வரவேற்பு மற்றும் கோரிக்கை தொகு

அன்பு நண்பரே! வணக்கம்!

தமிழ் விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறேன். ஆலமரத்தடியில் நீங்கள் எழுதியிருந்ததைப் படித்தேன். உங்கள் தணியா ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்! உங்கள் தவற்றை ஒப்புக் கொண்டு பிழையின்றி எழுதுவது பற்றிக் கற்றுக் கொள்ள முன்வந்திருப்பது நன்று!

ஆலமரத்தடியில் கூறியுள்ளபடி நீங்கள் உடனே திரு. ரவிசங்கர் அவர்களைத் தொடர்பு கொண்டு கற்றுக் கொள்ளத் தொடங்குங்கள். வியக்க வைக்கக்கூடிய உதவும் உளப்பாங்கு கொண்டவர் அவர். பழகிப் பாருங்கள் புரியும்!

அதே நேரம், சரியாக எழுதக் கற்றுக் கொள்ளும் வரை நீங்கள் எந்தப் பங்களிப்பும் செய்யாதிருப்பது நல்லது என்பது என் பணிவன்பான கருத்து. நன்றி! வணக்கம்!--இ.பு.ஞானப்பிரகாசன் 02:17, 5 ஜூன் 2010 (UTC)

சூரியப்பிரகாஷ், உங்கள் கட்டுரைகளை நீக்கிவிடலாம் என்று கருத்துக் கூறியவர்களில் நானும் ஒருவன். புதியவர்கள் எழுதும் கட்டுரைகளை அவை ஓரளவுக்கேனும் தகுதியாக இருக்குமாயின் அவற்றை நாங்கள் உடனடியாக நீக்குவதில்லை. முடிந்தவரை பிற பயனர்கள் அவற்றைத் திருத்தி விக்கிப்பீடியாவின் வடிவத்துக்கு மாற்றி விடுவார்கள். உங்களுடைய கட்டுரைகள் பலவற்றை நானும் உரிய வடிவத்துக்கு மாற்றியிருக்கிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் உங்களைப் பதிவு செய்துகொண்டால் உங்கள் பேச்சுப் பக்கங்களூடாகப் பிற பயனர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைக் கூற முடியும். அதற்கும் வழியில்லாமல் இருந்தது. நீங்களும் தொடர்ந்தும் உங்கள் பழைய பாணியிலேயே எழுதியதால்தான் உங்கள் கட்டுரைகளை நீக்கும் பேச்சு எழுந்தது. இப்போது உங்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள். மற்றப் பயனர்களுடன் தொடர்புகளைப் பேணிக் கொள்ளுங்கள். விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்கு நீங்கள் தீவிர ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புக்களைத் தொடருங்கள். வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 04:34, 5 ஜூன் 2010 (UTC)

நானும் நீங்கள் குறிப்பிடும், நீக்கப்பட வேண்டிய கட்டுரையை எழுதியவரும் வெவ்வேறு! தொகு

நான் தெரியாமல் ஆலமரத்தடியில் மேலே என்ன உள்ளது என்பதைப் பார்க்காமலேயே அவசரத்தில் எழுதி விட்டேன். நீங்கள் சுட்டிய பின்னே எம்மால் அப்பிழைதனை அறிய முடிந்தது! இனி யாம் ஆலமரத்தடியிலோ வேறெங்கோ தலைப்பின்றி எதையும் எழுதப் போவதில்லை! நீங்கள் அத்திரைக் கட்டுரைகள் என்று எதையோ அழிக்கப் போவதாய்க் கூறி இருந்தீர்...அதை உம் விருப்பம் போல் செய்யலாம். எமக்கும் அவர்க்கும் தொடர்பில்லை! --ச.அ. சூர்ய பிரகாஷ். 11:40, 7 ஜூன் 2010 (UTC)

தவறான இடத்தில் உங்கள் கருத்தைத் தெரிவித்ததனால் இந்தத் தவறு ஏற்பட்டு விட்டது. அதனால் பரவாயில்லை. உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் ஒத்தாசைப் பக்கத்தில் தயங்காமல் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 11:48, 7 ஜூன் 2010 (UTC)


என் புதிய கட்டுரை தொகு

வாருதல்வகை புரையூடுருவு மின்னோட்ட நுண்ணோக்கியைப் பற்றி நான் எழுதியுள்ளேன்.படித்துப் பார்த்து அறிவுரை கூறவும்...--ச.அ. சூர்ய பிரகாஷ். 08:53, 14 ஜூன் 2010 (UTC)

Surya Prakash.S.A., தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி. வாருதல் வகை புரையூடுருவு மின்னோட்ட நுண்ணோக்கி என்று நீங்கள் கூறுவது Scanning Tunneling மைக்ராஸ்கோப்பையா?--பரிதிமதி 17:48, 14 ஜூன் 2010 (UTC)

ஆம் திரு. இரவி சங்கர் அவர்களே ! நீங்கள் கூறுவது சரி!

தொகுக்கப்பட்டது! தொகு

நான் வாருதல்வகை புரையூடுருவு மின்னோட்ட நுண்ணோக்கியைத் தொகுத்துள்ளேன்! படித்துப் பார்த்துக் கருத்து கூறவும். அது "நேனோ தொழில்நுட்பம்" எனும் கட்டுரையில் ஓர் சிவப்பு நிறத்துடன் இன்னும் எழுதப்படாமல் இருந்தது! அதை அங்கிருந்து மீள்வழிப்படுத்தி எழுதி உள்ளேன்...படித்துக் கருத்துக் கூறவும்!
இது நான் மென்மேலும் பிழையின்றி கட்டுரைகள் எழுத உதவும்! --ச.அ. சூர்ய பிரகாஷ். 14:34, 14 ஜூன் 2010 (UTC) --சூர்ய பிரகாசு.ச.அ. 04:27, 15 ஜூன் 2010 (UTC)

பெயர் மாற்றம் தொகு

நான் என் பயனர் பெயரை மாற்ற விரும்புகிறேன். விக்கியில் அதற்கு வழி உள்ளதா? இருப்பின் கூறுங்களேன்! மேலும் நான் எத்தகைய பயனர் என்பதையும் அறிய விரும்புகிறேன். அதாவது நான் அங்கீகரிக்கப்பட்டு விட்டேனா அல்லது வெறுமனே உள்ளேனா என்பதை அறிய விரும்புகிறேன்! நான் இன்னும் அங்கீகரிக்கப்படாமலிருப்பின் என்னை விரைவில் அங்கீகரிக்குமாறு நிர்வாகியைக் கேட்டுக் கொள்கிறேன்! --சூர்ய பிரகாசு.ச.அ. 14:47, 14 ஜூன் 2010 (UTC)

குரோமாக்னன் தொகு

நான் விக்கியில் குரோமாக்னன் என்ற பெயரில் கட்டுரை எழுதி உள்ளேன்.. படித்துப் பார்த்து அறிவுரை கூறவும் அல்லது திருத்த விருப்பப்படின் திருத்தி விடவும்...--சூர்ய பிரகாசு.ச.அ. 15:59, 16 ஜூன் 2010 (UTC)

உங்கள் கட்டுரை பார்த்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். எற்கனவே இது பற்றிய குறுங்கட்டுரை ஒன்று இருந்தது. அதனுடன் இதனை இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 12:30, 21 ஜூன் 2010 (UTC)

பயனர் பெயர் மாற்றம் தொகு

உங்கள் பயனர் பெயரை மாற்ற முயன்றேன். ஆனால், ஏற்கனவே பன்மொழி விக்கிளில் உங்கள் பயனர் பெயர் பதிவாகியுள்ளதாக அறிந்தேன். நீங்கள் வேறு விக்கிக்களில் பங்களித்துள்ளீர்களா? ஏனெனில், இங்கு பெயரை மாற்றினால் உங்கள் மற்ற விக்கிப் பங்களிப்புகளுடனானத் தொடர்பு அறுபடும். -- சுந்தர் \பேச்சு 06:22, 21 ஜூன் 2010 (UTC)

சரி...வேண்டாம் விட்டுவிடுங்கள்...Surya Prakash.S.A. -வே இருந்துவிட்டுப் போகட்டும்! தங்கள் முயற்சிக்கு நன்றி! --122.165.222.83 06:42, 21 ஜூன் 2010 (UTC)

டியான்ஏ-1 கணினி தொகு

பாராட்டுகள் சூர்ய பிரகாசு.ச.அ., இக்கட்டுரையை அளித்ததற்கு! நன்றி.--செல்வா 20:49, 29 அக்டோபர் 2010 (UTC)Reply


மகிழ்ச்சி தொகு

சென்னை விக்கிச் சந்திப்பில் உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. நீங்கள் மேலும் பல நல்ல பங்களிப்புகளைத் தரவும், சென்னையில் பல விக்கிக் களப் பணிகளில் ஈடுபடவும் வேண்டுகிறேன். நன்றி--இரவி 07:34, 16 நவம்பர் 2010 (UTC)Reply

கூகுள் கட்டுரைகள் தொகு

குங்குமப்பூ பேச்சுப்பக்கத்தைப் பாருங்கள். மேலும் அக்கட்டுரையில் நேரடியாக எந்த மாற்றங்களைச் செய்ய வேண்டாம். அதன் பேச்சுப்பக்கத்தில் மட்டும் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். (கூகுள் மொழிபெயர்ப்புத்திட்ட சுட்டியை ஒரு முறை படித்துப் பாருங்கள், இதன் பின்புலம் கொஞ்சம் பெரிது ;-)) --சோடாபாட்டில் 09:38, 17 நவம்பர் 2010 (UTC)Reply

Return to the user page of "Surya Prakash.S.A./தொகுப்பு01".