:படிமம்:James-vasanthan.ogg இன் காப்புரிமை என்ன? தொகு

 
Image Copyright problem

படிமம்:James-vasanthan.ogg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 06:00, 27 ஆகஸ்ட் 2008 (UTC)

தானியங்கி படிமப் பக்த்தில் வார்ப்புரு உள்ளதா என்பதையே தேடுகிறது. எனவே பொருத்தமான வார்ப்புருவை இட்டால் தானியங்கி விளங்கிக் கொள்ளும்.--Terrance \பேச்சு 12:55, 27 ஆகஸ்ட் 2008 (UTC)

பரிந்துரைகளுக்கு நன்றி தொகு

உங்களுடைய சொற் பரிந்துரைகளை பின்வரும் மாதிரி செய்தால் எளிதாகச் சொற்களை இணைக்கலாம்.

இங்கு இருக்கும் சொற்களையும் சேர்க்கலாம். நன்றி. --Natkeeran 15:35, 13 செப்டெம்பர் 2008 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியாவை தெளிவு படுத்தல் எளிமைப் படுத்தல் தொகு

  • உதவி - help
  • கையேடு - guide (or is it how to ?)
  • நிர்வாகம் - நாளாந்தம் செய்ய வேண்டிய பணிகள் (எ.கா இன்றைப்படுத்தல்)
  • கூறுகள் - Wikipedia features ?? , elements

இந்த தகவல்களை சற்று இறுக்கமாக வரையறை செய்ய வேண்டும். பல பக்கங்களில் தகவல்களை சிதறடிக்காமல் இருப்பதும் நன்று. --Natkeeran 01:32, 20 செப்டெம்பர் 2008 (UTC)Reply

சில சொற்கள் தொகு

--Natkeeran 22:15, 24 நவம்பர் 2008 (UTC)Reply

2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம் தொகு

வணக்கம் ரவி:

இப்ப சென்னயில போல இருக்கு. உங்கட தனிப்பட்ட விடயங்களுக்கு அக்கறை தருவது எமதுக்கு நன்றாக புரிகிறது. இருந்தாலும் உங்கட idea (இதுக்கு தமிழ் என்ன? கருத்து, எண்ணம், எண்ணக்கரு!!) கட்டாயம் பகிருங்கோ.

அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)

வாழ்த்துகள் தொகு

ரவி, சென்னை பயிற்சிப் பட்டறை சிறப்பாக அமைய வாழ்த்துகள். பங்குபெறுபவர்கள் அனைவரையும் பங்களிக்க வருமாறு விக்கிப்பீடியர்கள் அனைவரது சார்பிலும் வரவேற்கிறேன். -- சுந்தர் \பேச்சு 10:31, 18 ஜனவரி 2009 (UTC)

எழுத்துப்பெயர்ப்பு பொத்தான் தொகு

ரவி, உங்களுக்கு வேலை செய்கிறதா? எனக்கு வேலை செய்ய வில்லை. பொதுவில் சோதனை பண்ணிப் பாக்கலாமா??? --Natkeeran 22:11, 27 ஜனவரி 2009 (UTC)

சைட் நோட்டிசு தொகு

வரவிருக்கும் பட்டறையை பற்றி அறிவித்தால் நன்று என நினைக்கிறேன். --Natkeeran 22:05, 27 பெப்ரவரி 2009 (UTC)

சில கருத்துக்கள் தொகு

பின் தள்ளிப் போடலாம்...நாளைக்கோ இன்றைக்கோ இந்த விடயம் மீண்டும் வரும். ச எனபற்கு பதிலாக ஷட்டி, ஷட்டம் என்று எழுதிப் புரட்சி செய்தாலும் செய்வர். எதாவது ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டி வரும். --Natkeeran 17:30, 28 பெப்ரவரி 2009 (UTC)

எழுத்துப்பெயர்ப்பு தொகு

  • பயனர்:Natkeeran/monobook.js
  • எந்த பொத்தான் பயன்படுத்தா வேண்டும்..? Ctrl + ?
  • பொதுவி போட்டு சோதிக்கலாமா? --Natkeeran 22:47, 8 மார்ச் 2009 (UTC)

பெயர் தமிழாக்கம் தொகு

ரவி வேர்னர் ஹெய்சன்பர்க் கட்டுரையில் வலதுபுற சட்டத்துள் உள்ள பெயர்களை தமிழாக்கம் செய்ய இயலுமா? இப்பெயர்களின் ஒலிப்பு எனக்கு பரிச்சயம் இல்லை. நன்றி --கார்த்திக் 17:47, 24 மார்ச் 2009 (UTC)

கருத்தை மீளப்பெறுதல் தொகு

ரவி, இந்தத் தொகுப்பில் உங்கள் பதிவை மீளப்பெற்றதை வரவேற்கிறேன். ஆனால் அந்த இடத்தில் ஒரு செய்தியை விடுவது நல்லது. -- சுந்தர் \பேச்சு 02:29, 12 மே 2009 (UTC)Reply

வணக்கம் தொகு

என் பெயர் சுபாஷ் . நான் தமிழ் விக்கிபீடியாவிற்கு புதியவன் . நான் ஆங்கில விக்கிபீடியாவில் மட்டும் தான் பங்களித்து கொண்டு இருந்தேன் , இப்பொழுது தமிழ் விக்கிபீடியாவிற்கு என்னால் முடிந்த உதவி செய்ய வந்துள்ளேன் -சுபாஷ் சந்திரன் 007 18:03, 1 ஜூன் 2009 (UTC)

Auto Confirmed Users தொகு

http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தானாக_உறுதியளிக்கப்பட்ட_பயனர்கள் இப்பகுதியை பார்க்கவும். தவறுகள் இருந்தால் சரி செய்து , இன்னும் தேவையான செய்திகளை சேர்க்கவும் .-சுபாஷ் சந்திரன் 007 05:41, 2 ஜூன் 2009 (UTC)

வணக்கம், என் பெயர் மைதிலி நான் கடந்த பல வருடங்களாக தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன் , இந்த இணையதளம் மூலம் தமிழ் தொடர்பான செயதி களை பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன் .Mythili 14:10, 4 ஜூன் 2009 (UTC)

10,000 தொகுப்புகள் தொகு

விக்கிப்பீடியாவில் இணைந்து 4 ஆண்டுகள் 3 மாதங்களுக்குப் பிறகு 10,000 தொகுப்புகளைக் கடந்து இருக்கிறேன். 10,000மாவது தொகுப்பு தமன்னா. கலைச்சேவை தொடரும் :) கருத்து மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க குற்றவுணர்வாக இருக்கிறது. இயன்ற அளவு கட்டுரைகள் எழுத வேண்டும்.--ரவி 10:32, 6 ஜூன் 2009 (UTC)

ரவி, கலைச்சேவை சிறக்க வாழ்த்துக்கள் ;)--சிவக்குமார் \பேச்சு 10:55, 6 ஜூன் 2009 (UTC)
வாழ்த்துக்கள் தங்களின் தமிழ் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்--கார்த்திக் 14:07, 6 ஜூன் 2009 (UTC)
வாழ்த்துக்கள் ரவி--கலாநிதி 16:34, 6 ஜூன் 2009 (UTC)
வாழ்த்துக்கள் ரவி. மேலும் மேலும் நீங்கள் பங்களிக்க வேண்டும். --பரிதிமதி 16;45, 6 சூன் 2009 GMT

சிவா, கார்த்திக், கலாநிதி, பரிதிமதி - நன்றி :)--ரவி 10:32, 7 ஜூன் 2009 (UTC)

வாழ்த்துகள் ரவி. குற்ற உணர்வு தேவையில்லை ரவி, உங்கள் புயல் விரைவுப் பணியைப் பலரும் அறிந்துள்ளோம். விரைவில் கட்டுரைகளை எழுதத் துவங்குங்கள். (நானும் புதுக்கட்டுரை துவக்கி நாளாகிறது.) -- சுந்தர் \பேச்சு 10:55, 7 ஜூன் 2009 (UTC)

கவணிக்கவும் தொகு

ரவி: கறுப்புப் பெட்டி பக்கத்தை வழிமாற்றி, மேலும் சில தகவல்களை சேர்த்துள்ளேன். அக்கட்டுரையின் பேச்சு பக்கத்தில் உங்களின் குறிப்பொன்றை பார்த்தேன் (2006 ஆம் ஆண்டு இட்டது). இக்கட்டுரையில் உங்களுக்கு ஏதேனும் மாற்றவேன்டுமெனில் தாரலமாக செய்யுங்கள்--கார்த்திக் 15:30, 6 ஜூன் 2009 (UTC)

பட்டறை எவ்விதம் போகிறது? துரை முருகன் என்ற தலைப்பில் இரண்டு பக்கங்கள் தேவையில்லை என நினைக்கிறேன்--Hibayathullah 13:39, 29 அக்டோபர் 2009 (UTC)Reply

Re:Repeat strings தொகு

Ravi, Just remove those duplicates from the translation page. The bot just needs one line for each name. To answer your queston, yes that can happen. There may be towns with the same name in multiple states. In this case, we disambiguate it with state name. See Rajgarh. There may be towns with the same name within one state. We disambiguate these with the district name. See Gudalur. It can happen across countries too, See Jalalabad. Regards, Ganeshk 14:20, 14 ஜூன் 2009 (UTC)

நன்றி தொகு

நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே--Hibayathullah 17:31, 2 மார்ச் 2010 (UTC)

படங்கள் தொகு

ரவி, தயந்து பட்டறைப் படங்களைச் சேர்த்தால் நன்று. --Natkeeran 23:51, 18 ஜூன் 2009 (UTC)

விக்கிப்பட்டறை ஒலிக் கோர்வையைக் கேட்டுக்கொண்டுஇருக்கின்றேன். மிக்கப் பயன் உள்ள நிகழ்ச்சி...!!! விரைவில் இலங்கையிலும் நடத்தலாம் என்று நினைக்கின்றேன். --ஜெ.மயூரேசன் 11:23, 19 ஜூன் 2009 (UTC)


பாராட்டுக்கள் தொகு

உங்களின் ஒலிப்பதிவை முழுனையாக ஈடுபாட்டுடன் கேட்டேன். மிகவும் சவாலான கேள்விகளுக்கும் மிகவும் பொருத்தமான பொறுமையான பதில்கள். விமர்சனங்களை இறுதிக் கட்டத்துக்கு நகத்தியது சமாத்தியமான முடிவு.--Natkeeran 01:47, 20 ஜூன் 2009 (UTC)

Closure Notice தொகு

Ravi, make the closure notices as a site wide notice. At least, Tamil Wikipedia admins should oppose it. --Natkeeran 14:03, 1 ஜூலை 2009 (UTC)

நற்கீரன், நீங்கள் எதைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள் என விளங்க வில்லை.--சிவக்குமார் \பேச்சு 22:09, 1 ஜூலை 2009 (UTC)
சிவா, விக்கி மேற்கோள், விக்கி செய்திகள் திட்டங்களைத் தொடருவதற்கான வாக்கெடுப்பு பற்றி அறிவிக்க கேட்டிருந்தார். அந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறேன்--ரவி 03:07, 2 ஜூலை 2009 (UTC)

என்ன கொடுமை சரவணன் இது? தொகு

என்ன கொடுமை சரவணன் இது? ஐயோ, என்னால முடியலடா ராசா... --ரவி 18:33, 2 ஜூலை 2009 (UTC)


நன்றி தொகு

மிக்க நன்றி ரவி. உங்கள் ஆலோசனைக்கும் பாராட்டுக்கும்.--arafat 07:12, 7 ஜூலை 2009 (UTC)

விக்கித் திட்டம் உயிரியல் தொகு

வணக்கம் ரவி. உயிரியல் துறையில் தற்போது ஆழமான தலைப்புகளில் பங்களிக்கக்கூடிய குறைந்தது 4 பயனர்கள் உள்ளார்கள். நீங்கள், கார்த்திக், மகிழ்நன், கலை. முடிந்தால், நீங்கள் நால்வரும் கூட்டாக ஒரு விக்கித் திட்டம் உயிரியல் தொடங்கலாம். கணினியியலில் நல்ல தமிழில் கட்டுரைகள் எழுத அங்கு பரந்த பயன்பாட்டில் இருக்கும் (http://www.tcwords.com/) கலைச்சொற்கள் துணை புரிகின்றன. அது போல, பல அடிப்படைத் தலைப்புகள்/கலைச்சொற்கள் கொண்ட ஒரு விரிவான பட்டியலைத் தொடங்குவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். பல பட்டியல்களின் கூட்டுகாக் கூட இது இருக்கலாம். பாக்க: தலைப்புகள் பட்டியல்களின் பட்டியல்

இது உங்களையும் சில துறைசார் கட்டுரைகளைத் எழுத தூண்டலாம். அல்லது ஒரு ஒருங்கிணைப்பாளராக செயற்படலாம். மருத்துவத்துக்கு முன்பு உயிரியல் துறையை தொடங்குவது நன்று.

--Natkeeran 15:22, 19 ஜூலை 2009 (UTC)

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல்‎ தொகு

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல் திட்டத்தை தொடங்கியாச்சு:) இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது--கார்த்திக் 17:04, 19 ஜூலை 2009 (UTC)

பாலூட்டிகள் தொகு

இந்த வார்புருவையும் வார்ப்புரு:இந்திய_பாலூட்டிகள் இதன் பேச்சு பக்கத்தையும் பார்க்கவும்--கார்த்திக் 04:06, 27 ஜூலை 2009 (UTC)

புதிய திட்டம் தொகு

ரவி. விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் திட்டபக்கத்தை பாருங்கள் உங்களின் கருத்துக்களை கூறுங்கள். இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு மிகவும் தேவை--கார்த்திக் 19:40, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

site notice தொகு

ரவி, தற்போது இருக்கும் வாக்களியுங்கள் என்பதை இனி எடுக்கலாம். அதற்குப் பதிலாக விக்கிப்பீடியா:Tamil Wikipedia: A Case Study சில காலம் போடலாம் என்று நினைக்கிறேன். நன்றி. --Natkeeran 17:54, 15 ஆகஸ்ட் 2009 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா மீதான விமர்சனங்களும் பதில்களும் தொகு

பதில்கள்


பங்களிப்பாளர் அறிமுகம் தொகு

நன்றி ரவி. என்னை பற்றிய சிறு குறிப்பை இங்கே கொடுத்திருக்கின்றேன். --arafat 15:15, 10 அக்டோபர் 2009 (UTC) இரவி ஐயா, தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி--Hibayathullah 06:26, 2 மார்ச் 2010 (UTC)Reply

நன்றி தொகு

நன்றி ரவி. இதில் சரி பார்க்க எதுவும் இல்லை, நான் திருத்திக்கொல்லத்தான் அதிகம் உள்ளது. எனவே தொடர்ந்து திருத்த வேண்டுகிறேன்--Arafat 15:59, 12 அக்டோபர் 2009 (UTC)Reply

நிருவாகப் பொறுப்பு தொகு

ரவி! ஓய்வுக்குப் பின் புத்துணர்வுடன் திரும்பியிருப்பது கண்டு மகிழ்ச்சி. நிருவாகப் பொறுப்புப்புக்கு என்னை முன்மொழிய விரும்புவது குறித்தும் மகிழ்ச்சி. ஆதரவு இருந்தால், என்னால் இயன்றவரை செய்கிறேன். நன்றி.--பரிதிமதி 06:49, 31 அக்டோபர் 2009 (இந்திய நேரப்படி)

ரவி நிர்வாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் என்னை போன்ற பயணர்களும் பங்களிக்க முடியுமா? அல்லது ஏற்கனவே நிர்வாகியாக உள்ளவர்கள் மட்டுமே பங்களிக்க முடியுமா? எந்த மொத்த தொகையில் 80% ஆதரவு தேவை?--Arafat 05:42, 1 நவம்பர் 2009 (UTC)Reply
அராப்பத், கண்டிப்பாக எல்லாரும் வாக்களிக்கலாம். ஆலமரத்தடியில் விளக்குகிறேன்--ரவி 06:08, 1 நவம்பர் 2009 (UTC)Reply


நன்றி தொகு

வணக்கம் இரவி ஐயா, தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நன்றி

விக்கி மூலம் தொகு

ரவி, இந்தக் ஆய்வுக் கட்டுரையை எந்த மாற்றமும் இல்லாமல் விக்கி மூலத்தில் இட்டு, இங்கு ஒரு கட்டுரை இடலாம். அவருடன் தொ.பே தொடர்பு கொள்ள முடியுமா?

--Natkeeran 04:09, 1 டிசம்பர் 2009 (UTC)

விக்கிப்பீடியா பயனர் அறிமுகப் பக்கத்தை இன்றைப்படுத்தவும் தொகு

--Natkeeran 03:02, 3 டிசம்பர் 2009 (UTC) --86.96.227.89 18:29, 1 மார்ச் 2010 (UTC)

வாழ்த்துக்கள் தொகு

ரவி, விக்கிச் செய்திகள், விக்கி மேற்கோள் ஆகியவற்றை மூடிவிடுவதற்கு எடுத்த நடவடிக்கைகளை, நீங்கள் பிற பயனர்களுடன் சேர்ந்து முன்னணியில் நின்று எடுத்த நடவடிக்கைகளினால் தடுக்க முடிந்துள்ளது. இதற்காக உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 04:34, 4 டிசம்பர் 2009 (UTC)

ரவி, விக்கிமூலத்தில் இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளவற்றை உடனடியாக நீக்கி விடுவீர்களா?--Kanags \பேச்சு 23:45, 5 டிசம்பர் 2009 (UTC)

புற்றுநோய் பக்கத்தில் Beachelliots செய்துள்ள தொகுப்பு தொகு

ரவி! புற்றுநோய் பக்கத்தில் Beachelliots கடைசியாக செய்துள்ள தொகுப்பு சற்று வரம்பு கடந்ததாகத் தெரிகிறது. மகிழ்நன் செய்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டு, பிற உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது போல் தெரிகிறது. உறுதியாகத் தெரியவில்லை. உறுதிபடுத்திய பின் உரையாடலில் சொல்லலாம் என்று உள்ளேன். இவர் Beachelliots உண்மையான மனிதன் தான் என்று நினைக்கின்றேன்! முதலில் ஒரு Bot வகை என்று தான் நினைத்தேன்!! -- பரிதிமதி 13:18, 13 டிசம்பர் 2009 (இந்திய நேரம்)

த*உழவனின் தமிழ் விக்சனரி குறித்த உரையாடல் தொகு

  1. தமிழ் விக்கிமேற்கோள், தமிழ் விக்கிசெய்திகள் திட்டங்கள் தொடர வாக்களியுங்கள் என்ற அறிவிப்பை நீக்குவது எப்படி?த* உழவன் 05:58, 17 டிசம்பர் 2009 (UTC){தொடர்புக்கு..}
    • அவ்வறிப்பை நீக்கியமையால் மகிழ்கிறேன்.த* உழவன் 19:14, 17 டிசம்பர் 2009 (UTC)

புது பயனர் தொகு

புதுப்பயனர்களை கண்டுபிடிக்க ஏதேனும் சுட்டிகள் உள்ளனவா? --குறும்பன் 03:22, 7 பெப்ரவரி 2010 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல் தொகு

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:43, 18 பெப்ரவரி 2010 (UTC)--செல்வா 02:05, 20 பெப்ரவரி 2010 (UTC)

பதில் தொகு

அன்புள்ள திரு. அ.ரவிசங்கர் அவர்களுக்கு நேச வணக்கம்!

எனக்காக இவ்வளவு 'பெரிய' ஒரு வரவேற்புப் பதாகையை வடிவமைத்து அனுப்பியிருக்கிறீர்களே! எவ்வளவு அன்பு!! விக்கிபீடியாவில் நுழைந்தவுடன் இப்படி ஒரு வரவேற்பு, அதுவும் சக பயனாளர் ஒருவரிடமிருந்து கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை! மிக்க மகிழ்ச்சி!! நன்றி!! விரைவில் மீண்டும் வருவேன்.

சிறு தொகுப்பு தொகு

இது ஒரு சிறு தொகுப்பு என்பதை தெரிவு செய்தாலும் அண்மைய மாற்றங்கள் பகுதியில் மாற்றம் தெரிகிறது. அண்மைய மாற்றங்கள் பகுதியில் தெரியாமல் இருக்க வேறு வழிமுறைகள் உள்ளனவா?--குறும்பன் 17:07, 5 மார்ச் 2010 (UTC)

ரவி எனக்கும் இதற்கான விளக்கம் தேவை. --Arafat 13:57, 8 மார்ச் 2010 (UTC)

கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் உருவாக்கும் போட்டி தொகு

ரவி! கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பக்கங்கள் போட்டி பக்கம் பார்க்கவும். திருத்தங்கள் இருந்தால் செய்யவும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் ஒரு மாணவர் த.வி.யின் முதற்பக்கத்திற்கு வந்தவுடனேயே முதல் சொடுக்கிலேயே இப்பக்கம் வர வேண்டும். (பல சொடுக்குகள் மாணவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி, முக்கிய பக்கத்திற்கு வராமலேயே போய்விடச் செய்துவிடலாம்.)

இப்பக்கத்திலும் இரண்டே உட்தலைப்புகள் உள்ளவாறு அமைத்துள்ளேன். அவை 1. தலைப்புகள் 2. விதிகள்.

மேலும் பேசுவோம்.

நன்றி. பரிதிமதி

ஐந்தாண்டுகள் நிறைவு தொகு

ரவி! தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பணி இந்த மார்ச்சு 11 அன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெற்று ஆறாவது ஆண்டு தொடங்குகின்றது! மேலும் மேலும் உங்கள் பணி தமிழ் விக்கிப்பீடியாவில் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! --செல்வா 03:20, 11 மார்ச் 2010 (UTC)

ஐந்து ஆண்டுகள். கொஞ்சமும் குறையாத சுறுசுறுப்பு. கலக்குறீங்க ரவி. இன்னும் தொடர்ந்து கலக்குங்க!--Arafat 05:07, 11 மார்ச் 2010 (UTC)

நன்றி தொகு

தவறுதலாக விடுபட்டிருந்த அராப்பத்தின் பெயரைச் சேர்த்ததற்கு நன்றி, ரவி. -- சுந்தர் \பேச்சு 05:03, 24 மார்ச் 2010 (UTC)

குறிப்பு தொகு

இரு சூரியச் சின்ங்கள் - திமுக - அரசியலாக பார்க்கப்படும் அபாயம் உள்லது. பழைய banner நன்றாக இருந்ததே. --Natkeeran 14:52, 28 மார்ச் 2010 (UTC)

கோரிக்கை! தொகு

மதிப்பிற்குரிய நண்பருக்கு அன்பு வணக்கம்!

Background color அமைப்பது எப்படி என அன்பு கூர்ந்து விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!--இ.பு.ஞானப்பிரகாசன்\உரையாடு 11:21PM, 28 மார்ச் 2010 (UTC)

சரி! தொகு

மதிப்பிற்குரிய நண்பருக்கு அன்பு வணக்கம்!

ஆலமரத்தடியில் நான் கொடுத்திருந்த தன்னிலை விளக்கத்திற்குத் தாங்கள் அளித்திருந்த பதிலைக் கண்டேன். அப்படியானால் சரி. நன்றி!--இ.பு.ஞானப்பிரகாசன் 9:56, 29 மார்ச் 2010 (IST)


நன்றி தொகு

நன்றி நிச்சயம் மறுமுறை இவ்வாறான தொகுப்புகளுக்கு "இது ஒரு சிறு தொகுப்பு" என்ற பெட்டியை தெரிவு செய்கிறேன் . - இராஜ்குமார்

உதவி! தொகு

மதிப்பிற்குரிய நண்பர் திரு.ரவி அவர்களுக்கு இ.பு.ஞானப்பிரகாசனின் அன்பு வணக்கம்!

என்னைத் தங்களுக்காவது நினைவிருக்கும் என நம்புகிறேன்! ஆனால் தமிழ் விக்கிப்பீடியா என்னை மறந்துவிட்டது நண்பரே! ஆம். நான் உள்ளே நுழைந்தால் என் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் ஏதோ புதியவனை வரவேற்பது போல் புகுபதிகை, புதிய பயனர் கணக்குத் தொடக்கம் போன்ற வரிகளையெல்லாம் காட்டுகிறது! நான் எதையாவது தொகுக்க முனைந்தால் புகுபதிகை செய்யும்படி எச்சரிக்கிறது. இது நியாயமா நண்பரே? ஏன், தமிழ் விக்கிபீடியாவிற்கு என்னவாயிற்று? என் கணக்குக்கு என்னவாயிற்று? அன்பு கூர்ந்து ஏதாவது உதவி செய்யுங்கள்!! இப்போதைக்கு மிகுந்த வருத்தத்தோடு வெளியேறுகிறேன்.--இ.பு.ஞானப்பிரகாசன் 6:45pm, 2 ஏப்ரல் 2010 (IST)

கூகுள் திட்டம் தொகு

கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் நான் அவ்வப்போது வாசித்து வருகிறேன். எனக்கு அது குறித்த விபரங்கள் எதுவும் முழுமையாகத் தெரியவில்லை. எனவே இது குறித்து நான் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டத்தில் எனக்கு ஈடுபாடுமில்லை. அது குறித்து விருப்பமுமில்லை. ஒரு செயல்பாடு குறித்து முழுமையாகத் தெரியாமல் எப்படி கருத்து தெரிவிப்பது? வாக்கெடுப்பில் தேவையான ஆதரவு இருக்கிறது. என்னுடைய வாக்கு அவசியம் தேவையென கருத்து தெரிவித்தால் நானும் வாக்களிக்கிறேன். --Theni.M.Subramani 14:31, 22 ஏப்ரல் 2010 (UTC)


பயனரை நீங்களாக வகுக்க வேண்டாம் தொகு

பயனர் விரும்பினால், அவர் ஒரு பயனர் பெட்டி போடலாம், ஆனால் நாமாக ஒரு பகுப்புக்குள் இடுவது பொருத்தமல்ல. மேலும் பயனர் பக்கங்களை மற்றப் பயனர்கள் தெகுப்பதல்ல என்ற விதியையும் மீற வேண்டும். நன்றி. --Natkeeran 06:16, 27 ஏப்ரல் 2010 (UTC)

சரி நற்கீரன். --ரவி 06:23, 27 ஏப்ரல் 2010 (UTC)

சாந்தகுமாரின் கருத்து தொகு

நன்றி ரவி. சில நாட்களுக்கு முன்பே பழைய கட்டுரைகளை உரைத்திருத்தும் பணியைத் தொடங்கிவிட்டோம். எங்கள் அணியினர் திருத்தம் செய்யும் பழைய கட்டுரைகள் மற்றும் புதிதாக நாங்கள் மொழிபெயர்க்கும் கட்டுரைகள் அனைத்தைப் பற்றியும் அவ்வப்போது உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நீங்களும் உங்கள் சமூகத்தின் நண்பர்களும் அவற்றைப் பற்றிய கருத்துகளையும் திருத்தப் பரிந்துரைகளையும் வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். விக்கி இடைமுகம் எனக்குப் புதிது. அதனால் தான் மறுமொழிகளில் சிறிது தாமதம். நேற்று இங்கு நான் அளித்த மறுமொழியும் இன்று காணவில்லை. என்ன சிக்கல் என்று புரியவில்லை.

நன்றி --சாந்த குமார் 06:51, 30 ஏப்ரல் 2010 (UTC)

குரும்பனின் செயல்கள் தொகு

விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளில் இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட எந்த கட்டுரையையும் திருத்தவோ பகுப்பிடவோ திரு.குரும்பன் அவர்கள் செய்யக்கூடாது. ஏனெனில், அவர் தொடர்ந்து ஒரு தலைபட்சமாக துவேச உணர்வுடன் செயல்பட்டு வருகிறார். --Hibayathullah 18:36, 4 மே 2010 (UTC)Reply

கூகுள் கட்டுரைகளில் திருத்தம் செய்யும் பயனர்கள் தொகு

கூகுள் கட்டுரைகளில் திருத்தம் செய்யும் பயனர்கள் பட்டியல். ஒரு குறிப்புக்காக:

விக்கியிடைத் தானியங்கி தொகு

இன்று சுந்தர்பாட்டை இயக்கிப் பார்த்தேன். எந்த இணைப்பும் புதிதாய் வரவில்லை. என்னடாவெனப் பார்த்தால் பயனர்:Luckas-bot அந்தப் பணியை நம் சார்பாகச் செய்து வருவதை அறிந்து மகிழ்ந்தேன். தொடர்ந்து இவ்வாறு செய்வாரானால் நாம் வேறு தானியங்கிப் பணிகளை கவனிக்கலாம். இப்போது உறங்கச் செல்கிறேன். :) -- சுந்தர் \பேச்சு 16:58, 14 மே 2010 (UTC)Reply


கட்டுரை போட்டி தொகு

வணக்கம்.

கட்டுரை போட்டியின் 99 கட்டுரைகளையும், படித்து ஆய்வு செய்து, தரம் பிரித்து அதனை இங்குள்ள (File Name Not provided (Please Check in your mail box)---கோப்பில் பதிவு செய்து விட்டேன்.

தற்போது கோப்புக்களை அனுப்பி வைப்பதற்கு முன் ஒருங்குறியில் மாற்ற முயற்சி செய்தேன்.

ஒரு சில கோப்புகளை ஒருங்குறிக்கு எப்படி மாற்றுவது என்பது தெரியவில்லை.

(SaiIndira --- After downloading the Font I am able to Read --- but while testing with Tamil Wikipedia --- it is NOT appearing in the readable format. How to convert it into UNICODE Format ---- Immediate Help is required)

ஆகவே அதற்கான முறையினை தெரிய படுத்த வேண்டுகிறேன். Please Check your mail Box. I am waiting for the reply please. (ppnindia@gmail.com)

பதிலுக்கு காத்து கொண்டிருக்கிறேன். வணக்கம். பெரியண்ணன் --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:38, 15 மே 2010 (UTC) --திருச்சி-பெரியண்ணன்---TRYPPN 06:43, 15 மே 2010 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம் தொகு

வணக்கம் வத்சன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/வத்சன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--ரவி 10:52, 15 மே 2010 (UTC)Reply

தந்துவிட்டேன்! கொஞ்சம் அதிகமாக இருந்தால் திருத்திவிடுங்கள்.வாய்ப்பளித்தமைக்கு நன்றி. ஏதேனும் வலைத்தளத்தை தமிழில் மொழிபெயர்க்க வேணுமெனில்,என்னை தாராளமாக தொடர்பு கொள்ளலாம். :) Vatsan34 14:10, 15 மே 2010 (UTC)Reply

கொஞ்சம் உதவவும் தொகு

அன்புள்ள இரவி, நான் ஒரு கட்டுரையில் சிகப்பு இணைப்புகளை நீக்கிவிட்டு மீண்டும் தொகுக்க முயன்றேன். ஆனால் அது பிரிதொரு பக்கத்திற்கு மாற்றப்படுகிறது. நிறமாலை ஒளிமானி என்பது கட்டுரையின் தலைப்பு. ஏன் இவ்வாறு நேர்கிறது என்று எனக்குப் புரியவில்லை. தயவு செய்து எனக்கு உதவுவீர்களா... --பாபு 13:20, 17 மே 2010 (UTC)Reply

Re: Main page introduction தொகு

Hi Ravi, thanks for recognizing my contribution. I will have to decline the offer. I prefer to work behind-the-scenes here. Regards, Ganeshk 00:33, 18 மே 2010 (UTC)Reply

வேண்டப்படும் மாற்றம்! தொகு

  • ரவி! சொல் தேர்விற்கு கருத்து அளித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி!! அடுத்து உள்ளீடுகளையும் தகவல் பக்கங்களையும் எதிர்பார்க்கலாம் அல்லவா?! --பரிதிமதி 09:43, 18 மே 2010 (UTC)Reply

முதல் பக்க அறிமுகம் தொகு

விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சுந்தர் - இங்கு ஒரு அறிமுகத்தை இட்டுள்ளேன். மிக நீளமாகவோ, விளம்பரத் தன்மையுடனோ தென்பட்டால் சொல்லுங்கள், வெட்டி விடுகிறேன். :-) அப்புறம், உங்களுடையது எங்கே? -- சுந்தர் \பேச்சு 07:17, 25 மே 2010 (UTC)Reply

உரையைச் செப்பம் செய்ததற்கும், கூடுதல் தகவல்களைச் சேர்த்ததற்கும் நன்றி, ரவி. :) -- சுந்தர் \பேச்சு 10:13, 27 மே 2010 (UTC)Reply
:) -- சுந்தர் \பேச்சு 10:43, 27 மே 2010 (UTC)Reply
வாழ்த்துக்கு நன்றி, ரவி. :) -- சுந்தர் \பேச்சு 08:51, 3 ஜூன் 2010 (UTC)

SUL Merge தொகு

Can you please help me merge my SUL with wikt:பயனர்:Nazar. The username has no edits but is unavailable for some reason. Thanks a lot! -- Nazar 20:41, 25 மே 2010 (UTC)Reply

Hey? Are you there? I was advised to address you (as a Tamil Wiktionary Bureaucrat) on your talk page by the Metawiki Admins (see m:Steward_requests/SUL_requests#And_still_a_few_more_.3B.29. -- Nazar 15:02, 8 ஜூன் 2010 (UTC)

Hi Nazar, Please let me know the reason for merge. If you can contribute to Tamil projects in some way it will be great. Thanks--ரவி 03:26, 9 ஜூன் 2010 (UTC)

Thanks for your reply. The main reason for the merge is to unify my Single User Login (SUL), so I can access all the statistics and server tools with one login for different projects. I've already been using my current SUL in various Wikipedia projects and made over 1.000 edits. It would be a bit of confusion and inconvenience if another user with same user name started to actively edit on some other Wikipedia project. It's a general Wikipedia policy to unify logins across different Wiki Projects for the above reasons as well as for other technical reasons. If there are two active users with same names on different projects and multiple edits, then it is advised that they agree between themselves about the merging and renaming. If the user name to be merged has no edits, then it's advised to give it over to the active user (which is my case for Tamil Wiktionary). See also en:Wikipedia:Changing_username/Usurpations#Instructions -- "where a request is to unify global login, the seven day waiting period is waived and requests will be performed once reviewed by a bureaucrat.".
I am generally interested in India and Hinduism related topics and have a bit of knowledge about Sanskrit and Hindi, but, to be honest, that is not enough to actively contribute to the articles. I do not speak Tamil too. So, in the foreseeable future I won't be able to actively contribute to Tamil Wiktionary (though I am a translator and a linguist in general). But once in a while I might use my login for cross-wiki linking and similar bot-like tasks. That's about it.
Hope for your quick help! -- Nazar 17:49, 10 ஜூன் 2010 (UTC)
I also thought that maybe if you're not experienced enough to deal with the SUL merge procedure (or it would take too long for you to find out how to do that), it would be helpful if you just put a short note on m:Steward_requests/SUL_requests#And_still_a_few_more_.3B.29, so that Meta admins have green light to move on with the merge from their level. Thanks! -- Nazar 16:19, 16 ஜூன் 2010 (UTC)

Nazar, sorry for the delay. Due to time constraints, I couldn't figure out how to do this. Gave my approval in Meta. Hope the stewards will help you--ரவி 07:13, 17 ஜூன் 2010 (UTC)

The Tamil Wiktionary Merge is finally   Done! Thanks for all your help! :) -- Nazar 12:22, 25 ஜூன் 2010 (UTC)

பாராட்டு தொகு

ஹா! ஹா! என்னது? கனவில் கூட தமன்னாவுக்குப் பதில் த.வி-தான் வருகிறதா! நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு!!

ஆனால் நீங்கள் அப்படியொன்றும் உங்கள் விக்கிபீடிய வேலைகளைக் குறைத்துக் கொண்டதாகத் தெரியவில்லையே? இன்று கூட சில மணி நேரத்துக்கு முன் நான் சூர்யப்பிரகாசுக்காகச் செய்த பரிந்துரைக்கு வழக்கம் போல் நீங்களும் திரு. கனகரத்தினம் சிறீதரனும்தான் உடனடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறீர்கள்! உங்கள் இருவரின் பங்களிப்பு வேகமும் உதவும் ஆர்வமும் மலைப்பூட்டுகிறது!!

ஒரு சிறு உதவி கேட்கத்தான் இங்கு வந்தேன்! சரி பரவாயில்லை! அப்புறம் கேட்டுக் கொள்கிறேன்! ஓய்வெடுங்கள்!!

நன்றி! வணக்கம்!--இ.பு.ஞானப்பிரகாசன் 16:26, 4 ஜூன் 2010 (UTC)

என்ன ரவி... சொல்லவே இல்ல.... -;) தமன்னாவுக்குப் பதில் த.வி.தான் வருகிறது என்று ரொம்ப தவிச்சுப்போயிட்டீங்களா? மாநாட்டில் சந்திப்போம்.--Ragunathan 11:19, 20 ஜூன் 2010 (UTC)

கூகுள் கட்டுரை தொகு

122.181.16.142 என்ற ஐபி இலக்கத்திலிருந்து டெமி லோவாடோ என்ற கட்டுரை ஏற்றப்பட்டுள்ளது. இதை nocreate குழுவில் இணைத்து விடவும். --குறும்பன் 14:25, 17 ஜூன் 2010 (UTC)

Wikimania talk தொகு

Could you please urgently confirm that you will present your talk on Wikimania, here: [1]. The reminders have been possibly recognized by gmail as spam. Thanks.--Yaroslav Blanter 09:17, 20 ஜூன் 2010 (UTC)

முயற்சிக்குப் பாராட்டு தொகு

"தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்" என்ற கட்டுரையை எழுதியுள்ள பயனரின் முயற்சியைப் பாராட்டுகிறேன். இதையவர் எழுதியுள்ள விதம் நன்று! உலகத் தமிழர் அனைவர்க்கும் புரியும் வகையில் பெயர்கள் இருக்கவேண்டியது அவசியம்! அவர்க் குறிப்பிட்டுள்ள பல்பெயர்களை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை! அரசு இச்செம்மொழி மாநாட்டின் இறுதியில் வெளியிடப்போகும் தீர்மாணங்களிலொன்றாக இதுவுமிருக்க விக்கியிலுள்ளோர் ஆவண செய்ய வேண்டுகிறேன்!
இயலவில்லை எனில் நாம் (விக்கியர்) அனைவரும் இணைந்து திட்டமான, தரமான பெயர்களைத் தயாரித்து அரசுக்களிப்போம்! தமிழ் விக்கியில் கிட்டத்தட்ட 10000 பயனர்கள் பதிந்துள்ளதாக அறிந்தேன். இருப்பதோ 118 தனிமங்கள் (அடையாளம் காணப்பட்டவை) மட்டுமே! 84 பேருக்கு ஒரு தனிமம் மட்டுமே! அவ்வெண்பத்துநால்வரும் (முடிந்தால்) அல்லது குறைந்தபட்சம் 10 பேராவது இணையம் மூலம் குழுவாகச் செயல்பட்டு குறிப்பிட்ட தனிமங்குறித்து விரிவாக ஆய்ந்து ஒரு தூய்தமிழ்ப் பெயரிட முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
இது குறித்து நிர்வாகி அவர்கள் கட்டுரைப்போட்டி வலைவாசல் பக்கத்திற்குச் செல்ல ஓர் அறிவிப்பை முகப்புப் பக்கத்தில் வெளியிட்டது போல, இக்குழுவாக்கத்திற்கு ஓர் அறிவிப்பு தேவை!
--சூர்ய பிரகாசு.ச.அ. 15:08, 25 ஜூன் 2010 (UTC)

நன்றி தொகு

தங்கள் வரவேற்பிற்கு நன்றி. என் பங்களிப்பு தொடரும். அது சரி, நீங்கள் ஓய்வெடுப்பது ‌போல் தெரியவே இல்லையே ? --Karthi.dr 19:01, 11 ஜூலை 2010 (UTC)

பாராட்டுப் பதக்கம் தொகு

இரவி ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் விக்கியில் அரும்பணியாற்றி, பலரையும் நெறிப்படுத்தி நல்வழிகாட்டும் உங்களை உடன் பங்களிப்பாளனான நான் நெஞ்சாரப் போற்றி பாராட்டி இப்பதக்கத்தை அளிக்கின்றேன்.--செல்வா 20:24, 11 ஜூலை 2010 (UTC)யின்

இரவியின் தமிழ் விக்கிக்கான ஈடுபாடும் உற்சாகமும் அளவிட வியலாதது. பல விவாதக்களங்களிலும் த.வியின் கொள்கைகளை நிலைநாட்டுவதிலும் ஓர் சீரிய அதிகாரியாக நல்வழிப்படுத்துவதிலும் அவர் கொள்ளும் அளப்பரிய ஈடுபாடு போற்றலுக்குரியது.செல்வாவின் இப்பதக்கத்திற்கு முற்றிலும் உரியவராக அவரை பாராட்டுகிறேன்.--மணியன் 02:43, 18 ஜூலை 2010 (UTC)
 
இரவி உங்கள் அயராத அரும்பணியையும் வழிகாட்டுதலையும் கருதி என் உவப்பை தெரிவிக்க இப்பதக்கத்தை அளிக்கின்றேன்-செல்வா

நன்றி தொகு

தங்களது ஊக்குவிப்பிற்கு நன்றி. மாற்றங்கள் மட்டும் அன்றி, நேரடியாகவும் விக்கியில் கட்டுரைகள் எழுதி வருகின்றேன். அவை பற்றியும் தங்களது கருத்தை அறிய ஆவல். நன்றி. --Tamil sarva 07:45, 12 ஜூலை 2010 (UTC)


நன்றி தொகு

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி,என்னை ஊக்குவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி அண்ணா.--Jenakarthik 13:07, 12 ஜூலை 2010 (UTC)

அன்புள்ள ரவி அவர்களுக்கு, தாங்களும் NTU-வின் பழைய மாணவர் என்பதையரிந்ததில் நிரம்ப மகிழ்ச்சி. தங்களை ORKUT-ல் இணைக்க முயன்றேன் அனால் தாங்கள் அங்கு இல்லை என்று நினைக்கிறேன். தாங்கள் எந்த வருடம் இங்கு பயின்றீர்கள் என்று எனக்கு தெரிய படுத்துங்கள். நன்றி--Jenakarthik 01:43, 13 ஜூலை 2010 (UTC)

urgent: need contact info of (preferably admin) users தொகு

Dear, Ravidreams I am from Calcutta and I am admin of Bengali Wiki. Please contact me.Jayantanth 16:27, 13 ஜூலை 2010 (UTC)

Hi Ravi, I think Jayanta would be the best person here to talk to a reporter from Kolkata, since Jayanta is in India. So, please get in touch with him. Alternatively, you can email any questions to me (I sent you my info). --Ragib 16:42, 13 ஜூலை 2010 (UTC)

முன்பக்க அறிமுகம் தொகு

ரவி தமிழ் விக்கிப் பீடியாவிற்கு அப்பப்போது பங்களித்து வருகின்றேன். ஆனால் முன் பக்கத்தில் போடுமளவிற்கு ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை. என்றாவது செய்தாப்பிறகு நீங்க தந்த தொடப்பில என்னைப்பற்றி போடுறன். ;) நன்றி --ஜெ.மயூரேசன் 16:29, 13 ஜூலை 2010 (UTC)

பழகிய இடம் தானே மீள வந்து பங்களிப்பதில் சந்தோஷம்தான் :D --ஜெ.மயூரேசன் 15:46, 28 ஜூலை 2010 (UTC)

உதவி!! தொகு

சிறிது நேரம் முன்பு, விழுப்புரம் மாவட்டத்திற்கான வார்ப்புருவில் இருந்த Block என்ற சொல்லை நீக்கிவிட்டு ஊராட்சி ஒன்றியம் என்று மாற்றினேன். அது மட்டும் அல்லது ஆங்கில Villupuram District ல் உள்ள Block பகுதியை அதற்கான விளக்க பக்கத்துடன் இணைத்தேன். ஆனால் தமிழில் ஊராட்சி ஒன்றியத்திதிற்கான (Block) பக்கம் இன்னும் உருவக்க படவில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள விளக்கதினை கொண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு யாரேனும் தமிழாக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். ----ராஜ்6644 09:41, 30 ஜூலை 2010 (UTC)

பேச்சுவிக்கி தொகு

பேச்சு விக்கி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளேன். பின்வரும் வார்ப்புருவில் சிறய மாற்றம் செய்ய விழைகின்றேன். ஆனால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதை திறக்க முடியுமா?? வார்ப்புரு:Spoken Wikipedia boilerplate --ஜெ.மயூரேசன் 11:09, 6 ஆகஸ்ட் 2010 (UTC)

தமிழ் விக்கியில் தானியக்கி பயன்படுத்த விழைகிறேன். தங்கள் உதவி தேவை தொகு

வணக்கம். என் பெயர் செல்வகணபதி. நான் தமிழ் விக்கிபீடியாவில் பல பயனுள்ள தகவல் நிறைத்த கட்டுரைகள் எழுத விழைகிறேன். நிர்வாகியாக உள்ளவர்கள் மட்டுமே தானியக்கியை பயன்படுத்த முடியும் என அறிந்தேன். நான் தானியக்கி பயன்படுத்தும் நிர்வாகியாக தாங்கள் உதவியை வேண்டுகிறேன் ---செல்வகணபதி 18:38, 16 ஆகஸ்ட் 2010 (IST)


--நன்றி செல்வகணபதி

வாக்கெடுப்பு தொகு

n:Wikinews:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள். நன்றி.--Kanags \உரையாடுக 14:45, 4 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கட்டுரைப்போட்டி கட்டுரைகள் பதிவேற்றம் தொகு

வணக்கம்! எனது பேச்சுப் பக்கத்தில் கட்டுரைப் போட்டி கட்டுரைகள் என்ற பிரிவை தயவு செய்து பார்த்து உங்கள் முடிவைக் கூறுங்கள்.--கலை 21:44, 5 செப்டெம்பர் 2010 (UTC)Reply

ரவி, எனக்கு போட்டிக் கட்டுரைகளுக்கான dropbox access வேண்டும். --சோடாபாட்டில் 09:35, 6 செப்டெம்பர் 2010 (UTC)Reply

குறிப்பு தொகு

நிருவாக அணுக்கம் தெரியப்படுத்துதல் தொகு

புதிய நிருவாகிகளுக்கான பள்ளி(நன்றி:சோடாபாட்டில்) இதனை புதுப்பயனர் வார்ப்புரு போல புது நிருவாகிகள் அணுக்கம் வழங்கும் வார்ப்புரு ஒன்றில் இணைத்தால் புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.--மணியன் 23:14, 23 செப்டெம்பர் 2010 (UTC)Reply

Translation Request தொகு

Hi,

Would it be possible to translate into Tamil? It should be useful; as Tamil is one of the two languages of Sri Lanka.

--92.4.112.133 14:28, 14 அக்டோபர் 2010 (UTC)Reply

வாழ்த்துக்கள் தொகு

இன்றைய விக்கியர் சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள். பங்குகொள்வோர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும். --மயூரநாதன் 05:30, 14 நவம்பர் 2010 (UTC)Reply

கண்டிப்பாக இரவி! சென்னை விக்கிச் சந்திப்பு எனக்கு கிடைத்த மிகப்பெரிய அரிய வாய்ப்பு உங்களைப்போன்றவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். விக்கியின் இது போன்ற நிகழ்வுகளை எல்லோருக்கும் மறவாமல் தெரிவிக்கவும் கலந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். என்னாலானா பங்களிப்பை எப்போதும் அளிக்க தயாராகவுள்ளேன். நன்றி--கி. கார்த்திகேயன்

பங்களிப்பாளர் அறிமுகம் தொகு

இரவி, உங்க அறிமுகத்தையும் தாருங்கள். கட்டாயம் சேர்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 08:47, 18 நவம்பர் 2010 (UTC)Reply

திருமணமாமே...உண்மையா? தொகு

  • இரவி, அடுத்த சில மாதங்களுக்கு தங்களது விக்கி ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டதற்குக் காரணம்... உங்களுக்குத் திருமணம் என்று கேள்விப்பட்டேன். உண்மையா...? திருமணமாக இருந்தால் என் நல்வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி. 08:31, 12 திசம்பர் 2010 (UTC)Reply
அன்பும் அறனும் உடைத்தாய இல்வாழ்க்கை அமைய வாழ்த்துகள் !!--மணியன் 05:52, 13 திசம்பர் 2010 (UTC)Reply
வாழ்த்துகள் இரவி :-) --சோடாபாட்டில் 06:05, 13 திசம்பர் 2010 (UTC)Reply

சுப்பிரமணி, திருமணம் நல்லபடியாக முடிந்தது. தொழிலில் கவனம் செலுத்த வேண்டி இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விக்கி ஈடுபாட்டைக் குறைக்க நினைக்கிறேன். திருமண வேலைகளில் பரபரப்பாக இருந்ததால் அனைவருக்கும் தெரிவிக்க இயலாமல் போனது. தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பதிவதில் சற்று தயக்கம் இருப்பதலாம், தயவு செய்து வாழ்த்துகளை ravidreams @ gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறேன். அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி. அன்புடன்--இரவி 10:50, 13 திசம்பர் 2010 (UTC)Reply

சிறப்புக் கட்டுரை மீளாய்வு - இந்தியா தொகு

இக்கட்டுரை 2006 ஆண்டில் நல்ல மேற்கோள்கள் இல்லாத போதே, ஆங்கில விக்கிபீடியாவில் பெயருக்கருகில் நட்சத்திரம் தெரிய வேண்டி சிறப்புக் கட்டுரையாக ஆக்கப்பட்டது. அப்படியானால் தமிழ் விக்கிபீடியாவில் எல்லா கட்டுரைக்கும் பார்வை வேண்டி நட்சத்திரம் போட வேண்டியிருக்கும். சிறப்புக் கட்டுரை மீளாய்வு செய்ய நியமித்துள்ளேன். உங்கள் உதவி தேவை - செழியன் 00:33, 22 சனவரி 2011 (UTC)Reply

பதக்கதிற்கு நன்றி தொகு

பதக்கதிற்கு மிக்க நன்றி ரவி.எதோ என்னால் முடிந்த சிறு பங்களிப்பு.பல்வேறு காரணங்களால் தொகுத்தல் / நிரலெழுதும் பணி செய்ய இயலாமல் ஏற்படும் குற்ற உணர்ச்சியை(guilty conscious) இது போன்ற செயல்கள் குறைக்கின்றது. ஆனால் விரைவில் அவற்றை தொடங்க வேண்டும். ஸ்ரீகாந்த் 10:18, 23 சனவரி 2011 (UTC)Reply

Usurpation request தொகு

I would like to change my user name to Sivanesh from SivaneshR. My home wiki is enwiki. I have already placed a request to Usurp Sivanesh in my home wiki. The only other wiki where there is an unattached account for Sivanesh is in Tamil wiki. The target user account does not have any any edits to I think You will not have any problem in granting thin rename. தயவு செய்து எனது வேண்டுகோளை நிறைவு செய்யவும்!--இரா.சிவனேஷ் 17:08, 1 மார்ச் 2011 (UTC)

I think Special:RenameUser will help you do this இரா.சிவனேஷ் 17:14, 1 மார்ச் 2011 (UTC)

கற்பக மூலிகைகள் தொகு

கற்பக மூலிகைகள் என்ற பக்கத்தின் தலைப்பு ”கற்ப மூலிகைகள்” என இருக்க வேண்டும். (கற்பம்-elixir) பிற பிழைகளை திருத்தியுள்ளேன். நன்றி!

Siddhadreams பேச்சு

மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள் தொடர்பாக தொகு

வணக்கம் இரவி அவர்களே! நான் ஒரு நாளில் முக்கால்வாசி பொழுதை பணி செய்யும் அலுவகத்தில் கழிப்பதாலும் ,மேலும் எனது சொந்த இணையத்தள வேலைகளில் இருந்ததனாலும்.. என்னால் தமிழ் விக்கியில் பங்களிக்க முடியவில்லை. எனினும் தமிழ் விக்கியின் டுவிட்டர் கணக்கை நான் பார்த்து கொள்கிறேன். அதன் மூலம் பங்களிப்பாளர்களை ஈர்க்க ஓர் யோசனை இருக்கிறது. செயல்படுத்துகிறேன் கூடிய விரைவில். மேலும் விக்கிமேற்க்கொளில் எனது பணியை செய்யலாம் என்று இருக்கிறேன். கட்டுரைகளையும் விரைந்து முடிக்க முயல்கிறேன். Vatsan34 15:55, 4 மே 2011 (UTC)Reply

நன்றிகள் தொகு

எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:14, 17 சூன் 2011 (UTC)Reply

நிர்வாக அணுக்கம் - நன்றி தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு என்னைப் பரிந்துரை செய்ததுடன் அதற்கான வாக்கெடுப்பில் முதல் வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:36, 28 சூன் 2011 (UTC)Reply

en:Mattala International Airport si:හම්බන්තොට ජාත්‍යන්තර ගුවන් තොටුපල

Return to the user page of "Ravidreams/தொகுப்பு 6".