பாபானி பட்டாச்சாரியா

சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆங்கில எழுத்தாளர்

பாபானி பட்டாச்சாரியா (Bhabani Bhattacharya, 10 நவம்பர் 1906–10 அக்டோபர் 1988) வங்காள வம்சாவளியை சார்ந்த ஒரு இந்திய எழுத்தாளர்.[1][2] இவர் 1906 ஆம் வருடம் நவம்பர் மாதம் பத்தாம் தேதி பிறந்தார். சமூக-யதார்த்தங்கள் சார்ந்த புனை கதைகளை எழுதியுள்ள இவர் வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியான பகல்பூரில் பிறந்தார். இவர் பாட்னா பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டமும் லண்டன் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.இந்தியா திரும்பிய அவர் வெளிநாட்டுத் தூதராகப் பணியாற்றினார்.பின்பு அமெரிக்கா சென்ற இவர் இலக்கிய ஆய்வு சார்ந்த துறையில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஹவாய் மற்றும் சியாட்டில் மொழிப் பாடத்தை கற்பித்தார்.[1][2] தனது முப்பதுகளில் சமூக நடப்பியல் மற்றும் வரலாற்று பிண்ணனி கொண்ட புனை கதைகளை எழுத தொடங்கினார். இரண்டு பிரபல எழுத்தாளர்களின் அறிவுரையின் பேரில் தனது கதைகளை ஆங்கிலத்திலேயே எழுதினார்.

பாபானி பட்டாச்சாரியா
பிறப்பு(1906-11-10)10 நவம்பர் 1906
பகல்பூர், மேற்கு வங்கம், இந்தியா
இறப்பு10 அக்டோபர் 1988(1988-10-10) (அகவை 81)
பணிஎழுத்தாளர்

எழுத்து நடை தொகு

பாபானி பட்டாச்சாரியா இந்தோ-ஆங்கிலிக்கன் இலக்கியத்தில் சமூக நடப்பியல் பள்ளியை சார்ந்தவர் என்று வர்ணிக்கப்பட்டவர். இவருடைய எழுத்து இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி ஆகியோரின் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.[3] [1][2] மற்ற சமூக நடைமுறை மெய்மையாளர்களாகிய 'பிரேம்சந்' போல் அல்லாமல் பாபானி பட்டாச்சாரியா மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் தனது புனை கதைகளை வாசிப்பவர் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் நையாண்டி கலந்த நடையில் நடைமுறை சூழலை அடிப்படையாக கொண்டதாக எழுதினார்.[4]

விருதுகள் தொகு

சாகித்யா அகாதமி விருது, 1967[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Bhabani Bhattacharya". Making Britain Database, Discover how South Asians shaped the nation, 1870-1950. The Open University. பார்க்கப்பட்ட நாள் 26 June 2015.
  2. 2.0 2.1 2.2 Singh 2002, ப. 177-9.
  3. Singh 2002, ப. 1-2.
  4. Desai 1985, ப. 120.
  5. Gupta 2002, ப. 65.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபானி_பட்டாச்சாரியா&oldid=3849354" இலிருந்து மீள்விக்கப்பட்டது