பலாச்சுளை பற்றி தேரையர் சித்தர் செய்யுள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பலாச்சுளையைப் பற்றி சித்தர் தேரையர் அருளிய பதார்த்த குணசிந்தாமணி என்னும் நூலில் இடம்பெறும் செய்யுள் பின்வருமாறு:
- தித்திக்கும் வாத சிலேற்பன
- பித்தம் உண்டாக்கும் மெத்த
- கரப்பான் விளைவிளைவிக்கும்
- சத்தியமாய் சேராப்பிணியை
- எல்லாம் செர்ப்பிக்கும் ஒர் நொடியில்
பொருள்
தொகுதித்திக்கும்
தொகுபலாச்சுளை இனிப்பு சுவை மிக்கது. முதலில் உண்ணும்போது மிகவும் தித்திப்பாகவும், தொடர்ந்து பலாச்சுளை உண்டால் திகட்டும் தன்மையுடையது.
வாத சிலேற்பன பித்தம் உண்டாக்கும்
தொகுசித்த மருத்துவம் மருந்தே உணவு, உணவே மருந்து என்னும் கொள்கையை உடையது. மனித உடல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிலைகளால் ஆனது என்றும். இவை சமநிலையில் இயங்கும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். சம நிலையை இழந்து இயங்கும் போது நோய்கள் ஏற்படுகின்றன என்பதும் சித்தர்களின் கருத்தாகும். திருவள்ளுவர் இதே கருத்தை திருக்குறள், மருந்து என்னும் அதிகாரத்தில் (95) கூறுகிறார்:
- மிகினும் குறையினும் நோய்செய்யும் மேலோர்
- வளிமுதலா எண்ணிய மூன்று (குறள் : 941)
பொருள்: வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் அளவில் குறைந்தாலும் மிகுந்தாலும் நோய் உண்டாகும்
தேரையரோ பலாச்சுளையை உண்டால் உடலில் வாதம் , பித்தம் , கபம் (சிலேத்துமம்) ஆகிய மூன்றையும் மிகுதிப்படுத்தும். சமநிலை இழக்கும் வாய்ப்பு மிகும் என்கிறார்.
மெத்த கரப்பான் விளைவிளைவிக்கும்
தொகுமெத்த கரப்பான் விளைவிளைவிக்கும் என்ற சொற்றொடர்கள் வலியுறுத்தும் கருத்து என்னவென்றால் பலாச்சுளை உண்பதால் கரப்பான் நோய் அதிகரிக்கும் என்பது தான். கரப்பான் என்றால் தொற்றில்லாத அரிப்பு, தோல் நோய் போன்றவையாகும்.
சத்தியமாய் சேராப்பிணியை எல்லாம் செர்ப்பிக்கும் ஒர் நொடியில்
தொகுசத்தியமாய் சேராப்பிணியை எல்லாம் செர்ப்பிக்கும் ஒர் நொடியில் என்று செய்யுளின் இறுதி வரியில் சத்தியம் செய்து சொல்லும் செய்தி என்னவெனில், பலாச்சுளை இது வரையில் ஒருவர் உடலில் இல்லாத எல்லா நோய்களையும் ஒரு நொடியில் கொண்டு வந்து சேர்த்துவிடும் என்கிறார். சுருக்கமாக இந்த செய்யுள் கூறும் கருத்து என்னவெனில் பலாச்சுளை சித்த மருத்துவ கொள்கைகளின்படி நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆற்றலுடையது.