தொகுப்பு

தொகுப்புகள்


1 2

News தொகு

 

புன்னியாமீன், மென்மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துகள்--Kanags \உரையாடுக 07:13, 12 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
Kanags மிக்க நன்றி --P.M.Puniyameen 08:30, 12 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
மற்றுமொரு மைல்கல். மென்மேலும் சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறை துணை நிற்கட்டும் !!--மணியன் 09:48, 12 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
மணியன் மிக்க நன்றி--P.M.Puniyameen 11:12, 12 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
வாழ்த்துக்கள் புன்னியாமீன்.--சஞ்சீவி சிவகுமார் 08:39, 16 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
சஞ்சீவி சிவகுமார் மிக்க நன்றி--P.M.Puniyameen 08:55, 16 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

தாபகரின் பார்வையில்... தொகு

என்னுடைய கட்டுரையாக்கம் தொடர்பாக விக்கிமீடியா அமைப்பின் தாபகர் 'ஜிம்மி வேல்ஸ்'சின் பார்வையில்...

....Wow, great!

- Jimmy Wales On 2/4/12 8:44 AM

(அவரால் அனுப்பப்பட்ட மின்அஞ்சலில் இருந்து)--P.M.Puniyameen 02:10, 5 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

வாழ்த்துகள் புன்னியாமீன், நீங்கள் விரைவில் குணமடைந்து விக்கியில் மீண்டும் முனைப்புடன் பங்குபற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 02:52, 5 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

இலங்கைப் பாடசாலைகள் தொகு

புன்னியாமீன், இலங்கைப் பாடசாலைகள் பற்றி கட்டுரைகள் உருவாக்கும் போது சில உள்ளிணைப்புகளை இணைக்க வேண்டும். உதாரணமாக: //கண்டி வித்தியார்த்த கல்லூரி (Vidyartha College) இலங்கையிலுள்ள முன்னணி ஆண்கள் கல்லூரிகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலையான இக்கல்லூரி கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது.// என்றுள்ளது பின்வருமாறு எழுதப்பட வேண்டும்: கண்டி வித்தியார்த்த கல்லூரி (Kandy Vidyartha College) இலங்கையிலுள்ள முன்னணி ஆண்கள் பாடசாலைகளில் ஒன்று. தேசியப் பாடசாலையான இக்கல்லூரி கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்போது எழுதப்படா விட்டால் பின்னர் எவரும் திருத்த மாட்டார்கள். ஒரே வகையில் பெருமளவு கட்டுரைகளை எழுதும் போது முன்னரே முறையாகத் திட்டமிட்டு எழுதத் தொடங்குவது நல்லது. தகவல் சட்டத்திலும் தேசிய பாடசாலை என்பதற்கு இணைப்புக் கொடுக்க வேண்டும். குறிக்கோளும், பாளி அல்லது சமக்கிருத மொழியில் இருப்பதுடன் அதன் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்துக்குப் பதிலாகத் தமிழில் தருவது நல்லது. //Vidhya Sarwasya Bushanam" (Meaning for “Education is the Best Jewelry”)// என்பது பின்வருமாறு எழுதப்பட வேண்டும்: "வித்யா சர்வசிய பூஷணம்" (கல்வியே மிகச் சிறந்த ஆபரணம்) என்றவாறு இருக்க வேண்டும். நிறங்களையும் முடிந்த வரையில் தமிழில் தருவது நல்லது.--Kanags \உரையாடுக 07:59, 16 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

தங்களது ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி Kanags. ஏற்கனவே எழுதியவற்றையும் திருத்திவிடுகின்றேன். இதன் பின்பு தாங்கள் கூறியபடியே எழுதுகின்றேன். இருப்பினும் குறிக்கோள்கள், பாளி அல்லது சமக்கிருத மொழியில் இருக்கும் போது அதன் மொழிபெயர்ப்பை தமிழில் தருவது சற்று சிரமமாகவுள்ளது. முயற்சிசெய்கின்றேன்.--P.M.Puniyameen 08:54, 16 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

இந்தத் திருத்தத்தைப் பாருங்கள். கல்லூரி என்பது குறிப்பிட்ட பாடசாலை ஒன்றின் பெயர். பாடசாலை என்றே அனைத்துக் கட்டுரைகளிலும் பயன்படுத்துங்கள். ரோயல் கல்லூரி ஒரு இலங்கைப் பாடசாலை. இலங்கைக் கல்லூரி அல்ல.--Kanags \உரையாடுக 11:07, 16 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

இந்த முறை சரியா? அல்லது மேலும் திருத்தம் தேவையா? அறியத்தரவும்.திருத்தத்தைப் பாருங்கள்.--P.M.Puniyameen 12:00, 16 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

"இப் பாடசாலையில் கற்ற பல மாணவிகள் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், விளையாட்டு வீராங்கனைகளாகவும், சமூகத்தில் மதிக்கத்தக்க உயர் பதவி வகிக்கும் பெண்களாகவும் உள்ளனர்" என்ற வரிகளை அனைத்துக் கட்டுரைகளிலும் சேர்த்திருக்கிறீர்கள். இது தேவையற்றதாகும். குறிப்பிட்ட பாடசாலைகளில் படித்து பெயர் பெற்றவர்களின் பெயர்கள் தெரிந்தால் மட்டும் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள்.--Kanags \உரையாடுக 23:01, 20 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

புன்னியாமீன், பாடசாலைகள் அனைத்தையும் மாகாண வாரியாக அந்தந்த மாகாணத்தின் உப பகுப்பிற்குள் சேர்க்கிறீர்களா அல்லது தேசியப் பாடசாலைகளை மட்டும் மாகாண உப பகுப்பிற்குள் சேர்க்கிறீர்களா?--Kanags \உரையாடுக 22:52, 21 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

பாடசாலைகள் பகுப்பில் மாகாண ரீதியான பகுப்பு முக்கியமானதெக் கருதுகின்றேன். இலங்கையில் தேசிய பாடசாலைகள் மாத்திரம் மத்திய அரசாங்கத்தினால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. அதேநேரம், ஏனைய பாடசாலைகள் மாகாண சபைகளினால் பராமரிக்கப்படுகின்றன. தற்போது இலங்கையிலுள்ள பாடசாலைப் பகுப்பில் மாகாணங்கள் மிக முக்கியமானவை. எனவே பகுப்பு முறையில் அதனையும் சேர்த்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

மாகாண ரீதியான வகைப்படுத்தல் -உப தலைப்பு

கிழக்கு மாகாணப் பாடசாலைகள் வட மாகாணப் பாடசாலைகள் மேல் மாகாணப் பாடசாலைகள் மத்திய மாகாணப் பாடசாலைகள் தென் மாகாணப் பாடசாலைகள் வட மேல் மாகாணப் பாடசாலைகள் வட மத்திய மாகாணப் பாடசாலைகள் சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகள் ஊவா மாகாணப் பாடசாலைகள்

மேலே நீங்கள் குறிப்பிட்ட பகுப்புகளின் பெயர்களைப் பார்க்கும் போது அந்தந்த மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் (நடுவண் உட்பட) இந்த உப பகுப்புகளுக்குள் உள்ளடக்க வேண்டும். அது தேவையற்றது. மாகாண சபைகளினால் நிருவகிக்கப்படும் பாடசாலைகளைத் தனியே ஒரு உப பகுப்பினுள் சேர்க்க வேண்டுமென்றால் வேறு முறையில் பெயரிடப்பட வேண்டும். தென் மாகாண சபைப் பாடசாலைகள் என்று பெயரிடலாம்.--Kanags \உரையாடுக 23:50, 21 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
நல்லது Kanags, அது போலவே செய்வோம்--P.M.Puniyameen 04:29, 22 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

//இப்போது எழுதப்படா விட்டால் பின்னர் எவரும் திருத்த மாட்டார்கள். ஒரே வகையில் பெருமளவு கட்டுரைகளை எழுதும் போது முன்னரே முறையாகத் திட்டமிட்டு எழுதத் தொடங்குவது நல்லது.//

+1. ஏதாவது ஒரு கட்டுரையை அழுத்தி உரை திருத்த முனையும் போது ஒரே மாதிரியான கட்டுரைகள் வரும் போது அவற்றைத் தவிர்த்து விடுகிறேன். எடுத்துக்காட்டுக்கு, நிரோசன் எழுதிய தமிழ் திரைப்படம் பற்றிய கட்டுரைகள், கிரிக்கெட் வீரர்கள் பற்றிய கட்டுரைகள். எனவே, தாங்கள் புதிய துறைகளில் ஒரே போன்ற பல கட்டுரைகளை எழுதும் முன் மாதிரிக்கு ஒரு சில கட்டுரைகளை எழுதிப் பிற பயனர்களின் கருத்துகளை அறிய வேண்டுகிறேன். நன்றி. --இரவி 08:53, 22 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

அன்றும், இன்றும் தொகு

அன்று தொகு

கடந்த ஆண்டு கட்டுரை எண்ணிக்கை கூடியதில் உங்கள் பங்கு கணிசமானது. எனவே, எனது நன்றியையும் வாழ்த்தையும் உங்களுக்குச் சிறப்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் 50,000 கட்டுரைகளை எட்டிய பிறகு ஒட்டு மொத்தமாக கொண்டாடலாம் என்று இருக்கிறேன் :)--இரவி 05:17, 30 திசம்பர் 2011 (UTC)

இன்று தொகு

//இப்போது எழுதப்படா விட்டால் பின்னர் எவரும் திருத்த மாட்டார்கள். ஒரே வகையில் பெருமளவு கட்டுரைகளை எழுதும் போது முன்னரே முறையாகத் திட்டமிட்டு எழுதத் தொடங்குவது நல்லது.//

+1. ஏதாவது ஒரு கட்டுரையை அழுத்தி உரை திருத்த முனையும் போது ஒரே மாதிரியான கட்டுரைகள் வரும் போது அவற்றைத் தவிர்த்து விடுகிறேன். எடுத்துக்காட்டுக்கு, நிரோசன் எழுதிய தமிழ் திரைப்படம் பற்றிய கட்டுரைகள், கிரிக்கெட் வீரர்கள் பற்றிய கட்டுரைகள். எனவே, தாங்கள் புதிய துறைகளில் ஒரே போன்ற பல கட்டுரைகளை எழுதும் முன் மாதிரிக்கு ஒரு சில கட்டுரைகளை எழுதிப் பிற பயனர்களின் கருத்துகளை அறிய வேண்டுகிறேன். நன்றி. --இரவி 08:53, 22 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

எனது பேச்சுப் பக்கத்தில்... தொகு

கடந்த சில தினங்களாக ஒரு சிலரின் வாதப்பிரதிவாதங்களால் மனத்தாக்கங்கள் ஏற்பட்ட போதிலும்கூட, பல பயனர்கள் மின்அஞ்சல் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் தொடர்புகொண்டு மன ஆறுதலைத் தந்து ஒரு புதிய தெம்பினை ஊட்டியதினால் என் எழுத்துக்கள் தமிழ்விக்கியில் தொடரும்.

கடந்த இரண்டு தினங்களாக எனது கட்டுரைகளை ஆராய்ந்தேன். அவை தமிழ்விக்கி கொள்கைகளுக்கு முரணற்றவை என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. என் கட்டுரைகள் விக்கிக் கொள்கைகளுக்கு முரணானவை என எந்தப் பயனராவது கருதுமிடத்து என் பேச்சுப் பக்கத்தில் ஆதாரத்துடன் கருத்து முன்வைத்தால் வாதிட நான் தயாராகவுள்ளேன்.

அதேநேரம், நான் எழுதுவது தமிழ்விக்கிப்பீடியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அதிகாரிகள் அல்லது நிர்வாகிகள் கருதுவார்களாயின் சுற்றி வளைக்காது காரணத்தை நேரே சுட்டிக் காட்டி இனி எழுத வேண்டாம் என (அதிகாரிகள் அல்லது நிர்வாகிகள்) கேட்டுக் கொள்வார்களாயின் அந்த நிமிடத்திலிருந்து தமிழ் விக்கியில் நான் எழுதுவதை நிறுத்திக் கொள்வேன். இது உறுதி. ஏனென்றால் விக்கி குறித்தவர்களின் சொத்தல்ல. அதுவொரு பொதுச் சொத்து. தமிழ்விக்கி என்றும் வாழ வேண்டும். இதற்காகவே மேற்படி முடிவை நான் எடுப்பேன்.

இன்றிலிருந்து ஆலமரத்தடி பக்கத்தை நான் திறந்து பார்க்கவே மாட்டேன். என்னைப் பற்றி எந்தவொரு பயனரும் நியாயபூர்வமான முறையில் எந்த குறைகளையும் சுட்டிக் காட்டுவதாக இருப்பின் எனது பேச்சுப் பக்கத்தில் மாத்திரம் கருத்துத் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். அதேநேரம், சுற்றி வளைக்காமல் நேரடியாக கருத்துத் தெரிவிக்கும்படியும் நானும் நேரடியாகவே எனது பதிலைத் தருவேன் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.--P.M.Puniyameen 06:19, 25 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

புன்னியாமீன், விக்கிப்பீடியா போன்ற கூட்டு முயற்சியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும் சிறுசிறு சச்சரவுகள் வருவதும் சாதாரண நிகழ்வே. நீங்கள் தமிழ்விக்கிக்கு நிறைய பங்களித்துள்ளீர்கள் அந்த அடிப்படையில் உங்களது பங்களிப்பு அனுபவங்களை, இடர்பாடுகள் போன்றவற்றை மற்ற விக்கிப் பயனருடன் உறவாடி பகிர்ந்து கொள்வது தமிழ் விக்கிக்கும் பயனர்களுக்கும் உதவும். அந்தவகையில் நீங்கள் //இன்றிலிருந்து ஆலமரத்தடி பக்கத்தை நான் திறந்து பார்க்கவே மாட்டேன்.// போன்ற இறுக்கமான முடிவுகளை தளர்த்திக்கொள்ள வேண்டுகிறேன். (எனது தனிப்பட்ட வேண்டுகோள் மற்றும் அறிவுறுத்தல்: புதிய துடுப்பாட்ட கட்டுரைகள் தொடங்குவதை தவிர்க்கவும், ஏற்கெனவே எழுதியுள்ள கட்டுரைகளை மேம்படுத்த முனையுங்கள். இலக்காக வைத்து விக்கியில் பங்களிக்க வேண்டாம், அதைவிட உடல்நலம் பேணுவது தான் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.) -- மாகிர் 16:47, 27 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

வார்ப்புரு மாற்றம் தொகு

சோடாபாட்டில், நேற்று, இன்றும் என்னால் ஆரம்பிக்கப்பட்ட சகல கட்டுரைகளையும் பரிசீலித்துப் பார்த்தேன். அதில் இலங்கை எழுத்தாளர்களின் நூற்பட்டியல் கட்டுரைகளில் சில கட்டுரைகள் பூரணமடையா நிலையில் உள்ளன. அவற்றின் தலைப்புக்களை தங்களது மின் அஞ்சலில் சேர்த்துள்ளேன். தயவு செய்து அவற்றை என் பேச்சுப்பக்க வெளிக்கு நகர்த்தி விடவும். நேரம் கிடைக்கும் போது அவற்றை பூரணப்படுத்துவேன். ஏனைய அனைத்துக் கட்டுரைகளும் விக்கி நியதிகளுக்கமையவே உள்ளன. இதனை ஓர் உதவியாக செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன் --P.M.Puniyameen 06:28, 24 சனவரி 2012 (UTC)

இப்பட்டியல்களை நகர்த்துவதற்கு அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்தந்த இடங்களிலேயே மேலதிக தகவல்களை சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 12:34, 24 சனவரி 2012 (UTC)
கனக்ஸ், வெகுநாட்களாக "வேலை நடந்துகொண்டிருக்கிறது” என்ற வார்ப்புரு இவற்றில் உள்ளது. அதற்கு பதிலாக வேறொரு வார்ப்புருவை இடலாமா (”இப்பட்டியல் முழுமையானதல்ல, இதனை முழுமையாக்க நீங்கள் அறிந்த நூல்களை சேர்த்து உதவுங்கள்”)?--சோடாபாட்டில்உரையாடுக 13:19, 24 சனவரி 2012 (UTC)

மேலே குறிப்பிட்டுள்ள உரையாடலின் படி, கட்டுரைகளை உங்கள் பயன்பர் வெளிக்கு நகர்த்த வில்லை. வேலை நடந்துகொண்டிருக்கிறது வார்ப்புருவை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ””இப்பட்டியல் முழுமையானதல்ல, இதனை முழுமையாக்க நீங்கள் அறிந்த நூல்களை சேர்த்து உதவுங்கள்”” என்ற குறிப்பினை மட்டும் சேர்த்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:43, 25 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

மிக்க நன்றி சோடாபாட்டில், அதே போல செய்து விடுங்கள் --P.M.Puniyameen 09:29, 25 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
ஒருவர் தனியே இப்பட்டியல்களைத் தயாரிப்பது கடினம். குறைந்தது சில நூல்களின் விபரங்களைச் சேர்த்து விட்டால் பிற்காலத்தில் இவை வளர்ச்சியடையும். எழுத்தாளர்களே தாம் வெளியிடும் நூல்களை இப்பட்டியல்களில் சேர்க்கும் வாய்ப்புகளும் உள்ளன.--Kanags \உரையாடுக 00:21, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

உங்கள் பங்களிப்பு பற்றிய என் கருத்துகள் தொகு

புன்னியாமீன்,

 1. //கடந்த ஆண்டு கட்டுரை எண்ணிக்கை கூடியதில் உங்கள் பங்கு கணிசமானது. எனவே, எனது நன்றியையும் வாழ்த்தையும் உங்களுக்குச் சிறப்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் 50,000 கட்டுரைகளை எட்டிய பிறகு ஒட்டு மொத்தமாக கொண்டாடலாம் என்று இருக்கிறேன் :)//

தமிழ் விக்கிப்பீடியா 43,000 கட்டுரைகள் மைல்கல்லை அடைந்த போது, அண்மையில் பல ஆயிரம் கட்டுரைகள் எழுதிய தங்கள் பங்களிப்பை நினைவுகூரும் வகையில், மேற்கண்ட கருத்தை இட்டேன்.

 1. //இப்போது எழுதப்படா விட்டால் பின்னர் எவரும் திருத்த மாட்டார்கள். ஒரே வகையில் பெருமளவு கட்டுரைகளை எழுதும் போது முன்னரே முறையாகத் திட்டமிட்டு எழுதத் தொடங்குவது நல்லது.//

மேற்கண்ட கருத்து, இலங்கைப் பாடசாலைகள் பற்றிய கட்டுரைகள் தொடர்பாக சிறீதரன் உங்கள் பேச்சுப் பக்கத்தில் இட்டது.

நீங்கள் எழுதிய அந்தோனி ஹொப்சன் கட்டுரையில்

//அந்தோனி ஹொப்சன் , ( Anthony Hobson , பிறப்பு: செப்டம்பர் 10 1965 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது//

நான் தமிழ் எழுத கற்றுக் கொண்ட வகையில், துடுப்பாட்டக்காரர் என்பதை அடுத்து முற்றுப் புள்ளி வர வேண்டும். ஆனால், நீங்கள் காற்புள்ளி இட்டிருக்கிறீர்கள். இந்த ஒரு கட்டுரையில் மட்டும் இந்தப் பிழை என்றால் திருத்தலாம். ஆனால், இதே போன்ற நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் இதைத் திருத்துவது இலகுவான பணி அன்று. தவிர, //களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது// என்ற சொற்றொடர் பல கட்டுரைகளிலும் வருகிறது. இதை சரி பார்ப்பதற்கான ஆதாரம் என்ன?

இலங்கைப் பாடசாலைகள் தொடர்பாக சிறீதரன் பின்வருமாறு கருத்து இட்டிருந்தார்.

//"இப் பாடசாலையில் கற்ற பல மாணவிகள் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், விளையாட்டு வீராங்கனைகளாகவும், சமூகத்தில் மதிக்கத்தக்க உயர் பதவி வகிக்கும் பெண்களாகவும் உள்ளனர்" என்ற வரிகளை அனைத்துக் கட்டுரைகளிலும் சேர்த்திருக்கிறீர்கள். இது தேவையற்றதாகும். குறிப்பிட்ட பாடசாலைகளில் படித்து பெயர் பெற்றவர்களின் பெயர்கள் தெரிந்தால் மட்டும் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள்.//

இதே போல் //களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது// என்ற வரியையும் நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் தேவையின்றி இட்டிருக்கிறீர்களோ என்ற ஐயம் வந்தது. இதனாலேயே,

//+1. ஏதாவது ஒரு கட்டுரையை அழுத்தி உரை திருத்த முனையும் போது ஒரே மாதிரியான கட்டுரைகள் வரும் போது அவற்றைத் தவிர்த்து விடுகிறேன். எடுத்துக்காட்டுக்கு, நிரோசன் எழுதிய தமிழ் திரைப்படம் பற்றிய கட்டுரைகள், கிரிக்கெட் வீரர்கள் பற்றிய கட்டுரைகள். எனவே, தாங்கள் புதிய துறைகளில் ஒரே போன்ற பல கட்டுரைகளை எழுதும் முன் மாதிரிக்கு ஒரு சில கட்டுரைகளை எழுதிப் பிற பயனர்களின் கருத்துகளை அறிய வேண்டுகிறேன். நன்றி. --இரவி 08:53, 22 சனவரி 2012 (UTC)//

என்ற கருத்தை இட்டேன். தரவுகள் மட்டும் மாறுகிற, ஒரே மாதிரியான கட்டுரைகள் நூற்றுக் கணக்கில் திட்டமிட்டு பதிவேற்றப்படுகிற போது, இதைப் போன்ற முன்மாதிரிக் கட்டுரைகளை இட்டு, கருத்து கோரி, அதன் பிறகு பதிவேற்றுவது விக்கியில் ஏற்கனவே உள்ள நடைமுறை தான். கட்டுரைகளைச் செம்மைபடுத்த உதவுவதோடு, பிழைகளை முன்னரே களைந்து பலரின் உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்த உதவும்.

தங்களின் பங்களிப்புகள் பற்றிய மேற்கண்ட இரு கருத்துகளும் ஒன்றுக்கு ஒன்று முரண் அற்றவை. இவற்றைத் தனித்தனியாகவே அணுக வேண்டும். பொதுவாகவே, விக்கியில் தகுந்த இடத்தில் பாராட்டுவதும் தகுந்த மற்றொரு இடத்தில் மேம்படுத்த வேண்டியவற்றைச் சுட்டிக்காட்டுவதும் முறையே. இப்படி இருக்க, இரண்டு கருத்துகளையும் தேவையில்லாமல் out of context ஆக இணைத்து அன்றும் இன்றும் என்று தலைப்பில் வெளியிட்டு உள்ளீர்கள். இதற்கு என் மறுப்பைத் தெரிவிக்கிறேன்.

தங்கள் பங்களிப்புகளைப் பற்றிய கருத்துகளை சுற்றி வளைக்காமல் நேரடியாக கேட்குமாறு கூறியதால், எனது கருத்துகள்/ ஐயங்கள் / கேள்விகளை முன் வைக்கிறேன்:

 1. இலங்கைப் பாடசாலைகள், இதழ்கள் போல பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருவது பாராட்டத்தக்கது. இது போல் அடுத்து என்னென்ன துறைகளில் எழுதத் திட்டமிட்டு உள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? விலங்குகள், பறவைகள், ஊர்கள் என்று பல பயனுள்ள தலைப்புகளில் கட்டுரைகள் எழுத உங்களால் இயலும். இவற்றின் மாதிரிக் கட்டுரைகளை மேம்படுத்தி உதவ விரும்புகிறேன். இவ்வாறு மேம்படுத்திய கட்டுரை மாதிரிகளை அடிப்படையாக வைத்து தானியக்கமாகப் பதிவேற்றுவதே பலரின் உழைப்பை மிச்சப்படுத்துவதாக இருக்கும்.
 2. கிரிக்கெட் வீரர்கள் பற்றிய ஆயிரக்கணக்கான கட்டுரைகளைப் பதிவேற்றி வருகிறீர்கள். இவை பற்றிய கட்டுரைகள் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளதாலும், தகுந்த ஆதாரங்களுடன் உள்ளதாலும் இவை உங்கள் சொந்த ஆர்வத்துக்கும் விக்கிப்பீடியா கொள்கைக்கும் உட்பட்டவையே. ஆனால், 19ஆம் நூற்றாண்டில் உள்ளூர் விளையாட்டுகளில் விளையாடிய வீரர்களைப் பற்றிய தகவலை எல்லாம் பார்க்கும் போது அவற்றை எந்த வகையிலும் உரை திருத்தவோ மேம்படுத்தவோ எனக்கு ஊக்கம் வரவில்லை. இது போன்ற கட்டுரைகளை மேம்படுத்த இன்னும் பல கிரிக்கெட் ஆர்வலர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வந்தால் நன்றாக இருக்கும்.
 3. அந்தோனி ஹொப்சன் போன்ற கட்டுரைகளைத் தனித்தனியாகத் தான் இட வேண்டுமா? வீரர்களை தகுந்த முறையில் பகுத்து ஒரு சில பட்டியல் / அட்டவணைப் பக்கங்களாகத் தரலாமே?
 4. தங்கள் உதவியாளர்கள், உறவினர்கள் உதவியுடன் கட்டுரைகளை உருவாக்குவதாகச் சொல்லி இருந்தீர்கள். ஒரு வேளை, அவர்களுக்கு விக்கி ஆர்வமும் அறிமுகமும் இருக்கும் பட்சத்தில், அவர்களையும் தத்தம் பெயர்களில் நேரடியாக விக்கிப்பீடியாவில் பங்களிக்க அழைத்து வரலாமே?
 5. தொடர்ந்து, தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தங்கள் கட்டுரை எண்ணிக்கையை முன்வைத்து செய்தி வெளியீடுகள் எவ்வாறு வருகின்றன? தமிழ் விக்கிப்பீடியாவைத் தங்கள் சாதனைகளுக்கான மற்றொரு களமாகப் பார்க்கிறீர்களா? தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வருவதற்கு முன்பான உங்கள் அனைத்துச் செயற்பாடுகளும் எண்ணிக்கையை முன்வைத்துச் சாதனை செய்வது போன்ற தோற்றத்தை அளிக்கிறது.

பொறுப்புத் துறுப்பு: மேற்கண்ட எனது கேள்விகள், ஐயங்கள், கருத்துகள் ஆகியவை யாவும் என் தனிப்பட்ட கருத்துகளே. இவை, சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம். இவற்றுக்கு நீங்கள் பதில் தரவும் அவசியம் இல்லை. தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் விக்கிக் கொள்கைக்கு உட்பட்டே உள்ளன. எனவே, எனது கருத்துகள் உங்கள் பங்களிப்புகளை எந்த வகையிலும் கட்டுப்படுத்தா. இதே கருத்தை விக்கிப்பீடியாவைத் தொடங்கிய சிம்மி வேல்சே வந்து சொன்னாலும், என்ன கருத்து என்பதே முக்கியமே தவிர, இன்னார் சொல்லி விட்டார் என்பதற்காக நீங்கள் வருந்தத் தேவை இல்லை. குறிப்பாக, பயனர் தடை, கட்டுரை நீக்கம் ஆகியவற்றில் நிருவாகிகள் பயனர்களின் கருத்து அறிந்து இணக்க முடிவையே செயற்படுத்த இயலும் என்பதால், இதை நான் ஒரு அதிகாரி அணுக்கம் உள்ள பயனர் என்ற முறையிலோ நெடுநாள் பயனர் என்ற வகையிலோ முன்வைக்கவில்லை. எனவே, இந்த நோக்கில் இதனை அணுகி, தேவையற்ற குழப்பங்களை ஒரு நெடுந்தொடராக உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.--இரவி 11:42, 25 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

இரவி

விட்டு விடுகின்றேன்
நீங்களும் விட்டு விடுங்கள்.

விளக்கம் தரப் போனால் விவாதமாகிவிடும். வேண்டாம் அந்தப் பிரச்சினை.

ஒரே ஒரு விடயத்துக்கு மாத்திரம் சிறு விளக்கம் தருகின்றேன்

//தொடர்ந்து, தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தங்கள் கட்டுரை எண்ணிக்கையை முன்வைத்து செய்தி வெளியீடுகள் எவ்வாறு வருகின்றன? தமிழ் விக்கிப்பீடியாவைத் தங்கள் சாதனைகளுக்கான மற்றொரு களமாகப் பார்க்கிறீர்களா?//

விக்கியை வைத்து விளம்பரம் பெற வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. ஊடகவியலாளர்கள் என்னை அணுகி நேர்காணல் பெறுகின்றார்கள். வேண்டுமென்றால் என் மின்அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுடைய தொலைபேசி இலக்கங்களை நான் தருகின்றேன். அவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு விளம்பரத்துக்காக அவர்களை நான் தேடிச்சென்றேனா? அல்லது செவ்விக்காக அவர்கள் என்னைத்தேடி வந்தார்களா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

நன்றி இரவி
மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன்
நாம் விட்டு விடுவோம். --P.M.Puniyameen 12:51, 25 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

சரி, இந்த உரையாடலை இங்கு தொடர்வதை விட்டு விடுகிறேன். தமிழ் விக்கியின் மேம்பாட்டை முன்னிட்டு தேவைப்படும் இடங்களில் எனது கருத்துகளைத் தெரிவிக்கிறேன்.--இரவி 13:02, 25 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

தங்கள் கட்டுரையில் இருக்கக்கூடிய பிழைகள் குறித்து தொகு

புன்னியாமீன்,

நீங்கள் எழுதிய அந்தோனி ஹொப்சன் கட்டுரையில்

//அந்தோனி ஹொப்சன் , ( Anthony Hobson , பிறப்பு: செப்டம்பர் 10 1965 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது//

நான் தமிழ் எழுத கற்றுக் கொண்ட வகையில், துடுப்பாட்டக்காரர் என்பதை அடுத்து முற்றுப் புள்ளி வர வேண்டும். ஆனால், நீங்கள் காற்புள்ளி இட்டிருக்கிறீர்கள். இந்த ஒரு கட்டுரையில் மட்டும் இந்தப் பிழை என்றால் திருத்தலாம். ஆனால், இதே போன்ற நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் இதைத் திருத்துவது இலகுவான பணி அன்று. தவிர, //களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது// என்ற சொற்றொடர் பல கட்டுரைகளிலும் வருகிறது. இதை சரி பார்ப்பதற்கான ஆதாரம் என்ன?

//களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது// என்ற வரியையும் நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் தேவையின்றி இட்டிருக்கிறீர்களோ என்ற ஐயம் உள்ளது.

இது கட்டுரைகளின் உள்ளடக்கம் தொடர்பான கேள்வி என்பதால், அருள் கூர்ந்து மறுமொழி அளியுங்கள். இது உண்மையிலேயே பிழை தான் என்றால், நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் இவற்றைத் தானியக்கமாகத் திருத்துவது இயலுமா என்று சிந்திக்க வேண்டும்.--இரவி 13:09, 25 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

தவறை ஏற்றுக்கொள்ளக் கூடிய மனோபக்குவம் எனக்குண்டு இரவி, அந்தோனி ஹொப்சன் கட்டுரை திசம்பர் 9 2011 பிரசுரமானது. தவறைக் கண்டவுடன் சுட்டிக்காட்டியிருப்பின் ஏற்கெனவே திருத்தியிருப்பேன். //களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது// இந்த வார்த்தையை ஏற்கெனவே நீக்கிவிட்டேன். இவற்றைத் தானியக்கமாகத் திருத்துவது தொடர்பாக நீங்கள் நேரத்தை விரயமாக்க வேண்டாம். படிப்படியாக நானே திருத்தி விடுகின்றேன்.--P.M.Puniyameen 13:45, 25 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
இது போன்ற திருத்தங்களை AWB கொண்டு செய்ய இந்தக் கணக்கைத் தொடங்கியுள்ளேன். இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இரவி இக்கணக்கிற்கு தானியங்கிக் கொடி தர வேண்டுகிறேன்.--Sodabot 14:03, 25 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

முக்கியத் தரவுகள் இல்லாத தங்கள் கட்டுரைகள் தொகு

பகுப்பு பேச்சு:இந்திய முஸ்லிம் எழுத்தாளர்கள்--இரவி 13:35, 25 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

விடயமே இல்லாத இடத்தில் ஒரு புதிய தகவலை சேர்ப்பது தவறு என நான் நினைக்கவில்லை. தமிழகத்தில் உள்ள பயனர்கள் அவற்றை மேம்படுத்துவார்கள் என எதிர்பார்த்தேன். இதில் உசாத்துணையாக எடுத்த நூல் இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011, இது காயல்பட்டினம் அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மகாநாட்டில் வெளியிடப்பட்டது. அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். தரமற்றவை, தேவையற்றவை, பயனர்கள் மேம்படுத்த மாட்டார்கள் என்ற கட்டுரைகள் இருப்பின் தயவுசெய்து நீக்கிவிடுங்கள். (பார்க்க அன்பான வேண்டுகோள் 29 சூன் 2011 திகதி எழுதப்பட்டது.) --P.M.Puniyameen 14:13, 25 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

கண்டனம் தொகு

////+1. ஏதாவது ஒரு கட்டுரையை அழுத்தி உரை திருத்த முனையும் போது ஒரே மாதிரியான கட்டுரைகள் வரும் போது அவற்றைத் தவிர்த்து விடுகிறேன். எடுத்துக்காட்டுக்கு, நிரோசன் எழுதிய தமிழ் திரைப்படம் பற்றிய கட்டுரைகள், கிரிக்கெட் வீரர்கள் பற்றிய கட்டுரைகள். எனவே, தாங்கள் புதிய துறைகளில் ஒரே போன்ற பல கட்டுரைகளை எழுதும் முன் மாதிரிக்கு ஒரு சில கட்டுரைகளை எழுதிப் பிற பயனர்களின் கருத்துகளை அறிய வேண்டுகிறேன். நன்றி. --இரவி 08:53, 22 சனவரி 2012 (UTC)//

இந்தக் கருத்தை எந்தச் சூழ்நிலையில் சொன்னேன் என்பதை உங்கள் பேச்சுப் பக்கத்தில் விளக்கி உள்ளேன். அதற்குப் பிறகும், உங்கள் பயனர் பக்கத்தில் இந்தக் கருத்தை நிருவாகி இரவி சொன்னதாக எழுதி வைத்துள்ளது விசமத்தனமாக உள்ளது. இங்கு தனிப்பட ஒரு பயனர் சொல்லக்கூடிய கருத்துகளை நிருவாகி சொன்னதாக எழுதி வைப்பது குழப்பத்தை உருவாக்கும் செயல். உடனடியாக இதை நீக்க வேண்டுகிறேன்.--இரவி 20:24, 25 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

மேற்கண்ட அதே கருத்தை, பயனர்:P.M.Puniyameen/articles9 பக்கத்தில் நான் தொடங்கிய 98 வது நூறு கட்டுரைகள் என்பதன் கீழும் பதிந்து வைத்துள்ளீர்கள். உடனடியாக இதை நீக்க வேண்டுகிறேன்--இரவி 20:33, 25 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

இரவி தங்கள் விளக்கம் பின்பு தான் கிடைத்தது. நீக்கி விட்டேன்.--P.M.Puniyameen 01:35, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]


தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.--Parvathisri 05:09, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

சில கருத்துக்கள் தொகு

// கடந்த சில தினங்களாக ஒரு சிலரின் வாதப்பிரதிவாதங்களால் மனத்தாக்கங்கள் ஏற்பட்ட போதிலும்கூட, பல பயனர்கள் மின்அஞ்சல் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் தொடர்புகொண்டு மன ஆறுதலைத் தந்து ஒரு புதிய தெம்பினை ஊட்டியதினால் என் எழுத்துக்கள் தமிழ்விக்கியில் தொடரும். ... .--P.M.Puniyameen 06:19, 25 சனவரி 2012 //

வணக்கம். வாதப் பிரதிவாதம் செய்யும் சிலர் எவரென்பதோ மன ஆறுதல் தந்தோர் எவரென்பதோ எனக்குத் தெரியாது என்பதால் எனது கருத்துக்கள் தனிப்பட்ட எவரையும் குறிப்பன அல்ல.

உங்களை மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு உரையாடுவோர் உங்களது பயனுள்ள நேரம் வீணாகுவது பற்றி எந்த அக்கறையும் அற்றவர்களாக இருப்பதுடன் தமிழ் விக்கிப்பீடியா தினந்தோறும் பெற வேண்டிய பயனுள்ள பல கட்டுரைகள் உருவாகுவதனைத் தடுத்து வருகின்றனர் என்று நான் நினைக்கிறேன்.

ஏனென்றால் ஓர் ஆய்வாளராக, எழுத்தாளராகச் சேகரித்துள்ள, சேகரிக்கக் கூடிய பல்வேறு தகவல்களைக் கொண்ட கட்டுரைகளை உங்களால் எழுத முடியும் என்பது பற்றி எந்த அக்கறையுமின்றி ஓரிரு முதல்தர போட்டிகளில் விளையாடிய துடுப்பாட்டக்காரர்களைப் பற்றி நீங்கள் கட்டுரைகளை எழுதுவதற்கே அவர்கள் தெம்பு ஊட்டி வருகின்றனர்.

துடுப்பாட்டக்காரர்கள் தொடர்பில் எழுதப்பட்ட பெருமளவு கட்டுரைகள் எண்ணிக்கை அதிகரிப்பினை விட வேறெந்தப் பயனையும் தராது என்பதனைத் தெரிந்திருந்தும் உங்களால் எழுதப்படும் ‘’’கட்டுரைகள் விக்கிக் கொள்கைகளுக்கு முரணானவை அல்ல’’’ என்பதான கருத்துக்களை உங்களுக்குக் கூறுவோர் விக்கிப்பீடியாவுக்கும் தனிப்பட உங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம் ஆகும். புன்னியாமீன் ஓரிரு முதல்தர போட்டிகளில் விளையாடியவர்கள் பற்றிப் பெருமளவு கட்டுரை எழுத பிற பயனர்கள் ஊக்குவிக்கிறார்கள் எனத் தவறாகப் புரிந்துகொண்டிருந்தேன். பின்னரான உரையாடல்கள் அவர் தம் விருப்ப அடிப்படையிலேயே அவ்வாறு எழுதுகிறார் என்பதனைப் புலப்படுத்துகின்றன.

ஒரேயொரு எடுத்துக்காட்டினை இங்கே முன்வைக்கிறேன்.

 • செயல் : அந்தோனி ஹிக்நில் என்ற கட்டுரையை 9 செப்டெம்பர் 2011‎ அன்று பதிவேற்றியிருக்கிறீர்கள். 26 சனவரி 2012‎ அன்று ஒருமுறை திருத்தியிருக்கிறீர்கள். இந்த வேலைகளுக்கு சில நிமிடங்களாவது எடுத்திருக்கும்.
 • நன்மை : தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரை அதிகரித்துள்ளது.
 • தீமை 1: இந்தக் கட்டுரையை விடப் பயனுள்ள இன்னொரு கட்டுரையில் நான்கு சொல்லேனும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு - பயனர்களுக்குக் கிடைக்காது போயுள்ளது.
 • தீமை 2 : புன்னியாமீன் பயனற்ற பல்லாயிரம் கட்டுரைகளை எழுதினார் என்பதான குரல்கள் காலத்துக்குக் காலம் கேட்டுக் கொண்டிருக்கும்.
 • தீமை 3 : மேற்படி கட்டுரையில் தகவற் பிழை உள்ளது. இப்படியான பத்துப் பிழைகளைப் பட்டியலிட்டு விக்கிப்பீடியாவில் பிழை பிழையாகப் புன்னியாமீன் கட்டுரை எழுதினார் எனச் சொல்லிவிடக்கூடும்.
 • தீமை 4 : அப்படியான பிழைகளைத் தேடி மீண்டும் திருத்தும் நேரம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கிடைக்க வேண்டிய இன்னமும் நான்கு சொற்களை நாம் இழக்க வழிகோலும்.

அந்தோனி ஹிக்நில் போன்ற கட்டுரைகளை எழுத புன்னியாமீனின் நேரம் செலவழிவது பற்றிக் கவலையடையாதோர் பின்வரும் ஏதாவது ஒரு வகையில் அடங்குவர் என நான் நினைக்கிறேன்.

 • வகை 1 : புன்னியாமீன் பற்றி ஏதும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். புன்னியாமீனால் திட்டமிட்டுத் தகவல் சேகரித்து மிகப்பயனுள்ள பல தகவல் வளங்களை உருவாக்க முடியும் என்பதனை [1] அறியாமலிருக்கிறார்கள்.
 • வகை 2 : புன்னியாமீன் பற்றி அறிந்திருக்கிறார்கள். பயனுள்ள உள்ளடக்கம் என்பதனை விட எண்ணிக்கை அதிகரிப்பே முக்கியம் என நம்புகிறார்கள். அதனால் இழக்கப்படும் பயனுள்ள உள்ளடக்கம் பற்றி யோசிக்காதிருக்கிறார்கள்.
 • வகை 3 : புன்னியாமீன் பற்றி அறிந்திருக்கிறார்கள். அவருக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செயற்படுகிறார்கள் அல்லது தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் புன்னியாமீனின் உழைப்புக் கிடைக்கக் கூடாது என்ற உள்நோக்கமுடையோராக இருக்கிறார்கள். புன்னியாமீன் ஓரிரு முதல்தர போட்டிகளில் விளையாடியவர்கள் பற்றிப் பெருமளவு கட்டுரை எழுத பிற பயனர்கள் ஊக்குவிக்கிறார்கள் எனத் தவறாகப் புரிந்துகொண்டிருந்தேன். பின்னரான உரையாடல்கள் அவர் தம் விருப்ப அடிப்படையிலேயே அவ்வாறு எழுதுகிறார் என்பதனைப் புலப்படுத்துகின்றன.

உங்களிடமுள்ள வளங்களைப் பயன்படுத்திப் பாடசாலைகள், வழிபாட்டிடங்கள், எழுத்தாளர்கள், பறவைகள், விலங்குகள், மீன்கள் என நூறு நூறு கட்டுரைகளை உருவாக்க முடியும் என்றால் அவை துடுப்பாட்டக்காரர்களைப் பற்றிய கட்டுரைகளை விட ஆயிரம் மடங்கு பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி கோபி 08:57, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

கருத்துக்கு நன்றி கோபி. இரண்டும் நடக்கும். ஆனால் இனி வேகமாக அல்ல மெதுவாக... இதன் பின்பு வேகமாக நடப்பது இவை [2],[3] மெதுவாக நடப்பது இது [4], மூன்றாவதாக...[5] இதுவும் நடக்கும்.
அதே நேரம் //ஓரிரு முதல்தர போட்டிகளில் விளையாடிய துடுப்பாட்டக்காரர்களைப் பற்றி எழுதுவது// யாரும் கூறியல்ல என் மனத்திருப்திக்காகவே. ஆதாரத்துக்கு இது [6].துடுப்பாட்டம் பற்றி இலங்கையில் தமிழ் மொழியில் வந்த முதல் நூல். ஏன் எழுதுகின்றேன் என்றால் துடுப்பாட்டம் மட்டுமே என் பொழுதுபோக்கு. --P.M.Puniyameen 10:52, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
இந்தக் கட்டுரையை விடப் பயனுள்ள இன்னொரு கட்டுரையில் நான்கு சொல்லேனும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு - பயனர்களுக்குக் கிடைக்காது போயுள்ளது. இதைக் கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஒருவர் விருப்பமான துறையில் தான் எழுதுவார். ஏனெனில் இது தன்னார்வலத் திட்டம். மேலிருந்து ஒருவர் இந்தத் துறையில் இன்று இக்கட்டுரை எழுது என்று சொல்லவும் அடுத்தவர் செய்யவும் இது ஊதியம் வாங்கிச் செயல்படும் திட்டமல்ல. புன்னியாமீன் துடுப்பாட்டம் எழுதாவிட்டால் அதே அளவு வேறு துறையில் எழுதியிருப்பார் என்று எப்படி யோசிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. crowdsourcing திட்டத்தில் அனைத்து துறைகளும் சீரான எண்ணிக்கையில் வளரும் என்று எதிர்ப்பார்ப்பது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.
கலைக்களஞ்சியம் என்பதற்கு தகவல் துறையின் அடிப்படையில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. போன நூற்றாண்டில் ஒரே ஒரு ஏ தரப் போட்டியில் ஆடிய தென்னாப்பிரிக்க வீரரும், மடகாஸ்கரில் வளரும் மரமும், இலங்கையில் எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் கோயிலும் எல்லாம் ஒன்று தான். அதுவும் விக்கிப்பீடியா போன்ற இணைய, கட்டற்ற திட்டத்தில் காலக்கெடுவோ, இவ்வளவு தான் இருக்க முடியுமென்ற அளவுச் சிக்கலோ கிடையாது. “பயனுள்ளதாக இருக்கும்”“ஆயிரம் மடங்கு பயனுள்ளதாக இருக்கும்” என்றால் இங்கு அனைவரும் திரைப்படக் கட்டுரைகள் தான் எழுத வேண்டும். ஏனெனில் அவை தான் மக்களுக்கு அதிக அளவு பயன்படும். அல்லது சோதிடம், சமையல் குறிப்பு, சினிமா கிசு கிசு, பாடநூல்கள், சுய உதவிக் குறிப்புகள் எழுதலாம். இவையே அதிக அளவில் “பயன்படும்”. 2006 இல் நிரோஜன் திரைப்படக் கட்டுரைகளை எழுதிய போதே இம்மாதிரி எதிர்ப்பிருந்ததைப் பார்த்துள்ளேன். ஏனென்று எனக்கு விளங்க வில்லை. இடது புறம் “ஏதேனும் ஒரு கட்டுரை” இணைப்பை சொடுக்கினால் ஒரே ஒரு மாதிரி கட்டுரை வந்தால் படிப்பவர் போய்விடுவார் என்று வேறு எங்கோ வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. தினம் 80,000 முதல் 1,00,000 பேர் பார்வையிடும் விக்கிப்பீடியாவில் 400 சொடுக்குகள் மட்டுமே அவ்விணைப்புக்கு நிகழ்கின்றன. அதை ஒரு காரணமாகக் கொண்டு பன்முகத்தன்மை வேண்டுமென்று கேட்பது அடிப்படையற்றது. பன்முகத்தன்மை வேண்டுமென்றால் நாம் தான் பல தலைப்புகளிலும் எழுத வேண்டும். இத்தலைப்பிற்கு இவ்வளவு கட்டுரை என்று quota வைத்து எழுதுவது தன்னார்வலத் திட்டங்களில் என்றும் வெற்றி பெறாது.--சோடாபாட்டில்உரையாடுக 12:28, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

ஆட்சேபம் தொகு

கோபி மேலே சொன்ன கருத்துகளுக்கு எனது பலத்த ஆட்சேபத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். அமைதியாக இருக்கும் தமிழ் விக்கிப்பீடியர்களிடையே குழப்பத்தை உண்டு பண்ணும் நோக்கமே அவரது எழுத்துகளில் புலப்படுகின்றன.--Kanags \உரையாடுக 12:02, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
கோபி நீங்கள் சொல்ல வந்த கருத்தை மட்டும் சொல்லாமல் இப்படி கற்பனை வாதங்களை முன்வைக்க வேண்டாம். அந்தப் போக்கு தொடர்ந்தால் விக்கியில் ஒருவரை ஒருவர் மதித்து உரையாடும் போக்கு குறையும். (இந்த இடத்தில் மதிப்புக் குறையாக நீங்கள் பேசாவிட்டாலும் இது ஒரு சறுக்குப்பாதை.) -- சுந்தர் \பேச்சு 13:59, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
கோபி, இங்கே நீங்கள் கூறுகிய கருத்துக்கள் தவறானவை. ஒரு பயனர் தனக்கு விரும்பிய விதத்தில் தமிழ் விக்கி கொள்கைகளுக்கு உட்பட்டுப் பங்களிக்க முழு உரிமைகளையும் கொண்டவர். தமிழ் விக்கிப்பீடியாவில், தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாக ஒருவர் எப்படிப் பங்களிக்கிறார் என்பதை மட்டுமே இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் புன்னியாமீன் இங்கு மிகச் சிறப்பாக பங்களித்துள்ளார். --Natkeeran 16:01, 27 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

கருத்து தொகு

எந்தத் துறைகள் முகனையானவை என்பதைப் பொருத்தவரை தனிப்பட்ட முறையில் எனக்கு சில விருப்பு வெறுப்புகள் இருந்தாலும், விக்கியில் எழுதுபவர்கள் இன்ன துறைகளில் தான் எழுத வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. நிரோவின் திரைப்படக் கட்டுரைகளிலும், ஊர்களைப் பற்றிய கணேசின் தானியங்கிக் கட்டுரைகளைப் பற்றிய விவாதத்திலும் அதே நிலைப்பாட்டையே கொண்டிருந்தேன். இப்போதும் அதே நிலைப்பாடுதான். ஆனால், அந்தப் பழைய உரையாடல்களுக்குப்பின் தெலுங்கு விக்கியிலும், பிசுனுப்பிரியா விக்கியிலும் ஏற்பட்ட தேக்கம், வங்காள விக்கியில் செய்த களையடுப்பு ஆகியவற்றைப் பார்க்கையில் சிறிது கவலை ஏற்படுகிறது. துறைவாரியாக அல்லாமல் குறிப்பிடுதன்மையை வகுத்துப் பின்பற்ற வேண்டும். பல துறைகளிலும் புதிதாக நுழைபவர்கள் தங்களைப் பற்றிய விளம்பரங்களை ஏற்றும் களமாக ஆகிவிடக் கூடாது. ஆங்கில விக்கியில் இது போலப் பல கட்டுரைகள் வந்துள்ளது ஒரு சிக்கலாகவே அறியப்பட்டுள்ளது. அதனால் குறிப்பிடுதன்மையைச் சற்று தெளிவாக வரையறுக்க வேண்டும். இப்போது விட்டால் இதையே முன்மாதிரியாகக் கொண்டு பல ஆயிரம் கட்டுரைகள் வரலாம், அப்போது முடிவை மாற்றினாலும் கூட சரி செய்வது சிரமம். கூகுள் திட்டத்தில் நாம் கண்டது போலாகிவிடக் கூடாது.

அடுத்தது தலைப்புக்களின் பல்வகைமைச் சிக்கல். இதைத் தீர்ப்பதற்கு மற்ற துறைகளை வளர்க்கவே முனைய வேண்டும். நோபல் பரிசு பெற்றவர்களைப் பற்றி எழுதத் தொடங்கலாம், நாடுகளைப் பற்றிய கட்டுரைகளுக்கு ஒரு திட்டம் தொடங்கலாம்.

இவை தவிர, இது போல எண்ணிக்கை இலக்கை வைத்துக் கொண்டு ஏற்றும் கட்டுரைகள் பல வேளைகளில் பிழைகளுடன் வர வாய்ப்புள்ளன. தானியங்கிக் கட்டுரைகளிலாவது நாம் ஒருமுறை வார்த்து விட்டால் பிழைகளுக்கான வாய்ப்பு குறைவு. இங்கு இதுபோல மலியும் பிழைகளைத் திருத்துவது எப்படி? கூகுள் திட்ட நிலைப்பாடே இதற்கும் பொருந்தும். Inclusionism என்று சொல்லி அதை நாம் ஓரளவுக்கு மேல் அனுமதிக்கவில்லையே?

தவிர, புன்னியாமீன் கட்டுரை இலக்குக்காக குடும்பத்தாரையும் வேறு நபர்களையும் அமர்த்தி தனது கணக்கின்கீழ் கட்டுரைகளை ஏற்றுவது விக்கி விதிகளை மீறியது. முதலில் புதுப்பயனரின் ஊக்கம் கெட வேண்டாமே, பின்னர் தெரிவிக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் இப்போது அவர் சற்று அழுத்தமாகச் சொல்லும்போது நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. கீழே புன்னியாமீன் தெரிவித்த விளக்கத்தைப் பார்த்ததில் முன்னர் அடித்துள்ள வரியிலுள்ள என் புரிதல் தவறு என அறிகிறேன்.

கடைசியாக, சோடாபாட்டிலின் அலட்சியமான, கிண்டலான (nonchalant and sarcastic) குறிப்புகளைக் கண்டிக்கிறேன். ஒரு பயனரின் கருத்தில் ஏற்பில்லை என்றால் மேலே கனகு சிறீதரன் செய்தது போலக் கண்டனத்தைப் பதிவு செய்வது முறை. ஆனால் சிரிப்புதான் வருகிறது என்பது போன்ற நையாண்டியை நிறுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். ஏற்கனவே சில உரையாடல்களிலும் பார்த்துள்ளேன். இருப்பினும் உங்களைப் போன்ற சிறந்த பங்களிப்பாளர் மனக்கசப்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டுமென்று எண்ணியே பொறுத்தேன். -- சுந்தர் \பேச்சு 13:43, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

சுந்தர் nonchalance and sarcasm இல்லாமல் “கண்டிக்கலாம்” என்று சொல்கிறீர்கள். மனக்கசப்பு கொண்டிருந்தால் நான் கண்டித்திருப்பேன். எனக்கு இது கசப்பாக வெல்லாம் இல்லை. அதனால் அவர் சொல்வதை இன்னும் கண்டிக்க வில்லை (அதில் கண்டனம் செய்யும் அளவுக்கு பெருந்தவறு எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை). நான் அதைப் பார்த்து வெளிப்படையாக gentle mocking செய்கிறேன். உண்மையாகவே ”அந்த குறிப்பிட்ட ஒரு வாதத்தைக்” கண்டு எனக்கு சிரிப்பு தான் வருகிறது. i am mocking the argument and not the editor. இதில் எந்தத் தவறு இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை--சோடாபாட்டில்உரையாடுக 15:27, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
ஒரு வாதத்தை மறுப்பது வாதத்தை முன்வைத்தவரை மறுப்பதாக ஆகாது என்பது தான் criticise/refute the argument, not the author என்பது. கருத்தையோ பயனரையோ Mocking/நகையாடுவது தவறுதான். Saying "I am mocking an argument and not the editor" is same as saying "I am only mocking at the way he is limping not the handicapped person." மீண்டும் எனக்குச் சிரிப்பாகத்தான் வருகிறது என்று அலட்சியமாகத் தெரிவித்துள்ளீர்கள். இதை நீங்கள் கட்டாயம் நிறுத்திக் கொள்ள வேண்டும். -- சுந்தர் \பேச்சு 15:38, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
எனக்கு உடன்பாடில்லை. “வன்மையாகக் கண்டிப்பதை” விட “சிரிப்பு தான் வருகிறது” என்று சொல்வது எவ்வளவோ மேல் என்று கருதுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:42, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

தெலுங்கு விக்கியிலும், பிசுனுப்பிரியா விக்கியிலும் ஏற்பட்ட தேக்கம்,

சுந்தர், இதற்கும் பன்முகத்தன்மைக்கும் சம்மந்தம் கிடையாதென்பது என் கருத்து. பிசுனுப்பிரியாவில் முதலில் இருந்து ஆளே கிடையாது. ஒரிருவர் நடுவில் தானியங்கி ஓட்டினார்கள் பின்பு போய் விட்டார்கள். அதனால் அது அப்படியே நிற்கிறது. தெலுங்கிலும் அதே போலத்தான். அந்த தானியங்கி கட்டுரை உருவாக்கம் 2007 இல் முடிவடைந்து விட்டது. அதன் பின்னர் அவர்கள் வேறு எதுவும் செய்ய வில்லை. பயனர்களை ஈர்க்கப் புதிதாக எதுவும் முன்னெடுக்கவில்லை. அதனால் ஏற்படும் தேக்கம். ஜூன் 2007 இல் அவர்கள் ஒரே மாதம் செய்த அந்த பதிவேற்றத்துக்கு முன்னும் பின்னும் ஒரே எண்ணிக்கை பயனர்கள் தான் உள்ளனர். ஜூன் 2007 இல் அவர்கள் செய்ததற்கும் அதற்கு முன்பும் பின்பும் நடந்ததற்கும் எந்தவிதத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. அதைக் கண்டு நாமும் அஞ்சத் தேவையில்லை. தமிழ் விக்கியின் பலம் அதன் பன்முகத் தன்மை - பல்வேறு விசயங்களில் ஆர்வம் கொண்டிருப்பவர்கள் எழுதிவருவது. ஒருவர் தொடர்ச்சியாக ஒரே மாதிரிக் கட்டுரை ஏற்றினால், பிறரும் அவர் மாதிரியே செய்வர், பெரிய கட்டுரைகள் எழுதுவதை விட்டுவிடுவர் என்பது இங்கு நடக்காது. இதற்கு புன்னியாமீனின் துடுப்பாட்டக்கட்டுரைகளே சான்று. புன்னியாமீன் ஒரு வருடமாக எழுதி வருகிறார். அவரைப் போல வேறு ஒருவரும் இது போலச் செய்ய முயலவில்லையே?. இதற்குக் காரணம் நமது பயனர்களின் பன்முக விருப்பங்களே. இரண்டாவது சான்று - தமிழம் திட்ட இதழ்கள்; நட்கீரன் ஒரு 500-1000 கட்டுரைகள் ஏற்றினார் (மூன்று வரிக் குறுங்கட்டுரைகள்) அதனைக் கண்டும் யாரும் அதே போல செய்ய முன்வரவில்லையே. மூன்றாவது le diable என்னும் பயனர் 500 மொழிக்கட்டுரைகள் (இவையும் மூன்று வரிக்கட்டுரைகள்) ஏற்றினார். மேலும் ஹொங்கொங், சிங்கப்பூர் போக்குவரத்து பற்றியும் 100-200 கட்டுரைகள் முறையே அருண் மற்றும் ஜெனாகார்த்திக்கால் வெகு விரைவாக ஏற்றப்பட்டன. இவற்றால் எந்த ஊறும் விளையவில்லை. நமது சமூகத்தில் ஒரே மாதிரியான கட்டுரைகள் எழுதுதல் தெலுங்கு/பிசுனுப்பிரியா போல செய்து விடும் என்று அஞ்சுவது தேவையில்லை.
விக்கி வளர்ச்சிக்குத் தேவை புதிதாக வருபவர்களுக்கு உதவியும் ஊக்கமும். புதிய கட்டுரைகளுக்கு விக்கியாக்கமும், அதை உருவாக்குபவர்களுக்கு உடனடியாகத் தவறுகளையும் விதிகளையும் சுட்டிக்காட்டி உதவுவது. நன்கு எழுதத் தெரிந்தவர்களை அழைத்து வந்து எழுது ஊக்குவிப்பது, அவர்களுக்கு உதவவும் துணை நிற்கவும் ஆளிருக்கிறார்கள் என்ற உணர்வை அளிப்பது. அடுத்து வாசகர்களை எழுத்தாளர்களாக மாற்றுவது. இவற்றை நாம் செய்வதனால் தான் தமிழ் விக்கியில் பயனர் தேய்மானத்தை வென்றிருக்கிறோம். --சோடாபாட்டில்உரையாடுக 16:01, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
(edit-conflicted)சோடாபாட்டில், தெலுங்கு பிசுனுப்பிரியா விக்கிக்களைப் பற்றிய உங்கள் கூற்றை பெருமளவு ஏற்கிறேன். அங்கு பல்வகைமையில்லாமைதான் சிக்கல் எனக்கூற வரவில்லை. தானியங்கி அல்லது தானியங்கி போல இயங்கி உருவாக்கிய ஆயிரக்கணக்கான கட்டுரைகளால் கட்டுரை எண்ணிக்கை மட்டுமே வளர்ந்து, தவறான இலக்கை விக்கிச் சமூகத்தில் நிலைநிறுத்தியதைச் சொல்ல வந்தேன். மேலே நான் சொன்னது போல பல்வகைமையை வளர்க்க பல்வேறு துறைகளில் எழுதுவதை ஊக்குவித்தலே சிறந்தது, எந்த ஒரு துறையிலும் குறைவாகப் பதிய வேண்டியதில்லை. அதைப் பொருத்தவரை உங்கள் கருத்தே எனதும். ஆனால், ஏற்றும் கட்டுரையுடைய கரு குறிப்பிடத்தக்கதாகவும், வளர்த்தெடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும், குறிப்பிடுதன்மையை உணர்த்தும் வகையில் அதன் உள்ளடக்கம் தலைப்பைப் பற்றிய கலைக்களஞ்சியத்துக்கேற்ற தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும். அவ்வளவு தான் நான் வலியுறுத்துவது.
விக்கி வளர்ச்சிக்குத் தேவை என நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றுடன் முழுக்க உடன்படுகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:24, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

புன்னியாமீன், சோடாபாட்டில், கனக்ஸ், சுந்தர் - உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

//புன்னியாமீன் துடுப்பாட்டம் எழுதாவிட்டால் அதே அளவு வேறு துறையில் எழுதியிருப்பார் என்று எப்படி யோசிக்கிறீர்கள் என்று தெரியவில்லை.//

புன்னியாமீனின் பேச்சுப் பக்கத்திலேயே என் கருத்துக்களை முன்வைத்தேன். எவரேனும் புண்பட்டிருப்பின் பொறுத்தருள்க. ஆயினும் தமிழ் விக்கி அன்பர்கள் அனைவரும் திரண்டு எதிர்த்தாலும் என் கருத்துக்களில் மாற்றமில்லை.

புன்னியாமீனின் எழுத்துலக, நூலாக்க, சமூகப் பணிகளை அறிந்துள்ளேன் என்ற அளவிலேயே என் கருத்துக்களை முன்வைத்தேன். எழுத்தாளர் யார் எவர் விபரங்களைத் திரட்டி அவர் செய்த வெளியீடுகள் முதல் அகதிமுகாம் குழந்தைகளுக்கான அவரது செயற்றிட்டம் வரை அவரது சில செயற்பாடுகளில் அவரது திட்டமிடலையும் ஒழுங்கமைந்த விதத்திலான அவரது பணிகளையும் அவதானித்தவன் என்ற அளவிலேயே நான் அவ்வாறு யோசித்தேன். அவ்வளவே.

திறந்த அணுக்கத்தில் தனது நூல்களை வெளியிடத் தனது செலவிலேயே அனுப்பி வைப்பராகவே அவரை நான் அறிவேன். துடுப்பாட்டத்தைத் தவிர்த்து வேறு துறைகளில் எழுதாவிட்டாலும்கூட அந்த நேரத்தில் அவர் இன்னமும் நான்கு நூல்களை எழுதுவாராயின் அது எமது மொழிச்சூழலில் மிகவும் பயனுடையது என்றே நான் திடமாக நம்புகிறேன்.

பல்லாயிரம் யார் எவர் (Who's Who) நூல்களைக் கொண்ட ஆங்கில மொழியில் பத்தாயிரம் துடுப்பாட்டக்காரர்களின் விபரத்தைப் பத்தாயிரம் பேர் எழுதுவது பற்றி crowdsourcing என மகிழலாம். ஆனால் உருப்படியாக ஒரிரு முயற்சிகளே நடைபெறும் சூழலில் பங்களிக்கும் ஒருவரது உழைப்பு வீணாவது பொருத்தமல்ல என்பதே எனது கருத்து. உள்ளடக்கம் என்ன என்பதல்ல; எழுதுபவர் யார் என்பதே என் கருத்துக்களின் பின்னணி.

//கலைக்களஞ்சியம் என்பதற்கு தகவல் துறையின் அடிப்படையில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. ... இணைய, கட்டற்ற திட்டத்தில் காலக்கெடுவோ, இவ்வளவு தான் இருக்க முடியுமென்ற அளவுச் சிக்கலோ கிடையாது.... பன்முகத்தன்மை வேண்டுமென்றால் நாம் தான் பல தலைப்புகளிலும் எழுத வேண்டும். இத்தலைப்பிற்கு இவ்வளவு கட்டுரை என்று quota வைத்து எழுதுவது தன்னார்வலத் திட்டங்களில் என்றும் வெற்றி பெறாது //

பொருளாதார வளம்மிக்க தன்னிறைவடைந்த மொழிச்சூழல்களின் நிலைப்பாடுகளை இறக்குமதி செய்து அவற்றில் எமது சூழலுக்கேற்ப மாற்றங்களைச் செய்யாமல் பயன்படுத்துவது எம்மைத் தொடர்ந்தும் அறிவு வரட்சியிலேயே வைத்திருக்கும்.

கலைக்களஞ்சியம் ஒன்று தன்னளவில் முழுமையானதாக இருக்க வேண்டும். [7], [8], [9] போன்ற பட்டியல்களின் தேவை அவ்வகையினதே என நம்புகிறேன்.

//This list is intended as a guideline for those projects so that they will contain a minimum amount of basic, useful information. This way, people will be encouraged to use these projects and help in their growth. The articles should contain at least basic information on the topics they describe, thus providing a starting point for growth besides being a useful reference for the readers.//

என்கிற மேல்விக்கிப் பக்கத்தின் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்.

போதிய உள்ளடக்கம் (critical mass) என்பதனைச் சென்றடைந்தால் மட்டுமே கலைக்களஞ்சியமொன்றின் பயன்பாட்டினைப் பெற்றுக் கொள்ளலாம்.

//அமைதியாக இருக்கும் தமிழ் விக்கிப்பீடியர்களிடையே குழப்பத்தை உண்டு பண்ணும் நோக்கமே அவரது எழுத்துகளில் புலப்படுகின்றன//

தமிழ் விக்கிசெய்திகளின் இருப்பினால் தமிழ் விக்கிப்பீடியா நாள்தோறும் இழப்பினைச் சந்திக்கும் என நான் முன்வைத்த வாததினையே புன்னியாமீன் விடயத்திலும் முன்வைத்தேன். வேறு உள்நோக்கமெல்லாம் கிடையாது. தமிழ் விக்கிப்பீடியரின் அமைதி, ஒற்றுமையினை விட தமிழில் இணையத்தில் போதிய உள்ளடக்கம் முக்கியமானதாக உள்ளது எனக்கு. மன்னிக்க. கோபி 16:08, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

தமிழ் விக்கிசெய்திகளின் என்ன இழப்பு உள்ளது? தொகு

//தமிழ் விக்கிசெய்திகளின் இருப்பினால் தமிழ் விக்கிப்பீடியா நாள்தோறும் இழப்பினைச் சந்திக்கும் என நான் முன்வைத்த வாததினையே புன்னியாமீன் விடயத்திலும் முன்வைத்தேன்.//

கருத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை கோபி

தமிழ் விக்கிசெய்திகளின் இருப்பினால் தமிழ் விக்கிப்பீடியா நாள்தோறும் இழப்பினைச் சந்திக்கும் என நான் முன்வைத்த வாததினையே புன்னியாமீன் விடயத்திலும் முன்வைத்தேன். அப்படியென்றால்..... புன்னியாமீனின் இருப்பினால் தமிழ் விக்கிப்பீடியா நாள்தோறும் இழப்பினைச் சந்திக்கிறது எனக் கருதுகின்றீர்களா?

தமிழ் விக்கிசெய்திகளின் அண்மைக்காலமாக நானும் எழுதிவருகின்றேன். விக்கிப்பீடியாவிற்கு நான் வந்து 14 மாதங்களாகின்றன. தமிழ் விக்கிசெய்திகளில் விக்கிப்பீடியா இழப்பிற்கு அப்படி என்ன நடக்கின்றது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு தனிமனித முயற்சியாக மிகவும் பொறுப்புடனும், தியாகத்துடனும் கனக்ஸ் நடந்து வருகின்றார். நாள் தவறினாலும் கனக்ஸின் செய்தி தவறாது என்று தான் விக்கி செய்திகள் உள்ளன. இந்த நிலையில் தமிழ் விக்கிசெய்திகளின் இருப்பினால் தமிழ் விக்கிப்பீடியா நாள்தோறும் இழப்பினைச் சந்திக்கும் என்ற விடயம் குறித்தும் தமிழ் விக்கிசெய்திகளின் இருப்பினால் தமிழ் விக்கிப்பீடியா நாள்தோறும் இழப்பினைச் சந்திக்கும் என நான் முன்வைத்த வாததினையே புன்னியாமீன் விடயத்திலும் முன்வைத்தேன் என்பதற்கான விளக்கத்தையும் அறிய விரும்புகின்றேன். --P.M.Puniyameen 17:35, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

தமிழ்ச் சூழலில் உள்ள விக்கி ஆர்வலர்கள் குறைவே. விக்கிப்பீடியா, விக்சனரி போன்ற ஓரிரு திட்டங்கள் மட்டும் இருந்தால் இவற்றில் கவனம் செலுத்தி வளர்க்கலாம். அதுவே, விக்கிசெய்திகள், விக்கி மேற்கோள் என்று திட்டங்களின் எண்ணிக்கை கூடும் போது, ஒரே பயனரே பல்வேறு திட்டங்களிலும் இயங்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் ஒரு திட்டத்துக்குக் கிடைக்கக்கூடிய மொத்த உழைப்பு குறைகிறது. விக்கி செய்திகள் இல்லாவிட்டால் அங்கு செலுத்தும் உழைப்பயும் நேரத்தையும் இங்கு செலவிட்டு விக்கிப்பீடியாவை இன்னும்வளர்க்க முடியும். திட்டங்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே போவதால் ஒவ்வொரு திட்டத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி குறைகிறது என்று நோக்கில் கோபி தனது கருத்தை முன்பொரு உரையாடலில் சொல்லி இருந்தார். அதே போல், துடுப்பாட்டக்காரர்களைப் பற்றிய கட்டுரைகள் எழுதும் நேரத்தில் நீங்கள் வேறு கட்டுரைகளை எழுதி இருந்தால் விக்கிக்கு இன்னும் கூடுதல் பயனாக இருந்திருக்குமே என்பதே கோபி சொல்ல வருவது. துடுப்பாட்டாக்காரர்கள் பற்றி நீங்கள் எழுதுவது உங்கள் சொந்த ஆர்வத்துக்கும் விக்கிக் கொள்கைக்கும் உடன்பட்டதே. அதே வேளை, ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமூகத்துக்கும் கூடுதல் பயன் அளிக்கவல்ல பங்களிப்பை உங்களால் தர இயலும், தர வேண்டும் என்பதே கோபியின் ஆதங்கம்--இரவி 18:17, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

ஆதாரம் தேவை தொகு

//புன்னியாமீன் கட்டுரை இலக்குக்காக குடும்பத்தாரையும் வேறு நபர்களையும் அமர்த்தி தனது கணக்கின்கீழ் கட்டுரைகளை ஏற்றுவது விக்கி விதிகளை மீறியது.// - சுந்தர்

உதவி என்று கூறும் போது கணனியாக்க உதவியையே நான் பெறுகின்றேன். அவர்களுக்கு சம்பளம் வழங்குவது நான். நான் விக்கியிடம் கேட்பதில்லையே. கணனியாக்க உதவியைப் பெற முடியாது எனில்... விக்கிக் கொள்கை ஆதாரத்தைத் தரவும்--P.M.Puniyameen 14:04, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

கணனியாக்கப் பணிகளாக அவர்கள் செய்பவற்றைச் சொல்லுங்கள், புன்னியாமீன். நான் விரைவில் கொள்கைப்பக்க இணைப்பைத் தருகிறேன். -- சுந்தர் \பேச்சு 14:08, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
கணனியாக்க உதவி என்பது டைப்பிங் உதவி. விரைவில் கொள்கைப்பக்க இணைப்பைத் தாருங்கள். விக்கியில் இருப்பதையும், போவதையும் நான் தீர்மானிக்கின்றேன். அத்துடன் நான் விக்கிபரப்புதலை செய்த ஊடகங்களிலும் தெரிவித்துவிடுகின்றேன்--P.M.Puniyameen 14:17, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
நீங்கள் எழுதித்தந்து அவர்கள் தட்டச்சு செய்கிறார்களா அல்லது உங்கள் வழிகாட்டில்பேரில் ஆங்கில விக்கிக்கட்டுரைகளை மொழிபெயர்க்கிறார்களா, புன்னியாமீன்? -- சுந்தர் \பேச்சு 14:21, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
என் கையிலுள்ள ஓர் உபாதை காரணமாக அதிக நேரம் எழுதுவது கடினம். நான் வாயால் கூறுவதை அவர்கள் தட்டச்சு செய்கிறார்கள். மேலும் யாதாவது தேவையா?--P.M.Puniyameen 14:30, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
மிகவும் வருந்துகிறேன். முன்னர் எங்கோ உங்கள் கூற்றைப் படித்ததில் நீங்கள் உங்கள் குடும்பத்தினரையும் மற்றவர்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தியதாகச் சொன்னதாக நினைவு. அதனால் அப்படிச் சொல்லிவிட்டேன். மன்னிக்கவும். நான் குறிப்பிட்ட கொள்கைப்பக்கக்கம் en:WP:NOSHARING. -- சுந்தர் \பேச்சு 14:38, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

நன்றி சுந்தர்

குறிப்பிட்ட கொள்கைப்பக்கத்தைப் படித்தேன் . என் செயற்பாட்டுக்கும் அக்கருத்துக்கும் தொடர்பு இருப்பதாக என்னால் உணரமுடியவில்லை. என்னால் ஏற்கெனவே தெரிவித்த கருத்தை மிளவும் தங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

ஏப்ரல் 20. 2011 இலங்கை நேரப்படி அதிகாலை 5.40 முதல், நள்ளிரவு 1.30 மணிவரை சுமார் 20 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக 300 கட்டுரைகளை தரவேற்றம் செய்த நேரத்தில் நான் எதிர்பாராத விதமாக உலகலாவிய ரீதியில் பல பயனர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டும், மின்னஞ்சல் மூலமும் வாழ்த்துக்களைத் தெரிவித்து மனதைரியத்தைத் தந்து ஊக்கப்படுத்தினர். அதே போல ஆலமரத்தடி மற்றும் எனது பேச்சுப் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அனைவருக்கும் இவ்விடத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். "வாழ்த்துக்களை எதிர்பார்த்து என் இலக்குப் பயணத்தை ஆரம்பிக்கவில்லை'. இருப்பினும் தொடர்ச்சியாக ஒரே மூச்சில் வேலை செய்ததினால் உடல், மன சோர்வு ஏற்பட்ட நிலையில் இந்த வாழ்த்துக்கள் ஒரு புதுத் தெம்பினைத் தந்தன. 200 பதிவுகளுடன் நிறுத்திக் கொள்ள இருந்த நேரத்தில் பயனர் சிவகுமார் தொலைப்பேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு இயலுமான வரை தொடரும் படி தைரியத்தைத் தந்தார். அவரின் அன்புக் கட்டளை இல்லாதிருப்பின் 200உடன் நிறுத்தியிருப்பேன். அவர் அலுவலக விடயமாக ஒரு கூட்டத்தில் இருந்த போதும் கூட அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு எண்ணிக்கையை கேட்டுக்கொண்டேயிருந்தார். எனது இந்த இலக்குப் பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதொன்றல்ல. 19ம் திகதி காலை விக்கிப்பீடியாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எனது அலுவலக கணனி இயக்குனர்கள் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டால் என்ன என என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அதன் பின்பே என் சிந்தனையில் இத்திட்டம் உதித்தது. பின்பு சோடா கெனக்ஸ் சிவகுமார் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தேன். சிவகுமார் அதை விக்கியிலும் அறிவித்து விட்டார். அதன் பின்பே அனைத்துத் திட்டங்களையும் தீட்டி 20ம் திகதி இலக்குப் பயணத்திற்கு ஆயத்தமானேன். விக்கி செய்தி வந்தபின்பே கட்டுரைகளை டைப் பண்ண ஆரம்பித்தோம். ஏனவே 300கட்டுரைகளும் 19ம் திகதி மாலையிலும் 20ம் திகதி காலை முதல் மாலை வரையிலும் டைப் பண்ணப்பட்டவையே. இதற்காக 3 கனணிகளை பயன்படுத்தினோம். எனது அலுவலகத்தில் பணிபுரியும் மௌலவி ரமீஸ்தீன் அவர்களும், திருமதி இல்முன் நிஸா ஹிலால் அவர்களும் மற்றும் என் மகன் சஜீர் அகமது, மகள் பாத்திமா சம்ஹா ஆகியோருடன் இணைந்து என் மனைவி மஸீதா புன்னியாமீனும் இப்பணிக்கு முழுமையான பங்களிப்பை நல்கினர். இவ்வாறே எமது கூட்டு முயற்சி நடைபெற்றது. அனைத்தும் என்னால் நேரடியாக வழிகாட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டதுடன் 300 கட்டுரைகளும் என்னாலே தரவேற்றம் செய்யப்பட்டன. ஒத்துழைத்த ஆதரவு தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். விசேடமாக கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்படும் போது உடனுக்குடன் திருத்தங்கள் செய்த சோடாவுக்கும் கெனக்சுக்கும் எனது விசேட நன்றிகள். --P.M.Puniyameen 12:22, 21 ஏப்ரல் 2011 (UTC)
எனது அலுவலக பணிகளின் ஓய்வு நேரத்தில் கணினியில் நான் ஆரம்பிக்கவுள்ள கட்டுரைகளை தமிழில் டைப் செய்து தரும் எனது அலுவலகத்தில் பணிபுரியும் மௌலவி ரமீஸ்தீன் அவர்களுக்கும், திருமதி இல்முன் நிஸா ஹிலால் அவர்களுக்கும் எனது தனிப்பட்ட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். --P.M.Puniyameen 13:24, 5 மே 2011 (UTC)
எனது தொழில் ரீதியாக ஆண்டுதோறும் சூன், சூலை மாதங்கள் மிகவும் வேலைப்பளு அதிகரித்த மாதங்களாகும். இதனை உணர்ந்து ஏற்கனவே என்னால் வழங்கப்பட்ட அறிவுரைகள், ஆலோசனைகளுக் கிணங்க சுமார் 250க்கும் மேற்பட்ட கட்டுரைகளை தமிழில் தட்டச்சு செய்து முன்கூட்டியே ஆயத்த நிலையில் வைத்திருக்கும் எனது அலுவலக தமிழ் கணினி எழுத்துக் கோர்ப்பாளர்களான மௌலவி எஸ். எம். ரமீஸ்தீன் மற்றும் திருமதி இல்முன் நிசா ஹிலால் ஆகியோருக்கும் என் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இவர்களது ஓய்வுநேரத்தைப் பயன்படுத்தி இவர்கள் செய்த இச்செயற்பாட்டினால் நெருக்கடிமிக்க இவ்விரு மாதங்களிலும் தடங்கலின்றி கட்டுரைகளை பதிவேற்றம் செய்ய முடியுமாக இருக்குமென கருதுகின்றேன். இருவராலும் தட்டச்சு செய்யப்பட்டுள்ள கட்டுரைகளை விக்கி நடைக்கேற்ப மாற்றி அதை எடிட் பண்ணி பதிவேற்றம் செய்வதே இவ்விரு மாதங்களிலும் எனது பணியாக இருக்கும். --P.M.Puniyameen 06:49, 4 சூன் 2011 (UTC)

இன்று வரை பதிவேற்றப்பட்ட 8727 கட்டுரைகளும் என்னால் பதிவேற்றப்பட்டவையே. இது உறுதி.--P.M.Puniyameen 16:00, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

புன்னியாமீன், உங்கள் அறிவுரைகள் ஆலோசனைகளுக்கிணங்க எழுதுவது ஒன்று. நீங்கள் சொல்லச்சொல்ல தட்டுவது வேறு. நீங்கள் மேலே சொல்லியிருப்பதைப் பார்க்கையில் இனிமேல் வேறு ஒருவர் உரையமைத்துத் தட்டி ஏற்றியுள்ள கட்டுரைகளை அவரவர் கணக்கிலேயே ஏற்றுமாறு கேட்டுக் கொள்ளுங்கள். அதுவே சரியானதாக இருக்கும். (ஏனெனில் காப்புரிமை அந்த மாதிரி கட்டுரைகளைப் பொருத்தவரை அவர்களையே சாரும்.) மேலும் அவர்களும் இங்கு பங்களிப்பாளர்களாக வாய்ப்பிருக்கும். ஏற்கனவே முடிந்தது பரவாயில்லை, ஆனால் இனி அவ்வாறு அவர்கள் அமைத்த உரைகளை உங்கள் கணக்கில் பதிவேற்ற வேண்டாம். -- சுந்தர் \பேச்சு 19:19, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
சுந்தரின் கருத்தை வழிமொழிகிறேன். நீங்கள் உங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதால் அவர்கள் உருவாக்கும் உள்ளடக்கத்தில் காப்புரிமைச் சிக்கல் இல்லை என்ற வாதம் வரலாம். இருந்தாலும், காப்புரிமை என்பதைத் தாண்டி இதில் விக்கிப் பயனர்களின் சமநிலை பாதிக்கப்படுகிறது என்பதாகவே கருதுகிறேன். விக்கியில் உள்ள ஒவ்வொருவரும் அவர் எத்தகைய பணி நெருக்கடி, பொறுப்புகளில் இருந்தாலும் நேரடியான உழைப்பின் மூலமாகவே செயல்படுகின்றனர். விக்கியின் பல கொள்கைகளில் (நிருவாகி ஆதல், வாக்களித்தல் முதலியன) குறைந்தது இத்தகைய பங்களிப்புகளை (பயனராகச் சேர்ந்த நாள், தொகுப்புகள் எண்ணிக்கை முதலியன ) நல்கியவர்கள் மட்டுமே தகுதி பெறலாம் என்ற வரையறைகள் உள்ளன. எனவே, பலரது கூட்டு உழைப்பு உள்ள ஒரு தனிப்பட்ட பயனர் கணக்கை இந்த அடிப்படையில் அணுகுவது சிக்கல் ஆகும். உங்கள் உடல் நலத்தின் காரணமாக சொல்லச் சொல்லத் தட்டச்சுவது வேறு. உங்கள் ஆலோசனைக்கு ஏற்ப முன் கூட்டியே எழுதியவற்றை விக்கியாக்கிப் பதிப்பிப்பது வேறு. அவர்களே அப்படியே விக்கியில் ஏற்றினால் கூட வேறு பலரும் விக்கியாக்கலாம். இந்த விசயத்தை இரண்டு விதங்களில் அணுகலாம்: 1. அவர்களை நேரடியாக விக்கியில் பதிவேற்றச் சொல்லலாம். இதில் உங்களுக்கும் வேலை பளு குறையும். நம்முடைய பயனர் சமூகமும் வலுப்பெறும். ஆனால், அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தில் ஓய்வு நேரத்தில் தாங்கள் விரும்பும் கட்டுரைகளை அளிக்காமல், தங்களால் பணிக்கப்பட்ட கட்டுரைகளையே முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ பதிவேற்றுகிறார்கள் என்றால் இது paid editing என்பதன் கீழ் வரும். இது அவர்களின் பயனர் கணக்குப் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். 2. இல்லை, ஊழியம் அளிப்பதன் காரணமாக நீங்கள் இந்த உள்ளடக்கத்துக்கு உரிமையானவர் என்று கருதினால், இவற்றைத் தனிப்பயனர் கணக்கின் கீழ் பதிவேற்றுங்கள். இக்கணக்குக்கு உங்கள் நிறுவனப் பெயரோ puniyameenandco என்பது போலவோ ஏதேனும் ஒரு அடையாளம் தரலாம். இந்தப் பயனர் கணக்கில் நீங்கள் மேற்கண்டவாறு கட்டுரைகளை உருவாக்கும் வழிமுறையைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். மற்றபடி, நீங்கள் சொல்லச் சொல்ல நேரடியாகத் தட்டச்சு செய்யப்படும் கட்டுரைகளை உங்களின் இந்தக் கணக்கின் மூலமாகவே பதிவேற்றுங்கள். நன்றி--இரவி 20:19, 26 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]


சுந்தர், இரவி கட்டுரைகள் தட்டச்சு செய்வது தொடர்பாக என்னால் கூறப்பட்ட கருத்தை தவறாகப் புரிந்துகொண்டீர்கள் என எண்ணத் தோன்றுகின்றது. அதற்குரிய விளக்கத்தை தரவேண்டியது என் பொறுப்பு.

என் கையில் சுமார் நான்காண்டுகளாக ஏற்பட்டுள்ள உபாதையினால் என்னால் தொடர்ச்சியாக நீண்ட நேரம் எழுத முடியாது. எனவே விக்கியில் மாத்திரமல்ல இலங்கை வார தமிழ் பத்திரிகைகளில் நான் தொடர்ச்சியாக எழுதிவரும் பத்தியெழுத்துகளுக்கும் என் தட்டெழுத்தார்களின் உதவியையே நாடிநிற்கின்றேன். அவர்கள் நான் கூறுவதை தட்டச்சுப் பண்ணித் தருவார்கள். அல்லது நான் தயாரித்து வழங்குபவற்றை அவர்கள் தட்டச்சு செய்வார்கள். இக்கருத்தைக்கூட தட்டச்சு செய்தவர்களும் அவர்களே.

எனது தட்டெழுத்தார்கள் என்னால் தயாரித்து வழங்கப்பட்ட துடுப்பாட்ட வீரர்கள் தொடர்பான படிவத்திற்கமைய என்னால் வழங்கப்படும் தகவல்களை மாத்திரமே தட்டச்சு செய்து தருவார்கள். என்னிடம் தானியங்கி வசதியில்லை. எனவே குறிப்பாக துடுப்பாட்டம் தொடர்பாக ஐந்து படிவங்களை நான் தயாரித்து வைத்துள்ளேன். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள துடுப்பாட்ட வீரர்கள் தொடர்பாக விபரங்களைப் பெற்று நான் கூறும்படி அதில் அவர்கள் தட்டச்சு செய்வார்கள். எனவே எனது முழுமையான சிந்தனைக்கமைய எனது கருத்து அங்கு கணினிப்படுத்தப்படுகின்றதே தவிர அவர்களுடைய கருத்துக்களோ அல்லது சுய முயற்சியோ அல்ல. இதைப் புரிந்து கொள்வீர்கள் எனக் கருதுகின்றேன்.--P.M.Puniyameen 06:06, 27 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

கிரிக்கெட் வீரர்கள் பற்றி 4000+ கட்டுரைகள் எழுதி உள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.1 . இவற்றை நீங்களே நேரடியாகத் தட்டச்சுவதற்கோ நீங்கள் சொல்லச் சொல்ல மற்றவர்கள் தட்டச்சுவதற்கோ ஆகும் நேரத்தையும் உழைப்பையும் சமமாகவே கருதுவோம். இதற்கு ஆகும் நேரம் எவ்வளவு? இதில் உங்கள் உழைப்பு எவ்வளவு? 2. நீங்கள் தந்துள்ள வார்ப்புருக்களுக்கு ஏற்ப தரவுத் தளத்தில் இருந்து பெறப்படும் தகவலை ஒருவரோ ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ தட்டச்சுவதற்கான நேரம் / உழைப்பு எவ்வளவு? இந்த உழைப்பும் நேரமும் யாருடையது? இரண்டு அணுகுமுறைகளுக்கும் வேறுபாடு உண்டா இல்லையா? --இரவி 06:16, 27 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]


ரவி, சுந்தர், ஆயிரத்துக்கும் அதிகமான கூகுள் கட்டுரைகளை ஒரே கணக்கில் பலர் தரவேற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டதாக அறிகிறேன். அப்போது ஏன் இப்பிரச்சினை எழுப்பப்படவில்லை?--Kanags \உரையாடுக 02:32, 27 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
சிறீதரன், ஊதியத்துக்கு ஆட்கள் வைத்துச் செய்யலாமா, எப்படிச் செய்வது சிறந்தது என்பதில் பலருக்கும் மாற்றுக் கருத்து இருந்தாலும், இப்போதும் நான் ஊதியத்துக்கு ஆட்கள் வைத்து கட்டுரைகள் எழுதுகிறார்கள் என்ற அடிப்படையில் எதிர்க்கவில்லை. ஆனால், இவ்வாறு உருவாக்கப்படும் கட்டுரைகள் தனியொரு பயனரின் சொந்தக் கணக்கில் (personal account where he contributes in his individual capacity) ஏற்றப்படுவது தவறு. இக்கட்டுரைகளைத் தனியொரு பயனரின் சொந்த அடையாளம் மட்டும் இல்லாத இன்னொருக் கணக்கில் இருந்து ஏற்றலாம். அதில் கட்டுரைகள் உருவாக்கும் முறை பற்றி குறிப்பிட வேண்டும். பலரின் உழைப்பு அதில் இருந்தாலும், அதைப் பதிவேற்றுபவர் கட்டுரைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். கூகுள் திட்டத்தைப் பொறுத்த வரை முதல் சில மாதங்களுக்கு என்ன நடக்கிறது என்றே அறிந்து கொள்ள முடியவில்லை. கூகுள் தான் இதைச் செய்கிறது என்பதை உணர்ந்த பிறகு, ஒரு பயனர் கணக்கை ஒருவர் தான் பயன்படுத்த வேண்டும் என்பது பல முறை வலியுறுத்தப்பட்டது. தவிரவும், கூகுள் தனது அத்தனைக் கட்டுரைகளையும் ஒரே ஒரு தனிநபர் பயனர் கணக்கின் கீழ் ஏற்றவில்லை. அனைத்துக் கணக்குகளிலும் கூகுள் மொழிபெயர்ப்பாளர் வார்ப்புரு இடப்பட்டிருந்ததால் அவர்களின் பின்புலம் குறித்து தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்தது. --இரவி 05:26, 27 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
சில விளக்கங்கள்.
 1. சம்பளப் பணி வழியாகக் கட்டுரையாக்குவதை தலையான சிக்கலாக இங்கு நான் கூறவில்லை.
 2. ஆனால், ஊதியத்துக்காகத் தொகுத்தலில் பல சிக்கல்கள் உள்ளதை பல விக்கிகளிலும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 3. கூகுள் திட்டம் தொடர்பாக திட்ட அலுவலர் சகசீத்து சிங்குடன் நடந்த முதல் உரையாடலின் போதே (தமிழ் விக்கிக்காக அல்ல, பொதுவான விக்கியர் சந்திப்பில்) அதைப் பற்றி பலரும் மறுப்பு தெரிவித்தனர். நான் நடுநிலையில் இருந்தேன். இருந்தாலும் எனக்கும் இவ்விசயத்தில் ஐயங்கள் உண்டு.
 4. என்னுடைய முக்கிய கவலை en:WP:NOSHARING பற்றியதே. உடன் பிறந்தவரானாலும் நண்பரானாலும் கூட மற்றவரது ஆக்கத்தை வேறொரு கணக்கில் பதிவேற்றுவது முறையல்ல. ஒருபுறம் ஆக்குனரின் அளிப்புரிமைமீறலும் மறுபுறம் பொறுப்பு மாற்றமும் ஏற்படும்.
 5. இந்த அடிப்படையிலேயே கூகுள் திட்டத்தின்போது தனிக்கணக்குகளின் வழியாகத்தான் செய்ய வேண்டும் என பல பயனர்களும் வலியுறுத்தினோம். திட்டத்தின் தொடர்பாளராக வெவ்வேறு நேரங்களில் நான், இரவி, சோடாபாட்டில் ஆகியோர் இருந்த போதும் அவ்வாறே தெரிவிக்கப்பட்டது.
வெறும் தட்டச்சுப்பணி மட்டும் தான் என நினைத்து நான் புன்னியாமீனிடம் வருந்தி மன்னிப்பும் கேட்டிருந்ததையும் பாருங்கள். அவ்வாறு இருந்தால் பரவாயில்லை. எப்படி கட்டுரை எழுத வேண்டும் எனச் சொல்லி மற்றவர்களை வைத்து ஆக்குவதை ஏற்க முடியாது. அவரது பழைய பங்களிப்புக்களை விட்டு விடலாம், இனிமேல் வேண்டாம் என்றே சொல்கிறேன். -- சுந்தர் \பேச்சு 09:56, 27 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
இரண்டு சிக்கல்கள். ஊதியத்துக்கு கட்டுரை உருவாக்குவது. ஒரே கணக்கில் பலர் பங்களிப்பது. முதலாவது தொடர்பாக கொள்கை நிலைப்பாடு தமிழ் விக்கியில் இன்னும் இல்லை. இரண்டாவது விக்கி கொள்கைகளுக்குப் புறம்பானது. --Natkeeran 16:26, 27 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]
I share the above concern of Natkeeran. I would assume your edits hence forth are all done by only you(with typing help overseen by you if required) and request you to respect the good faith. (Reply to this is not solicitated) ஸ்ரீகாந்த் 07:02, 28 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

முடிவான சில கருத்துகள் தொகு

முதற்கண் இவ்வுரையாடல்களில் பங்கேற்ற சுந்தர், இரவி, கோபி ஆகிய பயனர்களுக்கு என் நன்றிகள்.

நடைபெற்றுவரும் வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்தும் நீடிக்குமிடத்து முடிவுகள் காணப்படமாட்டாது. மனக்கிலேசங்களே உருவாகும். இதனை நான் விரும்பவில்லை. எனவே இவ்வுரையாடல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனும் நோக்கில் முடிவான சில கருத்துகளை மனந்திறந்து முன்வைக்க விரும்புகின்றேன்.

தமிழ்விக்கிப்பீடியாவில் இதுகாலவரை வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுவதை நான் இயலுமானவரை தவிர்த்து வந்துள்ளேன். அதேநேரம், எனது கட்டுரைகள் தொடர்பாக நியாயபூர்வமான எந்தத் திருத்தத்தையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு கூறப்பட்ட அறிவுரைகளை நிறைவேற்றியே வந்துள்ளேன். இதனை என் பேச்சுப் பக்கத்தை பார்ப்பதினூடாக தங்களால் உணர்ந்துகொள்ள முடியும். தற்போதைய பிரச்சினைக்கு மூல காரணமாக அமைந்தது பாடசாலைகள் பற்றி நான் எழுதிய கட்டுரைகளில் கனெக்ஸ் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துடன் சம்பந்தப்பட்டதாகும். கனெக்ஸ் என்னோடு வாதிடாமல் நியாயபூர்வமான முறையில் நியாயபூர்வமான திருத்தங்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்டியிருந்தார். அத்திருத்தங்களை உடனுக்குடன் செய்து குறித்த விடயம் தொடர்பாக புரிந்துணர்வுடனே நாம் நடந்துவந்தோம். இது ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றல். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கில்லாமலில்லை. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக தமிழ் இலக்கியப் பரப்பில் தடம் பதித்துள்ள என்னால் இது நன்கு அனுபவப்பட்டது. நியாயபூர்வமான விமர்சனம் என்பது வேறு. விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக விமர்சிப்பது வேறு.

எனது எழுத்தும் பொதுப்பணிகளும் சமூக அந்தஸ்தும் வேறு. அதனை இவ்விடத்தில் சம்பந்தப்படுத்திக் கொள்வதை நான் விரும்பவில்லை. விக்கிப்பீடியாவில் எழுதுவதென்பது ஒவ்வொரு பயனரினதும் சுய விருப்பத்தைப் பொறுத்தே. இதைத் தான் எழுத வேண்டும். இதை எழுதக் கூடாது என்று கட்டளை விதிக்க யாருக்கும் உரிமையில்லை என எண்ணுகின்றேன். இந்த அடிப்படையில் நான் எழுதும் துடுப்பாட்டக் கட்டுரைகளை மாத்திரம் நீங்கள் நோக்கக்கூடாது. ஏனைய கட்டுரைகள் பற்றியும் நோக்கலாம். விக்கி செய்திகளையும் நோக்கலாம். இவை எந்தக் கட்டளைகளுமின்றி என்னால் சுயமாக எழுதப்பட்டவைகளே. இவை விக்கிப்பீடியாவில் பதவிகளை எதிர்பார்த்தோ அல்லது பணத்தை எதிர்பார்த்தோ அல்ல.

வெளிப்படையாகக் குறிப்பிடுவதாயின் ஏற்கனவே கோபியின் கருத்துக்கு நான் குறிப்பிட்டபடி துடுப்பாட்டம் என்பது நான் மிகவும் விரும்பும் ஒரு துறை. எனவே எனது பூரண விருப்பத்திற்கிணங்கவே அதை நான் எழுதி வருகின்றேன். அதேநேரம் விக்கிப்பீடியாவில் துடுப்பாட்ட வீரர்கள் பற்றிய கட்டுரைகளை எழுதக்கூடாதென்று எந்தவொரு விதிமுறையும் இல்லை. ஆங்கில விக்கிப்பீடியாவில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட துடுப்பாட்டக் கட்டுரைகள் உள்ளன. அதேநேரம், இந்தியா உட்பட ஏனைய மொழிகளில் வெளிவரும் விக்கிகளிலும் இத்தகைய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. எனவே துடுப்பாட்டக் கட்டுரைகள் விக்கியில் இடம்பெறக் கூடாதென்றால் ஏனைய விக்கிகளிலும் எழுதப்படாதிருக்க வேண்டும். நாங்கள் எதையெடுத்தாலும் ஆங்கில விக்கியுடனே ஒப்புநோக்குகின்றோம். ஆங்கில விக்கியில் உள்ள ஒன்றை இங்கு எழுதுவதில் எத்தகைய தவறுமில்லை என்பது தெரியாததல்ல. தயவுசெய்து அவரவர் விருப்பத்திற்குரியவற்றை சுயமாக எழுத விடுங்கள்.

மேற்குறிப்பிட்ட வாதப்பிரதிவாதங்களை முன்னெடுக்கக் காரணமாக இருந்த விக்கிப்பயனர்கள் அதிகார நிர்வாக தரத்திலுள்ளவர்கள். விக்கிவிதிகளுக்கு புறம்பாக ஒரு கட்டுரை இடம்பெறுமாயின் அவற்றை நீக்கும் அதிகாரம் நிர்வாக தரத்திலுள்ளவர்களுக்கு உள்ளது. இவ்வாறு சில கட்டுரைகள் பதிவேற்றப்பட்டவுடன் நீக்கப்படுவதை நாம் தினந்தோறும் காண்கின்றோம். அதேபோல எனது கட்டுரைகளும் தரமற்றவை. விக்கிப்பீடியாக் கொள்கையை மீறியவை எனக் கருதினால் உடனுக்குடன் நீக்கிவிடுங்களேன். மாறாக இதை வைத்துக் கொண்டு ஏன் பிரச்சினைப் பெரிதுபடுத்த வேண்டும்.

இன்னுமொரு விடயத்தை நான் கூறியே ஆக வேண்டும். இது ஏனையவர்களின் அனுதாபத்தைப் பெற்றுக் கொள்வதற்கல்ல. நான் பல ஆண்டுகளாக பல்வேறுபட்ட உபாதைகளுக்கு உட்பட்டவனாக இருக்கின்றேன். தற்போது கூட வைத்தியரிடம் சென்று வந்த பின்பே எழுதுகின்றேன். நாளை என்பது எனக்கு நம்பிக்கையற்றது. எனவே எனக்குத் தெரிந்தவற்றையும் என் விருப்பத்திற் குரியவற்றையும் தமிழ்விக்கிப்பீடியாவில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைத்தது சுயமாகவேயன்றி யாருடைய வற்புறுத்தலுக்கல்ல. இவ்வடிப்படையில் விக்கி நெறிமுறைகளை மீறாத வகையில் என் சுய விருப்பத்திற்கமைய எழுதுவதில் தடைகள் வருவதை நான் விரும்பவில்லை.

எனவே சுற்றிவளைக்காமல் கூறுவதாயின் துடுப்பாட்ட வீரர்கள் பற்றி தொடர்ந்தும் எழுதுவேன். கால்பந்தாட்ட வீரர்கள் பற்றியும், ஒலிம்பிக் வீரர்கள் பற்றியும் எழுதுவேன். இவ்வாறாக நான் எழுதுவதால் தமிழ்விக்கிப்பீடியாவின் இருப்பு பாதிக்கப்படுமெனக் கருதுமிடத்து விக்கிப்பீடியாவில் நான் எழுதுவதை தடுத்துவிடுங்கள். ஒரு பயனர் விக்கிக் கொள்கைகளுக்கு முரணாக எழுதினால் அவரை தற்காலிகமாக நிறுத்திவைக்க அல்லது அவரைத் நிரந்தரமாகவே தடுத்த நிறுத்தும் அதிகாரம் அதிகாரிகள், நிர்வாகிகளுக்கு உள்ளது அல்லவா. நிச்சயமாக நானாக நிறுத்திக் கொள்ள மாட்டேன். நீங்களாக தடுத்துநிறுத்தாத வரை தமிழ்விக்கிப்பீடியாவில் நான் எழுதிக்கொண்டே இருப்பேன். ஒரு நிரோசனைப் போலவோ வினோத்தைப் போலவோ நான் இடையில் பின்வாங்கிவிட மாட்டேன்.

அதே நேரத்தில் என்னால் எழுதப்பட்ட அனைத்துக் கட்டுரைகளும் இன்னும் ஓரிருவாரத்தில் (புள்ளிகள், கமாக்கள், அடைப்புக்கள் போன்றன) திருத்தப்பட்டுவிடும்.

இறுதியாக நான் கேட்டுக் கொள்ள விரும்புவது

ஒன்றில் என்னை சுயமாக எழுதவிடுங்கள்.
அல்லது விக்கிப்பீடியாவிலிருந்து நான் எழுதுவதைத் தடுத்துவிடுங்கள்.

எந்தப் பிரச்சினையையும் வீணாக நீடித்து காலத்தையும் நேரத்தையும் விரயமாக்காமல் முடிவுக்குக் கொண்டுவருவது நலம்.

நான் எந்தவொரு பயனருடனும் தனிப்பட்ட முறையில் கோபங்களையோ, குரோதங்களையோ வைத்திருப்பவனல்ல. எனவே தான் சுந்தருக்கு ஏற்கனவே நான் கூறிய அதே கருத்தை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

நான் விட்டுவிடுகின்றேன்.
நீங்களும் விட்டுவிடுங்கள்.
முடியாவிட்டால் விக்கிப்பீடியாவிலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்.

மிக்கநன்றி, அன்புடன் --P.M.Puniyameen 06:26, 27 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

புன்னியாமீன்,

//கிரிக்கெட் வீரர்கள் பற்றி 4000+ கட்டுரைகள் எழுதி உள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.1 . இவற்றை நீங்களே நேரடியாகத் தட்டச்சுவதற்கோ நீங்கள் சொல்லச் சொல்ல மற்றவர்கள் தட்டச்சுவதற்கோ ஆகும் நேரத்தையும் உழைப்பையும் சமமாகவே கருதுவோம். இதற்கு ஆகும் நேரம் எவ்வளவு? இதில் உங்கள் உழைப்பு எவ்வளவு? 2. நீங்கள் தந்துள்ள வார்ப்புருக்களுக்கு ஏற்ப தரவுத் தளத்தில் இருந்து பெறப்படும் தகவலை ஒருவரோ ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ தட்டச்சுவதற்கான நேரம் / உழைப்பு எவ்வளவு? இந்த உழைப்பும் நேரமும் யாருடையது? இரண்டு அணுகுமுறைகளுக்கும் வேறுபாடு உண்டா இல்லையா?//

போன்ற நேரடிக் கேள்விகள் கேட்கப்படும் போது, அவற்றுக்குப் பதில் அளிக்காமல் "நான் விட்டு விடுகிறேன், நீங்களும் விட்டு விடுங்கள்" என்று நீங்கள் கோருவதை ஏற்க முடியாது.

//அதேபோல எனது கட்டுரைகளும் தரமற்றவை. விக்கிப்பீடியாக் கொள்கையை மீறியவை எனக் கருதினால் உடனுக்குடன் நீக்கிவிடுங்களேன். மாறாக இதை வைத்துக் கொண்டு ஏன் பிரச்சினைப் பெரிதுபடுத்த வேண்டும்.//

தரமற்ற கட்டுரைகளை நீக்குவதற்கும், நீக்கலாமா என்று உரையாடுவதற்கும் தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்கும் கூட மற்ற பயனர்களின் நேரம், உழைப்பு தேவைப்படும். இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரையை ஒழுங்கபடுத்துவதற்கே சில மணி நேரங்கள் ஆகும். இந்தக் கட்டுரைகளை நீங்கள் உருவாக்கியவர் என்ற முறையில் இந்த உரையாடலில் பங்கு கொள்ளவோ தேவைப்படும் துப்புரவுப் பணியில் உதவ முன்வரவோ இல்லை. எனவே, "நான் வழமை போல் செயல்படுகிறேன், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என்ற தங்கள் செயற்பாடு மற்ற பயனர்களுக்கும் நேர இழப்பை உருவாக்கும் என்பதை அருள்கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். புதிய கட்டுரைகளை உருவாக்குவதுடன் ஏற்கனவே உள்ள தங்கள் கட்டுரைகளை தங்களால் இயன்ற வரை மேம்படுத்த முனையுங்கள்.

விக்கிக் கொள்கைகளுக்கு உட்பட்டு உங்கள் சொந்த விருப்புகள் பற்றி தாராளமாக எழுதலாம். மற்ற தலைப்புகளில் கூடுதலா எழுதலாமே என்று சிலர் கேட்பது வேண்டுகோள் தான். அதை ஏற்பதும் மறுப்பதும் உரிமை. ஆனால், தொடர்ந்து உங்கள் சிந்தனையை மற்றவர்கள் கணினிமயப்படுத்த, தங்கள் சொந்தப் பயனர் கணக்கின் கீழ் பதிவேற்றப் போகிறீர்கள் என்றால் அதற்கு என்னுடைய மறுப்பைப் பதிவு செய்வதுடன் முறைப்படி அதற்குத் தேவையான கொள்கையை வரையறுக்கு முயல்வேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இன்னும் பிரச்சினை புரியவில்லை என்றால், ஒரு எடுத்துக்காட்டு தருகிறேன்.

ஒரு விக்கியில் மூன்று பயனர்கள் மட்டும் அல்லது மூன்று வகை பயனர்கள் மட்டும் உள்ளார்கள் என்று கொள்வோம்.

முதல் வகை: தனது முழு நேரப் பணி, வாழ்க்கைக்கு இடையே ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே விக்கிப் பணிக்கு என ஒதுக்க வல்லவர். இவர் நேரடியாகவோ தட்டச்சு உதவி பெற்றோ எழுதலாம். ஒரு மணி நேரத்தில் இவராலம் நான்கு கட்டுரைகள் எழுத முடியும் என்று கொள்வோம். இவரால் ஒரு நாளைக்கு 2x4=8 கட்டுரைகள் மட்டுமே எழுத முடியும்.

இரண்டாம் வகை: தூங்கும் நேரம் தவிர, ஒரு நாளைக்கு 16 மணி நேரம் விக்கிக்கு ஒதுக்குகிறார் என்று கொள்வோம். இவரலாம் 16x4=64 கட்டுரைகள் மட்டுமே எழுத முடியும். இது விக்கியில் தனியொருவரால் தரக்கூடிய அதிகபட்ச உழைப்பு என்று கொள்வோம்.

மூன்றாம் வகை: ஒருவர் 10 பேரை 8 மணி நேர வேலைக்கு அமர்த்தினால், 10X8x4=320 கட்டுரைகள் எழுத முடியும். இதில் வேலைக்கு அமர்த்தும் பயனரின் உழைப்பு 0 மணி நேரம் அல்லது 320 மணி நேரத்துக்குக் குறைவானது. இதே போல் ஒரு நிறுவனமோ தனியாளோ 100 பேர், 1000 பேர் என்று பணி அமர்த்தினால் எவ்வளவு கட்டுரைகள் வரும் என்று சொல்லத் தேவை இல்லை.

இப்படி உள்ள ஒரு பயனர் சமூகத்தில், முதலாவது இரண்டாவது பயனருக்கும் மூன்றாவது பயனருக்கும் இடையில் உள்ள சமநிலை எப்படி பேணப்படும் என்று நினைக்கிறீர்கள்? விக்கி ஒரு பயனர் சமூகம். எனவே, அனைவரும் பங்களிப்பதற்கான சம நிலையில் இருப்பது இச்சமூகத்தின்இயங்கு நிலையைப் பேண முக்கியம்.

//நாளை என்பது எனக்கு நம்பிக்கையற்றது. எனவே எனக்குத் தெரிந்தவற்றையும் என் விருப்பத்திற் குரியவற்றையும் தமிழ்விக்கிப்பீடியாவில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைத்தது சுயமாகவேயன்றி யாருடைய வற்புறுத்தலுக்கல்ல. இவ்வடிப்படையில் விக்கி நெறிமுறைகளை மீறாத வகையில் என் சுய விருப்பத்திற்கமைய எழுதுவதில் தடைகள் வருவதை நான் விரும்பவில்லை.//

இக்கட்டான நிலையிலும் தாங்கள் அறிந்தவற்றை விக்கியில் பதிய நினைப்பது போற்றத்தக்கது. இதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், தங்கள் நேரடி உழைப்பு, நேரத்தில் உருவாகாத கட்டுரைகளை தங்கள் சொந்தப் பயனர் கணக்கில் அல்லாது இன்னொரு பயனர் கணக்கில் இருந்து பதிவேற்றுங்கள். அல்லது, தானியக்கமாகப் பதிவேற்றுவதற்கான உதவியை நாடுங்கள். --இரவி 06:47, 27 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

//ஒரு நிரோசனைப் போலவோ வினோத்தைப் போலவோ நான் இடையில் பின்வாங்கிவிட மாட்டேன்.//

வினோத் மட்டுமே கருத்து வேறுபாடுகள் காரணமாக விக்கியில் இருந்து விலகியவர். நிரோசனுக்கு விக்கியின் மேல் எந்தப் பிணக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. தனது தனிப்பட்ட அலுவல், படிப்பு காரணமாக அவர் விக்கியில் இருந்து விலகி இருக்கிறார் என்பதே எனது புரிதல்--இரவி 06:49, 27 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

மீண்டும் மீண்டும் விவாதம் வேண்டாம் இரவி
ஒன்றில் என்னை சுயமாக எழுதவிடுங்கள்.
அல்லது விக்கிப்பீடியாவிலிருந்து நான் எழுதுவதைத் தடுத்துவிடுங்கள். --P.M.Puniyameen 07:17, 27 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

// தயவுசெய்து அவரவர் விருப்பத்திற்குரியவற்றை சுயமாக எழுத விடுங்கள். // வளங்களை ஒருங்கிணைத்துச் செயற்படும் நீங்கள் பல்துறைகளையும் கவனித்தால் பயன்பெருகும் என்றே நினைத்தேன். நீங்கள் ஆர்வத்துறை சார்ந்தே இயங்குகிறீர்கள் என்பதால் என் உரையாடல் தந்த சங்கடங்களுக்கு வருந்துகிறேன். நன்றி. கோபி 08:14, 27 சனவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

போல் வால்தட்டி தொகு

நீங்கள் உருவாக்கிய போல் வெல்தாய் என்ற பக்கம் போல் வால்தட்டி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. Paul Valthaty என்றே ஆங்கிலத்தில் உள்ளது. ஆகவே, போல் வால்தட்டி என்பதே பொருத்தமானதாக அமையும். போல் வெல்தாய் என்ற கட்டுரை நீக்கப்பட்டு, வரலாற்றுடன் போல் வால்தட்டி என்ற பக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகவே உங்கள் பட்டியலில் போல் வெல்தாய் என்று இருப்பதை போல் வால்தட்டி என்று மாற்றி விடுங்கள். --மதனாஹரன் 12:14, 12 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

தகவல் தந்தமைக்கு நன்றி மதனாஹரன்--P.M.Puniyameen 14:03, 12 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

Paul என்பதை பவுல் என்று தமிழில் எழுதுகிறார்கள், பார்க்க பயனர்:George46 இவர் கிறுத்துவ இறையியல் பேராசிரியர், அமெரிக்கர்கள் பால் என்று உச்சரிப்பார்கள். --குறும்பன் 17:24, 12 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

@P.M.Puniyameen: உங்கள் கட்டுரையின் பட்டியலிலும் மாற்றி விட்டேன். --மதனாஹரன் 11:37, 14 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

@குறும்பன்: கட்டுரையின் உள்ளேயும் பவுல் வால்தட்டி என்று மாற்றி விட்டேன். --மதனாஹரன் 11:37, 14 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]

நன்றி மதனாஹரன் --P.M.Puniyameen 12:03, 14 பெப்ரவரி 2012 (UTC)Reply[பதில் அளி]


 

வணக்கம் P.M.Puniyameen! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:40, 16 நவம்பர் 2012 (UTC)Reply[பதில் அளி]

சிற்றிதழ்கள் குறித்து தொகு

வணக்கம் P.M.Puniyameen! நீங்கள் தொடங்கியுள்ள 100-க்கும் மேற்பட்ட சிற்றிதழ் கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை எதுவும் இல்லாமலும், ஆசிரியர் பெயர், வெளிவந்த ஆண்டு, வகை என்ற ஒரு வரித்தகவலுமே உள்ளது. விரைந்து கட்டுரைக்கு தேவையானவற்றை சேர்க்கவும். ஆதாரம் எதுவும் கிடைக்காவிட்டால், அனைத்து தகவல்களையும் ஒரு அட்டவனையாக உருவாக்கி ஒரே கட்டுரையில் இணைத்துவிடுங்கள். அக்கட்டுரையில் சான்றில்லை வார்ப்புரு இட்டுவிடலாம். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:40, 16 நவம்பர் 2012 (UTC)Reply[பதில் அளி]

அன்பின் தம்பி வணக்கம்.

தங்களால் நவம்பர் 16, 2012இல் அனுப்பிய செய்தியை இன்றுதான் பார்த்தேன். தகுதியற்றவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்காகத்தான் ஜனவரி 26, 2012இல் விக்கிப்பீடியாவில் எழுதுவதை நான் நிறுத்திக்கொண்டேன். தகுதியற்றவர்களின் கட்டுரைகளும் தகுதியற்றுத்தான் இருக்கும். அதனால் என்னால் எழுதப்பட்ட கட்டுரைகள் 8000க்கு மேல் இன்னும் விக்கியில் இருக்கின்றன. அவை அனைத்தையுமே நீக்கிவிடும்படிதான் நான் பொதுவாக கேட்டு வருகின்றேன். நீங்கள் மாத்திரமல்ல அனைவருக்குமே அந்த உரிமையை வழங்கியுள்ளேன். செய்வதைச் செய்யுங்கள், தொடர்பின்றி இருக்கும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். இது எனது அன்பு வேண்டுகோள்.

அன்புடன் புன்னியாமீன்.11.02,2013

தங்களைப் பற்றிய குறிப்புகள் தேவை தொகு

தமிழ் விக்கிப்பீடியா தொடர்புடைய கட்டுரை ஒன்றைத் தமிழ்நாட்டில் வெளியாகும் பத்திரிகையில் வெளியிடுவதற்காகத் தங்களைப் பற்றிய குறிப்புகளுடன் தங்கள் புகைப்படம் ஒன்றும் என்னுடைய msmuthukamalam@gmail.com msmuthukamalam@yahoo.co.in மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:42, 22 செப்டம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]

அன்பின் தம்பி தொகு

விக்கிபீடியாவிலிருந்து நீங்கள் நீங்கிக் கொண்டமை வேதனையைத்தருகின்றது. தங்களைப் போன்ற பல்துறைசார் அறிவுஜீவிகள் விலகுவது வேதனைக்குரிய விடயமே. 10 ஆண்டு நிறைவில் நானும் விக்கிக்கு ஏதோ பங்களித்திருக்கின்றேன் என்ற அடிப்படையில் என்னை ஞாபகத்தில் தொடர்பு கொண்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னைப் பற்றி தகவல்கள் விக்கிப்பீடியாவில் எனது குறிப்புகளில் உள்ளன. நான் தற்போது மாரடைப்பு காரணமாக சுகயீணம் அடைந்து படுக்கை ஓய்வில் உள்ளேன். எனவே குறிப்புகளை முழுமையாக எழுதித்தர முடியாத நிலையில் உள்ளேன். எனது குறிப்புகளில் என்னைப் பற்றியும் தகவல்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனக் கருதுகின்றேன்.

புதிய தகவல் நான் எழுதிய மொத்த நூல்கள் 185 எனது வெளியீட்டகமாக சிந்தனை வட்டம் வெளியீட்டுள்ள மொத்த தமிழ் நூல்கள் 350

மேலதிக தகவல்கள் தேவைப்படின் தங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடிய இலக்கம் ஒன்றையும் நேரத்தையும் எனக்கு மெயில் மூலம் அறியத்தரவும். நான் தொடர்பு கொள்கின்றேன்.

தங்களது தபால் முகவரியை அறியத்தருவீர்களாயின் என்னால் இறுதியாக வெளியிடப்பட்டதும் பரிசில்கள் பெற்றதுமான நூலை தங்களுக்கு தபாலில் அனுப்பிவைப்பேன். எமது தொடர்புகள் தொடர்ந்தும் நீடிக்கவேண்டுமென நான் பெரிதும் விரும்புகின்றேன்.

அன்புடன் புன்னியாமீன்.

கட்டுரைப் போட்டி தொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:55, 27 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]

துடுப்பாட்ட வீரர்களின் குறிப்பிடத்தக்கமை தொகு

பார்க்க: பகுப்பு பேச்சு:துடுப்பாட்டக்காரர்கள் . உங்கள் கருத்து தேவை. நன்றி.--இரவி (பேச்சு) 13:35, 17 ஏப்ரல் 2014 (UTC)Reply[பதில் அளி]

இரங்கல் தொகு

தமிழ் விக்கிப்பீடியா பயனர் புன்னியாமீன் இன்று காலமானதாக சமூக ஊடக நண்பர்கள் வாயிலாக அறிந்து வருந்துகிறேன். தொடர்ந்து பல காலமாகவே உடலநலம் குன்றியிருந்த புன்னியாமீன், அதன் காரணமாகவே தமிழ் விக்கிப்பீடியா உள்ளிட்ட பல்வேறு களங்களில் தான் அறிந்தவற்றைப் பதிவு செய்வதில் துடிப்புடன் செயற்பட்டார். யாராவது தமிழ் விக்கிப்பீடியர் சார்பாக அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு இரங்கலைப் பதிவு செய்ய இயன்றால் ஆறுதலாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 09:48, 10 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

புன்னியாமீன் விக்கிப்பீடியாவில் கட்டுரையெழுதுவதை நிறுத்திய பிறகு என்னுடன் பல முறை தொலைபேசியில் உரையாடினார். ஆயினும் கிட்டத்தட்ட மூன்றாண்டு காலமாக அவருடன் உரையாட முடியவில்லை. நானும் வேலைப் பளுவாகவே இருந்து விட்டேன். இந்தோனேசியாவிலேயே இருந்தமையாலும் இலங்கைக்கு வந்த நாட்களில் வேறு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தமையாலும் அது சாத்தியப்படவில்லை. ஆயினும், அவரைச் சென்று காண வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது என்ன செய்வது? எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நல்லருள் பாலிப்பானாக! ஆமீன்!--பாஹிம் (பேச்சு) 10:18, 10 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
2011ல் அவரும்,அவரது மனைவியும் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தபோது நானும் சூர்யபிரகாசும் சந்தித்தோம். விக்கிப்பீடியாவின் மூலமே அவருடன் தொடர்பு. ஓரிரு நாட்கள் தங்கி சிகிச்சைப் பெற்றுச் சென்றார். விடைபெறும் போது பிள்ளைகளாய் கருதி என்னையும், சூர்யபிரகாசையும் கட்டியணைத்து அன்பு முத்தம் தந்தது இன்றும் என் நினைவில் பசுமையாய் உள்ளது. அதற்கு முன்பும் பிறகும் ஓரிரு முறை தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அன்னாரின் பிழைகளை மன்னித்து இறைவன் உயரிய சுவர்க்கத்தை வழங்குவானாக! ஆமீன். -- Mdmahir (பேச்சு) 13:11, 10 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
2011இல் நானும் அவரையும் அவரது துணைவியாரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர். விக்கிப்பீடியாவின் வளர்ச்சியிலும் பரப்புரையிலும் மிகுந்த அக்கறை கொண்டவர். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அமைதியையும் நல்லருளையையும் வழங்குவானாக !--மணியன் (பேச்சு) 14:01, 10 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
வருந்துகிறேன். புன்னியாமீன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். --நந்தகுமார் (பேச்சு) 18:38, 10 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
இவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.--Kanags \உரையாடுக 21:04, 10 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
படைப்பாளிகள் உடலால் மறைகிறார்கள்; அவர்களின் படைப்புகள் உலகில் வாழ்கின்றன. புன்னியாமீன் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:33, 11 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
புன்னியாமீன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 15:56, 11 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளரான புன்னியாமீன் அவர்கள் உலகத் தமிழ்ப் படைப்பாளிகள் மத்தியில் அறியப்பட்டவராக இருந்ததுடன், பரவலான தொடர்புகளையும் கொண்டிருந்தார். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியிலும் அக்கறைகொண்டு தன்னாலியன்ற பல வழிகளிலும் முனைப்பாகச் செயற்பட்டுவந்தார். புன்னியாமீன் தமிழ் விக்கியில் பங்களித்த காலத்தில் தனிப்பட்ட மின்னஞ்சல்கள் வாயிலாக அவருடன் எனக்குத் தொடர்புகள் இருந்தாலும் நேரடியாகச் சந்திக்கக்கூடிய வாய்ப்புக் கிடைக்கவில்லை. அண்மையில் சவூதிக்குச் சென்று திரும்பும் வழியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு துபாயில் ராசீத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகத் தகவல் கிடைத்தது. ஆனாலும், கிடைத்த தகவல்கள் போதுமானவையாக இல்லாதிருந்ததால், அம்மருத்துவமனைக்குச் சென்று பல மணிநேரங்கள் தேடியும் அவரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது. அவர் இன்னும் நீண்டகாலம் வாழ்ந்திருக்க வேண்டியவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். --மயூரநாதன் (பேச்சு) 18:25, 11 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
புன்னியாமீன் தமிழ் விக்கிப்பீடியாவில் வேகத்துடன் செயற்பட்டவர். விக்கிப்பீடியா சம்பத்தப்பட்ட பலருடனும் அடிக்கடி தொடர்புகளை மேற்கொண்டு உறவுகளை வளர்த்தவர். வெளித் தளங்களிலும் ஊடகங்களிலும் விக்கிப்பீடியாவை கொண்டுசென்றவர். அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:21, 14 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply[பதில் அளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:P.M.Puniyameen&oldid=3184575" இருந்து மீள்விக்கப்பட்டது