பல்லவராயநத்தம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

பல்லவராயநத்தம் (Pallavarayanatham) என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள, பல்லவராயநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

மக்கள் வகைப்பாடு தொகு

இந்த ஊரானது மாவட்டத் தலைநகரான கடலூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், அண்ணாகிராமத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 188 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1020 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4146 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2081, பெண்களின் எண்ணிக்கை 2065 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 63.6 % என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]

இந்த ஊருக்கு அருகில் வானமாதேவி அணை உள்ளது. இதனால் பொது மக்கள் சிலர் இந்த அணையை ‘பல்லவ ராயநத்தம் அணை, பல்லா நத்தம் அணை என இவ்வூரின் பெயரால் அழைக்கின்றனர்.[2]

குறிப்புகள் தொகு

  1. http://www.onefivenine.com/india/villages/Cuddalore/Annagramam/Pallavarayanatham
  2. புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன் தமிழாய்வகம். p. 345. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020. {{cite web}}: line feed character in |publisher= at position 11 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவராயநத்தம்&oldid=2998423" இலிருந்து மீள்விக்கப்பட்டது