பாபா பூதன்

17 ஆம் நூற்றாண்டு இந்திய சூபி

பாபா பூதன் (Baba Budan) முசுலீம்கள் மற்றும் இந்துக்கள் இருவராலும் போற்றப்படும் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சூஃபி ஆவார்,, இவருடைய ஆலயம் இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரில் உள்ள பாபா பூதங்கிரியில் உள்ளது. 1670 ஆம் ஆண்டு புனிதயாத்திரிகை சென்று திரும்பி வரும்போது ஏமனின் மோச்சா துறைமுகத்தில் இருந்து ஏழு காப்பி விதைகளைக் கொண்டு வந்து காப்பி செடியை இவர் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த நாட்களில் காப்பி உலகின் பிற பகுதிகளுக்கு வறுத்த அல்லது சுட்ட வடிவில் ஏற்றுமதி செய்யப்பட்டது, அதனால் யாரும் சொந்தமாக வளர்க்க முடியாது மற்றும் யேமன்களிடமிருந்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இசுலாத்தில் 7 என்ற எண் புனிதமாக கருதப்படுவதால் அவர் ஏழு விதைகளைக் கொண்டு வந்தார். அதன்பிறகு இவர் பெயரைக் கொண்ட இடத்தில் காபி செடிகள் வளர்க்கப்பட்டன.

17 ஆம் நூற்றாண்டில் மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்ட பாபா பூதன் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மரியாதைக்குரிய சூஃபி துறவியாக கருதப்பட்டார். காப்பியின் அதிசயங்களைத் தானே கண்டுபிடித்தார் என்று பிரபலமான இந்தியக் கதைகள் கூறுகின்றன. வீட்டில் தானே காபி பயிரிட வேண்டும் என்ற ஆர்வத்தில், ஏமன் மொச்சா துறைமுகத்தில் இருந்து ஏழு காபி கொட்டைகளை தனது தாடியில் மறைத்து வைத்திருந்தார். வீடு திரும்பியதும் , மைசூர் இராச்சியத்தின் (இன்றைய கர்நாடகா ) சிக்கமகளூரு மாவட்டத்தில் சந்திரத்ரோணா மலைச் சரிவுகளில் காப்பியைப் பயிரிட்டார். இந்த மலைத்தொடர் பின்னர் இவரது பெயரால் பாபா பூதாங்கிரி (பாபா பூதான் மலைகள்) என்று பெயரிடப்பட்டது, இவரது கல்லறையை சிக்மகளூரில் இருந்து ஒரு சிறிய பயணத்தில் சென்று அங்கு பார்க்கலாம்.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபா_பூதன்&oldid=3652450" இலிருந்து மீள்விக்கப்பட்டது