பரமாரப் பேரரசு
பரமாரப் பேரரசு (Paramara Dynasty) (ஆட்சிக் காலம்: 800-1327), மத்தியகால இந்தியாவில், ராஜபுத்திர அரச குலத்தினர், தற்கால குஜராத் மாநிலத்தின் அபு மலையில் உபேந்திர கிருஷ்ணராஜ பரமாரப் பேரரசை நிறுவினார்.[3] மத்திய இந்தியப் பகுதியான மாளவத்தை கைப்பற்றிய பின் இப்பேரரசின் தலைநகர், தற்கால மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மஹேஷ்வர் என தற்போது அழைக்கப்படும் மகிழ்மதி நகரம் ஆகும்.[4][5]
மால்வாவின் பரமார இராச்சியம் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பொ. ஊ. 9ஆம் அல்லது 10ஆம் நூற்றாண்டு–பொ. ஊ. 1305 | |||||||||||||||
தலைநகரம் | |||||||||||||||
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம் | ||||||||||||||
சமயம் | சைவ சமயம்[2] | ||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||
மகா ராஜாதி ராஜா (பேரரசர்) | |||||||||||||||
• பொ. ஊ. 948–972 | சியாகன் (முதல்) | ||||||||||||||
• பிந்தைய 13ஆம் நூற்றாண்டு – 24 நவம்பர் 1305 | இரண்டாம் மகாலகதேவன் (கடைசி) | ||||||||||||||
பிரதான் (பிரதம மந்திரி) | |||||||||||||||
• பொ. ஊ. 948–?? | விஷ்ணு (முதல்) | ||||||||||||||
• பொ. ஊ. 1275–1305 | கோக தேவன் (கடைசி) | ||||||||||||||
வரலாற்று சகாப்தம் | பாரம்பரிய இந்தியா | ||||||||||||||
• தொடக்கம் | பொ. ஊ. 9ஆம் அல்லது 10ஆம் நூற்றாண்டு | ||||||||||||||
• முடிவு | பொ. ஊ. 1305 | ||||||||||||||
| |||||||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
தென்னிந்திய இராஷ்டிரகூட பேரரசின் மூன்றாம் கோவிந்தன் மாளவத்தை வென்றபின், அப்பகுதிகளுக்கு பரமார அரச குலத்தினரையே, தான் வென்ற பகுதிகளுக்கு ஆளுனர்களாக நியமித்தார். இப்பரமரர்களின் வழித்தோன்றல்களே பின்னர் பரமாரப் பேரரசை நிர்மாணித்தனர். [6] [7]
தற்கால மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களின் பெரும் பகுதிகளைக் கொண்டது பார்மரப் பேரரசு.
பரமார வம்ச பேரரசர்களில் புகழ் பெற்றவர் முதலாம் போஜ மகாராஜா ஆவார்.
குறிப்பிட்டத்தக்க அரசர்கள்
தொகு- உபேந்திரா கிருஷ்ணராஜ பார்மர்[8]:23
- சியாகா [8]:23
- மூஞ்சா [8]:25
- போஜராஜன் (1010-1055) பார்மர் மன்னர்களில் மிகப்புகழ் பெற்றவர்.[8]:25
- யசோவர்மன்
- விந்தியவர்மன்
- மகாலக் தேவ் (அலாவுதீன் கில்சியால் தோற்றகடிப்பட்ட பார்மர் பேரரசின் கடைசி அரசன்)[8]:25
ஆட்சியாளர்கள்
தொகுName[9] | Reign Began | Reign Ended | |
---|---|---|---|
1 | உபேந்திர கிருஷ்ணராஜா பார்மர் | 800 | 818 |
2 | சியாகா | 818 | 843 |
3 | முதலாம் சியாகா | 843 | 893 |
4 | முதலாம் வாக்பதிராஜா | 893 | 918 |
5 | இரண்டாம் வைரி சிம்மன் | 918 | 948 |
6 | இரண்டாம் சியாகா | 948 | 974 |
7 | இரண்டாம் வாக்பதிராஜா | 974 | 995 |
8 | சிந்தூர்ராஜா | 995 | 1010 |
9 | முதலாம் போஜன் | 1010 | 1055 |
10 | முதலாம் ஜெயசிம்மன், காலச்சூரி அரசன் கர்ணன் என்பவனால போரில் கொல்லப்பட்டவர் | 1055 | 1068-69 |
11 | உதயாத்தித்தன் | 1087 | |
12 | இலக்குமனதேவன் | 1087 | 1094 |
13 | நரவர்மதேவன் | 1094 | 1134 |
14 | யசோவர்மன் | 1134 | 1142 |
15 | முதலாம் ஜெயவர்மன் | 1142 | 1143 |
பால்லாலா | 1143 | 1150-51 | |
குமாரபாலன் | |||
16 | விந்தியவர்மன் | 1160 | 1193 |
17 | சுபத்தவர்மன் | 1193 | 1210 |
18 | முதலாம் அர்ஜுனவர்மன் - குஜராத்தின் சோலாங்கி மற்றும் தேவகிரி யாதவப் பேரரசுகளை வென்று பார்மர் பேரரசு இழந்த பெருமையை மீட்டான். | 1210 | 1218 |
19 | தேவபாலன், மாளவம் | 1218 | 1239 |
20 | ஜெய்டுகி தேவன் | 1239 | 1256 |
21 | இரண்டாம் ஜெயவர்மன் | 1256 | 1269 |
22 | இரண்டாம் ஜெயசிம்மன் | 1269 | 1274 |
23 | இரண்டாம் அர்ஜுனவர்மன் | 1274 | 1283 |
24 | இரண்டாம் போஜன், மாளவம் | 1283 | ? |
25 | மகாகாலதேவன் - தில்லி சுல்தானால் 1305இல் தோற்கடிப்பட்டான். இவன் ஆண்ட மால்வா பகுதி தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது. | 1327 |
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ Schwartzberg, Joseph E. (1978). A Historical atlas of South Asia. Chicago: University of Chicago Press. p. 147, map XIV.3 (a). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0226742210.
- ↑ R.K. Gupta, S.R. Bakshi (2008). Rajasthan Through the Ages, Studies in Indian history. Vol. 1. Rajasthan: Swarup & Sons. p. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176258418.
Parmara rulers were devout shaivas.
- ↑ The Paramāras, c. 800-1305 A.D., Pratipal Bhatia, 1970, p. 15
- ↑ H.V. Trivedi, Editor, Inscriptions of the Paramaras, Chandellas, Kachchhapaghatas and two minor Dynasties", part 2 of the 3-part Vol III of Corpus Inscriptionum Indicarum, edited in 1974 by (published in 1991)
- ↑ "PARAMARA DYNASTY". Archived from the original on 2019-04-14. பார்க்கப்பட்ட நாள் 2015-10-11.
- ↑ Ancient India by Ramesh Chandra Majumdar p.294
- ↑ A Brief History of India by Alain Daniélou p.185
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789380607344.
- ↑ Malwa through the ages, from the earliest times to 1305. by Kailash Chand Jain, 1972 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0824-X, 9788120808249