பள்ளிப்பட்டு

பள்ளிப்பட்டு (ஆங்கிலம்:Pallipattu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டத்தின் நிர்வாகத் தலமையிடமும், பேரூராட்சியும் ஆகும். பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பள்ளிப்பட்டில் இயங்குகிறது.

பள்ளிப்பட்டு
பள்ளிப்பட்டு
இருப்பிடம்: பள்ளிப்பட்டு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 13°20′N 79°27′E / 13.33°N 79.45°E / 13.33; 79.45
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
வட்டம் பள்ளிப்பட்டு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

8,721 (2011)

1,133/km2 (2,934/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

7.70 சதுர கிலோமீட்டர்கள் (2.97 sq mi)

154 மீட்டர்கள் (505 அடி)

இணையதளம் www.townpanchayat.in/pallipat

அமைவிடம் தொகு

தமிழ்நாடு - ஆந்திரப்பிரதேசம் எல்லையில் அமைந்த இப்பேருராட்சியானது, மாவட்ட தலைமையிடமான திருவள்ளூரிலிருந்து 70 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 95 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் கிழக்கில் நகரி 16 கிமீ; மேற்கில் சித்தூர் 40 கிமீ; வடக்கில் திருப்பதி 70 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

7.70 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 55 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருத்தணி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,979 வீடுகளும், 8,721 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 82.30% மற்றும் பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு, 1024 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 13°20′N 79°27′E / 13.33°N 79.45°E / 13.33; 79.45 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 154 மீட்டர் (505 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. பள்ளிப்பட்டு பேரூராட்சியின் இணையதளம்
  5. Pallipattu Population Census 2011
  6. "Pallipattu". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளிப்பட்டு&oldid=3854591" இலிருந்து மீள்விக்கப்பட்டது