பவன் ராஜ் கோயல்

இந்திய நுரையீரல் நோய் மருத்துவர்

பவன் ராஜ் கோயல் (Pawan Raj Goyal) ஓர் இந்திய நுரையீரல் நோய் நிபுணர் ஆவார். பாசுடனில் உள்ள ஆர்வர்டு மருத்துவப் பள்ளியில் இவர் முதுகலை பட்டம் பெற்றார். [1] 2014 ஆம் ஆண்டு மருத்துவத் துறைகளில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு, நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[2]

பவன் ராஜ் கோயல்Pawan Raj Goyal
பிறப்பு19 பெப்ரவரி 1952 (1952-02-19) (அகவை 72)
அகமதாபாத்து, இந்தியா
பணிஇந்திய குடியரசுத் தலைவரின் முன்னாள் மருத்துவர் (2012-2017)
பெற்றோர்எம்.பி.கோயல்
வாழ்க்கைத்
துணை
மருத்துவர். சுனேனா கோயல்
பிள்ளைகள்மருத்துவர் சிவன்சு ராச் கோயல், அசுவின் ராச் கோயல்
விருதுகள்பத்மசிறீ

வாழ்க்கைக் குறிப்பு தொகு

அரியானாவைச் சேர்ந்த பவன் ராச் கோயல், 1974 ஆம் ஆண்டு புது தில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். புது தில்லியில் உள்ள இர்வின் மருத்துவமனையில் பயிற்சி பெற்றார்.[3] சென்னை எசுஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களில் பேராசிரியராகவும், மார்பு மற்றும் நுரையீரல் மருத்துவத் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். அங்கு இவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பேராசிரியராக உள்ளார். [1]

பிஆர்ஜி மெடிக்கேர்சு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும் மேலாண்மை இயக்குநராகவும் இருப்பதைத் தவிர, [1] [3] இவர் ஓசோ செராமிக்சு என்ற ஒரு வணிக நிறுவனத்தின் தலைவராகவும் 1990 ஆம் ஆண்டிலிருந்து [4] இருந்து வருகிறார். உத்யோக் கௌரவ் மற்றும் சமாச் சிறீ விருதுகளையும் பெற்றுள்ளார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "India Medical Times". India Medical Times. 2014. Archived from the original on 9 August 2014. பார்க்கப்பட்ட நாள் 3 November 2014.
  2. "Padma 2014". Press Information Bureau, Government of India. 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 28 October 2014.
  3. 3.0 3.1 3.2 "SRM University". SRM University. 2014. Archived from the original on 19 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 3 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Osho Ceramics". Osho Ceramics. 2014. பார்க்கப்பட்ட நாள் 3 November 2014.

புற இணைப்புகள் தொகு

  • "Acceptance Speech". YouTube video. SRM University. 3 January 2013. பார்க்கப்பட்ட நாள் 3 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவன்_ராஜ்_கோயல்&oldid=3589632" இலிருந்து மீள்விக்கப்பட்டது