Rabiyathul
வாருங்கள்!
வாருங்கள், Rabiyathul, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
தொகுசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!
தொகுவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.
இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.
சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.
இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.
இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.
வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.
நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)
சான்றிணைத்தல்
தொகுவனக்கம் ராபியாத்துள். தங்களின் எலும்பு நோய் கட்டுரையில் மேற்கோள்கள் இல்லாததால் கருவியிலிருந்து நீக்கியுள்லேன். சான்றிணைத்து மீண்டும் கருவியில் ஏற்றவும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 20:14, 31 திசம்பர் 2019 (UTC) இப்பதான் கற்கிறேன் விரைவில் அனைத்தையும் செய்யவேன்.--Rabiyathul (பேச்சு) 09:48, 4 சனவரி 2020 (UTC)
விரிவாக்கம்
தொகு- எலும்பு நோய் கட்டுரையில் படங்களையும், மேற்கோள்களையும் இணைத்துள்ளேன். இவைகள் இல்லாததால் @Parvathisri:(பார்வதிசிறீ) வேங்கைத்திட்டத்தில் நீக்கியிருந்தார். தயக்கம் வேண்டாம். தொடர்ந்து எழுதவும். நான் மாற்றங்களை போட்டி முடியும் வரை செய்கிறேன். பிறகு நநாளடைவில் இதுபோல மாற்றங்களை செய்ய நீயும் கற்கலாம். ஊரில் உனது எண் தொடர்பு கிடைக்கவில்லை. குறுஞ்செய்தி அனுப்பவும். அனுப்புகிறேன். நீதிமன்ற வேலையில் நல்ல முன்னேற்றம். சட்டப்படிப்பு முடித்தமையால், சீனியருடன் உரையாட உதவியாக உள்ளது. விரைவில் EP முடியும்.--த♥உழவன் (உரை) 06:34, 3 சனவரி 2020 (UTC)
jioக்குமாறிட்டேன். --Rabiyathul (பேச்சு) 09:52, 4 சனவரி 2020 (UTC)
வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி
தொகுவணக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:53, 4 சனவரி 2020 (UTC)
கலப்பின நாய்கள்
தொகுen:Jack Russell Terrier-cross dog
en:Russkiy Toy-cross dog என்பன கலப்பின நாய்கள். இவைகளை மொழிபெயர்ப்புக்கருவியில் இட்டுத்தேடுக. இதில் ஏதேனும் இருந்தால், அக்கருவியே சொல்லும். கூகுள் மொழிபெயர்ப்பை மேம்படுத்தவும். பகுப்பை நாய்கள் எனவும், விக்கித்தரவை அதே இட்டுக்கொள்ளும். சிறிய கட்டுரையாக இருந்தாலும் பரவாயில்லை. இடப்பக்கம் சொற்களின் எண்ணிக்கையைக்காட்டும். அதில் 400 க்கு மேல் காட்டுமாறு வந்தால் மட்டும், பதிப்பிடவும். ஏனெனில், அது தகவற்பெட்டியையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும். மேற்கோள் இடுதல் எளிது. அதனை கடைசியாகச் செய்யவும்.--த♥உழவன் (உரை) 02:03, 10 சனவரி 2020 (UTC)
பொய் கொலைத் திமிங்கிலம் தற்போது பவுன்டன் கருவியில் சரியான உரைகளுடன் தெரியும். அப்பிழை வந்தது ஏனெனில், தகவற்பெட்டியினால், அதனை மேம்படுத்தியவுடன் தெரிகிறது. நாளை போட்டி முடிவதால், அதுவரை தகவற் பெட்டியைத்தவிர்க்கவும். எனக்கும் அதுகுறித்த மேம்பாட்டுப் பணி அமையாது.--த♥உழவன் (உரை) 02:29, 10 சனவரி 2020 (UTC)
நன்றி. நாளை இறுதி நாள் என்பதால், எனது முயற்சிகளுக்குப் பிறகு செய்கிறேன். இங்கு விட விக்கிமூலம் எனக்கு எளிது.--Rabiyathul (பேச்சு) 09:42, 10 சனவரி 2020 (UTC)
விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020
தொகுவணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:26, 17 சனவரி 2020 (UTC)
Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients
தொகுDear Wikimedians,
We hope this message finds you well.
We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.
We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.
Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.
Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.
Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
வேங்கைத்திட்டப் பயிற்சி 2022
தொகுவணக்கம்.
இந்த கருவியின் தரவுப்படி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்றவரில், நீங்களும் ஒருவர். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாகத் திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். --த♥உழவன் (உரை) 10:49, 9 சூன் 2022 (UTC)
வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு
தொகு- நன்றி--Rabiyathul (பேச்சு) 03:47, 17 நவம்பர் 2022 (UTC)
Reflist
தொகுவணக்கம், நீங்கள் பல கட்டுரைகளில் சான்றுகளைச் சேர்க்காமல். சான்றுகள் இல்லாக் கட்டுரைகளில் {{Reflist}} எனும் வார்ப்புருவினை சேர்த்துவருகிறீர்கள். பதிலாக [[பகுப்பு:மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்]] எனும் பகுப்பில் உள்ள கட்டுரைகளுக்கு சான்றுகளைச் சேர்த்த பின்னர் இந்த வார்ப்புருவினை இட்டு உதவவும். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 10:17, 3 ஆகத்து 2023 (UTC)
விக்கித்தரவு
தொகுவணக்கம், கட்டுரையினை உருவாக்கியவுடன் விக்கித்தரவில் இணைத்து உதவுங்கள். இதன்மூலம் மற்றவர்கள் அதே கட்டுரையினை உருவாக்குவதனைத் தவிர்க்கலாம். நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 14:25, 11 பெப்பிரவரி 2024 (UTC)
- அலைப்பேசி வழியே விக்கி தரவில் இணைக்க வழி காட்டுங்கள் Rabiyathul (பேச்சு) 11:42, 14 மார்ச்சு 2024 (UTC)
- இந்தப் பக்கத்திலுள்ள முதல் அட்டவணையில் பாருங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:13, 14 மார்ச்சு 2024 (UTC)
- கணினிக்குத்தான் உள்ளது. அலைபேசிக்கு? Rabiyathul (பேச்சு) 12:04, 15 மார்ச்சு 2024 (UTC)
- அலைபேசியில் உலாவியை பயன்படுத்துகிறீர்களா? அல்லது App பயன்படுத்துகிறீர்களா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:18, 15 மார்ச்சு 2024 (UTC)
- @Rabiyathul வரிசை எண் 15 என்பதனைக் காணவும். அலைபேசிக்கான வழிகள்
- 1. கைபேசிப் பார்வையில் இருந்தால் தொகு என்பதற்கு அருகில் உள்ள மூன்றுப் புள்ளிகளை சொடுக்கவும். விக்கித்தரவு உருப்படி என்பதனைச் சொடுக்கி விக்கிப்பீடியா என்பதில் enwiki எனக் கொடுத்து ஆங்கிலத் தலைப்பை உள்ளிடவும்.
- 2. நீங்கள் இருக்கும் விக்கிப்பீடியாவின் பக்கத்தின் இறுதியில் கணினி என இருக்கும் அதைச் சொடுக்கி , கருவிகளில் இருக்கும் மொழியிடைத் தொகுப்புகளைத் தொகு என்பதில் enwiki எனக் கொடுத்து ஆங்கிலத் தலைப்பை உள்ளிடவும். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:15, 15 மார்ச்சு 2024 (UTC)
- இருவருககும் நன்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன். கணினி என்றாலும் அலைபேசி என்றாலும் கூகுள் குரோம் பயன்படுத்துவேன். App இணைப்பு தாருங்கள், .திரையின் அடியில் போய் கணினி என மாற்றிக் கொண்டேன். விக்கி தரவு செய்தேன். விக்கி உருப்படி என்ற சொல் வரவில்லை. Rabiyathul (பேச்சு) 12:45, 16 மார்ச்சு 2024 (UTC)
- வணக்கம், எனது கருத்தினை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். நான் இரு வழிகளைக் கூறியுள்ளேன். நீங்கள் இரண்டையும் ஒரு சேரப் பயன்படுத்தியதால் இந்தக் குழப்பம். கணினிப் பார்வையில் இருந்தால் மொழியிடைத் தொகுப்புகளைத் தொகு/add interlanguage links என்று தான் வரும். மீண்டும் எனது கருத்தினைப் பார்க்கவும். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:55, 16 மார்ச்சு 2024 (UTC)
- இருவருககும் நன்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன். கணினி என்றாலும் அலைபேசி என்றாலும் கூகுள் குரோம் பயன்படுத்துவேன். App இணைப்பு தாருங்கள், .திரையின் அடியில் போய் கணினி என மாற்றிக் கொண்டேன். விக்கி தரவு செய்தேன். விக்கி உருப்படி என்ற சொல் வரவில்லை. Rabiyathul (பேச்சு) 12:45, 16 மார்ச்சு 2024 (UTC)
- கணினிக்குத்தான் உள்ளது. அலைபேசிக்கு? Rabiyathul (பேச்சு) 12:04, 15 மார்ச்சு 2024 (UTC)
- இந்தப் பக்கத்திலுள்ள முதல் அட்டவணையில் பாருங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:13, 14 மார்ச்சு 2024 (UTC)
வணக்கம், Rabiyathul!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:
- கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருத்தல். காண்க: {{விக்கியாக்கம்}}, விக்கிப்பீடியா:நடைக் கையேடு (எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, தமிங்கிலம் தவிர்த்து எழுதுதல்)
- தகுந்த ஆதாரம் (மேற்கோள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல், விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
- மூன்று வரிக்கு (வாக்கியங்கள்) அதிகமான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் (3 வரிக்குக் (வாக்கியங்கள்) குறைவான கட்டுரைகள் நீக்கப்படும்)
- சரியான பகுப்பு(கள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம், விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும்
- பிறமொழி விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அதனை சரியான விக்கித்தரவில் இணைத்தல். காண்க: விக்கிப்பீடியா:விக்கித்தரவு
மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--~AntanO4task (பேச்சு) 05:06, 21 மார்ச்சு 2024 (UTC)
- நான் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து பூண்டுகளை முடித்தேன். இப்பொழுது பூண்டு உணவுகளைச் செய்கிறேன். இவைகள் சிறிய கட்டுரைகள். பெரிய கட்டுரைகளை எழுதுவேன். இதுவரை எந்த விதிமீறல்களையும் செய்யவில்லை என்றே எண்ணுகிறேன். குறிப்பிட்ட உதவிகளைக்கேட்பேன். Rabiyathul (பேச்சு) 12:12, 21 மார்ச்சு 2024 (UTC)
விக்கித்தரவு- நினைவூட்டல் 2
தொகுகட்டுரைகளைத் தற்போது சிறப்பாக உருவாக்கி வருகிறீர்கள், வாழ்த்துகள்.மேற்கூறிய வழிகளை முயற்சித்துப் பார்த்தீர்களா? விக்கித்தரவில் சேர்ப்பதில் என்ன சிக்கல் உங்களுக்கு. சேசுநெச்சுகா ஏன் விக்கித்தரவில் சேர்க்கவில்லை? ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 18:11, 22 மார்ச்சு 2024 (UTC)
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
வணக்கம், மற்ற பயனர்கள் கூறும் கருத்துக்களைப் புரிந்துகொண்டு ஆக்க நோக்கில் பங்களிப்பதனை மனமாரப் பாராட்டுகிறேன். தொடர்ந்து பங்களிக்கவும். நன்றி-- |
மேற்கோள் சுட்டுதல்
தொகுவிக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் - மேற்கோள் சுட்டுதல் என்பது அறிவுசார் படைப்புக்களில் இடம்பெறும் தகவல்களுக்குச் சான்றாக நம்பத்தகுந்த நூல், கட்டுரை, இணையத் தளம் முதலிய வெளி ஆக்கங்களைச் சுட்டுதலைக் குறிக்கும். ~AntanO4task (பேச்சு) 14:37, 10 ஏப்பிரல் 2024 (UTC)
நல்ல கட்டுரை- அழைப்பு
தொகுவணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,70,006 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)
தொடர்-தொகுப்பு 2024
தொகுவணக்கம்!
தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்-தொகுப்பு நிகழ்வு (Edit-a-thon) ஒன்றினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு நகரில், செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்!
நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்த இணைப்பின் வழியாகச் சென்று விண்ணப்பியுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
- நன்றி. இறுதிநாள் மட்டும், என் மகளுடன் கலந்து கொள்ள இயலும். விண்ணப்பிக்கலாமா?Rabiyathul (பேச்சு) 10:24, 7 ஆகத்து 2024 (UTC)
- @Rabiyathul இரண்டு நாட்கள் கலந்துகொண்டால், பயனரும் தமிழ் விக்கிப்பீடியாவும் நாம் எதிர்பார்க்கும் பலனை முழுமையாக அடைய இயலும். எனினும் விண்ணப்பித்துப் பாருங்கள். தேர்வுக் குழுவினர் முடிவு செய்வார்கள். நீங்கள் தெரிவிக்க விரும்பும் குறிப்பினை இடுவதற்கு விண்ணப்பத்தில் வழியுள்ளது.
- உங்களின் மகள் விக்கிப்பீடியா பயனராக இல்லையெனில், அவருக்குரிய செலவுகளை நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். அவரும் ஒரு பயனர் எனில், அவர் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:38, 7 ஆகத்து 2024 (UTC)
- என் மகளுக்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும்? Rabiyathul (பேச்சு) 10:55, 7 ஆகத்து 2024 (UTC)
- @Rabiyathul மகளின் வயது உள்ளிட்ட சில விவரங்கள் அடிப்படையில், தங்கும் விடுதி, உணவு குறித்து கணக்கிட வேண்டும். இந்த விவரங்களை பொதுவெளியில் உரையாடுவது சரியாக இருக்காது. உங்களின் விருப்பம் அடிப்படையில் விண்ணப்பியுங்கள். அதன் பிறகு, நிகழ்வு ஒருஙகிணைப்பாளர்கள் உங்களை தொடர்புகொள்வர். அவர்களிடமிருந்து நீங்கள் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 7 ஆகத்து 2024 (UTC)
- என் மகளுக்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும்? Rabiyathul (பேச்சு) 10:55, 7 ஆகத்து 2024 (UTC)