பர்மாவில் பிரித்தானிய ஆட்சி

பர்மாவில் பிரித்தானிய ஆட்சி (British rule in Burma) (ஆட்சி காலம்: 1824 - 1948), பர்மாவில் வணிகம் செய்ய வந்த பிரித்தானியர்கள், சிறிது சிறிதாக பர்மாவின் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டே, 1824 - 1886 கால கட்டத்தில் நடந்த மூன்று ஆங்கிலேய-பர்மியப் போர்கள் மூலம், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களாலும், பின்னர் பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்களும் பர்மாவின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது.

பர்மாவில் பிரித்தானிய ஆட்சி
1824–1942
1945–1948
கொடி of British rule in Burma
1937 முடிய கொடி
நாட்டுப்பண்: கடவுள் ராணியை காக்கட்டும் (God Save the Queen)
இரண்டாம் உலகப் போரின் போது பர்மா Dark green: ஜப்பானியர்கள் பர்மாவை பெரும் பகுதிகளை ஆக்கிரமித்தல் Light silver: பிரித்தானியாவின் எஞ்சிய பர்மியப் பகுதிகள் Light green: தாய்லாந்தால் ஆக்கிரமித்து இணைக்கப்பட்ட சஹரத் தாய் தோயம் பகுதி
இரண்டாம் உலகப் போரின் போது பர்மா
Dark green: ஜப்பானியர்கள் பர்மாவை பெரும் பகுதிகளை ஆக்கிரமித்தல்
Light silver: பிரித்தானியாவின் எஞ்சிய பர்மியப் பகுதிகள்
Light green: தாய்லாந்தால் ஆக்கிரமித்து இணைக்கப்பட்ட சஹரத் தாய் தோயம் பகுதி
நிலைபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், பகுதிகளும் (1886–1937)
ஐக்கிய இராச்சியத்தின் காலனி நாடுகள் (1937–1948)
தலைநகரம்ரங்கூன்
பேசப்படும் மொழிகள்ஆங்கிலம் (அலுவல் மொழி), பர்மிய மொழி
சமயம்
பௌத்தம், கிறித்துவம், இந்து சமயம், இசுலாம்
முடியாட்சி 
• 1862–1901
விக்டோரியா ராணி
• 1901–1910
எழாம் எட்வர்ட்
• 1910–1936
ஐந்தாம் ஜார்ஜ்
• 1936
எட்டாம் எட்வர்டு
• 1936–1947
ஆறாம் ஜார்ஜ்
ஆளுனர் 
• 1923-1927
முதலில் ஹர்கோர்ட் பட்லர்
• 1946-1948
இறுதியில் ஹப்பெர்ட் ரான்சே
தலைமை ஆணையாளர் 
• 1862-1867
முதலில் ஆர்தர் பர்வேஸ் பாய்ரே
• 1895-1897
முதலில் பிரடெரிக் வில்லியம் ரிச்சர்ட் ஃப்ரய்ர்
சட்டமன்றம்பர்மா சட்ட மன்றம் (1897-1936)
பர்மா நாடாளுமன்றம் (1936-1947)
செனட்/மேலவை
மக்களவை
வரலாற்று சகாப்தம்குடிமைப்பட்ட காலம்
• முதல் ஆங்கிலேய - பர்மியப் போர்
5 மார்ச் 1824
• ஆங்கிலேய - பர்மியப் போர்கள்
1824–1826, 1852, 1885
• காலணிய எதிர்ப்பு இயக்கம்
1918–1942
• பிரித்தானிய இந்தியாவிடமிருந்து தனியாக பிரிதல்
1937
• ஜப்பானிய ஆக்கிரமிப்பில் பர்மா மற்றும்
தாய்லாந்து
1942–1945
• ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்றது.
4 சனவரி 1948
நாணயம்பர்மிய ரூபாய், இந்திய ரூபாய், பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங்
முந்தையது
பின்னையது
பிரித்தானிய இராச்சியம்
கொன்பௌங் அரச குலம்
பர்மிய அரசு
பர்மிய அரசு
சஹரத் தாய் தோயம்
விடுதலைக்குப் பின் பர்மா 1948–1962
1893இல் பர்மா உள்ளிட்ட பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு

ஆட்சி விரிவாக்கம்

தொகு
  • 1824-1826இல் நடந்த முதல் ஆங்கிலேய-பர்மியப் போரில், இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அகோம் பேரரசு, மணிப்பூர் இராச்சியம் போன்ற பகுதிகளையும், பர்மாவின் அரக்கான் மலைப் பகுதிகளையும் ஆங்கிலேய அரசு கைப்பற்றியது. .[1][2][3]
  • 1852-1853இல் நடந்த இரண்டாம் ஆங்கிலேய - பர்மியப் போரில், கீழ் பர்மாவின் பெகு பகுதிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். இப்போருக்குப் பின் அரண்மனைக் கலவரம் மூண்டதால், பர்மிய அரசர் பாகன் மின் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவரது சகோதரர் மிண்டன் மின்னை பர்மிய அரசனாக்கினர்.[1][3]
  • 1885 - 1886-இல் நடந்த மூன்றாம் ஆங்கிலேய - பர்மியப் போரில், தெற்கு பர்மாவை, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.
  • மூன்றாம் ஆங்கிலேய - பர்மியப் போருக்குப் பின்னர் வடக்கு பர்மாவையும் தெற்கு பர்மாவை இணைத்து, 1897 முதல் 1937 முடிய துணைநிலை ஆளுனர் தலைமையில் ஆங்கிலேயர்கள் பர்மாவை ஆண்டனர். பின்னர் இந்திய மற்றும் பர்மாவுக்கான ஆங்கிலேய அரசு செயலர் தலைமையில் பர்மாவில் தனி அலுவலகம் அமைத்து பர்மாவின் அரசு நிர்வாகம், பர்மாவுக்கு விடுதலை கிடைத்த 4 சனவரி 1948 முடிய நடந்தது.

பிரித்தானிய பர்மாவின் ஆட்சிப் பகுதிகள்

தொகு

1865க்கு பின்னர் நிர்வாக வசதிக்காக அடியிற்கண்டவாறு பிரிக்கப்பட்டது:

  1. பிரித்தானியாவின் நேரடி அரசியல் நிர்வாகப் பகுதி
    1. டென்னஸ்சேரிம் கோட்டம், டௌஙோ மாவட்டம், தாடொன் மாவட்டம், கைக்கமி, சல்வீன், டாவெய் மாவட்டம் மற்றும் மெர்கூய் மாவட்டம்.
    2. அரக்கான் கோட்டம், சிட்வெ மாவட்டம், வடக்கு அரக்கான் மலைப் பகுதிகள், கியாவுக்பை மாவட்டம் மற்றும் தண்ட்வே மாவட்டம்
    3. பெகு கோட்டம்; ரங்கூன் நகரம், ஹந்தவாடி, பேகு மாவட்டம், தார்ரவடி மாவட்டம், மற்றும் பியை மாவட்டம்.
    4. ஐராவதி கோட்டம்: பதையின் மாவட்டம், ஹிந்தாடா மாவட்டம், தாயெட் மாவட்டம், மா- உபின் மாவட்டம், மௌபிங் மாவட்டம், மையவுங்மையா மாவட்டம் மற்றும் பியப்பூன் மாவட்டம்
  2. பட்டியலிட்டப் பகுதிகள் (எல்லைப் பகுதிகள்)
    1. ஷான் அரசுகள்
    2. சின் மலைகள்
    3. கட்சின் அரசுகள்

இந்தியாவிலிருந்து பர்மாவைப் பிரித்தல்

தொகு

1937ஆம் ஆண்டு முதல், நிர்வாக வசதிக்காக பிரித்தானியாவின் இந்தியாவிருந்து பர்மாவை தனியாக பிரித்து பிரித்தானிய துணைநிலை ஆளுனர் கட்டுப்பாட்டின் கீழ் பர்மாவை பிரித்தானிய இந்திய அரசினர் ஆண்டனர்.[4] பிரித்தானிய சட்ட திட்டங்களின் அடிப்படையில், மக்களால் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட, வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் பர்மிய நாடளுமன்ற பேரரவை அமைக்கப்பட்டது. பர்மாவின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பா மௌவை 1939ஆம் ஆண்டில் யு ஷா வெளியேற்றி ஆட்சியை கைப்பற்றி, பிரித்தானியர்களால் கைது செய்யப்படும் வரை, 19 சனவரி 1942 முடிய பதவியில் இருந்தார்.

இரண்டாம் உலகப் போர்

தொகு

இரண்டாம் உலகப் போரின் துவக்கத்தில் 1942இல் பர்மாவை, பிரித்தானியரிடமிருந்து, ஜப்பானிய இராணுவம் கைப்பற்றி 1945ஆம் ஆண்டு வரை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. பர்மா அரசின் தலைநகராக ரங்கூன் நகரம் விளங்கியது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் 1945இல் பிரித்தானிய இராணுவம் மீண்டும் பர்மாவை ஜப்பானிடமிருந்து கைப்பற்றியது.

பர்மிய விடுதலைப் போராட்டம்

தொகு

பர்மிய பிரித்தானிய அரசுக்கு எதிராக, இராணுவ அதிகாரியும், அரசியல்வாதியுமான ஆங் சான் பர்மாவின் விடுதலைக்கு பாடுபட்டவர். 26 டிசம்பர் 1942இல் பர்மா புரட்சி இராணுவத்தை உருவாக்கியவர். 4 சனவரி 1948 அன்று பர்மா விடுதலை அடைதற்கு அடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் 19 சூலை 1947இல் படுகொலை செய்யப்பட்டார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Lt. Gen. Sir Arthur P. Phayre (1967). History of Burma (2 ed.). London: Susil Gupta. pp. 236–247.
  2. D.G.E. Hall (1960). Burma (PDF). Hutchinson University Library. pp. 109–113. Archived from the original (PDF) on 2005-05-19. பார்க்கப்பட்ட நாள் 2015-10-17.
  3. 3.0 3.1 San Beck Org.
  4. Sword For Pen பரணிடப்பட்டது 2020-07-29 at the வந்தவழி இயந்திரம், TIME Magazine, 12 April 1937

வெளி இணைப்புகள்

தொகு
  • J. S. Furnivall, "Burma, Past and Present", Far Eastern Survey, Vol. 22, No. 3 (25 February 1953), pp. 21–26, Institute of Pacific Relations. <http://jstor.org/stable/3024126>
  • Ernest Chew, "The Withdrawal of the Last British Residency from Upper Burma in 1879", Journal of Southeast Asian History, Vol. 10, No. 2 (Sep. 1969), pp. 253–278, Cambridge University Press. <http://jstor.org/stable/20067745>

மேலும் படிக்க

தொகு