பாண்டான் மக்களவைத் தொகுதி

நாடாளுமன்றத் தொகுதி
(பாண்டான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாண்டான் (மலாய்: Pandan; ஆங்கிலம்: Pandan; சீனம்: 香兰); என்பது மலேசியா, சிலாங்கூர் உலு லங்காட் மாவட்டதில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப்பகுதி; மற்றும் ஒரு நாடாளுமன்றத் தொகுதி (P100) ஆகும்.

பாண்டான் P100
Pandan
மலேசிய நாடாளுமன்றம்
முன்னாள் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்ராபிஸி ராம்லி
கட்சிபாக்காத்தான் ஹரப்பான்; பி.கே.ஆர்.
அமைவிடம்உலு லங்காட்
சிலாங்கூர்
மலேசியா
வாக்காளர்கள்148,730




2022-இல் பாண்டான் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  சீனர் (47.02%)
  மலாயர் (40.17%)
  இதர இனத்தவர் (4.9%)

இந்தத் தொகுதி 2002-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டு முதல் மலேசிய மக்களவையில் (Dewan Rakyat) பிரதிநிதித்துவம் படுத்தப் படுகிறது.[1]

பொது

தொகு

2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் (2022 Malaysian General Election) இந்தத் தொகுதியில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பி.கே.ஆர்.யின் சார்பில் ராபிஸி ராம்லி (Mohd Rafizi Ramli) என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2022- ஆம் ஆண்டு அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் பொருளாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் திராங்கானு மாநிலத்தின் பெசுட் நகர்ப் பகுதியில் பிறந்தவர். கிழக்கு கடற்கரை நகரமான கெமாமான் பகுதியில் வளர்ந்தவர். இவர் ஓர் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர்; இவரின் தந்தையார் ரப்பர் மரம் சீவும் தொழில் செய்தவர்.

பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியின் பரப்பளவு 20 சதுர கி.மீ. 2022-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி 148,730 வாக்காளர்கள் உள்ளனர்.

பாண்டான் நாடாளுமன்றத் தொகுதி

தொகு
பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
அம்பாங் ஜெயாவில் இருந்து உருவாக்கப்பட்ட தொகுதி
11-ஆவது 2004–2008 ஓங் தீ கியாட் பாரிசான் (மசீச)
12-ஆவது 2008–2013
13-ஆவது 2013–2018 ராபிசி ராம்லி (பிகேஆர்)
14-ஆவது 2018–2022 வான் அசிசா வான் இஸ்மாயில் பாக்காத்தான் (பிகேஆர்)
15-ஆவது 2022-தற்போது வரையில் ராபிசி ராம்லி

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு
நாடாளுமன்றத் தொகுதி சட்டமன்றத் தொகுதி
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது வரையில்
பாண்டான் செம்பாக்கா
பாண்டான் இண்டா
தெராத்தாய்

மலேசியப் பொதுத் தேர்தல், 2022 முடிவுகள்

தொகு
 
ராபிசி ராம்லி (பொருளாதாரத் துறை அமைச்சர்)
கட்சி வேட்பாளர் வாக்குகள் (%)
பாக்காத்தான் அரப்பான் ராபிசி ராம்லி 74,002 63.98
பெரிக்காத்தான் நேசனல் முகமட் ராபிக் 25,706 22.23
பாரிசான் நேசனல் லியோங் கோக் வீ 11,664 10.09
சபா பாரம்பரிய கட்சி ஓங் தி கீட் 3,323 2.87
தாயகப் போராளிகள் கட்சி நதியா அனாபியா 961 0.83

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  • "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.
  1. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. Archived from the original (PDF) on 2018-04-12. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.

வெளி இணைப்புகள்

தொகு