பயனர் பேச்சு:Sodabottle/தொகுப்பு07

இரு தலைப்புகள் இணைப்பு

தொகு
கட்டுரைகளை இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:30, 3 சூலை 2011 (UTC)Reply
கெளுத்தி மீன், கெளிறு எனும் இரு கட்டுரை இணைப்பில் நான் செய்த தவறு என்ன? விளக்கமளிக்க வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:40, 6 சூலை 2011 (UTC)Reply
படிகள் பின்வருமாறு
  1. ஒரு கட்டுரையில் உள்ளடக்கம் இணைத்தல்
  2. மற்றொரு கட்டுரையை நீக்குதல்
  3. ஒன்றிணைத்த கட்டுரையை நீக்கப்பட்ட தலைப்புக்கு நகர்த்தல்
  4. நகர்த்திய கட்டுரையை மீண்டும் நீக்குதல்
  5. மீட்டெடுத்தல் (அனைத்து வரலாற்றுப் பதிப்புகளையும்)
இதில் முதல் மூன்று படிகளை செய்து விட்டீர்கள். கடைசி இரண்டை நான் செய்தேன். இதன் அடிப்படை - இரு கட்டுரைகளையும் ஒரே தலைப்பில் வைத்து இருமுறை நீக்க வேண்டும். அப்படி நீக்கிவிட்டால், நீக்கல் பதிப்புகள் ஒருங்கிணைந்து விடும், மீள்விக்கும் போது வரலாறு ஒன்றிணைந்துவிடும்.--சோடாபாட்டில்உரையாடுக 15:53, 6 சூலை 2011 (UTC)Reply
  • என்னுடைய பேச்சுப் பக்கத்தில் ஏற்கனவே கனக்ஸ் இது குறித்து விளக்கமளித்திருந்தார். அதன்படி செயல்பட்டேன். இடையில் எனக்கு திருநெல்வேலியிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததால் பேசிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு என்ன செய்ய வேண்டுமென்று மறந்து போய் விட்டது. நான் மறுபடியும் முதல்படியிலிருந்து வர வேண்டுமென்று நினைத்தேன். அதற்குள் தாங்கள் சரி செய்து விட்டீர்கள். இப்போது ஓரளவு புரிந்து விட்டது. விளக்கத்திற்கு நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:01, 6 சூலை 2011 (UTC)Reply

உதவி

தொகு

சோடாபாட்டில், மணியனின் பேச்சுப் பக்கத்தில் நான் சேர்த்த உரையாடல் பகுதி சரியான இடத்தில் அமையவில்லை. எங்கே தவறென்று தெரியவில்லை. பாருங்கள்.--Kanags \உரையாடுக 06:30, 3 சூலை 2011 (UTC)Reply

 Y ஆயிற்று சரி செய்திருக்கிறேன். முந்தைய நானிட்ட வார்ப்புருவில் ஒரு சிறு பிழையிருந்தது, அதனால் பின் ஒரு வார்ப்புரு இட்டால் இரண்டும் ஒட்டிக் கொண்டன. முந்தைய வார்ப்புருவில் இறுதியில் ஒரு வெற்று வரி சேர்த்ததன் மூலம் சரியாகிவிட்டது.--சோடாபாட்டில்உரையாடுக 07:46, 3 சூலை 2011 (UTC)Reply

கையெழுத்து வார்ப்புரு

தொகு

<sub><big>≈</big></sub>{{{1|}}}[[User:தகவலுழவன்|<font color = "black"><b>த</font><font color = "blue">♥</font><font color = "black">உழவன்</font>]]</small>[[User talk:தகவலுழவன்#top|<span class="signature-talk">'''<sup>+<small><font color = "grey">உரை..</font></small></sup>'''</span>]] = '''{{கை-த.உ}}'''

நான் என்கையொப்பத்தை மேற்கண்டவாறு இட விரும்புகிறேன். அது இங்குள்ள நடைமுறைக்கு உகந்ததெனில், மேற்கண்ட நிரல்களை, வார்ப்புருவுக்கு மாற்றித்தரவும். நன்றி.14:18, 6 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள்

தொகு

வணக்கம், தலைவரே, மலேசிய மண்ணிலும் தமிழ் உலக மண்ணிலும் தடம் பதித்த ஓர் அறிஞர் தமிழ்க்குயில் கலியபெருமாள் இன்று இயற்கை எய்தினார். இவரைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஒரு சகாப்தம் கலைகின்றது. அண்மையில் ஈப்போ கல்லுமலைக் கோயிலில் ஒரு திருமண விழா. நானும் என் மனைவி ருக்குமணியும் போயிருந்தோம். அவர் கால் பாதங்களைத் தொட்டு வணங்கினோம். அவர் அப்போது சொன்ன சொற்கள் ’எனக்கு பிறகு நீ வா’ என்று சொன்னார். என்ன மாதிரியான சொற்கள். ஓர் மகா அறிஞரின் சொல் வாசகங்கள். இதை எழுதும் போது என் நெஞ்சம் கனக்கின்றது.

அடுத்து, விக்கிப்பீடியாவைப் பற்றிய விழிப்புணர்வுகள் மலேசியாவில் நடைபெற வேண்டும். உங்கள் கருத்துகள். --ksmuthukrishnan 16:23, 8 சூலை 2011 (UTC)

முத்துக்கிருஷ்ணன், கா. கலியபெருமாள் அவர்கள் இறந்த செய்தி சுப.நற்குணனின் முகநூலில் இருந்து இப்போது தான் அறிந்தேன். அவரது கட்டுரையையும் இற்றைப்படுத்தியிருக்கிறேன். அவரைப் பற்றிய மேலதிக தகவல்கள் உங்களிடம் இருந்தால் அக்கட்டுரையில் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 22:49, 8 சூலை 2011 (UTC)Reply

It's a copyvio, it's the book cover of his biography, so you'll need to change it to non-free or delete. SpacemanSpiff 17:42, 10 சூலை 2011 (UTC)Reply

Deleted it.--சோடாபாட்டில்உரையாடுக 17:56, 10 சூலை 2011 (UTC)Reply
முல்க் ராஜ் ஆனந்த் -- தமிழ் விக்கியில் என் முதல் பங்களிப்பு. SpacemanSpiff 02:33, 11 சூலை 2011 (UTC)Reply
அட்டகாசம் :-)--சோடாபாட்டில்உரையாடுக 02:37, 11 சூலை 2011 (UTC)Reply
How are book titles written? e.g. is en:The English Teacher to be "த இங்லிச் டீச்சர்" or "ஆங்கில ஆசிரியர்"? SpacemanSpiff 03:26, 11 சூலை 2011 (UTC)Reply
within article text - Tamil transliteration with the original title in parenthesis. For article titles - Tamil transliteration alone, if the book hasnt been translated into tamil, Tamil translation title if the book has been translated. So for english teacher, within article text - தி இங்கிலீசு டீச்சர் (The English Teacher). The general recommendation is to avoid grantha characters while transliterating. (ஜ, ஷ, ஸ், ஹ, ஸ்ரீ)--சோடாபாட்டில்உரையாடுக 03:34, 11 சூலை 2011 (UTC)Reply
Aiyo, I justed used grantha (ஜ) in both articles I've created so far. I don't think "ராசா ராவ்" reads as well as "ராஜா ராவ்", but if it's against MOS/laws here, then feel free to change that (along with முல்க் ராஜ் ஆனந்த்). SpacemanSpiff 03:41, 11 சூலை 2011 (UTC)Reply

படிமத்தை எவ்வாறு மீள்விப்பது?

தொகு

பார்க்க: பேச்சு:கு. முத்துக்குமார். எவ்வாறு முதல் படிமத்தை மீள்விப்பது?--Kanags \உரையாடுக 10:09, 12 சூலை 2011 (UTC)Reply

ஒவ்வொரு பதிப்பும் படிம பக்கத்தில் அட்டவணையில் இருக்கும். அவற்றில் உள்ள “முன்னிலையாக்கு” தொடுப்பை சொடுக்கி பழைய பதிப்புக்கு முன்னிலையாக்கி விடலாம். இப்படத்தை தீக்குளித்த முத்துக்குமாரின் படத்துக்கு முன்னிலையாக்கியிருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 10:19, 12 சூலை 2011 (UTC)Reply
அவ்வாறுதான் முயற்சி செய்தேன். சரி வரவில்லை. எப்படியோ முத்துக்குமாரின் படிமத்தை முன்னிலைப் படுத்தியமைக்கு நன்றி.--Kanags \உரையாடுக 11:00, 12 சூலை 2011 (UTC)Reply

தானாகவே சேமிக்கவல்ல குறிப்பேடு

தொகு
  • இங்கு நானிருக்கும் இடத்தில் அடிக்கடி மின்தடை வருகிறது. எனது மின்கலனும் சரியில்லை. ஆகவே, தட்டச்சும் போது, தானாகவே சேமிக்கும் திறனுள்ள குறிப்பேடு ஏதேனும் உள்ளதா?படிப்பதில் கவனம் செலுத்தும் போது, சேமிக்க மறந்து விடுகிறேன்.
  • மற்றொரு அட்டவணைச் செயலியில் உள்ள கட்டங்கள்(columns)ஒரே அளவாக இருக்கிறது. ஒரு பத்தி(para) அதனுள் தட்டச்சுவது எப்படி?ஏனெனில், ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு அளவுகளில் தட்டச்ச வேண்டியுள்ளது.எடுத்துக்காட்டாக, ஒரு கட்டத்தில்

<gallery> இடும் போது அதிக இடம் தேவைப்படுகிறது. அடுத்துக்கட்டத்தில் 4,5 சொற்கள் உள்ளிடுவது எப்படி? CSVloader கொண்டு, தமிழகப் உயிரியல் பள்ளிப்பாடங்களை, அதிகத் தகவல்களுடன் பதிவேற்றவே கேட்கிறேன்.சில ஆயிரம் விலங்குகளையும், தாவரங்களையும் பதிவேற்றுவதே இலக்கு. 10:48, 12 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


1) open office இல் auto save தெரிவைத் தேர்வு செய்து, தானாக சேமிக்கும் கால இடைவெளியைக் குறைக்க இயலும் - http://plan-b-for-openoffice.org/intro/topic/option-set-auto-save-recovery-interval#screencast

http://www.bytebot.net/openoffice/faq.html#Package2

2)அட்டவணைச் செயலியில் பேட்டியுள்ளே எவ்வளவு வேண்டுமானாலும் தட்டச்சலாம். வெளியில் தெரியாது, ஆனால் இருக்கும். பெட்டியில் கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்து பாருங்கள் நீளமாக தட்டச்ச இயலும்.--சோடாபாட்டில்உரையாடுக 12:21, 12 சூலை 2011 (UTC)Reply
கூகுள் ஆவணங்களில் இந்த வசதி தன்னியல்பாக இருக்கிறது. --Natkeeran 13:18, 12 சூலை 2011 (UTC)Reply

தகவல்களுக்கு நன்றி.சோ.பா!நற்கீரன்!! வணக்கம்.14:15, 13 சூலை 2011 (UTC)உழவன்+உரை..


மேற்கோள்களை கட்டுரையின் உள்ளே இடுவது எவ்வாறு?

தொகு

சோடா பாட்டில், உதாரணமாக, பப்மெட்டில் உள்ள ஆய்வு வெளியீடுகளை மேற்கோள்களாக கட்டுரையினுள் கொடுக்க என்ன செய்ய வேண்டும்? விளக்க முடியுமா?--Nan 19:16, 16 சூலை 2011 (UTC)Reply

பின்வரும் எடுத்துக்காட்டைப் பாருங்கள். எந்த சொற்றொடர்/பத்திக்கு மேற்கோள் இடுக்வேண்டுமோ அதன் இறுதியில் <ref> </ref> என்ற டேகுகளுக்கு இடையே மேற்கோளை இடுங்கள். பின்பு கட்டுரையின் இறுதியில் “மேற்கோள்கள்” அல்லது “குறிப்புகள்” என்ற தனிப் பகுதியை உருவாக்கி அதில் {{reflist}} என்று இடுங்கள். இங்கு ஒரு நீளமான கையேடு en:Wikipedia:Citing sources உள்ளது. அதில் பல்வேறு சுட்டல் வழிமுறைகள் உள்ளன. (புத்தகம், பப்மெட், ஜேஸ்டார் போன்ற தளங்கள், செய்தித்தாள் என பல முறைகள் உள்ளன - ஆனால் பின்பற்ற வேண்டுமென்று அவசியமில்லை). --சோடாபாட்டில்உரையாடுக 19:32, 16 சூலை 2011 (UTC)Reply


சோடாபாட்டில் ஒரு விக்கிப்பீடியர்[1] அவருக்கு மூளையில்லை என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.[2]. அந்த ஆய்வு பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. [3]

பார்க்க: http://en.wikipedia.org/wiki/Template:Cite_journal

நன்றி. முயற்சி செய்து பார்க்கிறேன்--Nan 05:42, 17 சூலை 2011 (UTC)Reply

மேற்கோள்கள்

தொகு

Translate

தொகு

oops... sorry, i didnt knew about it. is there any translation tool? Karthikndr 06:29, 19 சூலை 2011 (UTC)Reply

its okay. there are few others in development like microsoft's. but all are in early developmental stages. Will take atleast a couple of years, before we see a decent beta version.--சோடாபாட்டில்உரையாடுக 06:36, 19 சூலை 2011 (UTC)Reply

வார்ப்புருவில் பிழை

தொகு

காமாட்சிபுரம் எனும் கட்டுரையில் ஊருக்கான வார்ப்புருவில் மக்களவைத் தொகுதி எனுமிடத்தில் தேனி என்று குறிப்பிட்டால் இரு முறை வருகிறது. மேலும் மக்களவை உறுப்பினர் எனுமிடத்தில் ஜேஎம் ஆருண்ரசீத் எனும் பெயரும் திருமதி ஹெலன் டேவிட்சன் எனும் பெயரும் தானியக்கமாக வருகிறது. இக்குறைபாட்டுக்குக் காரணம் என்னவாக இருக்கும்?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:02, 19 சூலை 2011 (UTC)Reply

இரண்டாவது விசயத்தை சரி செய்திருக்கிறேன். முதல் விசயத்தில் என்ன சிக்கல் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. இதனை வடிவமைத்தவர் மாகிர். அவரிடம் கேட்டுப் பாருங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 12:26, 19 சூலை 2011 (UTC)Reply
நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:01, 19 சூலை 2011 (UTC)Reply
மக்களவை உறுப்பினர்களின் வார்ப்புருக்கள் உருவாக்கப்படாமல் இருந்தது. உருவாக்கியிருக்கிறேன். மேற்கோள்கள் சேர்க்கவேண்டும். -- மாகிர் 06:52, 23 சூலை 2011 (UTC)Reply

குங்ஃபூ பல்லவன்

தொகு

sodabottle, is it now kunfu pallavan can become essay? i ellobarated essay. ushathunai book authors will be added. but one thing, sodabottle statement is considerable. because in my knowledge, except shoalin temple rockcut, no other rockcut say about bodhidharma. but all other documents accept bodhi is a pallavan prince and he discovered shoalin kungfu. broughton also accepted this statementதென்காசி சுப்பிரமணியன்

my suggestion about kungfu pallavan essay 1. change the essay title as shoalin kungfu pallavan. else can't 2. put it on wikiakkamதென்காசி சுப்பிரமணியன்

நீங்கள் பேச்சுப் பக்கத்தில் இட்டவற்றை போதி தருமன் கட்டுரையில் இணையுங்கள் (தலைப்பு “குங்ஃபூ பல்லவன்” என்றோ “ஷாலின் குங்ஃபூ பல்லவன்” என்றோ இருக்க முடியாது பெயர் தான் இருக்க முடியும்). நான் விக்கியாக்கம் செய்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:18, 22 சூலை 2011 (UTC)Reply

1.இந்தத் தகவலை வரலாற்று நூல்களில் பதிவு செய்துள்ளார்களா? பிற ஆய்வாளர்கள்/வரலாற்றாளர்கள் இது குறித்து ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்களா? என்பது கேள்வி. முதல் வெளியீடு இங்கிருக்க முடியாது.

answer.

ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.

2.விக்கிப்பீடியா ஒரு மூன்றாம் நிலை தரவு தளம். பிற ஊடகங்களில் உள்ளதை இங்கு தொகுத்து தருவது.

answer

MR. H.K.ARUN, shows one video in national geographic channel and one website, which told about bodhi dharma and he discovered shoalin martial arts. but that compile was removed. i don't know how it was? i request you to enclose that again.

3.அவர் தான் ஷாலின் குங்ஃபூ (அனைத்து குங்ஃபூ அல்ல, இவ்வகை மட்டும்) கற்றுத் தந்தாரா என்பது குறித்து ஆய்வாளர்களிடையே நிகழும் பல்வேறு கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவெ இது போலவே தமிழ் விக்கியில் உள்ள போதி தருமன் கட்டுரையிலும் பதிவு செய்யுங்கள்.

answer, one account only told bodhi is a persian. but it also accepts bodhi dicovered shoalin kungfu.

but that account also refused by broughton. it was mentioned below.

ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது

மேலும் அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றென்னிவிடுவதால், Yáng Xuànzhī (波斯國胡人 bō-sī guó hú rén) போதிதர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.

and also there is no account in persia about bodhi.

if any problem in edited essay please tell me, what are the problems to kungfu pallavan can't become an essay.தென்காசி சுப்பிரமணியன்

நீங்கள் மேற்சொல்லிய அனைத்தும் பொருத்தமானவையாக இருக்கின்றன. இவற்றை போதி தருமன் கட்டுரையில் இணையுங்கள் (தலைப்பு “குங்ஃபூ பல்லவன்” என்றோ “ஷாலின் குங்ஃபூ ப--சோடாபாட்டில்உரையாடுக 07:14, 26 சூலை 2011 (UTC)ல்லவன்” என்றோ இருக்க முடியாது பெயர் தான் இருக்க முடியும்). விக்கியாக்கம் தேவைப்படின் நான் செய்துவிடுகிறேன்.Reply

தற்போது போதி தருமன் கட்டுரையை பார்க்கவும். இதற்கு விக்கியாக்கம் தேவையா எனக்கூறவும்.தென்காசி சுப்பிரமணியன்

முதற்பக்க கட்டுரை

தொகு

மேற்படி வார்ப்புரு வழிமாற்றப்பட்டுள்ளது தானே. பேச்சுப் பக்கத்தில் மாற்றம் தேவையில்லையே.--Kanags \உரையாடுக 04:58, 23 சூலை 2011 (UTC)Reply

எக்காரணத்தாலோ, பகுப்பு இற்றையாக மறுக்கிறது. {{முதற்பக்க கட்டுரை}} என்ற வார்ப்புரு உள்ள பக்கங்களில் பகுப்பு சரியாகத் தோன்றினாலும் அப்பக்கங்கள் பகுப்பு:முதற்பக்க கட்டுரைகள் என்ற பக்கத்தில் பட்டியலிடப்படுகின்றன. சில நாட்களில் இற்றையாகி விடுமென்று பொறுத்த்ப் பார்த்தேன். ஆனால் ஆகவில்லை. எனவே வார்ப்புருவை மாற்றி வருகிறேன் (வார்ப்புருவை மாற்றினால், பகுப்பு உடனடியாக இற்றையாகி விடுகிறது)--சோடாபாட்டில்உரையாடுக 05:01, 23 சூலை 2011 (UTC)Reply
இன்னும் முன்னூறு பக்கங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டி உள்ளது போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 05:51, 23 சூலை 2011 (UTC)Reply
ஆம் awb வில் பட்டியலிட்டு வைத்திருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டிவிடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:11, 23 சூலை 2011 (UTC)Reply

deliverable தமிழ் என்ன?

தொகு

deliverable ஒரு பரிந்துரை தர முடியுமா? அளி பொருள், அளிப்புப் பொருள், இறுதிப் பொருள் ???--Natkeeran 16:00, 23 சூலை 2011 (UTC)Reply

அளி பொருள் பொருத்தமாகப் படுகிறது. --சோடாபாட்டில்உரையாடுக 16
15, 23 சூலை 2011 (UTC)

ஆன்மிகவாதிகள்

தொகு

ஆன்மீகவாதிகள், ஆன்மிகவாதிகள் எது சரி? ஆன்மிகம்தான் சரியானது என்று பலரும் சொல்கிறார்கள். பகுப்பு:ஆன்மிகவாதிகள் எனும் தலைப்பில் நான் தனிப்பக்கம் ஒன்றை உருவாக்கி விட்டேன். பகுப்பு: ஆன்மீகவாதிகள் என்பதில் நிறைய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது. பகுப்பு:ஆன்மிகவாதிகள் பக்கத்திற்கு நகர்த்த முடியவில்லை. வரலாறு மாற்றமின்றி மாற்ற என்ன செய்யலாம்? --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:22, 28 சூலை 2011 (UTC)Reply

ஒவ்வொரு கட்டுரையிலும் பகுப்பை மாற்ற பேண்டும். awb கொண்டு தன்னியக்கமாக எளிதில் மாற்ற முடியும். நாளை நான் awb ஓட்டி மாற்றி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:11, 28 சூலை 2011 (UTC)Reply
எனது கணினியில் awb தரவிறக்கம் செய்துள்ளேன். ஆனால் அதை நிறுவமுடியவில்லை. “unable to find a version of the run time to run this application” என வருகிறது. என்ன செய்யலாம்?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:38, 29 சூலை 2011 (UTC)Reply
இயக்க .net framework 2.0 மென்பொருள் கணினியில் நிறுவபட்டிருக்க வேண்டும். இங்கிருந்து தரவிரக்கி நிறுவிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் awb இயங்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 04:49, 29 சூலை 2011 (UTC)Reply

விக்கிப்பீடியாவில் படங்கள்

தொகு

தங்கள் தகவலுக்கு நன்றி. நான் விக்கிபீடியாவிற்க்கு புதிது என்பதால் படங்களை பதிவேற்றுவது தொடர்பான விதிமுறைகள் சரிவர தெரியவில்லை. பிற தளங்களில் வெளியான படங்களை, அந்த தளத்தின் உரிமையளரிடம் படங்களை பகிர்ந்து கொள்வதர்கான அனுமதி பெற்ற பின் அந்த படங்களை பதிவேற்றலாமா?

மேலும் விக்கிப்பீடியாவில் படத்தை பதிவேற்றிய பின் அதன் பதிப்புரிமை பற்றி எவ்வாறு எழுதுவது? --கிருஷ்ணபிரசாத்/உரையாடுக. 12:39, 31 சூலை 2011 (IST)


ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள படங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்தலாமா?, சில ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை தமிழில் எழுதும் போது அந்த படிமத்தின் பெயரையே பயன்படுத்தி பார்தேன் ஆனால் படம் வரவில்லை. ரசினிகாந்து போன்ற நடிகர்களின் ஆங்கில மற்றும் தமிழ் விக்கிப்பீடியாக்களில் ஒரே படிமம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை எவ்வாறு செய்வது? -- கிருஷ்ணபிரசாத் 12:27, 31 சூலை 2011 (UTC)Reply

சந்தேகம்

தொகு

நான் வேலை ஓய்வு நேரங்களில் விக்கியில் இயன்ற அளவு பங்களிக்கிறேன்....நீங்கள் எந்நேரமும் இணைப்பிலேயே உள்ளீர்களே....எப்படி....நீங்கள் விக்கியின் நேரடி ஊழியரா?   --Msudhakardce 04:52, 1 ஆகத்து 2011 (UTC)Reply

:-) :-). விக்கி நண்பர்கள் பலருக்கும் என் குடும்பத்தினருக்கும் இதே சந்தேகம் உண்டு :-). என் நிஜ வேலை பணி இணைய வழி பணி. எனவே பகல் முழுவதும் இணையத்தில் இருக்க வேண்டும். உலாவியில் வேலை செய்வதால், பகல் முழுக்க விக்கி பக்கத்திலேயே இருக்கிறது. பிற சமூக வலைத் தளங்களை அறவே தொடுவதில்லை. டிவிட்டர், ஃபேஸ்புக், வலைப்பதிவு, யூடியூப் எல்லாம் ஒரு நாளுக்கு ஐந்து நிமிடத்துக்கு மேல் தொடுவது கிடையாது. இதற்கு பதில் முன்னர் அவற்றில் செலவிட்ட நேரத்தை விக்கியில் செலவிடுவதால், பணியற்ற நேரத்திலும் இங்கு வேலை செய்ய இயலுகிறது. இதனால் எப்போதும் இங்கிருப்பது போல இருப்பது ஒரு பிம்பம். சில மணி நேரங்களுக்கு ஒரு சில தொகுப்புகள் என பங்களிப்பு இருக்கும், பின் வேறு வேலையை பார்க்கப் போய்விடுவேன். சில மணி நேரம் கழித்து மீண்டும் விக்கி. ஆனால் காண்பவருக்கு நான் கடுமையாக விக்கிக்கு உழைப்பது போல ஒரு பிம்பம் :-) --சோடாபாட்டில்உரையாடுக 05:01, 1 ஆகத்து 2011 (UTC)Reply
Return to the user page of "Sodabottle/தொகுப்பு07".