பரூச் மாவட்டம்

குசராத்தில் உள்ள மாவட்டம்

பரூச் மாவட்டம் (Bharuch district), இந்திய மாநிலமாகிய குஜராத்தில் உள்ளது. இது குஜராத்தின் தென்பகுதியில், கடற்கரையை ஒட்டிய பகுதி.[1] இந்த பகுதியின் வழியே, நர்மதை ஆறு, காம்பே வளைகுடா பகுதியில் கடலில் கலக்கிறது.

15-08-2013-இல் துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் குசராத்து மாநிலத்தின் புதிய வரைபடம்

இதன் தலைநகரம் பரூச். இங்கு 15 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு முசுலீம்களே அதிகளவில் உள்ளனர். இங்கு பல்வந்திரி தாக்கரே, திரிபுவன் உலுகார் உள்ளிட்ட கவிஞர்கள் வாழ்ந்தனர்.

வட்டங்கள்

தொகு

இது எட்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • பரூச்
  • அங்கலேஸ்வர்
  • ஜம்புசர்
  • ஹான்சோட்
  • வாகரா
  • ஆமோத்
  • வாலியா
  • ஜகடியா

மக்கள் வகைப்பாடு

தொகு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, பரூச் மாவட்ட மக்கள் தொகை 1,550,822 ஆகும்.[2]. இம்மாவட்டத்தில் இசுலாமியர்கள் 57%ஆக உள்ளனர்.

சான்றுகள்

தொகு
  1. பரூச் மாவட்ட இணையதளம்
  2. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரூச்_மாவட்டம்&oldid=3890609" இலிருந்து மீள்விக்கப்பட்டது