வாருங்கள்!

வாருங்கள், Pazlarichard, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- Kanags (பேச்சு) 14:26, 6 சனவரி 2016 (UTC)

குறிப்புதொகு

ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் - இங்கு மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கன அல்ல. ஏற்கெனவே உள்ள விடயத்தை நீக்கும்போது அல்லது மாற்றும்போது, தொகுத்தல் பெட்டியின் கீழு உள்ள "சுருக்கம்" என்பதனுள் காரணம் குறிப்பிடவும். அவ்வாறே உசாத்துணைகளை நீக்கும்போதும் காரணம் குறிப்பிடவும். ஏற்கெனவே உள்ள கட்டுரைக்கு மாற்றுக்பெயரில் அல்லது மாற்றுக் கருத்தில் கட்டுரை தொடங்க வேண்டாம். கட்டுரைகள் யாவும் கலைக்களஞ்சியத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். நன்றி. --AntanO 01:05, 8 சனவரி 2016 (UTC)

ஈரோஸ்தொகு

ஈரோஸ் எனக் கூறப்படும் ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம், ஈழப் புரட்சி அமைப்பு ஆகிய இரண்டும் முற்றிலும் வெவ்வேறானதா? பதில் கூறுங்கள். அல்லாது விடில், மூன்று கட்டுரைகளும் ஒரு கட்டுரையாக இணைக்கப்படவுள்ளன.--Kanags \உரையாடுக 07:07, 8 சனவரி 2016 (UTC)

ஆ.வி.யில் ஒரு கட்டுரைதான் உள்ளது. ஈழவர் சனநாயக முன்னணி என்ற அரசியற்கட்சி ஈழ புரட்சிகர மாணவர் இயக்கத்தின் அரசியற் கட்சி (The Eelavar Democratic Front (EDF) of EROS will be contesting the forthcoming Eastern Provincial Council elections...), 2012 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டது என்பதற்கு ஆதாரம் வேண்டும். ஈழப் புரட்சி அமைப்பு என்பது நீங்கப்பட்டு, ஈழவர் சனநாயக முன்னணி ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்ற கட்டுரையுடன் இணைக்கப்பட வேண்டும். --AntanO 07:34, 8 சனவரி 2016 (UTC)

@Kanags:ஈரோஸ் எனப்படும் ஈழ புரட்சிகர மாணவர் இயக்கவும், ஈழப்புரட்சி அமைப்பும் முற்றிலும் வேறானது அல்ல. அதுபோலவே ஈரோஸ் எனப்படுவது முற்றிலுமாக ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்பதும் அல்ல. ஈழப்புரட்சி அமைப்பு 1975 சனவரி 3 ஆம் திகதி தாபிக்கப்பட்டது. இந்த அமைப்பு EROs என்று சுருக்கமாக பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட அமைப்பில் லண்டனிலும், இலங்கையிலுமிருந்து ஏராளமான பல்கலைகக்கழக மாணவர்கள் இணைந்தார்கள். அவ்வாறு மாணவர்கள் அதிகளவு இணைந்ததின் காரணமாக ஊடகங்களில் இந்த அமைப்பு EROS/ ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என ஜனரஞ்சகமாக அழைக்கப்பட்டிருக்கின்றது. அது ஒரு பிரச்சார மாயைத்தோற்றம். ஆகவே ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்பது பிரச்சார மாயை என்றே பதியப்படல் வேண்டும். மாறாக ஈழப்புரட்சி அமைப்பு - ஈரோஸ் என்பதுவே அந்த அமைப்பின் சகல ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள பெயர். ஆதாரங்கள் 1. ஈழப்புரட்சி அமைப்பின் ஆய்வு பிரிவின் வெளியீடான ஈழவர் இடர் தீர இரண்டாம் பதிப்பு - வெளியீடு 1984- பக்கம் 3 முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. “ இவ்வாய்வு கட்டுரைகள் எமது இயக்கமான ஈழப்புரட்சி அமைப்பின்(EROS) நிறுவனர் இ.இரத்தினசபாபதி அவர்களால் எழுதப்பட்டதாகும்” ஈழவர் இடர் தீர நூல் மின் வடிவில் 2. 1990 ஆம் ஆண்டு பாலக்குமார் அவர்கள் ஈரோஸ் எனப்படும் ஈழப்புரட்சி அமைப்பை கலைத்ததாகவே அறிவித்தார். பத்திரிக்கை செய்திகளை பார்க்க சொடுக்கவும் மேலும், ஈரோஸ் அமைப்பின் மாணவர் அமைப்பாக ஈழமாணவர் பொதுமன்றம் என்ற அமைப்பு உருவாக்கபபட்டது. ஈரோஸ் என்பது ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்றால் எதற்காக இன்னுமொரு மாணவர் அமைப்பை துணை அமைப்பாக நிறுவ வேண்டும். ஈரோஸ் அமைப்பு தாபிக்கும் போது தாபகர் இரத்தினசபாபதியின் வயது 37, அவருடன் இணைந்து அமைப்பை தாபிப்பதில் உதவியவர்களுக்கும் அப்போது ஏறத்தாழ இதே வயதே ஆகும். அப்படியிருக்க இவர்கள் எவ்வாறு மாணவர் இயக்கத்தை தாபிப்பார்கள்? எனவே ஈரோஸ் எனப்படுவது ஈழப்புரட்சி அமைப்பே ஆகும். அதன் துணைஅமைப்பு போன்று தோற்றம் காட்டிய பிரச்சார மாயையே ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் என்பதாகும். ஈழப்புரட்சிகர மாணவர் இயக்கம் என்பது பிரச்சார புலப்பாடு என்றே பதியபபட வேண்டும். --Pazlarichard (பேச்சு) 20:48, 8 சனவரி 2016 (UTC)


@AntanO:, ஈரோஸ் அமைப்பு 1989 ஆம் ஆண்டு அரசியல் கட்சியை பதிவு செய்யும் முன்பே தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. அதன் காரணமாகவே தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டது. தேர்தலின் பின் கட்சி பதிவு செய்யப்பட்டு, வெற்றிபெற்றவர்கள் ஈழவர் முன்னணி என்ற பெயரில் செயற்பட்டனர். இது குறித்து ஈரோஸ் அமைப்பின் ரவி சுந்தரலிங்கம் தமிழ்டைம்ஸ் எனும் இதழுக்கு வழங்கிய நேர்காணலை சான்றாக இணைக்கின்றேன். ரவிசுந்தரலிங்கத்தின் நேர்காணல் பக்கம் 7--Pazlarichard (பேச்சு) 21:33, 8 சனவரி 2016 (UTC)

முதற் கட்டுரையும் தொகுப்பும்தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Pazlarichard!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

-- மாதவன்  ( பேச்சு  ) 01:55, 8 சனவரி 2016 (UTC)

தங்கள் கவனத்திற்குதொகு

பேச்சு:ஈழப் புரட்சி அமைப்பு என்ற பக்கத்தில் தங்களுக்கான செய்தி உள்ளது. தக்க பதிலினைத் தந்தால் விரைந்து இணைக்கவோ, அல்லது தனிக்கட்டுரையாக இருக்கவோ ஆவனம் செய்ய இயலும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:55, 5 பெப்ரவரி 2016 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Pazlarichard&oldid=2815881" இருந்து மீள்விக்கப்பட்டது