பாபா பிட் தீவு

பாபா பிட் தீவு (Baba Bhit Island,உருது: جزیرہ بابا بھٹ‎) பாக்கித்தானின் சிந்து மாகாணத்திலிலுள்ள கராச்ச்சி நகருக்கு அருகில் காணப்படும் ஒரு சிறிய தீவாகும்[1]. கராச்சி துறைமுகத்தின் மையப்பகுதியில் மூன்று மீன்பிடித் தீவுகளை இத்தீவு கொண்டுள்ளது. தோராயமாக 4 கிலோமீட்டர் 2 பரப்பளவும் 12000 நபர்கள் மக்கள் தொகையையும் இத்தீவு கொண்டுள்ளது. முக்கிய நிலப்பகுதியிலிருந்து பிரிந்து இருப்பதால் உள்ளூர் அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் இத்தீவைப் புறக்கணித்து வருகின்றன.

முகாயிர்கள், சிந்திக்கள், பஞ்சாபிகள், காசுமீரிகள், சாரைக்கிர்கள், பக்தூன்கள், பலூச்சியர்கள், போக்ராக்கள், மெமான்கள், இசுமாயில்கள் போன்ற பலவகையான இனக்குழுக்கள் கியாமரி நகரத்தின் இசுலாமிய மக்கள் தொகையில் கலந்து காணப்படுகின்றனர். கியாமரி நகரத்தில் ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் வசிக்கின்றனர்.

பாக்கித்தானின் சிந்து மாகானத்தின் உட்பகுதியில் பிட் சா என்று மற்றொரு இடம் அமைந்துள்ளது. பிட் சா நகரத்தில் சா அப்துல் லத்தீப் பிட்டய் (1689-1752), சிந்து மாகாணத்தின் புனித இரட்சகருக்கு ஆலயம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Kiamari Town - Government of Karachi". Archived from the original on 2006-02-19. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபா_பிட்_தீவு&oldid=3562769" இலிருந்து மீள்விக்கப்பட்டது