தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்கள் கையாளும் தமிழை இங்குப் பழந்தமிழ் என்று குறிப்பிடுகிறோம்.[சான்று தேவை] பிற்காலத் தமிழிலோ, இக்காலத் தமிழிலோ கையாளப்படுவனவற்றை ஒப்புநோக்கத்துக்காக மட்டுமே பழந்தமிழ்ப் பாங்கினைத் தனியாக எடுத்துக்காட்டிக் குறிப்பிடுகிறோம். சங்கநூல் பாடல்களும், அதற்குப் பெருமக்கள் எழுதியுள்ள உரைகளும் இவற்றிற்குச் சான்று மூலங்கள்.

பாகுபாடு தொகு

செஞ்சொல் [1][2] தொகு

செஞ்சொல்லை இலக்கண நூலார் செந்தமிழ் என்று குறிப்பிடுகின்றனர். வட்டார வழக்கில் திரியாத சொல் என்று இதனைக் கூறலாம். தொல்காப்பியம் இதனை இயற்சொல் [3] என்று குறிப்பிடுகிறது. வட்டார மக்கள் வளைத்துக்கொண்ட சொல் கொடுந்தமிழ். கொடுக்கும்போது கை வளைவது போலப் பேசும்போது வளைந்த சொல் கொடுந்தமிழ்.[4] பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பன இதன் பாகுபாடுகள்.

பெயர்ச்சொல் தொகு

குழந்தைகளுக்கும், மக்களுக்கும் இடுகுறியால் பெயர் சூட்டி வழங்குவது போல, பொருள்களுக்கு மரபு வழியில் பெயர் சூட்டப்பட்டு வழங்கும் பெயரைப் பெயர்ச்சொல் என்கிறோம். இதனைத் தமிழ்மொழி உயர்திணை, அஃறிணை என இரண்டு திணைகளாகவும், ஆண்பால், பெண்பால், பலர்பால் என உயர்திணைச் சொற்களை மூன்று பால்களாகவும், ஒன்றன்பால், பலவின்பால் என அஃறிணைச் சொற்களை இரண்டு பால்களாகவும் பாகுபடுத்திக்கொண்டுள்ளனர். மோலும் அவற்றைத் தன்மை, முன்னிலை, படர்க்கை என மூன்று இடப்பெயர்களாகவும், ஒருமை. பன்மை என இரண்டு எண்-நிலைகளாகவும் பாகுபடுத்திக்கொண்டு அவற்றிற்கு ஏற்ற வினைச்சொல் முடிபுகளைக் கொண்டுள்ளனர்.

உயர்திணை

மக்களாக மதிக்கப்படுவோரை 'உயர்திணை' என்றனர். எடுத்துக்காட்டு:
  • இயவர் = இயம் முழக்குபவர், முரசு முழக்குபவர் [5]
  • கூளியர் = படை செல்ல வழி அமைத்துத் தருபவர் [6]

அஃறிணை

  • ஐம்பால் = ஐந்து பகுதிகளாக ஒப்பனை செய்யப்பட்ட தலைமுடி ப[7]
  • திற்றி = மென்று தின்னும் கறி [8]
  • நசை = நச்சும் பொருள், விரும்பும் பொருள் [9]
  • புழுக்கு = பொங்கல் சோறு [10]

சொல் தொகு

சொல்லை ஒலி நோக்கில் மூன்று வகையாகப் பாகுபடுத்திக்கொண்டனர். அவை ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டு மாத்திரை ஒலியைக் கடந்து ஒலிக்கும் 'பொதுமொழி' என்பன.[11] சொற்கள் புணரும்போது நிகழும் மாற்றங்களிலிருந்து இந்த முந்நிலைப் பாகுபாட்டின் இன்றியமையாமையை உணரமுடிகிறது.

பாகுபாட்டின் பயன்

  • 'நா' என்பது நாக்கைக் குறிக்கும் ஒரெழுத்தொருமொழி. "நாச்செற்று விக்குள் மேல் வாராமுன்" என்பது திருக்குறள். இந்தத் தொடரில் நா என்பது எழுவாய். அஃறிணை. செற்று [12] என்பது அதன் வினை. எழுவாய்த் தொடர் ஒற்று மிகாமல் இயல்பாக வருதல் வேண்டும். ஆனால் இங்கு ஒற்று மிக்கு வந்துள்ளதைக் காண்கிறோம். பூ என்பது ஓரெழுத்தொருமொழி. பூ பூத்தது - இங்கு ஒற்று மிகவில்லை. பூப் பூக்கும் காலம் - இங்கு ஒற்று மிக்கது. இவ்வாறு ஓரெழுத்தொருமொழி ஒற்று மிக்கும், மிகாமலும் உறழ்ந்து வரும்.
  • 'கடு' [13] என்பது ஈரெழுத்தொருமொழி. 'புளி' என்பது மற்றொரு ஈரெழுத்தொருமொழி. இவை 'கடு தின்றான்', 'கடுத் தின்றான்' என ஒற்று மிக்கும் மிகாமலும் புணரும். புளி என்பதும் அவ்வாறே 'புளி தின்றான்', 'புளித் தின்றான்' எனப் புணரும். பொருளில் மாறுபாடு இல்லை.
  • 'நிலா', 'கனா' என்பன இரண்டு மாத்திரையின் மிக்கு வந்த பொதுமொழி.[14] இது 'நிலா தோன்றிற்று' என எழுவாய்த் தொடரில் இயல்பாக மட்டும் வந்தது. 'கனாக் கண்டான்' என அஃறிணை இரண்டாம் வேற்றுமைத் தொகையில் ஒற்று மிக்கு வந்தது.[15]

பொதுமொழி - காண்க சொல், பகாப்பதம், பகுபதம் (இலக்கணம்), பகுபத உறுப்புக்கள்

வினைச்சொல் தொகு

  • கொட்கும் - கால் கொட்கும் - (கடல் நீரைக்) காற்று முகந்துகொண்டு செல்லும் [16]
  • வணர் - வணங்கித் தொங்குதல் - (இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால்) [17]

துணை வினை தொகு

  • வா - ஒலிவரல் [18] ஒலிவா - 'வா' துணைவினை [19]

இடைச்சொல் தொகு

பின்னொட்டு (வினை) தொகு

  • மார் - அனையை ஆகன்மாரே - ஆகல் + மார் [20]

பின்னொட்டு (விகுதி) தொகு

  • அம் - கவிரம்(மலை), குன்றம், மன்றம், முதிரம்(மலை)
  • அல் - தென்றல், மன்றல்
  • இல் - அரிசில் [21] பரிசில், குரிசில், அந்தில், அன்றில், செந்தில், முன்றில்
  • இரம் - ஆயிரம், பாயிரம், பைதிரம் [22] மாதிரம் [23]

உரிச்சொல் தொகு

சேர்சொல் தொகு

செஞ்சொல் என்னும் செந்தமிழ்ச் சொல்லோடு சேரும் சொற்களைச் சேர்சொல் என்கிறோம். இது செந்தமிழ்

திரிசொல் தொகு

திசைச்சொல் தொகு

வடசொல் தொகு

சொற்றொடர் தொகு

அவ்வினை = அவ்வும் வினை - வினைத்தொகை, அவ்வுதல் = மண்ணாசை, பொன்னாசை (19)

பொன்மொழித் தொடர் [24] தொகு

  • ஆறிய கற்பின் அடங்கிய சாயல், ஊடினும் இனிய கூறும் இன்னகை [25]
  • ஈத்துக்கை தண்டாகு கை கடுந்தும்பு [26]
  • கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா ஒண்ணார் [27]

பொருள் விளக்கத் தொடர் தொகு

பூணா ஐயவி (புனிற்றுமகள் பூணா ஐயவி) = கோட்டைக் கதவுக்குப் போடும் குறுக்குமரத் தாள்பாள் - பூணும் ஐயவி = வெண்சிறு கடுகு எண்ணெய்.[28]

அரிய சொல்லாட்சிகள் தொகு

சுரிநம் = ஆமை ஓடு [29]

அரிய பெயர்ச்சொல் விளக்கம் தொகு

அரிய வினையாக்க விளக்கம் தொகு

அல் - இடைச்சொல் தொகு
  • படிமுறை வளர்ச்சி 1 - உடன்பாட்டுப் பொருளில் மட்டும் வருதல்
ஈ என இரத்தல் இழிந்தன்னறு, அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.[30]
  • படிமுறை வளர்ச்சி 2 - உடன்பாடும் எதிர்மறையுமாகத் தனித்தனியே வருதல்
பயனில்சொல் பாராட்டுவானை மகன் எனல், மக்கட் பதடி எனல் [31]
  • படிமுறை வளர்ச்சி 3 - உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் சிலேடையாக வருதல்
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம், ஓதல் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை (= சிறந்தது) [32]

அரிய தொடர் விளக்கம் தொகு

தொலையாக் கற்ப - கற்பு = கற்றல் [33]

அடிக்குறிப்பு தொகு

  1. எஞ்சு பொருட் கிளவி செஞ்சொல்ஆயின், பிற்படக் கிளவார், முற்படக் கிளத்தல்!. (தொல்காப்பியம் 2-284)
  2. தன்மேல் செஞ்சொல் வரூஉம் காலை, நிகழும் காலமொடு வாராக் காலமும், இறந்த காலமொடு வாராக் காலமும், மயங்குதல் வரையார் முறைநிலையான (தொல்காப்பியம் 3-437)
  3. இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல், என்று அனைத்தே-செய்யுள் ஈட்டச் சொல்லே. (தொல்காப்பியம் 3-397)
  4. இருக்கிறது என்பதை 'இருக்குது' என்றும், 'கீது' என்றும் சில வட்டாரங்களில் பேசுகின்றனர். இது சொல் வளைந்திருக்கும் கொடுந்தமிழ்
  5. பதிற்றுப்பத்து 17
  6. பதிற்றுப்பத்து 19
  7. திற்றுப்பத்து 18
  8. பதிற்றுப்பத்து 18
  9. பதிற்றுப்பத்து 18
  10. பொங்கல் சோறும் கறிக் குழம்பும் (பதிற்றுப்பத்து 18)
  11. ஓர் எழுத்து ஒருமொழி, ஈர் எழுத்து ஒருமொழி, இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட, மூன்றே, மொழி நிலை-தோன்றிய நெறியே. (தொல்காப்பியம் 1-45)
  12. அடங்கி
  13. நஞ்சு
  14. எழுத்தால் ஈரெழுத்து. ஒலியால் மூன்று மாத்திரை
  15. அஃறிணை இரண்டாம் வேற்றுமைத் தொகையில் ஒற்று மிகாது. 'தமிழ் படி' என வரும்
  16. பதிற்றுப்பத்து 18
  17. பதிற்றுப்பத்து 18
  18. ஒலி = தழைத்தல்
  19. பதிற்றுப்பத்து 18
  20. பதிற்றுப்பத்து 80
  21. சோழநாட்டில் ஓடும் ஓர் ஆறு - அந்த ஆற்றுப்படுகை அரிசியின் இல்லமாக விளங்குகிறது.
  22. பசுமை கொண்ட நிலம் (பதிற்றுப்பத்து 19)
  23. வானம் (பதிற்றுப்பத்து17)
  24. பொருளை விளக்கும் பொன் போன்ற தொடர்
  25. பதிற்றுப்பத்து 16
  26. பதிற்றுப்பத்து 15
  27. பதிற்றுப்பத்து 20
  28. பதிற்றுப்பத்து 16
  29. நற்றிணை 280
  30. புறநானூறு 204
  31. திருக்குறள் 196
  32. முதுமொழிக் காஞ்சி 1
  33. பதிற்றுப்பத்து 80
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழந்தமிழ்&oldid=3794207" இலிருந்து மீள்விக்கப்பட்டது