பராக் ஆறு

பராக் ஆறு (Barak River), மாற்றுப்பெயர்:ஊரெய் (Vourei, ) தெற்கு அசாமின் முதன்மையான ஆறுகளில் ஒன்றாகும். இது சுர்மா-மேக்னா ஆற்று அமைப்பின் அங்கமாகும். இந்த ஆறு மணிப்பூர் மாநிலத்தின் குன்றுகளில் உற்பத்தியாகிறது.[1] அங்கு மலைத்தேச ஆறுகளில் இதுவே மிகப் பெரியதும் முதன்மையானதும் ஆகும்.[1] மணிப்பூருக்குப் பிறகு மிசோரம் மாநிலம் வழியாகப் பாய்ந்து அசாமில் நுழைகிறது. 564 கிமீ (350 மை) நீளமுள்ள பராக் ஆறு இறுதியாக வங்காளதேசத்தில் பல பிரிவுகளாகப் பிரிந்து சுர்மா ஆற்றுடனும் குசியாரா ஆற்றுடனும் இணைகிறது.[2]

பராக் ஆறு (வங்காள: বরাক নদী)
குவாயி[1]
River
Silchar barak.jpg
பராக் ஆறு அசாமின் சில்சாரைச் சுற்றிச் செல்லும் காட்சி வானூர்தியிலிருந்து
நாடுகள் இந்தியா, வங்காளதேசம்
மாநிலங்கள் மணிப்பூர், மிசோரம், அசாம்
கிளையாறுகள்
 - இடம் சோனை ஆறு
 - வலம் ஜீரி ஆறு, சிறி ஆறு, மதுரா ஆறு, ஜதிங்கா ஆறு
நகரம் சில்சார்
உற்பத்தியாகும் இடம் [1]
 - அமைவிடம் மணிப்பூர் குன்றுகள், இந்தியா
நீளம் 564 கிமீ (350 மைல்)

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Statistical Account of Manipur. பக். 7. 
  2. "River and Drainage System" (en) (5 May 2014).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பராக்_ஆறு&oldid=2518626" இருந்து மீள்விக்கப்பட்டது