பாசிட்ரான்
பாசிட்ரான் (Positron) என்பது எலக்ட்ரானுக்கு சக எதிராக உள்ள எதிர் துகள் அல்லது எதிர் பொருள் ஆகும். இதன் மின்னேற்றம் + 1 e. பாசிட்ரான் எலக்ட்ரானைப் போன்ற அதே நிறையைக் கொண்டது. எலக்ட்ரானும் பாசிட்ரானும் மோதும் போது நிர்மூலமாகிறது. இம்மோதல் குறைந்த ஆற்றலில் நடைபெற்றால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காமா கதிர் போட்டான்கள் உருவாகும். பாசிட்ரான்கள் கதிரியக்கச் சிதைவில் பாசிட்ரான் உமிழ்வு மூலம் உருவாகின்றன. முதன் முதலில் டிமிட்ரி ஸ்கோபெல்சின் 1928 ம் ஆண்டு பாசிட்ரானை கண்டார்.[1][2] 1932ம் ஆண்டு கார்ல் டேவிட் ஆண்டர்சன் பாசிட்ரானைக் கண்டுபிடித்து[3] 1936 இல் அதற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசும் பெற்றார்.[4]
இயற்கை உற்பத்தி
தொகுஇயற்கையாகவே உள்ள பொட்டாசியம் - 40 போன்ற கதிரியக்க ஐசோடோப்புகளின் பீட்டா சிதைவின் மூலம் பாசிட்ரான்கள் இயற்கையாகவே உற்பத்தி ஆகிறது. காஸ்மிக் கதிர்கள் மூலமாகவும் உருவாகின்றன.
செயற்கை உற்பத்தி
தொகுகலிபோர்னியாவில் லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தில் சிறிய அளவிலான அதிக அடர் கொண்ட லேசரை 1 மி.மீ தடிமன் தங்கத்தில் செலுத்தி 100 பில்லியன் பாசிட்ரான்களை உருவாக்கி உள்ளனர்.[5]
பயன்கள்
தொகுபாசிட்ரான் அணிகிலேஷன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி (positron annihilation spectroscopy -PAS) என்னும் கருவி திடப்பொருள்களின் குறைபாடுகள், அடர்த்தி வேறுபாடு, வெற்றிடம் மேலும் பலவற்றை ஆராய உதவி செய்கிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Close, F. (2009). Antimatter. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 50–52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-955016-6.
- ↑ Cowan, E. (1982). "The Picture That Was Not Reversed". Engineering & Science 46 (2): 6–28. http://calteches.library.caltech.edu/3360/.
- ↑ Anderson, C. D. (1933). "The Positive Electron". Physical Review 43 (6): 491–494. doi:10.1103/PhysRev.43.491. Bibcode: 1933PhRv...43..491A.
- ↑ "The Nobel Prize in Physics 1936". பார்க்கப்பட்ட நாள் 21 January 2010.
- ↑ Bland, E. (1 December 2008). "Laser technique produces bevy of antimatter". MSNBC. http://www.msnbc.msn.com/id/27998860/. பார்த்த நாள்: 6 April 2016. "The LLNL scientists created the positrons by shooting the lab's high-powered Titan laser onto a one-millimeter-thick piece of gold."
- ↑ "Introduction to Positron Research". St. Olaf College. Archived from the original on 5 August 2010.