பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையம்

பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Pandan Indah LRT Station; மலாய்: Stesen LRT Pandan Indah; சீனம்: 美丽的香兰) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் வழித்தடத்தில் அமைந்துள்ள உயர்த்தப்பட்ட இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]

 AG15   CC19 
பாண்டான் இண்டா
| எல்ஆர்டி | எம்ஆர்டி
Pandan Indah LRT Station
பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையம் (2022)
பொது தகவல்கள்
அமைவிடம்பாண்டான் இண்டா சாலை, பாண்டான் ஜெயா, அம்பாங் ஜெயா, சிலாங்கூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°8′4″N 101°44′47″E / 3.13444°N 101.74639°E / 3.13444; 101.74639
உரிமம் பிரசரானா
எம்ஆர்டி நிறுவனம்
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்[1]
தடங்கள்  அம்பாங் 
 எம்ஆர்டி சுற்று 
நடைமேடை2 பக்க மேடைகள்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகை AG13   CC19  உயர்த்தப்பட்ட நிலை
நடைமேடை அளவுகள்4
தரிப்பிடம் - 230
துவிச்சக்கர வண்டி வசதிகள்விசையுந்து உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு AG13   CC19 
வரலாறு
திறக்கப்பட்டது16 திசம்பர் 1996 (எல்ஆர்டி); 2028-2030 (எம்ஆர்டி)
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
ஜெயா
தீமோர்
 
அம்பாங் வழித்தடம்
 
செம்பாக்கா
அம்பாங்
  திட்டத்தில்  
பாண்டான்
வலது சுற்று
 
எம்ஆர்டி சுற்றுவழி
 
கெஞ்சானா
இடது சுற்று

இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பாண்டான் இண்டா எனும் குடியிருப்பு பகுதியின் பெயரில், இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. அத்துடன் பாண்டான் 3/8 சாலை, இந்த நிலையத்திற்கு அருகில் உள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ள எம்ஆர்டி சுற்று வழித்தடத்துடன் எதிர்காலப் பரிமாற்றமாக நிலையமாகச் செயல்பட இந்த நிலையம் திட்டமிடப்பட்டுள்ளது.[3]

பொது

தொகு

அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களும் முன்பு 'இஸ்டார் எல்ஆர்டி' (STAR-LRT) என அழைக்கப்பட்டன.

இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் ஒரு பகுதியாக சுல்தான் இசுமாயில் எல்ஆர்டி நிலையம் தொடங்கி, இந்த பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையம் வரையில் 13 நிலையங்கள் கட்டப்ப்பட்டன. அந்த 13 நிலையங்களில் இந்த பாண்டான் இண்டா எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 16 டிசம்பர் 1996 அன்று திறக்கப்பட்டது.

இந்த நிலையத்தன் மேலே கட்டப்பட்டு உள்ள மேம்பாலம்; தாமான் பக்தி (Taman Bakti) மற்றும் பாண்டான் இண்டா (Pandan Indah) ஆகிய அடுக்குமாடி மனைக் குடியிருப்புகளுக்குச் செல்வதற்கு ஒரு நடைபாதை வழியாகவும் (Walkway) செயல்படுகிறது.

பாண்டான் ஜெயா

தொகு

இந்த நிலையத்திற்கு முந்தைய நிலையம் பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையம்; அந்த பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையத்துடன் பேருந்து அணுகலையும் இந்த பாண்டா இண்டா நிலையம் கொண்டுள்ளது. இந்த நிலையம் 1 கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ள பாண்டான் ஜெயா நிலையத்துடன் பாண்டான் நகரின் பெயரைப் பகிர்ந்து கொள்கிறது.

அம்பாங் வழித்தடம்

தொகு

அம்பாங் வழித்தடம்; மற்றும் செரி பெட்டாலிங் வழித்தடங்கள், முன்பு இலகு தொடருந்து இஸ்டார் (LRT STAR) (Sistem Transit Aliran Ringan) வழித்தடம் என்று அழைக்கப்பட்டன. செந்தூல் தீமோர் எல்ஆர்டி நிலையத்தில் இருந்து அம்பாங் நிலையம் மற்றும் செரி பெட்டாலிங் நிலையம் வழியாக சான் சோவ் லின் நிலையத்திற்கு இரண்டு தடங்களைக் கொண்டிருந்தது.

இலகு தொடருந்து இஸ்டார் திட்டம் முதன்முதலில் 1981-ஆம் ஆண்டு மலேசியப் போக்குவரத்து தலையாயத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.

கோலாலம்பூர் நகர மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இணைக்கும் இலகு தொடருந்து வழித்தடங்களுக்கான ஒரு வலையமைப்பை மலேசிய அரசாங்கம் முன்மொழிந்தது. திசம்பர் 1992-இல் அரசாங்கத்திற்கும் இஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.[4]

காட்சியகம்

தொகு

பாண்டான் ஜெயா எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2022)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rapid KL's LRT operation is run by Rapid Rail Sdn Bhd". MyRapid. பார்க்கப்பட்ட நாள் 15 November 2024.
  2. "Pandan Indah LRT Station is a light rail transit station operated by RapidKL serving the Ampang Line in Pandan Indah, Selangor, Malaysia, just outside the eastern boundary of Kuala Lumpur. This Station was opened in 1996, along with 17 other LRT Stations in Ampang Line". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 30 November 2024.
  3. "It is situated next to and named after the Ampang Jaya locality of Pandan Indah to the southeast, and is within walking distance of Taman Bakti directly beside the station, Taman Cempaka and the eastern edges of Pandan Jaya to the north". klia2.info. 20 October 2017. பார்க்கப்பட்ட நாள் 30 November 2024.
  4. An LRT-Bus strategy for greater Kuala Lumpur: What future integration?, page 9-10

வெளி இணைப்புகள்

தொகு