பல் படிவாக்க இடம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பல் படிவாக்கம் இடம் (multiple cloning site) என்பது கணிமி (plasmid) பரப்பிகளில் (plasmid vector) உள்ள இன்றியமையாத ஒரு பகுதி ஆகும். இவ்விடத்தில் பல கட்டுள்ள நொதிகளின் வெட்டும் அல்லது செரிமானம் (cut or digestion) செய்வதக்கான ஈரிழை வரிசைகள் காணப்படும். இவைகள் ஒற்று முனை (blunt end) அல்லது நீட்சி முனையெய் (sticky end) உருவாக்க கூடிய கட்டுள்ள நொதிகள் ஆகும். நாம் விரும்பும் நொதியேய் தேர்ந்தெடுத்து அவைகளில் நாம் விரும்பும் டி.என்.ஏ வின் எப்பகுதியும் படிவாக்கம் இயலாம்.
பரப்பியில் அளவு குறையும் போது, பல் படிவாக்கம் இடத்தில் உள்ள கட்டுள்ள நொதியின் எண்ணிக்கை மிகையாக அமையும் (Ex pUC19, pOK12). மாறாக கணிமி பரப்பியின் அளவு கூடும் போது, அவ்விடத்தில் உள்ள கட்டுள்ள நொதிகளின் எண்ணிக்கை குறையும் (Ex. pGA643). ஏனெனில் பரப்பியின் அளவு கூடும் போது, கட்டுள்ள நொதியின் செரிமான வரிசை அவற்றில் அமைவதற்கான வாய்ப்புகள் மிகையாகின்றன. புதிய வகை கட்டுள்ள நொதிகளின் விற்பனையேய் அதிகரிக்க, சில வேளைகளில் சில நிறுவனங்கள் கணிமி பரப்பிகளில், புதிய வகையான கட்டுள்ள நொதிகளின் வரிசைகளை இடும் வழக்கமும் உண்டு.