பாங்குரா குதிரை
பாங்குரா குதிரை (Bankura horse) என்பது சுடுமண்ணால் செய்யப்படும் ஒரு வகை குதிரை ஆகும். இது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள பாங்குரா மாவட்டத்திலுள்ள பஞ்சமுரா கிராமத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது “அதன் நேர்த்தியான நிலைப்பாடு மற்றும் அடிப்படை மதிப்புகளின் தனித்துவமான சுருக்கத்திற்காக” பாராட்டப்பட்டது. முதலில் கிராமச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இது, இப்போது உலகெங்கிலும் உள்ள ஓவியக் கண்காட்சிகளில் இந்திய நாட்டுப்புறக் கலையின் அடையாளங்களாக அலங்கரிக்கிறது.[1] இது அகில இந்திய கைவினைப் பொருட்களின் சின்னமாகத் திகழ்கிறது.[2]
பாரம்பரியம்
தொகுஇந்தியாவில், சுடுமண்ணால் உருவங்கள் உருவாக்கப்படும் மரபுகள் ஆரம்ப காலத்திலிருந்தே காணப்படுகின்றன. பல இந்திய கிராமங்களின் புறநகரில் ஒரு அரச மரம் இருக்கும். அதன் கீழ் சுடுமண்னால் செய்யப்பட்ட ஒரு விலங்கு உருவங்கள் இருக்கும். கிராம மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான அடையாளங்களாக அவை உள்ளன. நவீன உலக சந்தையின் வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, கிராமப்புற குயவர் பெரும்பாலும் பாரம்பரிய கிராமப்புற கருத்தாக்கத்தங்களை நகர்ப்புற சுவைகளுடன் இணைத்து சுடுமண் கலையின் துண்டுகளைக் காட்டுகிறார்.
பஞ்ச்முரா, ராஜாகிராம், சோனாமுகி மற்றும் அமீர்பூர் ஆகிய இடங்களில் சுடுமண் குதிரைகள் மற்றும் யானைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு இடமும் அதன் சொந்த உள்ளூர் பாணியைக் கொண்டுள்ளது. பஞ்ச்முரா பாணி மட்பாண்டங்கள் நான்கு வகைகளிலும் மிகச்சிறந்ததாக கருதப்படுகின்றன.[3]
புவியியல் குறியீடு
தொகுபாங்குரா குதிரை மேற்கு வங்காளத்தின் புவியியல் சார்ந்த குறியீடுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 28 மார்ச் 2018 அன்று ‘பாங்குரா பஞ்ச்முரா சுடுமண் கைவினைப்பொருள்’ என்று பெயரிடப்பட்டது.[4][5]
பாங்குரா குதிரை காட்சியகம்
தொகு-
விஷ்ணுபூர் சுடுமண் குதிரைகள்
-
விஷ்ணுபூர் சுடுமண் குதிரைகள்
-
விஷ்ணுபூர் சுடுமண் குதிரைகள்
-
விஷ்ணுபூர் சுடுமண் குதிரைகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Terracotta Traditions". potteryindia. Archived from the original on 2002-07-06. பார்க்கப்பட்ட நாள் 2009-06-22.
- ↑ "Bankura's Horses". bengalinet. பார்க்கப்பட்ட நாள் 2009-06-22.
- ↑ "Arts". Bankura Pottery. Suni Systems (P) Ltd. பார்க்கப்பட்ட நாள் 2009-06-22.
- ↑ "Details | Geographical Indications | Intellectual Property India". ipindiaservices.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-05.
- ↑ "State Wise Registration Details of G.I. Applications" (PDF). Intellectual Property India. August 8, 2023.
- பொதுவகத்தில் விஷ்ணுபூர் சுடுமண் குதிரைகள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.