பர்னசாலா (Parnasala) என்பது இந்தியாவின் தெலங்காணாவில் புதிதாக உருவான பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் (முன்பு கம்மம் மாவட்டம்) தம்முகுதெம் மண்டலத்தில் உள்ள ஓர் கிராமமாகும். [1] இக்கிராமத்திற்குச் செல்ல சாலை மற்றும் படகுகள் வசதிகள் உள்ளன. பர்னசாலா கோயில் நகரமான பத்ராச்சலத்திலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பர்னசாலா
பர்னசாலா
பர்னசாலா
பர்னசாலா is located in தெலங்காணா
பர்னசாலா
பர்னசாலா
பர்னசாலா is located in இந்தியா
பர்னசாலா
பர்னசாலா
ஆள்கூறுகள்: 17°55′55″N 80°53′46″E / 17.932°N 80.896°E / 17.932; 80.896
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்கம்மம்
ஏற்றம்55 m (180 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்505
மொழிகள்
 • அலுவல்தெலுகு
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTS
இணையதளம்telangana.gov.in
பர்னசாலாவில் கோதாவரி நதி

பத்ராச்சலம் பகுதியில் இராமாயணத்துடன் தொடர்புடைய பல இந்து கோயில்கள் உள்ளன.[2]

நிலவியல் தொகு

பர்னசாலா 17°55′55″N 80°53′45″E / 17.93194°N 80.89583°E / 17.93194; 80.89583 [3] பகுதியில் கடல்மட்டத்திலிருந்து 55 மீட்டர் (183 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. 

புள்ளிவிவரங்கள் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பர்னாசலா கிராமத்தில் 505 பேர் வசிக்கின்றனர். இவர்களில் ஆண்கள் 256 பேரும், பெண்கள் 249 பேரும் ஆவார்கள். இதில் 85.71 சதவிகித்தனர் கல்வியறிவு பெற்றவர்காளாவர்கள்.[4]

புராண செய்திகள் தொகு

 
பர்னசாலா கோயில்

புராணத்தின்படி, இராமர் 14 வருட வனவாசத்தில் சிலகாலத்தினை இவ்விடத்தில் கழித்ததாகக் கூறப்படுகிறது.[5] இராமரின் அன்பான மனைவியான சீதை இங்குள்ள ஓடையில் குளித்துவிட்டு, துணிகளை "இராதகுட்டா" மீது உலர்த்தினார் என்று உள்ளூர் வாசிகள் நம்புகிறார்கள். இராவணன் என்ற அரக்கன் தனது புட்பக விமானத்தினை ஆற்றின் எதிர் பக்கத்தில் உள்ள மலையடிவாரத்தில் நிறுத்தி சீதையைக் கடத்திச் சென்றான். சீதையை இலங்கைக்கு கொண்டு செல்ல இராவணன் பூமியை அகற்றியபோது ஏற்பட்ட மண் பள்ளம் இங்கே காணப்படுகிறது. சீதாவினை கவர தங்க மான் வேடத்தில் வந்த மாரீசனை இராமன் கொன்றதாகக் கூறப்படும் இடம் இதுவாகும் என்றும் நம்பப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Village Code Directory: Andhra Pradesh" (PDF). பார்க்கப்பட்ட நாள் 20 November 2010.
  2. https://tourism.telangana.gov.in/divine-destinations/BhadrachalamTemple
  3. Parnasala at Fallingrain.com
  4. Parnasala at Our Village India.org
  5. https://telanganatourism.gov.in/partials/destinations/heritage-spots/khammam/parnasala.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்னசாலா&oldid=3505958" இலிருந்து மீள்விக்கப்பட்டது