பயனர் பேச்சு:Surya Prakash.S.A./தொகுப்பு09

மன்னிக்கவும் தொகு

'சூர்யபிரகாஷ்' அவர்களே சிறிய தவறு நிகழ்ந்து விட்டது மன்னிக்கவும், இனி இது போன்ற தவறு நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன். மீண்டும் கட்டுரையை இணைத்தமைக்கு மிக்க நன்றி. --செ. செல்வக்குமார் (பேச்சு) 19:04, 17 மார்ச் 2013 (UTC)

சரி -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 08:10, 18 மார்ச் 2013 (UTC)

சிக்கல்? தொகு

எங்கள் கல்லூரிப் போராட்டப் படங்களைக் கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். மாணவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படுமா? பல ஊடகங்களும் படங்களையும் காணொளிகளையும் வெளியிடுகின்றன. அனைவரது ஒப்புதலுக்குப் பிறகே, விக்கியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஐயம் தெளிய வைக்கவும். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 12:29, 18 மார்ச் 2013 (UTC)

தமிழ்நாட்டின் நிலைமைகளை அறியமுடியவில்லை. ஆனால் த ரைம்சு ஒப் இந்தியா செய்தி ஒன்றிபடி காவல்துறை மிக நெருக்கமாகக் கண்காணிக்கிறது. ஆனால், இது மிகவும் அடிப்படையான, தெளிவாக சட்டத்துக்கு உட்பட்ட, அமைதியான வெளிப்பாடு. எனவே தமிழ்நாட்டில் இது பற்றி பயப்பிடத்தேவை இல்லை என்று நினைக்கிறேன். நீங்கள் ஒப்புதல் பெற்று இருப்பது நன்று. --Natkeeran (பேச்சு) 12:32, 18 மார்ச் 2013 (UTC)
ம்ம். எங்கள் கல்லூரியில் காவல் துறையினர் பாதுகாப்புடன், துணைவேந்தர் முன்னிலையில்தான் போராட்டம் நடைபெற்றது. போராட்டக் கால அளவு வெறும் 4 மணி நேரம் மட்டுமே. மாலையில் நாங்கள் அனைவரும் வீட்டுக்குச் செல்லப் பணிக்கப்பட்டுள்ளோம். விடுதிகளும் மூடப்படப்போகின்றன. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 12:37, 18 மார்ச் 2013 (UTC)

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், Surya Prakash.S.A./தொகுப்பு09!

 

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 06:48, 2 ஏப்ரல் 2013 (UTC)

விரைவு ஈனல் உலை தொகு

அதிவேக ஈனுலை என ஏன் மாற்றிவிட்டீர்கள். உரையாடிவிட்டாது மாற்றியிருக்கலாம். அதிவேகம் என்பதை விட விரைவு என்பது தான் சரியானதாக இருக்கும். --இராஜ்குமார் (பேச்சு) 15:00, 21 ஏப்ரல் 2013 (UTC)

சிறப்புப்படம் தொகு

படிமம்:Lockstitch.gif எனது பரிந்துரை: காண்க பேச்சு:தையல் இயந்திரம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:22, 15 மே 2013 (UTC)Reply


கருத்து தேவை தொகு

முதற்பக்க இற்றைப்படுத்தல் மாற்றம் பற்றி தங்கள் கருத்தினைத் தர வேண்டுகிறேன் - விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு--சோடாபாட்டில்உரையாடுக 06:13, 29 மே 2013 (UTC)Reply

பதக்கம் தொகு

  மெய்வாழ்வுப் பதக்கம்
//நான் பல நேரங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் யாரும் பங்களிப்பதில்லை என்று என்னைத் தெரிந்தவர்களே எனக்கு முன்பே கூறக்கேட்டிருக்கிறேன். ஆனால், எனக்கு அப்படிக் கூறுவதே பிடித்திருந்தது. ஏனெனில், அப்போதாவது மாணவர்களுக்கு நாம் பங்களிக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் வரும். நான் பங்களிப்பது தெரிந்தால் அவர்களது தேடல்களும் வினவல்களும் நான் பதில் கூறுவதிலேயே முடிந்துவிடும். பார்வைகள் விரிவடைய வேண்டும். எனக்கு தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல்வேறு தொழில்களைச் செய்யும் பலர் நண்பர்களாக உள்ளார்கள். அந்த ஒரு வலையமைப்பையே நான் விரும்புகிறேன். இந்த உள்ளக அங்கீகாரங்கள் அந்நேரத்தில் நம்மை உயர்த்திக்காட்டினாலும் பல காலம் கழித்து அதன் பயன் ஒன்றுமில்லாதிருப்பதை நாம் உணர்வோம். // என்ற உங்கள் குறிப்பு கண்டு மகிழ்ந்தேன். விக்கியில் பங்களிக்கத் தொடங்கிய காலத்துக்கும் இன்றைக்கும் நிறைய பக்குவப்பட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி :) என்னளவிலும் இத்தகைய உளமாற்றத்தை உணர்ந்துள்ளேன். இரவி (பேச்சு) 06:37, 2 சூன் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

உதவி தேவை... தொகு

வணக்கம், சூர்யா!
தமிழிலக்கிய வலைவாசலில் காட்சிப்படுத்த இன்னமும் 6 சிறப்புப் படங்கள் தேவைப்படுகின்றன, தற்போது திருவள்ளுவர் சிலை மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உங்களுக்குத் தெரிந்து ஏதேனும் படிமம் இருந்தால் இந்தப் பக்கத்தில் இடவும். அவசரமில்லை; பொறுமையாக செய்யலாம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:53, 10 சூன் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:56, 24 சூன் 2013 (UTC)Reply

உதவி வேண்டி... தொகு

கிண்டி பொறியியல் கல்லூரியில், இயந்திரப் பொறியியலை தமிழ் வழியில் நீங்கள் படித்து வருவது அறிந்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். இந்தப் பாடப் புத்தகங்களை சொந்தமாக வாங்கிப் படிக்க மிகுந்த ஆவலாக உள்ளேன். இப்புத்தகங்களிலுள்ள கலைச் சொற்கள், நமது தமிழ் விக்கியில் கட்டுரைகள் எழுத மிகுந்த உதவிகரமாக இருக்கும் எனவும் நம்புகிறேன். இப்புத்தகங்களின் அண்மைப் பதிப்புகளைப் பெறுவது எப்படி? சென்னையில் எங்கு கிடைக்கும்? தகவல் தந்து உதவவும். நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:32, 12 சூலை 2013 (UTC)Reply

Return to the user page of "Surya Prakash.S.A./தொகுப்பு09".