்களுக்கு ஏற்பக் கொள்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், திராவிடர் ஆரியருக்கு முன்பே இந்தியாவில் இருந்தார்கள் என்பதும், அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் பரந்து இருந்தார்கள் என்பதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. சமஸ்கிருதத்தில் திராவிடச் செல்வாக்கு இருப்பதுபற்றிப் பலர் எடுத்துக்காட்டியுள்ளார்கள். ரிக் வேத சமயம் பெருமளவு மாற்றம் பெற்று இன்றைய நிலைக்கு வந்ததற்குத் திராவிட மற்றும் ஏனைய உள்ளூர்ப் பண்பாட்டுக் கூறுகளை வேதப் பண்பாடு தனக்குள் உள்வாங்கிக் கொண்டதே காரணம் என்பது பற்றியும் பலர் எடுத்துக் காட்டியுள்ளார்கள். இந்தியாவின் நகர அமைப்பு, வாஸ்து, சிற்பக்கலை, வானியல் போன்ற இவ்வுலகம் சார்ந்த விடயங்களுக்கு மூலமாகக் கருதப்படுகின்ற நான்காவது வேதமாகிய அதர்வவேதத்தை நீண்டகாலமாக ஆரியர் வேதங்களில் ஒன்றாகவே சேர்த்துக் கொள்ளவில்லை. ஆரியமல்லாத பண்பாடுகளில் இருந்து தோன்றிய அதனைப் பிற்காலத்தில் வேதங்களில் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டு மேற்சொன்ன கலைகள் அனைத்தும் வேதத்தில் இருந்து தோன்றியதாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். மயமதம், மானசாரம் முதலிய முக்கியமான சிற்பநூல்கள் அனைத்துமே தென்னிந்தியாவில் உருவானவை. அவற்றுக்கான உதாரணங்களும் தென்னிந்தியாவில்தான் பெரும்பான்மையும் காணப்படுகின்றன. ஆரியருக்கு முற்பட்ட சிந்துவெளிப் பண்பாட்டில் திராவிடப் பண்பாட்டுக் கூறுகள் முக்கிய பங்கு வகித்தன என்ற கொள்கைக்கு இன்னும் போதிய ஆதரவு உண்டு. இவ்வாறு ஏனைய எல்லோருக்கும் சொந்தமானவற்றையெல்லாம் திட்டமிட்ட முறையில் வேதங்களுக்குள் உள்வாங்கிக்கொண்டு. இந்தியப் பண்பாடு முழுமையுமே ஆரியம் சார்ந்தது என்று கூறிவருகிறார்கள். இத்தகைய ஒரு தொடர் முயற்சியில் அண்மைக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான், ஆரியர்கள் இந்தியாவில் தோன்றி உலகம் முழுதும் பரவினர் என்ற கொள்கை. Mayooranathan 07:01, 2 டிசம்பர் 2006 (UTC)

உதவி தேவை-மொழிபெயர்ப்பு தொகு

நற்கீரன், விக்கிபீடியா நடுநிலைக் நோக்குப் பக்கத்தை [1] மொழிபெயர்த்து உதவ முடியுமா? நன்றி. --கோபி 16:04, 2 டிசம்பர் 2006 (UTC)

விக்கிசெய்திகள் தொகு

மயூரநாதன், விக்கிசெய்திகள் தளம் http://ta.wikinews.org/wiki/Main_Page இல் ஆரம்பமாகியுள்ளது. எனக்கு விக்கிதளங்களை ஆரம்பித்துப் பழக்கம் இல்லை. நேரம்கிடைக்கும் போது அதில் நிர்வாக வேலைகளைச் செய்யது உதவ முடியுமா? --Umapathy 01:27, 3 டிசம்பர் 2006 (UTC)

தகவலுக்கு நன்றி உமாபதி. நிச்சியம் செய்யலாம். --Natkeeran 01:30, 3 டிசம்பர் 2006 (UTC)

Varaverpukku mikka nanri :-) I will look at the link Umapathy sent when I get a chance. Thank you. Cribananda 08:55, 3 டிசம்பர் 2006 (UTC)

பாராட்டு தொகு

சமுதாய வலைவாசலில் நீங்கள் தொடர்ந்து தந்து வரும் தமிழ் முகப் படங்கள் அனைத்தும் அருமை !--Ravidreams 16:10, 4 டிசம்பர் 2006 (UTC)

நன்றி ரவி. --Natkeeran 02:14, 5 டிசம்பர் 2006 (UTC)

Namaskaaram from Nepal Bhasa தொகு

I just wanted to inform you that we have started a short page about Tamil language in Nepal Bhasa wikipedia here which we hope to improve in near future. Plus, if there are any other topics that you consider as a "must have", please notify us there.--Eukesh 05:11, 9 டிசம்பர் 2006 (UTC)

ஆண்டறிக்கை தொகு

ஆண்டறிக்கை குறித்து உங்கள் முனைப்பிற்கு நன்றி. இத்தகையதொரு பார்வை மிகவும் தேவையான ஒன்று. தற்போது எனக்கு இணைய அனுக்கம் சரிவர இல்லை. விரைவில் (ஒரு வாரத்தில்) பதிகிறேன்.

நீங்கள் அவசரப்படவில்லை. படிமப் பக்க இடைமுகம் உட்பட மீடியாவிக்கி மென்பொருள் இற்றைப்படுத்தப்பட வேண்டும். வழு பதிவோம். -- Sundar \பேச்சு 08:02, 12 டிசம்பர் 2006 (UTC)

புது பகுதிகள் தொகு

நக்கீரன் - சமூகத்திற்க்கு கீழ் குற்றம்/மர்மம் என ஒரு பகுதியை ஆரம்பிக்கவும். அந்த தலைப்பில் எழுதற்க்கு நிறைய இருக்கு. வீரப்பன், பூலன் தேவி, தக், பல கொலை வழக்குகள், கிழிக்கும் ஜேக் (Jack the Ripper), தொடர்ச்சி கொலையாளர்கள்,............ நன்றி--விஜயராகவன் 09:26, 14 டிசம்பர் 2006 (UTC)

JS transliteration தொகு

We have recently enabled Devnagari using this code. If you are interested, you can create a similar code for this script and incorporate it into Monobook.js as in this page. Hope you find this information useful. Thank you.--Eukesh 05:01, 16 டிசம்பர் 2006 (UTC)

Fundraiser தொகு

Natkeeran, I noticed you tried to move the fund-raiser but reverted it. I have marked the exact block of code that needs to be moved. I have marked them as "Start Fund-raiser" and "End Fund-raiser". Just take the entire block of code from feature to mainpage (including the comments). Thanks for the help. Regards, Ganeshk 05:02, 19 டிசம்பர் 2006 (UTC)

Thats the block of code that I moved. But, the fonts size get mixed up. --Natkeeran 05:05, 19 டிசம்பர் 2006 (UTC)

flow chart தொகு

நான் தொகுத்த நீண்ட பட்டியல்களை கேட்கிறீர்களா? --டெரன்ஸ் \பேச்சு 06:05, 22 டிசம்பர் 2006 (UTC)

நான் MS Wordஐத்தான் பயன் படுத்தி வேலை மினக்கட்டு செய்தேன் நல் மென்பொருள் இணையத்தில் இருந்தால் எனக்கு சொல்லவும் பல ஓட்ட வரைப்படங்கள் இணைக்க வேண்டியுள்ளது எனினும் மென்பொருள் பிரச்சினை காரணமாக தாமதம். உங்களுகு உதவ முடியாமைக்கு வருந்துகிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 05:36, 24 டிசம்பர் 2006 (UTC)

முதற்பக்கம் இற்றைப்படுத்தல் தொகு

நற்கீரன், முதற்பக்கத்தில் இன்றைய நாட்குறிப்பு தெரியமாட்டேன் என்கிறது. ஏன் என்று தெரியுமா? mainpagefeature வார்ப்புருவில் தெரிகிறது.--Kanags 03:12, 24 டிசம்பர் 2006 (UTC)

நன்றி நற்கீரன்.--Kanags 04:07, 24 டிசம்பர் 2006 (UTC)

அதிகாரி பொறுப்பு தொகு

நற்கீரன், நீங்கள் அதிகாரி பொறுப்புக்கு முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மயூரநாதனும் சுந்தரும் வேலைப்பளு காரணமாக இருக்கும் இச் சந்தர்ப்பத்தில் TXiKiBoT க்கு bot status வழங்கக் கூட அதிகாரியின்மை அண்மைய மாற்றங்கள் பக்கத்தை சிக்கலாக்கியுள்ளது. த.வி. யின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் எடுப்பவர் என்பதாலும், பொறுப்புடன் நடந்து கொள்பவர் என்பதனாலும், தொடர்ச்சியான இணைய இணைப்புச் சாத்தியமானவர் என்பதனாலும் நீங்கள் அதிகாரிப் பொறுப்புக்குப் பொருத்தமானவரே. --கோபி 10:09, 29 டிசம்பர் 2006 (UTC)

கோபியின் கருத்தே எனது கருத்தும் தமிழ் விக்கி பீடியாவில் அதிகாரிப் பொறுப்பை நீங்கள் ஏற்கவேண்டும் எனபதே எனது விருப்பம். --Umapathy 16:56, 29 டிசம்பர் 2006 (UTC)
என் மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. விரைவில் எனக்கும் வேலைப்பழு அதிகரிக்க இருப்பதால், தொடர்ச்சியாக கடந்த காலம் போல பங்கிளிக்க முடியாமல் இருக்கும். சுந்தர் விரைவில் திரும்பி வருவார். இந்த கிழமை வரவதாக அறிவித்திருக்கின்றார். மேலும், 3 அதிகாரிகள் இருப்பது சற்று அதிகமாக தென்படும். botstatus மற்றும் நிர்வாகி அணுகூலங்களை ஏதுவாக்குவது ஆகிய இரு பணிகளுமே சற்று தாமதம் அடையும் என்று நினைக்கின்றேன். தேவை தொடர்ந்தால் பின்னர் பார்க்கலாம். மீண்டும், நன்றிகள். --Natkeeran 01:59, 30 டிசம்பர் 2006 (UTC)
Aging
Mprize
Immortality
Limits

Heredity
Human Genome Project
Genetics
Eugenics

Intelligence
Novamente
Strong AI
Meaning

Spirituality
Super String Theory
Theory of everything
Uncertainty principle

Work
Asimo
Robotics
Unemployment

Survival
X Prize
Space exploration
Looner landing

Challenge
Centennial Challenges
Singularity
Dystopia

Mind
Blue Brain Project
Neuroscience
Abstraction

Motion
CERN
Sub particle physics
Black hole

Fantasy
Non-biological molecular machines
Nanotechnology
Gray goo

பார்க்க தொகு

நற்கீரன் கலாநிதியின் பேச்சுப்பக்கத்தை ஒருதடவை பாருங்கள். அவரது பெயரில் எனது கருத்துக்கள் பதிவாகியமை எனக்கு குழப்பமளிக்கிறது. கோபி 17:29, 8 ஜனவரி 2007 (UTC)

எனக்கும் குழப்பம்தான். சுந்தருக்கு ஒரு மின்னஞ்சல் செய்துபாருங்கள். --Natkeeran 17:30, 8 ஜனவரி 2007 (UTC)

இலங்கை கிராமங்கள் தொகு

ஆள்கூறுகள் நெட்டாங்கும் அகலாங்க் தெரியுமிடத்து பிரச்சின இல்லை. அனால் இலங்கை படத்தில் குறித்தால் இடத்தின் துள்ளியம் பற்றிய பிரச்சினை வரலாம் (உதாரணமாக கொழும்பு ,தெகிவளை என்பன கிட்டதட்ட ஒரே இடம் மாதிரியே தெரியும் ஆனால் இலங்கையில் எங்கே இருக்கிறது என்பதைக் காட்ட அது போதுமானது என்பது என்கருத்து அப்படி இல்லாவிட்டால் மாகாணப் படங்களை பதிவேற்றி அதிலும் குறிக்கும் படி நிரலை மாற்றி எழுதலாம். தேவையான மாற்றங்கள் இருப்பின் கூறினால் முயன்று பார்க்கிறேன். உங்கள் கேள்விக்குப் பதில் ஆம் இவற்றை கிராமங்கலுக்கு பயன்படுத்தலாம். --டெரன்ஸ் \பேச்சு 15:45, 9 ஜனவரி 2007 (UTC)

இம்மாதம் 17 வரை கொஞ்சம் வேலை அதிகம் பின்னர் பெப்ரவரி இலங்கை செல்கிறேன் அதன் பின்னர் தான் செய்ய வேண்டும்? ஜனவரி20- 30 வாக்கில் ஒருமுறை பரிசோதனை செய்து பார்க்கிறேன். கிராமங்கள் பற்றிய தகவல்களை (அமைவிடம், பெருந்தெரு,மாகாணம், மாவட்டம், அண்டிய நகரம் புவியியல் வலயம், கட்டுப்பாடு அரசா புலிகளா, முக்கியத்துவம், சமய தளங்கள், தொழில், இனப்பிரச்சினையில் ஏதேம்னும் முக்கிய சம்பவங்கள், இணையதளம் etc.) இப்படி உங்களால் முடித வற்றை excel database மாதிரி அனுப்ப முடிந்தால் வேலை இலகுவாகிவிடும்.ஜனவரி 22-30 இடையில் ஆரம்ப வேலைகளை செய்கிறேன் உங்களுக்கு முடியுமான போது தகவல்களை அனுப்பினால் கட்டுரைகளை தொடங்கலாம்.--டெரன்ஸ் \பேச்சு 16:03, 9 ஜனவரி 2007 (UTC)

எனது மின்னஞ்சல் முகவரி trengarasu[at]yahoo[dot]com என்பதாகும்--டெரன்ஸ் \பேச்சு 02:59, 10 ஜனவரி 2007 (UTC)

Assessment template தொகு

Natkeeran, Sorry for the delay in getting back to you. I created a template in my sandbox. Please check பயனர் பேச்சு:Ganeshk/மணல்தொட்டி2 and advise translations for the text displayed and the categories below. Once we create the required categories and templates, it should be ready for use. Regards, Ganeshk 20:42, 21 ஜனவரி 2007 (UTC)

I have also added a request for a change in the MediaWiki here. Regards, Ganeshk 21:00, 21 ஜனவரி 2007 (UTC)
Not back from the break. I did not want the assessment process to wait for me. Thanks for updating the MediaWiki page. Regards, Ganeshk 23:41, 21 ஜனவரி 2007 (UTC)
I made the template smaller now. It should be a small orange box aligned to the right. If you see a plain-white large box, then visit மீடியாவிக்கி:Common.css and press Ctrl+F5 to refresh the cache. Regards, Ganeshk 00:02, 22 ஜனவரி 2007 (UTC)
Also, please suggest a tamil name for the template. Regards, Ganeshk 00:42, 22 ஜனவரி 2007 (UTC)

I need the translations for these:

  • unassessed = தரமறியப்படவில்லை
  • not applicable = பொருத்தமற்றது
  • non article = கட்டுரை இல்லை
  • English = Tamil Short Form = Tamil Long Form
  • FA = சிறப்பு = சிறப்புக் கட்டுரை
  • A = நல்ல = நல்ல கட்டுரை
  • B = இடைநிலை = இடைநிலைக் கட்டுரை
  • Start = ஆரம்பம் = ஆரம்ப நிலைக் கட்டுரை
  • Stub = குறிப்பு = குறிப்புநிலைக் கட்டுரை
  • NA = தரமறியா = தரமறியப்படாக் கட்டுரை
  • Top = அதி உயர்
  • High = உயர்
  • Mid = இடைநிலை
  • Low = குறை
  • Unknown = தெரியாது

For now we will get all articles sorted into cats. Statistics will be phase II in a few months. Regards, Ganeshk 01:40, 27 ஜனவரி 2007 (UTC)

Each article will be tagged with a rating based on its quality and importance. It will fall into the different categories created. This would help identify for example, Top-importance articles of stub quality. Let me know if you have more questions. Regards, Ganeshk 01:51, 27 ஜனவரி 2007 (UTC)

சிறு மடல் தொகு

நற்கீரன், உங்களுக்குச் சிறு தனிமடலொன்று அனுப்பியுள்ளேன். பார்க்கவும். நன்றி. --கோபி 21:34, 26 ஜனவரி 2007 (UTC)

நிலவரைப்படம் தொகு

சுருவில் கட்டுரையைப்பார்த்து நீங்கள் கேட்டபடி உள்ளதா எனக் கூறினால் மற்றவற்றுக்கு செய்கிறேன். இனி மார்ச் தான் விக்கி பக்கம் தலைக்காட்ட முடியும் சரியாயின் மார்ச் மற்றவற்றுக்கும் செய்து முடிக்கிறேன்.--டெரன்ஸ் \பேச்சு 13:15, 30 ஜனவரி 2007 (UTC)

அதிகாரி அணுக்கம் தொகு

நற்கீரன், உங்களுக்கும் ரவிக்கும் தவியில் அதிகாரி அணுக்கத்துக்கு முன்மொழியலாம் என எண்ணியுள்ளேன் உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும். Mayooranathan 11:41, 2 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி, மயூரநாதன். இந்த முன்மொழிவை ஏற்கிறேன். --Natkeeran 15:20, 2 பெப்ரவரி 2007 (UTC)

மயூரநாதன் வேண்டுகோளை ஏற்றமைக்கு நன்றி நற்கீரன். பணி சிறக்க வாழ்த்துக்கள். --கோபி 16:01, 2 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீரன், தமிழ் விக்கிபீடியா பயனர்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு இசைவாக உங்களுக்கு அதிகாரி அணுக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் அயராத பங்களிப்பினால் தமிழ் விக்கிபீடியா பெரிதும் பயன்பெற்றுள்ளது. இப் புதிய அதிகாரி அணுக்கம் உங்கள் பங்களிப்பை மேலும் உத்வேகத்துடன் செய்ய வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கை. வாழ்த்துக்கள்.

உங்கள் அணுக்கத்தை சோதித்துப் பார்ப்பதற்காக கனக்ஸ், டெரன்ஸ் ஆகியோரில் ஒருவருக்கு நிர்வாகி அணுக்கத்தை வழங்குங்கள். Mayooranathan 18:31, 9 பெப்ரவரி 2007 (UTC)

அனைவருக்கும், நன்றி. --Natkeeran 19:52, 9 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீரன், சிறப்புப் பக்கங்கள் பகுதிக்குச் செல்லுங்கள். அங்கே கடைசியில் "மட்டுப்படுத்தபட்ட சிறப்புப் பக்கங்கள்" என்ற பிரிவு இருக்கிறது. அங்கே பயனரை ஒரு முறைமைச் செயற்படுத்துனர் (sysop) ஆக்கவும். என்பதைக் கிளிக் செய்யவும். வரும் பக்கத்தில் பயனரின் பெயர் எழுதும் இடத்தில் நிர்வாகி ஆக்கவேண்டியவரின் பெயரை எழுதி அதன் கீழுள்ள பயனர் உரிமைகளை நிறுவவும் என்பதை அழுத்தவும். அவ்வளவுதான். Mayooranathan 20:07, 9 பெப்ரவரி 2007 (UTC)
நற்கீரன், அதிகாரியானமைக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணிதொடரட்டும். --Umapathy 00:15, 10 பெப்ரவரி 2007 (UTC)

வாழ்த்துக்கள்|--கோபி 01:38, 10 பெப்ரவரி 2007 (UTC)

image upload page editing தொகு

edit மீடியாவிக்கி:Uploadtext to change the text in image upload page. these mediawiki pages can be edited by sysops only. the list of mediawiki pages are found in அனைத்து முறைமைசார் தகவல்கள் அட்டவணை page list in the special pages. --Ravidreams 18:31, 11 பெப்ரவரி 2007 (UTC)

Transliteration for Tamil தொகு

I have recently created a transliteration scheme for Tamil here with my limited knowledge of Tamil. This can be linked to monobook.js to enable direct Tamil text entry like the text entry of Devnagari in Nepal Bhasa. I think this method can be a lot more easier than asking each user to install the indic scripts and to learn the input pattern. Also, a modified form of the index given below can be placed in the front page to ease navigation.

௦-௯ அஂ
ஶ்ரேணீ க்ஷ த்ர ஜ்ஞ ஶ்ர அஃ

Thank you.--Eukesh 17:49, 14 பெப்ரவரி 2007 (UTC)

கருத்து வேண்டல் தொகு

சென்னை விக்கிப் பட்டறை குறித்த தமிழ் விக்கி அறிக்கை இங்கு உள்ளது. அதை மேம்படுத்தித் தர, கருத்துகள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

தவிர, அண்மையில் மொழி சார் உரையாடல்கள் பெருகி, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க உங்கள் அனைத்து கருத்துக்களையும் இங்கு குவிக்கவும். நன்றி. --Ravidreams 14:01, 16 பெப்ரவரி 2007 (UTC)

பயன்படாப் படிமங்கள் தொகு

நற்கீரன், பயன்படாப் படிமங்கள் பட்டியலில் [2] நீங்கள் பதிவேற்றிய சிலவும் உள்ளன. அவற்றில் தமிழ்விக்கிக்கெனவே நீங்கள் எடுத்த அல்லது உங்களிடம் பிரதிகள் இல்லாத ஆனால் முக்கியமான படிமங்கள் தவிர்ந்த ஏனையவற்றை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 18:14, 16 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ் விக்கிபீடியாவுக்காக எடுக்கப்பட்ட, த.வி.காக மாற்றங்கள் செய்யப்பட்ட அல்லது முக்கியமான படிமங்களை நீக்க வேண்டியதில்லை. ஆனால் பொருத்தமான உரிமம் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்தானே! ஆங்கில விக்கி மற்றும் விக்கிபொது போன்ற இடங்களிலிருந்து பிரதிசெய்து வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. மேலும் சிலசமயங்களில் தேவைகருதி இணைக்கப்பட்டுப் பின்னர் பயன்படாது போன அல்லது தேவையற்றுப்போன படிமங்களையும் நீக்குவதே பொருத்தமானது. --கோபி 18:26, 16 பெப்ரவரி 2007 (UTC)
மேலும் விக்கிபீடியா படிமங்களைச் சேர்த்து வைத்திருப்பதற்கான இடமுமில்லைத்தானே. பொது உரிமப் படங்களெனில் விக்கிபொதுவில் சேர்ப்பதே பொருத்தமானது. ஆனால் தமிழ்ச் சூழலுக்குப் பிரத்தியேகமான த.வி.காகவே எடுக்கப்பட்ட மற்றும் பயன்பட வாய்ப்புக்கள் உள்ள படிமங்களை இங்கு சேர்த்து வைத்துக் கொள்ளலாம். --கோபி 18:28, 16 பெப்ரவரி 2007 (UTC)
கோபி, மயூரநாதன் முன்னர் குறிப்பிட்ட கருத்துக்களை இங்கு நோக்குங்கள். ஆ.வி. இருப்பதால் இங்கு நீக்குவது சரியில்லை. ஏன் என்றால் அவற்றை நாம் நேரடியாக பயன்படுத்த முடியாது. யாராவது இங்கு சேர்த்திருப்பாரானால் எதாவது நோக்கம் இருந்திருக்கும். அழகியல் கூட. இங்கு எம் கவனத்தை ஈர்க்கவும் யாராவது சேர்த்திருக்கலாம். பொதுவில் இருந்தால் நீக்கலாம் என்றே தோன்றுகின்றது. ஆனால் படிமங்கள் தமிழ், தமிழ்ச் சூழலுடன் தொடர்பிரிந்தால் இங்கிருப்பதும் நன்று. --Natkeeran 18:32, 16 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீரன், ஆங்கில விக்கிபீடியாவில் உள்ள ஆனால் இங்கு பயன்படாத படிமங்களே நீக்கப்பட்டன. அங்கே உள்ளன என்பதற்காக இங்கும் இருக்க வேண்டியதில்லைத்தானே. பயன்படாத படிமங்களை த.வி.யில் பதிவேற்றி வைப்பதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. புதிதாகக் கட்டுரை தொடங்குபவர்கள் கூட புதிதாகப் பதிவேற்றுவார்கள். பழையவற்றைத் தேடிக் கொண்டிருக்க மாட்டார்கள். இணையத்தில் அளிப்புரிமையிற் கிடைக்கின்றன என்பதற்காக இங்கும் பதிவேற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தேவையில்லை. --கோபி 16:21, 17 பெப்ரவரி 2007 (UTC)

மேலும் ஆங்கில விக்கி, விக்கி பொது, பிற அளிப்புரிமைத் தளங்களிலிருந்து எடுக்கப்பட்டுத் தமிழில் மாற்றியமைக்கப்பட்ட படிமங்களை அவை எதிர்காலத்தில் பயன்பட வாய்ப்பிருந்தால் நீக்க வேண்டியதில்லை. கோபி 16:45, 17 பெப்ரவரி 2007 (UTC)

தமிழர் தகவல்கள் தொகு

நற்கீரன், நீங்கள் சொல்வது சரி தான். இவ்வார்ப்புரு முழுமையடைந்த பின் சேர்த்து விடலாம். --Sivakumar \பேச்சு 15:48, 17 பெப்ரவரி 2007 (UTC)

சிறு வேண்டுகோள் தொகு

நற்கீரன், பல கட்டுரைகளில் நிறைய சிறு சிறு தொகுப்புகளாக தொடர்ந்து நீங்கள் செய்வதை காண்கிறேன் (தமிழ் கட்டுரையில் 84 தொகுப்புகள் !!!). இதன் மூலம் அண்மைய மாற்றங்கள் பகுதியில் நெரிசலாகவும் பக்க வரலாற்றை ஒப்பு நோக்குவமு கடினமாகவும் ஆகலாம். நான்கைந்து மாற்றங்களையாவது ஒன்று கூட செய்யுமாறு என் சிறு வேண்டுகோளாக வைக்கிறேன். பகுதி வாரியாக தொகுக்காமல் முழு பக்கத்துக்கான தொகுத்தல் பார்வையில் பக்கத்தை தொகுப்பதால் இது சாத்தியம் தானே..--Ravidreams 09:23, 20 பெப்ரவரி 2007 (UTC)

படிமங்களை நீக்குதல் தொடர்பாக தொகு

நற்கீரன், நான் படிமங்களை நீக்கும் போது பதிவேற்றியவர் யாரென்பதைக் கவனித்துச் செய்யவில்லை. பொதுவில் உள்ள படிமங்களுடன் ஒப்புநோக்கி இரண்டும் ஒன்றென்றால் மட்டுமே நீக்கி வருகிறேன். நீங்கள் பதிவேற்றிய படிமங்களுக்காவது பொருத்தமான உரிமங்களை இணைத்தீர்களென்றால் உதவியாக இருக்கும். பொதுவில் ஒரு படிமம் பொருத்தமான உரிமத்துடன் இருக்கையில் இங்கு உரிமமற்ற படிமமொன்றினால் அது பிரதி செய்யப்படுவது பொருத்தமில்லையல்லவா... --கோபி 12:06, 21 பெப்ரவரி 2007 (UTC)

இராம.கி வலைப்பதிவில் இருந்து குறிப்பு இட்டமைக்கு நன்றி தொகு

நற்கீரன், நீங்கள் இராம.கி பதிவில் இருந்து தந்த குறிப்புகளுக்கு நன்றி. சென்று பார்த்தேன். இராம.கியைப் போல் தமிழ்நலம் பேணுவோர், அறிவார்ந்த சொல்லாடல் நடத்துவோர் மிகக் குறைவே. --செல்வா 17:01, 22 பெப்ரவரி 2007 (UTC)

வார்ப்புரு:நூல் தகவல் சட்டம் தொகு

நற்கீரன், குறித்த வார்ப்புருவில் நீங்கள் செய்த மாற்றங் காரணமாக நூல்கள் தொடர்பான கட்டுரைகளில் குறித்த படிமங்கள் தென்படாதுள்ளன. மாற்றத்துக்கான காரணத்தை அறியலாமா? --கோபி 18:40, 22 பெப்ரவரி 2007 (UTC)

எங்கேயோ ஒரு சிறு வழு உள்ளது, பின்னர் பார்த்து திருத்துவேன். --Natkeeran 18:43, 22 பெப்ரவரி 2007 (UTC)

படிமங்கள் தொடர்பாக தொகு

நற்கீரன் நீங்கள் படிமங்களை வகைப்படுத்துவது தொடர்பான வார்ப்புருக்களை ஓரளவு முழுமைப்படுத்தி விட்டீர்கள். இனிப் பதிவேற்றப்படும் படிமங்களின் மூலம் மற்றும் உரிமம் தொடர்பில் நாம் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பது நல்லதென்று தோன்றுகின்றது. தகுந்த உரிமமற்ற படிமங்களை நாம் வழங்குவது விக்கிபீடியாவின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் என்றே கருதுகிறேன். --கோபி 19:06, 22 பெப்ரவரி 2007 (UTC)

இப்பொழுது பயன்படாத படிமங்கள் [3] 118 உம் வகைப்படுத்தப்படாத படிமங்கள் [4] 1134 உம் உள்ளன. வகைப்படுத்தப்படாதவற்றைப் படிப்படியாக வகைப்படுத்துவதும் புதிதாக பதிவேற்றப்படுபவையின் மூலம், உரிமம் பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதும் நம்முள்ள பணிகள். --கோபி 16:54, 27 பெப்ரவரி 2007 (UTC)

சக்தி பேணப்படுகின்றதா? தொகு

நறிகீரன், நீங்கள் கேடிருந்தீர்கள், "செல்வா, இங்கு purely indutive circuit சக்தி வீணடிக்கப்படுகின்றதா? இல்லத்தானே, அப்படி என்றால் ஓம் விதியுடன் ஒத்து காட்டுவது அவ்வளவு நல்லதல்ல அல்லவா."

கருத்தியலாக தனித்தூண்டிகளால் ஆன மின்சுற்றில் மின் ஆற்றல் காந்தப்புலன் அல்லது மின்புலத்தில் மாறிமாறி தங்கி இருக்குமே அன்றி மிந்தடையில் வெப்பமாய் மாறி ஆற்றல் "வீண்" ஆவதில்லை. கருத்தியலான தடை மாசிலா மறிமங்கள் கொண்ட சுற்றுகளிலும் ஆற்றல் "மறைவதுண்டு" ஆனால் அவை மின் தடை போன்றவற்றால் அல்ல. இதனை விளக்க மிகுதியான நேரம் எடுக்கும். சுருக்கமாகச் சொன்னால், இரு கருத்தியலான, தடை மாசிலா தேக்கிகள் இணையாக பூட்டிய ஒரு சுற்றை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த தேக்கிகளை A என்றும் B என்றும் கூறுவோம்.இரண்டும் ஒரே அளவு கொண்மம் (தேக்குதிறன்) C இருப்பதாகக் கொள்வோம். இரண்டு தேக்கிகளுக்கும் இடையே ஒரு தொடுக்கி (தொடுப்பி அல்லது சுவிட்சு) இருப்பதாகக் கொள்ளுங்கள். A என்னும் தேக்கியில் V வோல்ட் அழுத்தம் இருப்பதாகக் கொள்ளுவோம். B என்னும் தேக்கியில் மின் அழுத்தம் ஏதும் இல்லை என்று கொள்வோம். முதலில் தொடுக்கி திறந்து இருப்பதாக கொள்ளுங்கள். பின்னர் காலம் t = 0 என்னும் பொழுது தொடுக்கியை மூடினால் (அதாவது இரு தேக்கிகளையிம் இணையுமாறு செய்தால்), மின்மம் A யில் இருந்து B க்குப் பாயும். மின்ம இழப்பு ஏதும் இல்லை. ஆனால் இரு தேக்கிகளிலும் மின்மம் சமமாகப் பகிர்ந்த பின்பு மின் ஓட்டம் ஏதும் இராது. தேக்கி A பாதி வோல்ட் தான் இருக்கும், அதேபோல தேக்கி B யிலும் பாதி வோல்ட் இருக்கும். ஆனால் ஆற்றல் மாய்மாய் காணாமல் போயிருக்கும் இதனை எளிதாகக் கணிக்கலாம். (முதலில் தொடுக்கி திறந்து இருந்தபொழுது இருந்த ஆற்றல் 0.5 CV2 தொடுக்கியை மூடிய பின் இரு தேக்கிகளிலும் சேர்ந்து இருக்கும் ஆற்றல் எவ்வளவு என்று கணியுங்கள்). எனவே ஆற்றல் இழப்பு உண்டு. ஆனால் அது மின்தடையில் ஏற்படும் ஓம் விதியின் அடிப்படையில் நிகழும் இழப்பில்லை (ஓமிய இழப்பில்லை). இதே போல மின் தூண்டிச் சுற்றுகளிலும் உண்டு. --செல்வா 22:56, 23 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி. சற்று அலசிவிட்டு தொடர்கிறேன். --Natkeeran 23:25, 23 பெப்ரவரி 2007 (UTC)

நன்றிகள் தொகு

நற்கீரன், உங்கள் பரிந்துரைகளுக்கு நன்றிகள். வரம்பெல்லாம் எதற்கு? சிலவற்றை ஒருவருக்கொருவர் சுட்டிக் காட்டுவது கூட்டுழைப்புக்கு பயனுள்ளதே. எடுத்துக்காட்டாக இலக்கியத்துக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் ஏனைய துறைகளுக்குக் கொடுக்கவில்லை. இப்படி விடயங்களை அவ்வப்போது சுட்டிக் காட்டுவதே த.வி.யை வளர்த்தெடுப்பதற்கு உதவும்.. நன்றி. கோபி 16:26, 25 பெப்ரவரி 2007 (UTC)

தனித்தமிழ் தொகு

நற்கீரன் கதிரை, துவாய் போன்ற சொற்கள் எனக்கு முற்றிலும் புதிது. தமிழ்நாட்டினருக்கும் அப்படித் தான் என்று நம்புகிறேன். ஈழ வழக்கு நல்ல தமிழ்ச் சொல்லாக இருந்தால் எந்த தயக்கமும் இன்றி ஏற்கலாம். அதனால், சொல் மூலம் அறியும் ஆர்வத்தில் கேட்டேன். மேசை, அலுமாரி போன்ற சொற்கள் தமிழ்நாட்டிலும் உண்டு. இது போல் இரு நிலத்திலும் பழக்கமான சொற்களை தனித்தமிழ் இல்லாவிட்டாலும் வழக்கு கருதி ஏற்கலாம். ஆனால், தமிழாகவும் இல்லாமல் தமிழக வழக்காகவும் இல்லாத பட்சத்தில் நிச்சயம் அதை ஏற்பது குறித்து நாங்கள் யோசிக்க வேண்டும்.--Ravidreams 20:35, 4 மார்ச் 2007 (UTC)

"கதிரை, துவாய்" போன்ற தனித் தமிழ் சொற்களைப் பயன்படுத்தி, அவைகட்கு வழக்கில் இருக்கும் சொற்களை அடைப்புக் குறிக்குள் குறித்தல் நலம் பயக்கும் என்பது எம் கருத்து.--ஞானவெட்டியான் 14:23, 17 மார்ச் 2007 (UTC)

உங்கள் கேள்விகளுக்கு மறுமொழிகள் தொகு

என் பேச்சுப் பக்கத்தில் தங்துள்ளேன். அங்கே பார்க்கவும்.--செல்வா 21:49, 4 மார்ச் 2007 (UTC)

மேலும் சில மறுமொழிகள் என் பேச்சுப்பக்கதில் இட்டுள்ளேன். பார்க்கவும்.--செல்வா 22:40, 4 மார்ச் 2007 (UTC)

பட்டியல்களும் பகுப்புக்கள்ம் தொகு

மரவேலைக் கருவிகள், நகர்ப்புறக் கலைகள் பட்டியல், சூழல் பேணல் செயல்பாடுகளின் பட்டியல் போன்ற சிறு பட்டியல்கள் தனிக்கட்டுரைகளாக இருக்கத் தகுதியற்றவை. ஆனால் எழுதப்பட வேண்டிய தலைப்புக்களை அடையாளங் காண வேண்டும் என்ற தூர நோக்கின் அடிப்படையில் அவை அவசியமானவையாக உள்ளன. ஆனால் பகுப்பு:மரவேலைக் கருவிகள் போன்ற ஒற்றைக் கட்டுரைகளைக் கொண்ட பகுப்புக்களை அதிகரித்துக் கொண்டே செல்வது பொருத்தமானதா? ஏன் இவ்வாறாக உணர்கிறேனென்றால் பகுப்புக்கள் அளவுக்கதிகம் இருப்பது புதுக்கட்டுரைகள் உருவாக்க வேண்டிய தலைப்புக்களை அடையாளங் காண்பதைச் சிக்கலாக்கும். கட்டுரைகள் அதிகரிக்கும்போது புதிய பகுப்புக்கள் தாமாக உருவாகி வரும் வளர்ச்சி பொருத்தமானது போற் படுகிறது. இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்தான். தெளிவான நிலைப்பாடென்றும் இல்லை. நீங்களும் ரவியும் பகுப்புக்கள் தொடர்பில் தேடியவற்றிலிருந்து பெற்ற முடிவுகளை அறிய ஆவல். --கோபி 18:02, 6 மார்ச் 2007 (UTC)

பாராட்டுகள் தொகு

நற்கீரன், நீங்கள், தமிழ், தமிழியல், தமிழர் அறிவியல், தமிழர் கலைகள், தமிழ்க் கலைச்சொற்கள் என்று இடைவிடாது சிறுகச் சிறுக தொகுத்து வருவது கண்டு மிக மகிழ்கின்றேன், மிகவும் பாராட்டுகிறேன். சில நேரங்களில் நான் இரவு 2-3 என்றும் விக்கிக்கு எழுதும் பொழுது, நீங்களும் அந்த நேரங்களில் பங்களிப்பதைப் பார்த்திருக்கின்றேன். வாழ்க உங்கள் நல்ல தமிழ் உள்ளம். வளர்க உங்கள் நற்பணி. --செல்வா 18:08, 7 மார்ச் 2007 (UTC)

உலகாயதம் தொகு

நற்கீரன், நீங்கள் சொல்வது materialistic போல் உள்ளது. அப்படி எனில் இது எனக்குப் பரிச்சயமான தத்துவமே. ஆனால், spelling உலக+ஆதாய = உலகாதாய என்றல்லவா இருக்க வேண்டும்???--Ravidreams 20:27, 8 மார்ச் 2007 (UTC)

Materialistc ஆனால் மேற்கத்தைய புரிதலில் இருந்து வேறுபட்டது. உலகாயதமே வழக்கில் உள்ள எழுத்துக்கூட்டல். இதைப்பற்றி நிறைய அலசலாம், எழுதலாம், வாதிடலாம். --Natkeeran 20:32, 8 மார்ச் 2007 (UTC)

உலகாயதம் = உலக+ஆயதம். ஆயதம் என்றால் என்ன என்று விளங்கிக் கொள்ள இயலவில்லை. சரி, நேரம், மனநிலை ஒத்து வரும்போது விளக்கி எழுதுங்கள். நன்றி--Ravidreams 20:35, 8 மார்ச் 2007 (UTC)

ஆயதம் = அகலம், நீளம், முட்டை வடிவம். உலகாயதம் = புறச்சமயம், ஆறிலொன்று, சார்வாகன் கோட்பாட்டின்படி உலக இன்பமே சிறந்தது, மேன்மையானது என்னும் கொள்கை .(கழக அகராதி)--ஞானவெட்டியான் 14:20, 17 மார்ச் 2007 (UTC)

பங்களிப்பாளர் ஈர்ப்பு தொகு

நற்கீரன், உத்தமம் உயிர்ப்போடு இருப்பதற்கும் தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பாளர் வருவதற்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழிணையத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு எல்லாம் தமிழ் விக்கிபீடியா தெரியாத ஒன்று அல்ல. இருந்தும், இங்கு வந்து பங்களிக்க அவர்களுக்கு inspiration இல்லை. கணினி அறியாதவர்களுக்கு வேண்டுமானால் விக்கி நுட்பத் தடை இருக்கலாம். ஆனால், நுட்பம் தெரிந்தும் பங்களிக்காதவரை சொல்ல ஒன்றுமில்லை. மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா போன்ற பகுதிகளில் இருந்து விக்கிபீடியாவுக்கு பங்களிப்புகள் வரும் என்று தோன்றவில்லை. அதற்கான inspiration, தேவை, அவர்களுக்கு நம்மை போல் கிடையாது. தமிழ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது வாழ்க்கை செவ்வனே தொடரப் போகிறது என்கிற போது தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பதற்கான உந்துதல் குறைவாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், ஈழம், தமிழகத்தை விட அங்கு இணைய ஊடுறுவல் அதிகம் என்பதால் தமிழ் விக்கிபீடியாவை பயன்படுத்துவது வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம். தற்போது தமிழ் விக்கிக்குப் பங்களிப்பவர்கள் அனைவரையும் பார்த்தால் தமிழ், தமிழர், தமிழகம், ஈழத்துடன் நேரடி, உடனடித் தொடர்புடையவர்களாகவே இருக்கிறார்கள். கனடா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் இருந்து நீங்கள், காயத்ரி, கனகு, நிரோ, மதி போன்றோர் பங்களித்தாலும் நீங்கள் அனைவரும் அண்மைய காலத்தில் புலம் பெயர்ந்து தமிழுடனான தொடர்பை தக்க வைத்துக் கொண்டிருக்கும் தலைமுறையைச் சேர்ந்தோர். ஆனால், மலேசியா, சிங்கப்பூரில் நூற்றாண்டுக்கு முன்னர் குடியிருப்போர் தமிழை பேச, களிப்பதற்கான மொழியாகவே கொண்டுள்ளனர். கனடா, ஆஸ்திரேலியா அளவுக்கு ஐரோப்பாவில் புலம் பெயர் தமிழர் அடர்த்தியும் முனைப்பும் இல்லையோ என்று தோன்றுகிறது. அதனால், இங்கிருந்து பங்களிப்புகள் குறைவாகவே வரலாம். புலம் பெயர்ந்த ஈழத்தவர் அளவுக்குக் கூட புலம் பெயர்ந்த இந்தியத் தமிழர்களின் பங்களிப்புகள் இருக்க வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் தமிழுடனான தொடர்பை பேணுவதற்கான இவர்களது தேவைகள் மிகவும் குறைவு. செல்வா போன்றார் தொடக்க காலத்தில் இருந்தே பல்வேறு தமிழ்க் களங்களில் பணியாற்றியதின் நீட்சியாகவே இங்கு வந்துள்ளார்கள். மற்றபடி, நன்றாக அயல் நாடுகளில் "settle" ஆன தமிழ் ஆட்கள் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்க வாய்ப்பு குறைவு. என்னைப் போல், பாலாஜி, டெரன்ஸ் போல் அண்மைக் காலங்களில் வெளிநாடுகளில் தற்காலிகமாக படிப்பு, வேலை குறித்து குடியிருக்கும் இன்னும் சிலர் பங்களிக்க வருவர் என்று எதிர்ப்பாரக்கலாம். நாம் உண்மையில் எதிர்ப்பார்க்க வேண்டிய ஒன்று - தமிழகமும் ஈழமுமே. இங்கு இணைய ஊடுறுவல் பரவும் வரை காத்திருப்பது தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது. கல்லூரி மாணவர்கள், குடும்பக் கடன்களை முடித்த நடுத்தர வயதைத் தாண்டியோர் ஆகியோரிடம் இருந்து பங்களிப்புகள் மிகையாக வரும் என்பது என் கணிப்பு. பெண்களிடம் இருந்து வரும் குறைவான பங்களிப்பு போக்குகள் தொடரலாம். தமிழ்நாட்டில் விக்கியில் உட்கார்ந்து எழுதும் அளவுக்கு ஓய்வுடனும் சுதந்திரத்துடனும் முனைப்புடனும் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி. விக்கியில் காணப்படும் குறைவான பெண்கள் பங்களிப்பு பிற சமூக, இணையத் தளங்களில் பெண்களின் பங்களிப்புடன் ஒப்பு நோக்கத் தக்கதே. வேறுபாடு ஒன்றுமில்லை. சிறப்பாக பெண்களை ஈர்க்க என்றெல்ல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. மசாலா பரப்புகளை நாம் செய்யப்போவதில்லை. எனினும் முகப்புப் பக்கத்தை இன்னும் கவர்ச்சிகரமாக வைத்திருக்க வேண்டும் என்பது உண்மை தான். பங்களிப்பாளர் எண்ணிக்கை குறைவு, நேரப்பற்றாக்குறை ஆகியவை தான் காரணம். தவிர, கட்டிடத்தையே இப்பொழுது தான் எழுப்பிக் கொண்டிருக்கிறோம் என்பதால் சுவருக்கு வண்ணம் பூசுவதில் கவனம் செல்வதில்லை. ஆனால், கட்டிடத்தை எழுப்ப எழுப்ப இங்கு வண்ணம் பூசிக் கொண்டிருந்தால் தான் நாலு பேர் வந்து வேடிக்கை பார்ப்பார்கள். வேடிக்கை பார்ப்பவரில் ஒருவர் கட்டிடம் கட்டவும் உதவுவார்.

விக்கிப் பட்டறையில் மூவர் தான் விக்கியர்கள் என்பதில் எனக்கு பெரு வியப்பு ஏதும் இல்லை. விக்கி மேனியாவுக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. வந்தவர்கள் பெரும்பாலும் ஆர்வத்தால் வந்தவர்கள். அனுபவத்தால் அல்ல. தவிர, ஜிம்மி வந்ததும் கூட்டம் சேர்த்து இருக்கும். பட்டறையை நடத்தியவர்களில் ஒருவரும் இங்கு விக்கியர் இல்லை என்பதும் குறிப்பிட்டத்தக்கது. அந்த வகையில் இது பதிவர் பட்டறையில் இருந்து வேறுபட்டது. பட்டறையை நடத்தியவர்கள் எல்லாம் நுட்பத்தில் சித்தர்கள். ஆக, நுட்பம் எளிதாக இருப்பது மட்டும் விக்கிபீடியாவுக்கு பங்களிப்பாளர்களை கொண்டு விடாது. ஆனால், குறைந்தபட்சம் வருகிறவர்களை மிரட்டி அடிக்காமல் எளிதாக விக்கி நுட்பம் இருக்க வேண்டும். மீடியாவிக்கி எளிமைப்படுத்தப்பட்ட பதிப்பு வருகிற போது வரட்டும். குறைந்தது, 10, 000 கட்டுரை இலக்கை அடையும் முன் நம் உதவிப் பக்கங்களை மேம்படுத்த வேண்டும்.--Ravidreams 13:36, 9 மார்ச் 2007 (UTC)


ரவி, நற்கீரன் உங்கள் இருவரது கருத்துக்களையும் பார்த்தேன். தமிழின் வளர்ச்சியிலும் அதற்காக விக்கிபீடியாவை வளர்த்தெடுப்பதிலும் உங்களிருவருக்கும் இருக்கும் ஆர்வத்துக்கும், (ஏக்கத்துக்கும்?) எனது நன்றிகள். வளர்ச்சியடைந்த அல்லது முதிர்ச்சியடைந்த விக்கிபீடியாக்களுக்கும் தமிழ் விக்கிபீடியாவுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அவர்கள் மக்களுடைய பசிக்கு நல்ல உணவு கொடுக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். நாங்களோ மக்களுக்குப் பசியையும் உண்டாக்கித் தீனியும் போடவேண்டியவர்களாக இருக்கிறோம். இது நமது சமுதாயத்தில் அடிப்படையாக இருக்கும் பிரச்சினைகளோடு தொடர்புபட்டது. என்னைப் பொறுத்தவரை நாங்கள் இப்பொழுது செய்யும் வேலைகள் இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலத் தேவைக்கே என்பது எனது கருத்து. இன்றைக்கு விக்கிபீடியாவின் வளர்ச்சி குறைவாக இருக்கிறது என்றால் நமது மக்களின் தேவைகள் இப்போதைக்கு அவ்வளவைத் தான் வேண்டி நிற்கின்றன என்பது பொருள்.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

  1. இன்று விக்கிபீடியாவை அணுகுவதற்கான எல்லா வசதிகளும் வாய்த்திருப்பவர்களுக்கு விக்கிபீடியாவுடனான தொடர்பு மொழி/சமுதாயப் பற்றினால் ஏற்படுகின்ற ஆத்மார்த்தமான தொடர்பாக இருக்கலாமேயொழிய அவசியம் கருதிய தொடர்பாக இருப்பதற்கு இல்லை. ஏனெனில் இன்றைக்கு இணைய வசதிகளைப் பெற்றிருப்பவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய, வட அமெரிக்க, ஆஸ்திரேலிய, மத்திய கிழக்கு வாழும் தமிழர்களே. ஆனால் அவர்களுக்குத்தான் தமிழுக்கான அதி குறைந்த தேவை இருக்கிறது. எனவே தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கான அடிப்படையான ஆதரவை ஓரளவுக்குமேல் இப்பகுதிகளிலிருந்து நாம் எதிர் பார்க்க முடியாது. செல்வா போன்றவர்கள் இதில் ஈடுபடுவது தமிழ் விக்கியின் அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும்.
  1. விக்கிபீடியாவுக்கான உண்மையான தேவை இருக்கும் தமிழ்நாடு, இலங்கை போன்ற இடங்களில் மக்களுக்கு இதனை அணுகும் வசதி கிடையாது. சென்னையில் கூட சந்துக்குச் சந்து இருக்கும் இணைய மையங்களில் தமிழில் உள்ளிடும் வசதியோ, அல்லது தமிழில் பக்கங்களைப் பார்க்கும் வசதியோகூட மிகவும் குறைவாகவே உள்ளது. கணினி மற்றும் இணைய இணைப்பு வசதிகள் உள்ளவர்களுக்கும் கூட விக்கியில் வேலைசெய்வதற்கான செலவுகளைத் தாங்கும் நிதி வசதிகள் இருகும் என்பதற்கில்லை. பசியுள்ள இடத்தில் உணவு பரிமாறுவதற்கு இணைய ஊடகம் இன்னும் தயாராகவில்லை என்றுதான் கூறவேண்டும்.

இன்றைக்கு எங்களுக்கு உள்ள பணி, காலம் வரும் வரை இதனை நாம் தாங்கிப் பிடித்திருப்பதும், இயன்ற அளவு உத்வேகத்துடன் வளர்த்துச் செல்ல வேண்டியதும் தான். நமது நிலைமை அவ்வளவு மோசமாக இருப்பதாக நான் கருதவில்லை. நவம்பர் 2003 இல் தவி முறையாக இயங்கத் தொடங்கிய போதும் எட்டு மாதங்கள் வரை கிட்டத்தட்ட நான் மட்டுமே பங்களிப்பாளர். எட்டாவது மாதத்தில் முதல் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக சுந்தர் வந்தார். அதன் பின்னர் சிலர் முக்கியமான பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள் எனினும், நீண்ட கால அடிப்படையில் அடுத்த குறிப்பிடத்தக்க பங்களிப்பாளரான ரவிக்காக ஒன்றரை ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அக்காலத்தில் தவியைக் கட்டமைப்பதில் ரவியின் பங்கு அளப்பரியது. இதன் பின்னர்தான் பங்களிப்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்தது. பலர் ஆர்வமாகப் பங்களித்து வருகிறார்கள். தவியைக் கட்டுக்கோப்பாக அமைப்பதில் நற்கீரன், கோபி ஆகிய இருவரதும் ஆற்றிவரும் பணி உண்மையில் போற்றத் தக்கது. கிராமத்து வெட்டவெளியில் பஸ்ஸுக்காகக் காத்திருப்பது போல் மாதக்கணக்கில் காத்திருந்துதான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறோம். இதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைய வளர்ச்சி வேகம் ஆரோக்கியமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். 10,000 கட்டுரை எண்ணிக்கையை எதிர்பார்த்ததிலும் விரைவாக நாம் அடைந்து விடுவோம்.

இன்று வார சஞ்சிகைகளை மக்கள் பொழுது போக்குக்காகப் படிப்பது போலத் தவியை அறிவுக்காக மக்கள் வாசிக்கும் காலம் விரைவில் வரும். அப்போது பங்களிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது. இதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும். Mayooranathan 19:41, 9 மார்ச் 2007 (UTC)

Abstract பற்றி தொகு

நற்கீரன், மயூரநாதன் என் பேச்சுப் பக்கத்தில் இட்டுருந்த கருத்து பற்றி எஆன் அங்கு எழுதியது: நான் மயூரநாதனின் கருத்துடன் உடன்படுகின்றேன். Abstract என்பது அடிப்படையாக உள்ளப் பொதுமைப் பண்புகள், அடிநுண்பண்பு எனலாம். அதாவது சிறப்பான கோணங்களிலோ, காட்சிகளிலோ அடிப்பாவு பெற்ற பொது நுட்பப் பண்புகள் எனலாம்.--செல்வா 19:11, 12 மார்ச் 2007 (UTC)

பொழிப்பு என்று மணவை முஸ்தபாவும் பேரா. சிவத்தம்பியும் சொல்கிறார்கள் --மு.மயூரன் 20:49, 12 மார்ச் 2007 (UTC)

Abstract பற்றி மேலும் சிந்தித்ததில் தொகு

Abstract என்பதற்குத் தமிழில் நுண்புல அல்லது நுண்பிய என்று கருத்துப் பெயர்க்கலாம் என்று எண்ணுகிறேன். Abstract mathematics என்பதற்கு நுண்பியக் கணிதம் எனலாம். ஒன்றின் அடிப்படையாக அமைந்துள்ள பொது நுண்பண்புகளை, அடிகூறுகளை ஈர்த்து வடிப்பதை நுண்பியம் (Abstraction) எனலாம் என்பது என்கருத்து. என் பரிந்துரை- நுண்பிய, நுண்பியம் என்பன நல்ல சொற்கள்.--செல்வா 18:29, 16 ஏப்ரல் 2007 (UTC)

9, 90, 900 தொகு

தொண்டு, தொண்பது, தொண்ணூறு என்ற மாற்றம் தேவையென்று யார் , எங்கே, எதற்கு குறிப்பாட்டார்கள் என்று அறிய ஆவல். இணைப்பு தர முடியுமா?--ரவி 14:51, 21 மார்ச் 2007 (UTC)

ல்+த = ற்ற ! தொகு

நற்கீரன், கோபி - எல்லா விசயத்துக்கும் செல்வாவை இழுத்தால் அவர் அயர்ந்து விடக்கூடும். இதில் நானே உதவ முடியும் என நினைக்கிறேன். விதி எளியது தான். ல்+த = ற்ற ஆகும். (அல்+திணை =அஃறிணை ஆகும் என்பது விதிவிலக்கு) சொல்+தொடர் = சொற்றொடர். நல்ல + தமிழ் நல்ல தமிழ் ஆகாது. நல் + தமிழ் = நற்றமிழ் ஆகும். நல்ல என்று கூறுவது பேச்சு வழக்கு. நல் என்று கூறுவது உரை வழக்கு. நன்னடத்தை, நல்வினைப்பயன் என்று சொல்வது போல். பகரம், ககரம், சகரம் முன் வரும் ல் றகரம் ஆகும். பல்+பசை = பற்பசை; நீச்சல் + குளம் = நீச்சற் குளம். சொல்+சுவை = சொற்சுவை.

ஏன் எதற்கு எப்படி என்று எல்லாம் கேட்காதீர்கள் :) இது தான் புணர்ச்சி விதி. மனப்பாடம் செய்து கொள்ளுங்கள் :) தமிழ்நாட்டுத் தமிழ்ப் பாட நூலில் 9 முதல் 12 வகுப்புகளில் இந்த இலக்கண விதிகளை தனியாக இலக்கண நூல் வைத்துத் தலைகீழாகச் சொல்லித் தருகிறார்கள் :) புத்தகம் கிடைத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். --ரவி 18:15, 21 மார்ச் 2007 (UTC)

புணர்ச்சி விதிகள் ஏராளம் உண்டு. ஆனால், மனப்பாடமாக வரிசைப்படுத்தி எழுதுவது கடினம். பழக்கப்பட்டதால் subconsciousஆக வந்து விடுகிறது. புதுச்சேரி இலக்கண வழிகாட்டித் தளத்தில் புணர்ச்சி விதிக் குறிப்புகள் இருக்கலாம். தேடிப் பார்த்து தருகிறேன். --ரவி 18:27, 21 மார்ச் 2007 (UTC)

சந்தி விதிகள் புணர்ச்சி விதியின் ஒரு பகுதி தாம். வரும் சொல் முதலில் க ச த ப இருக்கும் இடங்களில் உள்ள புணர்ச்சி விதியை விவரிப்பது சந்தி விதி. மற்றபடி, வேறு வேறு எழுத்துக்களின் கூடுதலுக்கு நிறைய விதிகள் உண்டு !!--ரவி 18:35, 21 மார்ச் 2007 (UTC)

உங்கள் பேச்சுப் பக்கம் நீண்டு விட்டது. தொகுக்கலாமே?--ரவி 22:32, 21 மார்ச் 2007 (UTC)

சாதிப பெயர்கள் தொகு

டெரன்ஸ், நற்கீரன், அமாச்சு - இதை தேவர், முத்துஇராமலிங்கம் என்ற நோக்கில் உரையாடினால் விவாதம் எளிதாக திசை மாறும். பொதுவாக, 17-20 நூற்றாண்டுக் காலப் பகுதியில் தமிழகத்தில் சாதிப் பெயர்களுடன் இணைத்து அறியப்படும் வழக்கம் இருந்திருக்கிறது. அந்த சாதிப் பெயர்களை அப்படியே விக்கிபீடியா கட்டுரையில் தருவதா என்பது தான் விவாதமாக இருக்க முடியும். என்ன முடிவு எடுத்தாலும் அதை எல்லா சாதிப் பெயர்களுக்கும் எல்லாருக்கும் (அவர்கள் பின்புலம், வரலாற்று முக்கியத்துவம் தாண்டி)ஆன முடிவாக விக்கிபீடியா முழுக்க நடப்பில் கொண்டு வர வேண்டும். இந்த விவாதத்தை பயனர் பேச்சுப் பக்கங்களில் அல்லாமல் முத்துஇராமலிங்கம் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்--ரவி 15:21, 23 மார்ச் 2007 (UTC)


ஒலிம்பிக் தொகு

நன்றி நற்கீரன். துடுப்பாட்டம் அளவுக்கு மற்றைய விளையாடுகளில் ஆர்வம் கிடையாதுதான் :( இருப்பினும் ஒலிம்பிக் தொடர்பான கட்டுரையையும் உலகக்கிண்ண துடுப்பாட்டம் தொடர்ப்பன கட்டுரைப்போலவளர்க்க எனது உதவியை செய்வேன்.--டெரன்ஸ் \பேச்சு 17:48, 30 மார்ச் 2007 (UTC)

கனடா கட்டுரை தொகு

நற்கீரன், உங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள். இது நல்ல, நெடிய கட்டுரைகளில் ஒன்று. இன்னும் சில திருத்தங்கள் செய்தால், கட்டாயம் சிறப்புக் கட்டுரைகளில் ஒன்றாக இருக்கும். மிகக் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள்!!--செல்வா 22:13, 2 ஏப்ரல் 2007 (UTC)

நற்கீரன், வடையைச் சுட்டது மயூரன் ;) நான் விக்கியாக்கம் மட்டுமே செய்தேன். எங்க இருந்து தான் இப்படி தலைப்பைப் பிடிக்கிறாரோ :)--ரவி 14:40, 7 ஏப்ரல் 2007 (UTC)

ரவி, வடை இன்னும் சுடப்பட்டதாகத் தெரியவில்லை. ஆங்கில விக்கியில் வடை இருக்கிறது. தமிழர் சமையற் பகுப்பிலும் பகுக்கப்பட்டிருக்கிறது. யார் இங்கே சுடப்போகிறீர்கள்? --கோபி 16:00, 7 ஏப்ரல் 2007 (UTC)
:-) :-) --Natkeeran 16:04, 7 ஏப்ரல் 2007 (UTC)

மொழி தொகு

நானும் அம்புலிமாமா, பாப்பா மலர், சிறுவர் மலர் படித்து வளர்ந்தவன் தான். ஆனால், comics பக்கம் அவ்வளவாகப் போக விடவில்லை, அப்பா. மொழி படம் குறித்த என் பார்வை - http://blog.ravidreams.net/?p=95 --ரவி 15:02, 7 ஏப்ரல் 2007 (UTC)

சுட்டிக்காட்டியதற்கு நன்றி நற்கீரன். சிகப்பு இணைப்புகள் வழிச் சென்று முடிந்தளவு கட்டுரைகளை ஆக்க முயல்கிறேன். இப்போது மிகப்பழைய கட்டுரைகள கவனித்து வருகின்றேன். அவற்றில் இற்றைப்படுத்தல்களை 10,000 கட்டுரைகளை எட்ட முன் செய்து முடிப்பது அவசியம். மேலும் பல கட்டுரைகள் நீக்கப்பட வேண்டும் அல்லது மேம்படுத்தப்பட வேண்டும்.--டெரன்ஸ் \பேச்சு 04:53, 15 ஏப்ரல் 2007 (UTC)

மறு: வருக தொகு

வரவேற்புக்கு நன்றி, நற்கீரன். ஓரளவாவது பங்களிக்க முயல்கிறேன். -- Sundar \பேச்சு 10:12, 20 ஏப்ரல் 2007 (UTC)


Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள் தொகு

Wikipedia:எழுத்துப் பெயர்ப்பு முறைகள் தங்களது கவனத்தை இந்த பக்கத்துக்கு வேண்டுகிறேன். முடியுமான போது வந்து பங்களிக்கவும்.--டெரன்ஸ் \பேச்சு 02:03, 26 ஏப்ரல் 2007 (UTC)

Hello Ganesk: Would you please let me know how I can access ta wikipedia server, create a file etc. My current stream of work is related to automation. So I thought I could do some work related to that in Wikipedia as well. Another highly skilled progrogrammer is also interested in this aspect. Please let me know if you can share some details and/or code. Thanks. --Natkeeran 21:11, 21 ஏப்ரல் 2007 (UTC)

Hello Natkeeran, Sorry for the delayed response. I have not accessed Wikipedia servers that way (like FTP). The automation I had written can read articles (get method) and post new information into them (post method). If you need I can send the python source-code that I had used for creating town articles. Regards, Ganeshk 22:02, 29 ஏப்ரல் 2007 (UTC)

நற்கீரன், நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி தருகிறது. இன்றிரவுக்குள் என்னால் இயன்ற அளவு தகவல்கள் மற்றும் நிரல் எடுத்துக்காட்டுக்களை அளிக்கிறேன். - Sundar \பேச்சு 05:47, 30 ஏப்ரல் 2007 (UTC)

நற்கீரன், விக்கிபக்கம் ஒன்றைத் தொகுக்கும் மிக அடிப்படையான பெர்ள் நிரல்துண்டு பின் வருவது (இதை விக்கி பெயர்வெளியில் இட்டால் வருங்கால நிரலாளர்களுக்கும் பயன் தரும்.):

#!/usr/bin/perl -w
use strict;
use WWW::Mechanize;
use WWW::Mechanize::FormFiller;
use URI::URL;

my $agent = WWW::Mechanize->new( autocheck => 1 );
my $formfiller = WWW::Mechanize::FormFiller->new();
$agent->env_proxy(); # use your proxy settings if you're behind a proxy

  $agent->agent('Mozilla/5.0 (X11; U; Linux i686; en-US; rv:1.8.1.3) Gecko/20061201 Firefox/2.0.0.3 (Ubuntu-feisty)'); # இந்த வேண்டுகோள் ஒரு உலவியிலிருந்து வருவதுபோல் நடிப்போம்
  $agent->get('http://ta.wikipedia.org');
   $agent->form_number(1) if $agent->forms and scalar @{$agent->forms};
  { local $^W; $agent->current_form->value('search', 'Wikipedia:மணல்தொட்டி'); };
  $agent->submit();
  $agent->follow_link(text => 'தொகு', n => 2); # தொகு என்ற தலைப்பையுடைய இரண்டாவது இணைப்பின்வழி செல்க
  $formfiller->fill_form($agent->current_form);
  $formfiller->add_filler( 'wpTextbox1' => Fixed => 'Sundar Perl-based edit testing: தமிழில் சோதனை' );
  $formfiller->add_filler( 'wpSummary' => Fixed => 'Sundar testing edit from Perl' );
  $formfiller->fill_form($agent->current_form);
  $agent->submit();

இதை இன்னமும் மேம்படுத்தி புகுபதிகை செய்யவைக்க முடியும். நாளை பார்க்கிறேன். மேலதிகத் தகவல்கள் இங்கே உள்ளன. -- Sundar \பேச்சு 15:16, 30 ஏப்ரல் 2007 (UTC)

நன்றி தொகு

இன்னமும் இலங்கைப்பற்றி பல விடயங்கள் சேர்க்கப்படவுள்ளது. மெதுவாகத் தான் செய்யவேண்டும். எப்படியும் முக்கிய விடயங்களை தமிழ் செய்தால் பாடசாலை மாணவருக்கு பயனுள்ளதாக இருக்கும். இலங்கைப் பாடசாலைகளில் கணணி பயன்பாடு கூடி வருகிறதுதானே.--டெரன்ஸ் \பேச்சு 06:06, 2 மே 2007 (UTC)Reply

அவுஸ்திரேலியப் பங்களிப்பு தொகு

பெரிதாக ஒன்று செய்து விடவில்லை. சென்ற வாரம் நாம் 10,000 இலக்குகளைத் தாண்டியவுடன் ஒரு விக்கிபீடியா அறிமுக மடலாக நான் அங்கம் வகிக்கும் அகத்தியர், தமிழ் உலகம், தமிழ் ஆராய்ச்சி ஆகிய யாஹூ குழுமங்களுக்கும் அவுஸ்திரேலியக் குழுமம் ஒன்றுக்கும் விளக்கமான மடல் அனுப்பியிருந்தேன். மலேசியாவிலிருந்து டாக்டர் எஸ். ஜெயபாரதி அவர்கள் இவ்வாறு எழுதியிருந்தார்: //மிக்க மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் எப்படி இடுவது என்பதை Step.by-Step-ஆகச் சொல்லிக்கொடுத்தீர்களானால் நிறையப் பேர் பங்கெடுத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். எனக்கே அது சரியாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் உள்ள சில படிவங்களில் மேல் இடுகை இடுவது மட்டுமே சிலசமயங்களில் வருகிறது// விளக்கமாக எழுத இருக்கிறேன். தமிழகத்தில் இருந்து நந்திவர்மன் அவர்களின் வலைப்பதிவைப் பார்க்க:

--Kanags 09:27, 2 மே 2007 (UTC)Reply

விக்சனரிக்கு வருக தொகு

தமிழ் விக்கிபீடியாவில் 10, 000 கட்டுரை இலக்கை அடைந்துள்ள வேளையில் வெகு நாட்களாகத் தேங்கிக் கிடக்கும் தமிழ் விக்சனரி பணிகளை முன்னெடுக்க கூடிய பங்களிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள். அவ்வப்போது அங்கு வந்து புதுச் சொற்களைச் சேர்த்தல், துப்புரவு, பக்க வடிவமைக்கு குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபட வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு 5 புது சொற்களேனும் நீங்கள் சேர்க்க இயன்றால் நன்றாக இருக்கும்.--ரவி 12:02, 2 மே 2007 (UTC)Reply

நாடுகள் தகவல் சட்டம் தொகு

commons.css, monobook.js என்பவை இற்றைபடுத்திய பிறகு நிரல் மாற்றப்பட வேண்டியிருந்தது செய்தே மின்னழுத்தை மறந்து விட்டேன். இப்போது சரிசெய்து விட்டேன்.--டெரன்ஸ் \பேச்சு 14:47, 5 மே 2007 (UTC)Reply

Dynamic functionality தொகு

நீங்கள் வினாவிடைப் பகுதிகளை மேம்படுத்தும் நோக்கில் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். இம்ம்.... நீங்கள் குறிப்பிட்ட தளத்தில் உள்ளது போல செய்வதென்றால் எனது அறிவுக்கு அப்பாற்பட்டது. விக்கியில் செய்ய முடியுமா என்பது கேள்வியே. {{Navigation}}இல் வார்ப்புருவை காட்ட அல்லது மறைப்பதற்கான ஜாவா, மற்றும் சி,எஸ்.எஸ். கொண்டு செயல் படுத்தியிருக்கிறார்கள்.நீங்கள் தந்த தளம் மிக நன்று. நன்றி--டெரன்ஸ் \பேச்சு 03:48, 7 மே 2007 (UTC)Reply

ஆம் தமிழ் விக்கியில் நான் செய்தேன். {{இலங்கைநகரங்கள்}},{{தெற்காசியா}} என்பவற்றில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதை பார்க்க.சரியாக தெரியாவிட்டால் reload செய்துப் பார்க்கவும்.--டெரன்ஸ் \பேச்சு 04:05, 7 மே 2007 (UTC)Reply

மிக்க நன்றி தொகு

நற்கீரன், பெரும்பாலான தமிழக அரசின் இணையப் பக்கங்கள் 'The page cannot be displayed' எனவே வருகின்றன :) (உதா. TN civil supplies இணையத் தளம்). அல்லது போதுமான தகவல்கள் இல்லாமல் உள்ளன. அடுத்து இந்தியாவின் வங்கிகள் குறித்த கட்டுரைகள் எழுதலாம் என எண்ணியுள்ளேன்.பெரும்பாலான வங்கிகள் குறித்த தகவல்கள் ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளன. இவை மிகவும் உதவியாக இருக்குமென நினைக்கிறேன். --யோகேஸ் 06:26, 7 மே 2007 (UTC)Reply

இயல் தலைப்புகளின் பட்டியல் தொகு

"இயல் தலைப்புகளின் பட்டியல்" என்று நீங்கள் எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்குத் தெளிவில்லை. சில எடுத்துக்காட்டுக்கள் தாருங்கள். -- Sundar \பேச்சு 15:15, 13 மே 2007 (UTC)Reply

த. வி. யைப்பற்றி ஒரு அடிப்படைக்கேள்வி தொகு

உங்களுடைய பாராட்டுக்கு நன்றி. த. வி. க்கு வெளியில் இருப்பவர்கள் த. வி. யில் ஒரு கட்டுரையப் பார்க்கவேண்டுமென்றால் அவர்கள் த. வி.யில் தமிழில் அக்கட்டுரையின் தலைப்பைப் புகுபதிகை செய்தால் தான் அக்கட்டுரைக்குப் போகமுடியுமல்லவா? அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி புகுபதிகை செய்தாலும் அக்கட்டுரைக்குப் போகக்கூடியபடி என்ன வழி இருக்கிறது? அவர்கள் தமிழ்த்தலைப்பு தெரியாதவர்களாக இருக்கலாமே. --Profvk 13:54, 6 ஜூன் 2007 (UTC)

தமிழ்த் தலைப்புகள் தெரியாதவர்கள் ஆங்கில விக்கிபீடியாவில் தேடி அங்கிருந்து தமிழ் விக்கிபீடியாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் வர இயலும். தவிர, தமிழல்லா பெயர்ச்சொற்கள், புதிய கலைச்சொற்களால் ஆன கட்டுரைகளுக்கு கட்டுரையின் முதற் பந்தியில் அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கிலப் பெயர் தரலாம்; தரப்படுகிறது. இதன் மூலம் விக்கிபீடியா தேடல் பெட்டியில் இவை சிக்கும். இதன் மூலம் தொடர்புடைய கட்டுரையைக் கண்டு கொள்ளலாம். எல்லா கட்டுரைகளுக்கும் ஆங்கிலப் பெயர்களைக் கொண்டு வழிமாற்றுவது தேவையற்றதும் சிரமமானதாகும்.--ரவி 19:40, 6 ஜூன் 2007 (UTC)

துப்புரவு மாதம் தொகு

அ முதல் ஔ வரையான உயிர் எழுத்துக்களில் தொடங்கும் கட்டுரைகளில் எழுத்துப் பிழை களைவது என்னும் இலக்கை முன்வைப்போமா?--ரவி 18:17, 9 ஜூன் 2007 (UTC)

நற்கீரன் - கட்டுரைகளைத்தெரிவு செய்வது, அதை ஒரு பக்கத்தில் எழுதுவது, பிறகு திருத்தி விட்டேன் என்று குறிப்பு இடுவது - இந்த நேரத்தில் இன்னும் நான்கு கட்டுரைகளை உரை திருத்தி விடலாம் என்பது என் எண்ணம். ரொம்ப seriousஆகவும் organisedஆகவும் செய்யத் தேவை இல்லை என்றே தோன்றுகிறது. ஏன் என்றால் எந்தக் கட்டுரையையும் நிலையாக மெய்ப்பு பார்த்து விட்டதாக அறிவிக்க முடியாது. திரும்பத் திரும்ப ஒருவருக்குப் பலர் அவ்வப்போது திருத்திக் கொண்டே இருத்தல் தான் நடைமுறைக்கு ஒத்து வரும். --ரவி 07:53, 10 ஜூன் 2007 (UTC)

நடப்பு நிகழ்வுகள் தொகு

நற்கீரன், நடப்பு நிகழ்வுகள் பக்கத்தில் நீங்கள் செய்த மாற்றம் நன்று. அப்படியே தான் நானும் மாற்ற நினைத்திருந்தேன். மாற்றங்களுக்கு நன்றி. முதற்பக்கத்திலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். முதற்பக்கக் கட்டுரைகள், செய்திகளில், இன்று.. போன்ற தலைப்புகள் கட்டங்களுக்குள் இருக்க வேண்டும். (இன்றைய சிறப்புப் படம் போல). நன்றி.--Kanags 05:34, 17 ஜூன் 2007 (UTC)

ஆங்கிலத்தில் கட்டங்களுடன் அழகாக இருக்கிறது. அதனால் தான் கேட்டேன். மற்றும், இன்று.. துணுக்குத் தகவல் குறித்த உங்கள் செய்திக்கு நன்றி. இன்னும் பொறுப்புடன் பீழை இல்லாமல் செய்ய வேண்டும் போல் தெரிகிறது:).--Kanags 08:52, 17 ஜூன் 2007 (UTC)

தொய்வு பற்றி குறியீடு பற்றி தொகு

நற்கீரன், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. தமிழ் நெட்டில் கொடுத்துள்ள குறியீட்டு முறை வேறு. என் பரிந்துரை கிரந்த எழுத்துக்களும் வேறு எந்த புதிய தனி எழுத்து வடிவங்களும் இல்லாமல், ஏறத்தழ 10 ஒலியன்களையும் (120 கூடொலிகளையும்) குறிக்க 3-4 திரிபுக்குறியீடுகள் பயன்படுத்துவது. தமிழ் நெட் தருவது transliteration எழுத்துப் பெயர்ப்பு முறை (ஆங்கில-தமிழ்). என்னுடைய முறை தமிழ் மட்டுமே. என் முறையில் ஜ, ஷ G, B போன்றவற்றுக்குத் தமிழில் புதிய தனி எழுத்துக்கள் தேவை இல்லை. இருக்கும் எழுத்துக்களையே பயன்படுத்தி, சிறு ஒலித்திரிபுக் குறியீடுகள் பயன்படுத்துவது. --செல்வா 18:55, 14 ஜூலை 2007 (UTC)

விக்கிநூல் என்னாச்சு? தொகு

விக்கிநூல் தொடர்பாக ஒரு மடலாடல் ஆரம்பித்தது. அதற்கு என்னாச்சு?

--மு.மயூரன் 18:35, 21 ஜூலை 2007 (UTC)

மயூரன் நற்கீரன் நல்லதோர் திட்டம் சம்பந்தமாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நாம் இத்திட்டத்தை முன்னெடுப்பதே நல்லது. முதலில் திட்டத்தை ஆரம்பித்து விட்டுப் பின்னர் அதிலுள்ள குறை நிறைகளை பேச்சுப் பக்கத்தில் விவாதிக்கலாம். இத்திட்டத்தை ஆரம்பிப்பதுதான் நல்லது என்று நினைக்கின்றேன். --Umapathy 18:39, 21 ஜூலை 2007 (UTC)


அதைப் பற்றி சற்று விரிவாக சிந்தித்து அலசி எழுதலாம் என்று இருந்தேன். அதற்குள் உங்கள் உந்துதல் உற்சாகம் தருகின்றது. பின்வரும் பயனர்களின் சம்மதத்தை இன்னும் பொறவில்லை. விக்கி நூலில் தொகுத்து பின்னர் பிற ஊடகங்களுக்கு மாற்றலாம். எழுத்து நடையில் விக்கி நடையாக அமையாமல், ஒரு அறிமுக நடை, அணுகுமுறை தேவை.

தமிழ்க் கணிமை - பயனர் வழிகாட்டி தொகு

  • தமிழ்க் கணிமை - அறிமுகம்
  • தமிழைக் கணினியில் பயன்படுத்தல் (படித்தல், எழுதுதல்) - மயுரேசன், உமாபதி, அனைவரும்
  • MS Word
  • எ-கலப்பை
  • யுனிக்கோட்
  • தமிழில் தட்டெழுதல் - ரவி
  • தமிழ் இணையம்
  • தமிழ்த் தளங்கள்
  • மின் அஞ்சல்
  • தமிழில் வலைப்பதிவு - மதி
  • தமிழில் இயங்குதளம் - மயூரன்
  • தமிழில் கணினி ஊடாடல் - மயூரன்
  • தமிழில் நூலாக்கம் - கோபி
  • தமிழ்க் கணிமை கலைச்சொற்கள்

(மேலும் விரியும்) .....

நான் தொகுப்பதில் உதவி, விடுபடும் பகுதிகளை எழுதலாம் என்று இருக்கின்றேன். ஏற்கனவே இணையத்தில் இருக்கும் கையேடுகளை பயன்படுத்தவே முதலில் முயலவேண்டு. ஒன்றாக தொகுத்தலே இங்கு முக்கியமாக தெரிகின்றது. இப்படிப்பட்ட முயற்சிகள் ஏற்கனவே திறந்த, கட்டற்ற முறையில் இருந்தால்...அங்கேயே கைகோக்கலாம்.

எனக்கு தேவை ஒரு அறிமுக நூல். தமிழ் அறிந்த, கணினி சற்று பரிச்சியமான பயனருக்கு எப்படி தமிழ்க் கணிமையை அறிமுகப்பத்த ஈடுபடுத்த உதவி செய்யும் முகமாக இந்த நூல் அமைய வேண்டும்.

முதல் தொகுதி Tamil Computing Developers கைநூல் என்று அமையாமல்; Tamil Computing - Users Guide அமைவது முக்கியம். கோபி குறிப்பிட்ட மாதிரி, இணைய அற்றோர், சிறுவர்களுக்கான பதிப்புக்களை பற்றியும் கவனத்தில் எடுத்தல் வேண்டு.

மேலும் பின்னர்...

திட்டத்துக்கு வரையறை வேண்டும். ஒரு முடிவு வேண்டும். இழுத்தெண்டே போதலை இதில் இயன்றவரை தவிர்ப்போம். அதற்காக அவசரப்படுதலையும் தவிர்க்க வேண்டும்.

--Natkeeran 19:12, 21 ஜூலை 2007 (UTC)

Akilathirattu Lines Missing தொகு

Natkeeran, I wrote many lines of Akilathirattu Ammanai in old wikisource. I completed nearly 1000 lines. I had worked hard typing all those lines. Ialso catogorised it well and created templates order-by-order ever first in Tamil wikisource. But now all are missing in new Tamil Wikisource. What to do? Please help. - Vaikunda Raja


ரவியிடம் கேட்டு சொல்கிறேன். எங்கேயாவது இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. கண்டுபிடித்து சேர்க்க வேண்டும். தேடு பொறியில் போட்டு பார்த்தீர்களா? --Natkeeran 01:02, 25 ஜூலை 2007 (UTC)

Hi. Thanks for welcoming me to the Tamil WP. Anyways, I wanna know which is the accepted format : பெயர் or ெபயர். I'm really confused cos the first one seems to be the accepted format in WP, but the second one is the actual Tamil format. I'm sorry - but I'm new to typing தமிழ் here (or anywhere, actually!) :) நன்்றி

ஏன் கேள்விக்கு பதில் தந்தீற்கள் - மிக்க நன்றி. நிங்கள் எழுதிய பதில் முழுவதாக புரியவில்லை. அநாலும், புரிந்தவரை பதில் கொடுக்கிரேன். நான் எ-கலப்பை என்ற software-ரை பயன்படுதுகிரேன். மேலும், ஆங்கிலம் keyboard-ை பயன்படுதுகிரேன். Hope this helps. Btw, I'm totally not used to typing/writing/reading தமிழ் at all. Haven't touched the language in about 10 years. But I'm trying to get there. It took me some to figure out what you're saying. I hope guys like me (with all our எழுத்து பிளைs) are allowed to edit on த. வி? You seem to be extremely kind. Thanks a million. மிக்க நன்றி. aJCfreak yAk 10:21, 27 ஜூலை 2007 (UTC)

உதவி தேவை! தொகு

Hi again. I seem to be having a bit of a complex problem with the display of the script. I'm typing in English cos my level of தமிழ் is not enough to describe this issue... மனிக்கவும்.

  • Firstly, the formatting which seemed to be due to Unicode usage has corrected itself. All தமிழ் text is now displayed as we write it - correctly. I dunno how this corrected itself. I checked my monobook.css and monobook.js to see if you've added any style/scripting but didn't find anything. Could you explain as to what exactly's happening? The issue I'm referring to is what I'd mentioned earlier - that சென்னை was not displayed as such, but it was displayed in the order of typing as - ச-எ-ன்-ன-ஐ but the எ and the ஐ characters were displayed correctly. Their positioning was incorrect. However, now, it's alright. I hope you're able to make sense of this.
  • Secondly, the issue I'm currently facing is that all supporting characters are shown with a dotted main character. This issue is occurring only on my talk page, below the line which says "இது என் பேச்சு பக்கம். விக்கிபீடியாவின் உரையாடல்களுக்கு பயன்படுத்தவும்." Further, all text on my userpage, your userpage and articles in the mainspace are displaying correctly. This issue is occurring only on my talk page. The result of this issue is that all text on my talk page is not wrapped to a new line - it simply continues on beyond the screen. I'm totally unable to read anything on my talk page, including your last post. Some help, please!

Thanks a lot. aJCfreak yAk 14:15, 31 ஜூலை 2007 (UTC)

மேலும், என் பயனர் பேச்சின் பக்கத்தின் தொகுப்பு window-வில் எழுத்துகள் சரியன முரையில் கானலாம். aJCfreak yAk 14:20, 31 ஜூலை 2007 (UTC)
மிக்க நன்றி! அந்த பரச்சனை போய்விட்டுள்ளது. நன்றி!!! aJCfreak yAk 16:07, 2 ஆகஸ்ட் 2007 (UTC)

நுண்புல தொகு

ஒருவேளை கவனிக்கத் தவறியிருந்தால் -- Sundar \பேச்சு 09:18, 2 ஆகஸ்ட் 2007 (UTC)


நன்றி தொகு

வரவேற்ப்புக்கு நன்றி. எனது பங்களிப்புகள் சூடுபிடிக்க சில நாட்கள் எடுக்கும்.--டெரன்ஸ் \பேச்சு 13:48, 4 ஆகஸ்ட் 2007 (UTC)

கணிதக்கலைச்சொற்கள் (ஆங்கில அகர வரிசை) தொகு

இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் உங்களுக்காக ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறேன். தயவு செய்து பார்க்கவும். --Profvk 23:05, 5 ஆகஸ்ட் 2007 (UTC)

Please change my name தொகு

Please change my name from Edmundkh to EdmundEzekielMahmudIsa, then leave me a message in the English Wikipedia. Thank you! --Edmundkh 09:04, 18 ஆகஸ்ட் 2007 (UTC)

உரையாடல்கள் தொகு

நற்கீரன் சில சமயங்களில் நான் தீவிர நிலைப்பாட்டுடன் உரையாடுவதைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பேச்சுப் பக்கங்களில் உரையாடுவதைத் தவிர்க்க நினைத்தாலும் சில சமயங்களில் தவிர்க்க முடிகிறதில்லை. :-). நன்றி. கோபி 17:04, 3 செப்டெம்பர் 2007 (UTC)

Return to the user page of "Natkeeran/தொகுப்பு05".