பாசுபோரைல் நைட்ரைடு

வேதியியலில் பாசுபோரைல் நைட்ரைடு (Phosphoryl nitride) என்பது OPN அமைப்பு கொண்ட வினைத்திறனுள்ள இடைநிலையாகும். இவ்விடைநிலையில் நேரியல் அமைப்பில் ஆக்சிசன் பாசுபரசு நைட்ரசன் மூலக்கூறுகள் இணைந்துள்ளன.[1] பாசுபரசு மற்றும் ஆக்சிசன் மூலக்கூறுகள் இரட்டைப் பிணைப்பாலும் ( இது பாசுபோரைல்) பாசுபரசு மற்றும் நைட்ரசன் மூலக்கூறுகள் முப்பிணைப்பாலும் பிணைந்துள்ளன. பாசுபோரைல் மூவசைடை (OP(N3)3) சீரொளியால் ஒளியாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தும் போது 16 கெல்வின் வெப்பநிலையில் ஆர்கான் அணி தனியாக்கல் நுட்பத்தில் பாசுபோரைல் நைட்ரைடு கிடைக்கிறது[2]. ஒளிமாற்றியமாக்கல் வினையினால் பாசுபோரைல் நைட்ரைடும் அதன் மாற்றியனும் ஒன்றுக்கொன்று இடைமாற்றம் மூலம் மாறிக்கொள்கின்றன.

பாசுபோரைல் நைட்ரைடு

மேற்கோள்கள்

தொகு
  1. Himmel, H.-J. and Linti, G. (2012), OPN and SPN: Small Molecules with Great Potential. Angew. Chem. Int. Ed., 51: 5541–5542. எஆசு:10.1002/anie.201201638
  2. Elusive O═P≡N, a Rare Example of Phosphorus σ2λ5-Coordination Xiaoqing Zeng, Helmut Beckers, and Helge Willner Journal of the American Chemical Society 2011 133 (51), 20696-20699 எஆசு:10.1021/ja2091867
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபோரைல்_நைட்ரைடு&oldid=2042942" இலிருந்து மீள்விக்கப்பட்டது