பாதம்
பாதம் (feet-பாதங்கள்-பன்மை), முதுகுநாணிகளின் உடற்கூற்றியல் அமைப்பில் ஒன்றாகும். உடல் எடையைத் தாங்குவதற்கும், இடப்பெயர்ச்சிக்கும் உதவும் மூட்டுகளின் ஒரு பகுதியாகும். பல விலங்குகள் எலும்புகளால் ஆன கால்கள் கொண்டவை. அக்கால்களில் முடிவில் விரலிடுக்குகளும் நகங்களும் கொண்ட பாத அமைப்பு காணப்படும்.
பாதம் | |
---|---|
விளக்கங்கள் | |
தமனி | dorsalis pedis, medial plantar, lateral plantar |
நரம்பு | medial plantar, lateral plantar, deep fibular, superficial fibular |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | Pes |
MeSH | D005528 |
TA98 | A01.1.00.040 |
TA2 | 166 |
FMA | 9664 |
உடற்கூற்றியல் |
பழைய ஜெர்மானிய மொழியிலிருந்து பெறப்பட்ட ஃபோட் (fot) என்ற சொல்லிலிருந்து foot என்ற ஆங்கிலச் சொல் பெறப்பட்டது. இதன் பொருள் முதுகெலும்புள்ள விலங்குகளில் கால்கள் சந்திக்கும் ஒரு முக்கியப் பகுதி என்பது பொருளாகும்.[1] இதன் பன்மைப்பொருளில் வழங்கப்படும் feet என்பது இலக்கண விகாரப்பட்டு, வழங்கும் சொல்லாகும்
அமைப்பு
தொகுமனிதர்களின் பாதம் இருபத்தாறு எலும்புகளாலும், முப்பத்து மூன்று இணைப்புகளாலும், நூற்றுக்கும் மேற்பட்ட தசைகளாலும், தசை நாண்களாலும், தசைநார்களாலும் ஆனது. இது நன்கு உறுதியாகக் கட்டமைக்கப்பட்ட ஓர் இயந்திரம் போன்ற அமைப்பாகும்.[2] கணுக்கால் எலும்பு , குதிக்கால் எலும்பு, நெருக்கமான நீண்ட குருத்தெலும்புகள் ஆகியவை சேர்ந்ததே கால் ஆகும். 1197 இல் செய்யப்பட்ட ஒரு மானிடவியல் ஆய்வின்படி வட அமெரிக்க காகேசிய இனத்தைச் சேர்ந்த, 35.5 வயதுடைய ஓர் ஆணின் கால் எலும்பின் நீளம் 26.3 செ.மீ ஆகும்.[3]
கீழ்ப்பாதம் என்பது கணுக்கால் மட்டும் குதிகால் இணைந்த பகுதியாகும். பின்னங்காலின் இரு நீண்ட எலும்புகள் இந்தப் பின்பாதத்துடன் அதாவது கணுக்காலின் மேற்பகுதியுடன் இணைந்துள்ளது. உடலின் மிக நீண்ட எலும்பான கால் எலும்பானது பாத எலும்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அடிப்பாதம் என்பது குதிக்கால் எலும்புக்கும் கீழே [[கொழுப்பு படிந்த ஒரு மெத்தென்ற படலத்தால் ஆனது.[2]
நடுப்பாதம் கனசெவ்வக எலும்பு, நேவிகுலர் எலும்பு, மூன்று ஆப்பெலும்புகள் ஆகிய ஐந்து சீரற்ற எலும்புகளால் இணைக்கப்பட்டது ஆகும். நடுப்பாதத்தின் வளைபாத அமைப்பானது அதிர்வுகளைத் தாங்குவதற்கேற்ப அமைந்துள்ளது. நடுப்ப்பாதமானது, முன்பாதத்துடனும் பின்பாதத்துடனும் தசைகள் மற்றும் பிளாண்டர் பாஸ்கியா என்ற திசுக்களால் இணைக்கப்பட்டுள்ளது.[2] முன் பாதமானது ஐந்து விரல்கள், நீண்ட நெருக்கமாக அமைந்துள்ள ஐந்து எலும்புகள் ஆகியவற்றால் ஆனது. இது கைவிரல்களின் எலும்பமைப்பை ஒத்திருக்கும். கால்விரல் எலும்புகள் பாலாங்க்ஸ் எலும்புகள் என அழைக்கப்படுகின்றன. பெருவிரலில் இரண்டு பாலாங்க்ஸ் எலும்புகளும் மற்ற நான்கிலும் ஒவ்வொரு பாலாங்க்ஸ் எலும்புகளும் இருக்கும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Foot". www.etymonline.com. Online Etymology Dictionary. Archived from the original on 2 August 2017. பார்க்கப்பட்ட நாள் 20 May 2017.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Podiatry Channel, Anatomy of the foot and ankle
- ↑ Hawes MR, Sovak D (July 1994). "Quantitative morphology of the human foot in a North American population". Ergonomics 37 (7): 1213–26. doi:10.1080/00140139408964899. பப்மெட்:8050406. https://archive.org/details/sim_ergonomics_1994-07_37_7/page/1213.