வாருங்கள்!

வாருங்கள், Spharish, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- தமிழ்க்குரிசில் (பேச்சு) 20:02, 13 சனவரி 2016 (UTC)

வணக்கம், Spharish!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--~AntanO4task (பேச்சு) 01:14, 19 செப்டம்பர் 2021 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (19 செப்டம்பர் 2021)தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டம் முடிவடைய இன்னும் 12 நாட்கள் உள்ளன. தற்போது தமிழ் விக்கிப்பீடியா 11 போட்டியாளர்களுடன் 550 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 32 போட்டியாளர்களுடன் 514 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 225 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 159 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

குறிப்பு: கட்டுரை நகர்த்தப்பட்டால், மறக்காமல் பவுண்டன் கருவியில் இணைத்துவிடுங்கள். ஆகவே, தலைப்பை மிகவும் சரியாகத் தேர்ந்தெடுங்கள். கட்டாயமாக, முக்கிய இலக்கண விதிகளை மீற வேண்டாம். மெய்யெழுத்திலும் ஆயுத எழுத்திலும் முதல் எழுத்து வருமாறு கட்டுரை எழுதுவதைத்தவிருங்கள். கட்டுரை குறைந்தது 2-3 வரையான நம்பகமான மூலங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

கலைக்களஞ்சியக் கட்டுரைதொகு

வணக்கம், Spharish!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 14:23, 25 செப்டம்பர் 2021 (UTC) en:Wikipedia:Biographies of living persons --AntanO (பேச்சு) 14:28, 25 செப்டம்பர் 2021 (UTC)

en:Wikipedia:Notability (people), en:Wikipedia:Notability (academics) --AntanO (பேச்சு) 14:30, 25 செப்டம்பர் 2021 (UTC)

September 2021தொகு

  வணக்கம், உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. ஆயினும், நாம் புத்தாக்க ஆய்வை ஏற்பதில்லை. நம்பகமான, வெளியிடப்பட்ட மூலங்கள் இல்லாத தரவுகள், குற்றச்சாட்டுகள், எண்ணங்கள், தனிப்பட்ட வினையறிவு போன்றவை புத்தாக்க ஆய்வில் அடங்கும். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. ~AntanO4task (பேச்சு) 15:21, 25 செப்டம்பர் 2021 (UTC)

  தயவு செய்து புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்க்காதீர்கள். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. ~AntanO4task (பேச்சு) 06:59, 27 செப்டம்பர் 2021 (UTC)

யூடியுப் போன்ற சமூக வலைத்தளங்கள், விற்பனைத் தளங்கள் ஆகியன நம்பகமாக மூலங்கள் அல்ல. அவற்றை மீண்டும் மீண்டும் இணைக்க வேண்டாம். --~AntanO4task (பேச்சு) 07:01, 27 செப்டம்பர் 2021 (UTC)


ஸ்டாலினுக்கு ஒரு பக்கம்தொகு

ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களுக்கு ஒரு பக்கம். மேம்படுத்த உதவவும். நன்றி! - CXPathi (பேச்சு) 17:39, 5 அக்டோபர் 2021 (UTC)

நிச்சயமாக! Spharish (பேச்சு) 13:11, 6 அக்டோபர் 2021 (UTC)

October 2021தொகு

  வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவில் யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், தக்க காரணமின்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக்கூடாது. விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையின் தலைப்பு சரியானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும், அனைவரும் எளிதில் அறிந்து கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நடப்பு பெயர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் பொதுவாக, ஒரு பக்கம் ஒரு புதிய தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 03:13, 7 அக்டோபர் 2021 (UTC)

வணக்கம் AntanO  ! தகவலுக்கு நன்றி. பேரா. தருமராஜ் அவர்களின் பக்கத்தில், தலைப்பை மாற்றும் படி ஒரு பரிந்துரை இருந்தது. அதன் படியே மாற்றினேன். இனி வரும் காலங்களில் பேச்சுப் பக்கத்தில் உரையாடி பின்னர் மாற்றுகிறேன். Spharish (பேச்சு) 04:12, 7 அக்டோபர் 2021 (UTC)

  வணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி அமையாததால் நீக்கப்படலாம்/நீக்கப்பட்டது. தயவுசெய்து மணல் தொட்டியைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுங்கள். காண்க: முதல் கட்டுரை. நன்றி. AntanO (பேச்சு) 15:20, 20 அக்டோபர் 2021 (UTC)

தாங்கள் ஸ்விக்கி பக்கத்தை குறிப்பிடுகிறீர்களா? அந்த பக்கத்தை நீக்காமல் அதை செழுமைப் படுத்த பரிந்துரைகள் கூற முடியுமா? ஓரிரண்டு ஆங்கில சொற்களைத்(in transliteration) தவிர ஆங்கிலம் இல்லாமலேயே எழுதியுள்ளேன். மேலும் பக்கத்தை உருவாக்கி சில நிமிடங்களே ஆகின்றன. எனவே நேரடியாக நீக்காமல் பரிந்துரைகளை கூறினால் மிகவும் உதவியாக இருக்கும். Spharish (பேச்சு) 15:31, 20 அக்டோபர் 2021 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்படும். கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாக கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம்.--AntanO (பேச்சு) 15:35, 20 அக்டோபர் 2021 (UTC)
மேலும் தானியங்கி மொழியை இயன்றவரை சீரமைத்துள்ளேன். தாங்கள் ஏற்கனவே பக்கத்தை நீக்கியுள்ளதை கவனித்தேன். தயவு கூர்ந்து நீக்கலை ரத்து செய்யவும். பக்கத்தை மேலும் செழுமைப் படுத்துகிறேன். Spharish (பேச்சு) 15:37, 20 அக்டோபர் 2021 (UTC)
தனியங்கி கட்டுரைகள் உடன் நீக்கப்படும். --AntanO (பேச்சு) 15:40, 20 அக்டோபர் 2021 (UTC)
ஸ்விக்கி தமிழ்க் கட்டுரையின் மூலத்தையாவது மீட்டு எடுக்க முடியுமா? அதை மணல்தொட்டியில் செழுமைப் படுத்த முயல்கிறேன். மேலும் இந்தக் கட்டுரையைக் உருவாக்கக் கூட நான் கூகுள் மொழிபெயர்ப்பு கருவியை மட்டும் பயன்படுத்த வில்லை. அதை இயல்பு நடையில் ஆக்க பல முயற்சிகளை செய்தேன். ஆனால் பக்கம் நீக்கப்பட்டதால் அதன் சான்று இப்போது என்னிடம் இல்லை. தயவு கூர்ந்து பக்கத்தின் மூலத்தை மட்டுமாவது மீட்டுத் தர உதவியை கேட்டுக் கொள்கிறேன். நன்றி. Spharish (பேச்சு) 15:47, 20 அக்டோபர் 2021 (UTC)

பக்கங்களை இணைத்தல் தொடர்பாகதொகு

வணக்கம் ஒரு பக்கத்தை இன்னொரு பக்கத்தில் இணைக்க வேண்டுமானால், அதற்குரிய வார்ப்புருவை அந்த கட்டுரையில் இடவும். எடுத்துக்காடுக்கு தமிழ் எனும் கட்டுரையை தமிழர் எனும் கட்டுரையுடன் இணைக்க விரும்பினால் 'தமிழ்' என்னும் பக்கதை தொகுத்து {{mergeto|தமிழர்}} என்று வார்ப்புரு இடவும். இணைக்கும் வேளையை நிருவாகி ஒருவார் செய்துவிடுவார். பேச்சுப்பக்கத்தில் தெரிவித்தால் இணைப்புக் கோரிக்கை கவனிக்காது விடப்படலாம்.--அருளரசன் (பேச்சு) 13:57, 19 அக்டோபர் 2021 (UTC)

தகவலுக்கு நன்றி! நீங்கள் கூறிய வார்ப்புருவை தேவையான பக்கத்தின் துவக்கத்திலேயே(முதல் பத்திக்கு முன்பாக) கொடுக்கலாம் அல்லவா? Spharish (பேச்சு) 14:13, 19 அக்டோபர் 2021 (UTC)
ஆம் துவக்கத்திலேயே கொடுத்துவிடுங்கள்.--அருளரசன் (பேச்சு) 15:00, 19 அக்டோபர் 2021 (UTC)
பக்கங்களில் உள்ள பிழைகளை எப்படி தெரிவிப்பது. எ.கா. : நான் உருவாக்கிய இந்த பக்கத்தில் ( அகத்மாத்தோர் ), Invalid <ref> tag பிழை உள்ளது. இதை நிருவாகியிடம் தெரிவிப்பதற்கு ஏதேனும் வார்ப்புரு உள்ளதா? தற்போதைக்கு நான் உரையாடல் பக்கத்தில் இதற்கான ஒரு சிறு குறிப்பை கொடுத்துள்ளேன். Spharish (பேச்சு) 08:00, 20 அக்டோபர் 2021 (UTC)
மொழிபெயர்ப்பு கருவிகொண்டு மொழிபெயர்த்து கட்டுரைகளை உருவாக்கும்போது இதுபோன்ற மேற்கோள் பிழைகளை ஏற்படுகின்றன. நீங்கள் உருவாக்கிய கட்டுரையையும், ஆங்கிலக் கட்டுரையையும் திறந்தவைத்துக் கொண்டு இரண்டு பக்கங்களில் உள்ள மேற்கோள்களையும் ஒப்பிட்டு ஆங்கிலக் கட்டுரையில் உள்ள மேற்கோள்களை வெட்டி தமிழ் கட்டுரையில் ஒட்டி சரிசெய்தால் இந்த சிக்கல் நீங்கும் அருளரசன் (பேச்சு) 08:27, 20 அக்டோபர் 2021 (UTC)
நன்றி! இது போன்ற பிழைகளை எப்படி நிருவாகியிடம் தெரிவிப்பது. பொதுவான பிழைகளுக்கு வார்ப்புரு உருவாக்க முடியுமா Spharish (பேச்சு) 08:29, 20 அக்டோபர் 2021 (UTC)
இவற்றை நீங்களாகவே திருத்துவதே நல்லது. அகத்மாத்தோர் கட்டுரையைத் திருத்தியிருக்கிறேன். பாருங்கள். நான் விக்கி மொழிபெயர்ப்புக் கருவியை என்றுமே பயன்படுத்தியது கிடையாது.--Kanags \உரையாடுக 09:27, 20 அக்டோபர் 2021 (UTC)
உதவிக்கு நன்றி! தமிழ் விக்கிபீடியாவின் Development teamஐ எப்படி அணுகுவது என கூற இயலுமா. நான் தமிழ் விக்கியிற்கான பாட்களை (Bot) நிரலாக்கம் மூலம் உருவாக்குவதில் ஆர்வமாக உள்ளேன். Spharish (பேச்சு) 10:24, 20 அக்டோபர் 2021 (UTC)

தானியங்கித் தமிழாக்கம்தொகு

--AntanO (பேச்சு) 13:15, 20 அக்டோபர் 2021 (UTC)

வணக்கம், Spharish!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்காக வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 13:20, 20 அக்டோபர் 2021 (UTC)

மேலேயுள்ள வழிகாட்டல்களைக் கவனியுங்கள். தானியங்கித் தமிழாக்கம் உடனடியாக நீக்கப்படும். இதுதான் நடைமுறை. கட்டுரையாக்க அடிப்படைகள் பரிந்துரையின்படி செயற்பட வேண்டும். ஏற்கெனவே உள்ள கட்டுரைகளைத் திருத்திய பின் புதுக்கட்டுரைகள் உருவாக்குதல் நன்று. தமிங்கிலம் வேண்டாம். இலணக்கப்பிழைகள் கட்டுரைகளில் காணப்படுகின்றன. இவை அணைத்தும் திருத்தப்பட வேண்டும். --AntanO (பேச்சு) 15:39, 20 அக்டோபர் 2021 (UTC)
கட்டுரையாக்க அடிப்படைகள் பரிந்துரையின்படி செயற்பட வேண்டும்.--AntanO (பேச்சு) 17:05, 1 நவம்பர் 2021 (UTC)
வணக்கம்! தாங்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கட்டுரையைப் பற்றி கூறுகிறீர்களா? நான் கூகுள் கோட் ஜாம் பக்கத்தில் ஒரு உரையாடலைத் துவக்கியுள்ளேன்: கட்டுரைகளை தமிழ்ப்படுத்தும் போது அதை இயல்பு நடையில் மாற்றுகிறேன். ஆனால் பெயர், நாடு போன்ற எளிமையான தகவல்களைக் கொண்ட பட்டியல்களை கருவியே மொழியாக்க வேண்டும். ஆனால் கூகிள் மொழிபெயர்ப்புக் கருவி சிறிய பட்டியல்களை மட்டுமே மொழியாக்கம் செய்கிறது. மாறாக பெரிய பட்டியல்களை ஆங்கிலத்திலேயே விட்டுவிடுகிறது. கூகுள் கோட் ஜாம் பக்கத்திலும் 2 பட்டியல்களை கருவியே மொழி பெயர்த்து. ஆனால் ஒரு பட்டியல் ஆங்கிலத்திலேயே இருந்தது. அதை பற்றி உரையாடல் பக்கத்தில் உரையாடுவதற்காவே அதை நீக்காமல் வைத்திருந்தேன்.
இதற்கு இரண்டு தீர்வுகள் உள்ளன :
1) கூகிள் மொழிபெயர்ப்பு-தமிழ் விக்கியில் உள்ள தொழில்நுட்ப சிக்கலை போக்குதல். இதற்கு விக்கி கண்காணிப்பாளர் அல்லது தொழில்நுட்ப வல்லுனரின் ஆலோசனை தேவை.
2) பட்டியல்களை வேறொரு எளிமையான முறையில் மொழியாக்கம் செய்து, பட்டியலின் வடிவம் மாறாமல் விக்கியில் உள்ளிடுவது. இதையும் எப்படி செய்வதென்று எனக்கு விளங்கவில்லை.
எனவே, இதற்கு தாங்களும், விக்கி தொழில்நுட்பக் குழுவும் உதவுமாறு பணிவுடன் கோரிக்கை வைக்கிறேன். Spharish (பேச்சு) 19:39, 1 நவம்பர் 2021 (UTC)
எல்லாமே கருவியே சரிசெய்துவிடும் என்றால் நமது வேலைதான் என்ன சா அருணாசலம் (பேச்சு) 03:10, 2 நவம்பர் 2021 (UTC)
சா அருணாசலம் அவர்களே, நாம் சொற்றொடர்களையும் கட்டுரைகளையும் இயல்பு நடையில் கொண்டு வரலாம். ஆனால் உதாரணத்திற்கு, ஒரு பதக்கப் பட்டியலில் 100 நாடுகளின் பெயர்கள் உள்ளதென்றால் அந்த 100 நாடுகளையும் நாம் ஒவ்வொன்றாக தமிழ்ப் படுத்துவது நேர விரயம் என நான் கருதுகிறேன். ஏனென்றால், அதை கருவியால் மிக எளிமையாக தமிழ்ப்படுத்த முடியும். ஆனால், இந்த பட்டியல் மொழிபெயர்ப்பில் ஒரு சிறிய கோளாறு உள்ளது போல் தெரிகிறது. இதைத் தமிழ் விக்கியின் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியால் மிக எளிதில் நீக்கலாம். இதை போல ஆயிரக்கணக்கான பெரிய பட்டியல்களை சிக்கலின்றி மொழிபெயர்க்க முடியுமென்றால் நமக்கு எவ்வளவு நேர மிச்சம் என எண்ணிப் பாருங்கள்!!

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.

என்கிறார் நமது வள்ளுவர். பட்டியல்களை மொழியாக்கம் செய்வது போன்ற அடிப்படை செயல்களை நாம் கருவியின் கண் விட்டுவிடுதல் சிறப்பு என நினைக்கிறன். பட்டியல் உள்ள பக்கங்களின் மற்ற பகுதிகளை(சொற்றொடர்களை) நிச்சயம் நாம் சரி பார்க்க வேண்டும் என்பதையும் நான் உணர்ந்துள்ளேன். Spharish (பேச்சு) 09:46, 2 நவம்பர் 2021 (UTC)
கட்டுரையாக்க அடிப்படைகள்
  • கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருத்தல்.
  • தகுந்த ஆதாரம் (மேற்கோள்) முறையாக இணைக்கப்பட்டிருத்தல்.
  • சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருத்தல்.
  • பிறமொழி விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அதனை சரியான விக்கித்தரவில் இணைத்தல்.
  • இயந்திர மொழிபெயர்ப்பை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்தல்.
  • இலக்கணம் மீறாது எழுதல்

மேலே குறிப்பிட்ட விடயங்கள் கட்டுரையில் உள்வாங்கப்பட வேண்டும். ஆகவே இப்பரிந்துரைகளை உங்கள் கட்டுரையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நீங்கள் உருவாக்கும் கட்டுரையில் தமிங்கிலம், இலக்கணப்பிழைகள் காணப்படுகின்றன. எ.கா: மதன் கௌரி கட்டுரையில் உள்ள ப்ளாக். ஆகவே கட்டுரையாக்க அடிப்படைகளில் தேர்ச்சி பெற்ற பின் தொழினுட்ப விடயங்கள் குறித்து உரையாடலாம். --AntanO (பேச்சு) 02:11, 2 நவம்பர் 2021 (UTC)

ப்ளாக் ஷீப் என்பது நிறுவனத்தின் பெயராகும். எனவே அதை ஆங்கிலத்திலேயே கொடுத்துள்ளேன். எனது மற்ற கட்டுரைகளையும் மீண்டுமொருறை சரிபார்க்கிறேன். தொழில்நுட்ப விடயங்கள் எனக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்பதால் அதை பற்றிய உரையாடலை துவக்க ஆர்வமாக உள்ளேன். மேலும், நான் ஒரு கணினி பொறியாளன் என்பதால், தமிழ் விக்கியில் உள்ள மற்ற தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைத்து பணியாற்றி தொழிநுட்ப சவால்களை நீக்க ஆவலாகவும் தயாராகவும் உள்ளேன். Spharish (பேச்சு) 09:32, 2 நவம்பர் 2021 (UTC)
மொழிமுதல் எழுத்துக்கள் - மெய்யெழுத்து மொழிமுதலாக வருவது பிழை. அது திருத்தப்பட வேண்டும். AntanO (பேச்சு) 03:18, 3 நவம்பர் 2021 (UTC)
குறிப்பிட்டமைக்கு நன்றி! மற்ற கட்டுரைகளையும் சரி பார்க்கிறேன். Spharish (பேச்சு) 03:57, 3 நவம்பர் 2021 (UTC)

லெவி ரோஸ்மன்தொகு

லெவி ரோஸ்மன் - ஒருவரைப் பற்றி அவரது கட்டுரைப் பக்கத்திலேயே எழுதும் போது அவரை இவர், இவரை, இவருடைய, என்று எழுதுங்கள். லெவி ரோஸ்மன் கட்டுரை இல்லாது வேறொரு கட்டுரை என்றால் அவர், அவருடைய, அவரது என்று குறிப்பிடலாம். --சா அருணாசலம் (பேச்சு) 17:38, 8 நவம்பர் 2021 (UTC)

குறிப்பிட்டமைக்கு நன்றி! பல நாட்களாக இந்த சந்தேகம் இருந்தது. Spharish (பேச்சு) 17:45, 8 நவம்பர் 2021 (UTC)
மொழிமுதல் எழுத்துக்கள் அடிப்படையில் கட்டுரைத்தலைப்பு தவறு. இலெவி ரோசுமன் சரியாக இருக்கும். சா அருணாசலம் (பேச்சு) 17:52, 8 நவம்பர் 2021 (UTC)
நன்றி! அதையும் சிறிது நேரத்தில் மாற்றி விடுகிறேன். Spharish (பேச்சு) 18:12, 8 நவம்பர் 2021 (UTC)
வணக்கம் அருணாசலம் அவர்களே. மேற்கூறிய தொகுப்புகளை செய்துவிட்டேன். Spharish (பேச்சு) 12:02, 11 நவம்பர் 2021 (UTC)

டிக்ரான் பெட்ரோசியான்தொகு

மீண்டும் நீங்கள் மொழி முதலெழுத்துக்களை நன்கு கவனித்து பின்பு கட்டுரையைத் துவங்க வேண்டும் --சா அருணாசலம் (பேச்சு) 17:15, 13 நவம்பர் 2021 (UTC)

கே.எஸ்.ஐதொகு

கே.எஸ்.ஐ ஒவ்வொரு எழுத்துக்கிடையில் இடைவெளி இருக்க வேண்டும். மேலும் கவனிக்க:விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு----சா அருணாசலம் (பேச்சு) 07:03, 24 நவம்பர் 2021 (UTC)

@சா அருணாசலம் நன்றி! கடைசி எழுத்தான 'ஐ'ற்குப் பின்னரும் புள்ளியும் இடைவெளியம் வேண்டுமா? அதாவது 'கே. எஸ். ஐ. ' ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 08:52, 24 நவம்பர் 2021 (UTC)
பெயரிடல் மரபில் குறிப்பிட்டுள்ளபடி (கே. எஸ். ஐ) என்பது சரி. நீங்கள் பெயரிடல் மரபு பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவற்றைப் படித்தாலே தெரியும்.
(கே. எஸ். ஐ.) என்று இப்படிப் பெயரிடக்கூடாது-- சா அருணாசலம் (பேச்சு) 09:32, 24 நவம்பர் 2021 (UTC)
@சா அருணாசலம் நன்றி. ஏ. ஆர். ரகுமான் பெயரில் 'ஆர்' இன் கடைசியிலும் புள்ளி வருவதால் உறுதிப்படுத்திக்கொண்டேன். கே.எஸ்.ஐ பெயரில் ஐ என்பதும் முதல் எழுத்து என்பதால் இந்த சந்தேகம். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 11:27, 24 நவம்பர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Spharish&oldid=3323166" இருந்து மீள்விக்கப்பட்டது