பயனர் பேச்சு:Neechalkaran/துடுப்புகள்/தட்டச்சு

  • தமிழ்99 குறித்த எனது பதிவுகள் வருமாறு;-
வழுக்கள்
  1. தட்டச்சு செய்தவுடன், தட்டச்சு செய்தவைகளை அழிக்க (backspace, delete, Ctrl A) இயலவில்லை.
சிறப்புகள்
  1. சிங்கப்பூர் தமிழ்99 விசைப்பலகையைப்போலவே, மெய்யெழுத்துக்குரிய புள்ளியை நாம் தான் வைக்க வேண்டியுள்ளது. சிறப்பு அவ்வசதி அப்படியே இருக்கட்டும். (எ.கா)அம்மா என்று அடித்தால், ம் என்பதற்குரிய புள்ளி தமிழக99 முறையில், புள்ளி தானாகவே தோன்றும். ஆனால், சிங்கப்பூர்99 விசைப்பலகையில் ம் என்பதற்குரிய புள்ளியை, நாம் தான் f என்ற விசையை அழுத்தி வைக்க வேண்டும். அது சிறப்பானாது. எனவே, அப்படியே இருக்கட்டும்.
தேவை
  1. தெரிவு செய்யப்படும் விசைப்பலகையின் பெயர், திரைவிசைப்பலகைக்கு மேலேயே வருவதால், நாம் தவறாக அச்சொற்களை தட்டச்சிட்டது போலவே தெரிகிறது. அப்படக்குறிப்புகள் வேண்டாம். மாறாக தொகுத்தல் சாளரத்திலேயே, தெரிவு செய்யப்பட்ட விசைப்பலகையின் பின்புற நிறத்தை மாற்றிக் காண்பிக்க இயலுமா?
  2. தோன்றும் விசைப்பலகைகள் அருகிலேயே, த-99 என்ற படவிவரம் இருந்தால், நன்றாக இருக்கும். தமிழ்99 விசைப்பலகையை முதலில் வருமாறு அமையுங்கள். அதன் சிறப்பு கருதி அவ்விதம் அமைக்கக் கோருகிறேன்.
  3. திரைவிசைப்பலகைகளை வேண்டுமிடத்தில் நகர்த்திக் கொள்ள வழி வகை செய்ய இயலுமா? அல்லது தொகுத்தல் சாளரத்துக்கு மேலேயே அமைக்க இயலுமா?
  4. எண்கள் உள்ள முதல்வரியும், ctrl, backspce, ஆழிகள்(keys) உள்ள வரியும் இல்லாமல் இருந்தால், திரைவிசைப்பலகை சிறிதாக நிறைய இடத்தை மறைத்துக் கொள்ளாதல்லவா?

விக்சனரியிலும் வருகிறது. மகிழ்ச்சி. மற்றவை இருப்பின் பிறகு,...--≈ உழவன் ( கூறுக ) 02:42, 7 அக்டோபர் 2013 (UTC)Reply

உங்கள் கணினியில் மட்டும் தான் backspace, delete, Ctrl A இயங்கவில்லை என்று நினைக்கிறேன். எனது க்ரோம், பயர் பாக்சு, ஐ.இ. ஆகியவற்றின் நவீன பதிப்புகளில் இயங்குகிறது. உங்கள் உலாவி, இயங்குதளம் போன்ற குறிப்புகளை இடுங்கள். எனது பிற பணிகள் காரணமாக அக்டோபர் 28ற்கு பிறகே பெரிய வழுக்களில் கவனம் செலுத்தமுடியும். அதுவரை உப்புக்கு சப்பாணி வழுக்களில் மட்டுமே தீர்வுகிடைக்கலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 02:12, 8 அக்டோபர் 2013 (UTC)Reply
ஆம். பிற நண்பர்களை தொடர்பு கொண்டபோது, புரிந்து கொண்டேன். நான் ஃபயர்பாக்சு உலாவிதான் பயன்படுத்துகிறேன். உபன்டு12.04 விலும்(80%) வின்டோசு-7 லும்(20%), மாறிமாறி இயங்குகிறேன். இரண்டிலும் அதே நிலைதான். அனைத்தும் மறுசீராக்கம் செய்து பார்க்கிறேன். சீராகிவிடும். மீண்டும் சந்திப்போம். --≈ உழவன் ( கூறுக ) 03:19, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

நீச்சல்காரன், கேட்டவுடன் கொடுக்கும் கடவுள் போல உடனே இந்தக் கருவியைத் தந்து அசத்தி விட்டீர்கள். பாராட்டுகள். மற்ற மொழி விக்கிப்பீடியாக்களுக்கும் கூட பெரிதும் பயன்படும் கருவி. நாம் கருவியைச் செம்மைப்படுத்திய பிறகு பிறருக்குத் தரலாம். இது போன்ற கருவிகளில் நிறைய சிறப்பு வசதிகளை உடனே வேண்ட வேண்டாம் என்ற மற்ற பயனர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், தன்னார்வப் பணியின் சுமையை அவை கூட்டக்கூடும்.

தகவல் உழவன், தமிழக தமிழ்99, சிங்கப்பூர் தமிழ்99 என்று இரண்டு இருப்பதாக நான் அறிந்திருக்கவில்லை. தற்போது பல தமிழ்99 விதிகள் இயங்கவில்லை. இந்த விதிகளைப் பற்றி அறிந்து கொள்ள தமிழ்99#தமிழ் 99 விசைப்பலகையின் அறிவுகூர்ந்த இயல்பு விதிகள் கட்டுரையைப் பாருங்கள். தமிழக அரசு வெளியிட்ட சீர்தரத்தில் விசைப்பலகை அமைவது நன்று. நன்றி. --இரவி (பேச்சு) 15:27, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

சிங்கப்பூர் தமிழ்99 என்பது உரையாடற்குறிப்புக்காகக் குறினேன். அதாவது அம்மா என்ற சொல்லில், ம் என்பதற்கு புள்ளியை தட்டச்சு செய்பவரே புள்ளியை இட, சிங்கப்பூர் கல்விக்கணினியிலாளர் அமைத்துள்ளர். அதையே சொன்னேன். அது தற்போது கூகுள்மின்னஞ்சலிலும் இணைக்கப்பட்டுள்ளது. பயர்பாக்சு உலாவிவின் நீட்சியாகவே திரைவிசைப்பலகையை அமைக்கலாமென்று அலோசிக்கிறேன்.--உழவன் (உரை) 02:59, 21 ஆகத்து 2015 (UTC)Reply
Return to the user page of "Neechalkaran/துடுப்புகள்/தட்டச்சு".