பழைய காந்தாரம்

பழைய காந்தாரம் (Old Kandahar) (locally known as Zorr Shaar; பஷ்தூ: زوړ ښار, ஆப்கானித்தானில் தென்கிழக்கே அமைந்த கந்தககார் மாகாணத்தின் தலைநகரான தற்கால காந்தாரத்திற்கு வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. கிமு 330-இல் இப்பழைய காந்தார நகரத்தை அலெக்சாண்டிரிய அரச்சோசியா எனும் பெயரில் (Alexandria Arachosia) நிறுவியவர் பேரரசர் அலெக்சாந்தர் ஆவார்.[1][2] கடந்த 2,000 ஆண்டுகளாக இப்பழைய காந்தார நகரம் பல இராச்சியங்களின் தலைநகராக இருந்துள்ளது. மேலும் இந்நகரம் மௌரியப் பேரரசு (கிமு 322 –185), இந்தோ சிதியன் பேரரசு (கிமு 200 – கிபி 400), சாசானியப் பேரரசு, ராசிதீன் கலீபாக்கள், சாமனித்து பேரரசு, சபாரித்து வம்சம், கசானவித்து வம்சம், கோரி வம்சம், தைமூர், சபாவித்து வம்சம் மற்றும் பல வம்சத்வர்களின் ஆட்சியில் இருந்துள்ளது.

தற்கால காந்தாரத்திற்கு மேற்கில் பழைய காந்தார நகரத்தின் சிதிலங்கள்
நாதிர் ஷா அழித்த பழைய காந்தாரத்தின் சிதிலமடைந்த அரண்மனையின் புகைப்படம், ஆண்டு 1881

சிந்துவெளி நாகரிகத்திற்கும் பெரிய ஈரானுக்கும் நடுவில் அமைந்த இப்பழைய காந்தார நகரம் தெற்காசியாவின் மிக முக்கியமான இராணுவ மையமாக விளங்கியது. இந்தியத் துணைக்கண்டத்திற்கும், பண்டைய அண்மை கிழக்கு, பாரசீக வளைகுடா மற்றும் நடு ஆசியாவிற்கும் இடையே முக்கிய வணிகத் தடமாக விளங்கியது.[3]இப்பழைய காந்தார நகரத்தை ஒரு போரின் போது, கிபி 1738-இல் அப்சரித்து வம்சத்தின் பேரரசர் நாதிர் ஷா அழித்தார்.

1750-இல் அகமது ஷா துரானி இப்பழைய நகரத்திற்கு அருகில் தற்போதைய காந்தார நகரத்திற்கு அடிக்கல் நாட்டி, துராணிப் பேரரசின் தலைநகராக மாற்றினார்.[4]

இந்நகரம் வேதகால ஆரியர்களின் குடியிருப்புகளில் ஒன்றாக விளங்கியது. பேரரசர் கனிஷ்கர் ஆடசியின் போது காந்தாரத்தில் பௌத்தம் நன்கு பரவியது.

மகாபாரதத்தில்தொகு

மகாபாரதத்தில் வரும் காந்தார நாட்டின் தலைநகராக விளங்கியது காந்தாரம் ஆகும். காந்தார இளவரசி காந்தாரியை மணந்தவர், வட இந்தியாவின் குரு நாட்டின் இளவரசர் திருதராஷ்டிரன் ஆவார். காந்தார நாட்டின் இளவரசர் சகுனி ஆவார்.

அசோகரின் காந்தாரக் கல்வெட்டுக்கள்தொகு

அசோகர் கிரேக்கம் மற்றும் பிராகிருத மொழியில் பழைய காந்தார நகரத்தில் கிடைத்துள்ளது.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Lendering, Jona. "Alexandria in Arachosia". LIVIUS – Articles on Ancient History. பார்த்த நாள் March 4, 2012.
  2. Dupree, Nancy Hatch (1971) "Sites in Perspective (Chapter 3)" An Historical Guide To Afghanistan Afghan Tourist Organization, Kabul.]
  3. Mentioned in Bopearachchi, "Monnaies Greco-Bactriennes et Indo-Grecques", p52. Original text in paragraph 19 of Parthian stations
  4. "AN OUTLINE OF THE HISTORY OF PERSIA DURING THE LAST TWO CENTURIES (A.D. 1722-1922)". Edward Granville Browne. London: Packard Humanities Institute. பார்த்த நாள் 2010-09-24.

வெளி இணைப்புகள்தொகு

ஆள்கூறுகள்: 31°36′08″N 65°39′32″E / 31.60222°N 65.65889°E / 31.60222; 65.65889

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_காந்தாரம்&oldid=2903842" இருந்து மீள்விக்கப்பட்டது