பராக்பூர் கிளர்ச்சி

பராக்பூர் கிளர்ச்சி (Barrackpore mutiny) கொல்கத்தா அருகில் இருந்த பரக்பூர் இராணுவ பாசாறையில் இருந்த ஆங்கிலேய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக இந்தியச் சிப்பாய்கள், நவம்பர் 1824ல் நடத்திய கிளர்ச்சியாகும்.

1824 பராக்பூர் கிளர்ச்சி
முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் பகுதி
Chaterbengal.jpg
இந்தியச் சுபேதார்
நாள் 1–2 நவம்பர் 1824
இடம் பரக்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
ஆள்கூறுகள்: 22°46′N 88°22′E / 22.76°N 88.37°E / 22.76; 88.37
சிப்பாய் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது.
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம் வங்காளத் தரைப்படையின் இந்திய சிப்பாய்கள்
தளபதிகள், தலைவர்கள்
Flag of the British East India Company (1707).svg தலைமைப் படைத்தலைவர் சர் எட்வர்டு பேகெட்
 • Flag of the British East India Company (1707).svg மேஜர் ஜெனரல் டல்செல்
 • Flag of the British East India Company (1707).svg லெப்டினண்ட் கர்ணல் டிஅகுலியார், 26-வது வங்காளத் தரைப்படை
 • Flag of the British East India Company (1707).svg லெப்டினண்ட் கர்ணல் கார்ட் ரைட்
 • Flag of the British East India Company (1707).svg மேஜர் ரூபி
பிண்டி திவாரி
படைப் பிரிவுகள்
* முதல் அரச ரெஜிமெண்ட்
 • 47 வது லங்காசயர் தரைப்படை ரெஜிமெண்ட்
 • 62வது வங்காள ரெஜிமெண்ட்
 • 26வது வங்காள ரெஜிமெண்ட்
இந்தியச் சிப்பாய்கள்
 • 47வது வங்காள ரெஜிமெண்டின் கிளர்ச்சியாளர்கள்
 • 62வது வங்காள ரெஜிமெண்டின் கிளர்ச்சியாளர்கள்
 • 26வது வங்காள ரெஜிமெண்டின் கிளர்ச்சியாளர்கள்
இழப்புகள்
2 பிரித்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர் [1]கிளர்ச்சியின் போது 180 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சிக்குப் பின் 12 சிப்பாய்கள் தூக்கிலிடப்பட்டனர்[2]
Lua error in Module:Location_map at line 380: The value "{{{longitude}}}" provided for longitude is not valid.

கிளர்ச்சிக்கான காரணங்கள்தொகு

முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரில் (1824–26) கலந்து கொள்வதற்காக, போர்க்கப்பல்கள் மூலம் கடல் கடந்து பர்மா செல்வதற்கு, இந்து சமய சிப்பாய்கள், தங்கள் இந்து சமயம் மற்றும் சமூக பழக்க வழக்கங்களின் படி பாவம் எனக்கருதி வன்மையாக மறுத்தனர்.[3] இக்காரணத்தை ஆங்கிலேய படைத்தலைவர்கள் ஏற்க மறுத்து, கட்டாயாமாக கடல் கடந்து கப்பல்கள் மூலம் பர்மா செல்ல இந்தியச் சிப்பாய்களுக்கு உத்தரவிட்டனர். இதனால் இந்தியச் சிப்பாய்கள், பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் மீது சினம் கொண்டனர்.

எனவே கடல் கடந்து பர்மா செல்ல மறுத்த இந்தியச் சிப்பாய்கள், ஆங்கிலேய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பிண்டி திவாரி தலைமையில் கிளர்ச்சி செய்தனர்.

நவம்பர் 1-2 1824ல் நடைபெற்ற கிளர்ச்சியின் போது, இந்தியச் சிப்பாய்கள் மீது பீரங்கி தாக்குதல் தொடுத்து 180 பேரைக் கொன்று ஆங்கிலேயப் படைத்தலைவர்கள் கிளர்ச்சியை அடக்கினர். கிளர்ச்சிக்குப் பின்னர் 12 இந்தியச் சிப்பாய்களை தூக்கிலிட்டனர். மேலும் பிறர்க்கு ஆயுள் தண்டணை விதித்தனர். [3] 47வது படைப்பிரிவு கலைக்கப்பட்டு, இந்திய சிப்பாய்களின் அதிகாரிகளான சுபேதார்களை பணி நீக்கம் செய்தனர். ஆங்கிலேய அதிகாரிகளை பிற படைப்பிரிவுகளுக்கு மாற்றினர்.

நினைவுச்சின்னம்தொகு

 
பிண்டா பாபா கோயில்

பராக்பூர் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி, பின்னர் தூக்கிலிடப்பட்ட பிண்டி திவாரியின் நினைவாக, அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அவரது நினைவை போற்றும் விதத்தில் கோயில் ஒன்றை அமைத்தனர். [4]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. Pogson 1833, ப. 25.
 2. OHJGL 1827, ப. 139.
 3. 3.0 3.1 "Barrackpore Mutiny". Encyclopædia Britannica. 28 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
 4. Mazumdar 2008, ப. 23.

ஆதாரங்கள்தொகு

மேலும் படிக்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பராக்பூர்_கிளர்ச்சி&oldid=3360127" இருந்து மீள்விக்கப்பட்டது