பறங்கி சாம்ராணி

பால் சாம்ராணி , குந்துருக்கம், குத்திலிக்கம் , நறும்பிசின் , குமைஞ்சான் என்றும் கூறலாம் .இம்மரத்திற்கு ஒயிட் டமர் என்றும் கூறலாம் .பறங்கி சாம்ராணி கொந்து பிசினை கம் ஒலிபேனம், இன்டியன் ஒலிபேனம் என்றும் கூறுவர் . தாவர பெயர் பாஸ்வெல்லியா சேர்ரேட்டே ஆகும் . குடும்பம் பர்செராசிக் . இம்மரத்தை தீ குச்சி செய்ய பயன்படுத்தலாம்.

பறங்கி சாம்ராணி)

வாழிடம் தொகு

இந்தியாவில் பீகார் , ஒரிசா , ராஜஸ்தான் , குஜராத் , அஸ்ஸாம் காணப்படும் . தமிழ்நாட்டில் கல்வராயன் , சேர்வராயன் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது . மலைச்சரிவுகளில் 500-700 மீ உயரப்பகுதியில் வளரும் .

இம்மரம் 15 மீ வளரும் . முதிர்ந்த பட்டை வெள்ளையாக வழவழப்பாக இருக்கும் . தண்டு உடையக்கூடியது. இலையோரம் சாய்வாகவும், இலை நுனி கூர்மையாக இருக்கும். இலை காம்பு 2-6 செமீ நீளம் உடையது . பூவடிச் சிதல்கள் தமருசி வடிவானவை. பூக்காம்பு தனியாகவோ ,கொத்தாகவோ இருக்கும் .

பூக்கள் தொகு

ஐந்தங்கமுடைய இருபால் மலர்கள் . புல்லி இதழ் அகலமான மணிவடிவிலிருக்கும் . அல்லி இதழ் 5 அடுக்கிதழ் அமைப்பில் இருக்கும். மகரந்தத்தாள் 10-16. மகரந்த கம்பிகள் முட்டை வடிவிலோ ,நீள் சதுரமாக இருக்கும் . சூலகமூடி மூன்றாகப் பிரிந்திருக்கும். கனி முக்கோண வடிவ உள் ஒட்டு சதைக்கனி ஆகும் . மூன்று பைரீன்கள் உள்ளது . ஒவ்வொரு பைரீன்களிலும் ஒரு விதை இருக்கும் . பிப்ரவரி - மார்ச் மாதம் பூ பூக்கும் . கனி ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து காணலாம் .

பயன்கள் தொகு

1. கீழ்வாத நோய், நரம்பு தொடர்பான நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் பயன்படுகிறது .

2. இருமல் , காமாலை நோய் போக்க உதவுகிறது .

3. படைத்தாமரை , நாள்பட்ட சிரங்கு போக்க உதவும் .

4. பென்சில் , நாற்காலி , காகிதம் தயாரிக்கப் பயன்படுகிறது .

சான்றுகள் தொகு

[1][2][3]

  1. Cameron, M; Chrubasik, S (May 22, 2014). "Oral herbal therapies for treating osteoarthritis
  2. அறிவியல் களஞ்சியம் தொகுதி பதினான்கு
  3. Abdel-Tawab, M; Werz, O; Schubert-Zsilavecz, M (Jun 2011). "Boswellia serrata: an overall assessment of in vitro, preclinical, pharmacokinetic and clinical data". Clin Pharmacokinet. 50 (6): 349–69. PubMed. doi:10.2165/11586800-000000000-00000.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறங்கி_சாம்ராணி&oldid=3178826" இலிருந்து மீள்விக்கப்பட்டது