பாமா விஜயம் (1934 திரைப்படம்)

எம். எல். டண்டன் இயக்கத்தில் 1934 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்
(பாமா விஜயம் (திரைப்படம், 1934) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாமா விஜயம் (Bama Vijayam) 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மனிக் லால் டண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, ஜி. என். பாலசுப்பிரமணியம், பி. எஸ். ரத்னா பாய் மற்றும் பி.எஸ். சரஸ்வதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பாமா விஜயம்
இயக்கம்மனிக் லால் டண்டன்
தயாரிப்புஏ. என். மருதாச்சலம் செட்டியார்
இசைகே. தியாகராஜ தேசிகர்[1]
நடிப்புமகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி
ஜி. என். பாலசுப்பிரமணியம்
பி. எஸ். ரத்னா பாய்
பி. எஸ். சரஸ்வதி பாய்
கலையகம்பயனீர் பிலிம்ஸ்[1]
விநியோகம்செல்லம் டாக்கீஸ்
வெளியீடு1934[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு50,000[2]
மொத்த வருவாய்1,000,000[2]

நாரதர் வேடத்தில் வரும் கருநாடக இசை மேதை ஜி. என். பாலசுப்பிரமணியம் நடித்த முதலாவது திரைப்படம் இதுவாகும். மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி (மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சகோதரர்) கிருஷ்ணர் வேடத்திலும், "பாளையம்கோட்டை சகோதரிகள்"[2] என அழைக்கப்பட்ட பி.எஸ்.ரத்னா பாய், பி.எஸ்.சரஸ்வதி பாய் ஆகியோர் ருக்மணி, சத்தியபாமா வேடங்களிலும் நடித்தனர். இத்திரைப்படம் வசூலில் பெரும் வெற்றி பெற்றது. 50,000 ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு ஒரு மில்லியன் ரூபாய்களை வருவாயாகப் பெற்றது. ஹாலிவுட்டில் பயிற்சி பெற்ற மனிக்லால் டண்டன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.[3]

இப்படத்திற்கு இசையமைத்தோர் சென்னை அரங்கசாமி நாயகர் குழுவினர்.

நடிப்பு தொகு

பிலிம் நியூஸ் ஆனந்தன் மற்றும் தி இந்துவிலிருந்து எடுக்கப்பட்டது.[1][2]

தயாரிப்பு தொகு

நாரதர் வேடத்தில் வரும் கருநாடக இசை மேதை ஜி.என்.பாலசுப்பிரமணியம் நடித்த முதலாவது திரைப்படம் இதுவாகும்.[2] படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பாலசுப்பிரமணியத்தின் பெயர் "ஹட்சின்ஸ் பிளேட் ஃபேம் சங்கீதா வித்வான்" என்று தோன்றியது. [a] இத் திரைப்படத்தை ஏ. என். மருதாச்சலம் செட்டியார் 'செல்லம் டாக்கீஸ்' பெயரில் தயாரித்தார். "செல்லம்" என்பது செட்டியாரின் செல்லப் பெயராகும்.[4] இப் படத்தின் முடிவில், இதில் நடித்த அனைவரும் சேர்ந்து பாடிய ஜன கண மன பாடல் காட்சி காண்பிக்கப்பட்டது. இது குறித்து திரைப்பட வரலாற்றாளர் ராண்டார் கை, முதன்முறையாக, இந்திய நாட்டுப்பண் ஐ திரையில் காட்சிப்படுத்திய முதல் படம் என்று குறிப்பிட்டுள்ளார்.[4] மேலும் இது திரைப்படத்தை பார்க்க வரும் ரசிகர்களின் தேசிய உணர்வை தூண்டுவதாக உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[2]

பாடல்கள் தொகு

கே. தியாகராஜ தேசிகர் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.[1] 59 பாடல்கள் உள்ள இத் திரைப்படத்தில், 10 பாடல்களை பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார்.[4] பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடல் "பாலகனகமையா" எனத் தொடங்கும் தியாகராஜர் கீர்த்தனை" ஆகும். இது அடாணா இராகத்தில் அமைந்துள்ளது. "கோடி நாதுலு" எனத் தொடங்கும் தோடி இராகப் பாடலை பாலசுப்பிரமணியம் மற்றும் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி இணைந்து பாடியுள்ளனர்.[2][4]

வரவேற்பு தொகு

இத் திரைப்படம், 50,000 ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு ஒரு மில்லியன் ரூபாய்களை வருவாயாகப் பெற்றது என ராண்டர் கை குறிப்பிட்டுள்ளார்.[2]

குறிப்புகள் தொகு

  1. According to Randor Guy, Hutchins was then "a well known gramophone recording company of that period and 78 rpm discs were then colloquially known as 'plates'".[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers இம் மூலத்தில் இருந்து 28 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170528111902/http://www.lakshmansruthi.com/cineprofiles/1934-cinedetails13.asp. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Randor Guy (18 January 2008). "Bhama Vijayam 1934". தி இந்து இம் மூலத்தில் இருந்து 28 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170528112751/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/bhama-vijayam-1934/article3022445.ece. பார்த்த நாள்: 28 May 2017. 
  3. "1934 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2017-05-28. பார்க்கப்பட்ட நாள் 2016-10-18.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Guy, Randor (24 January 2002). "Melody and more in every frame". The Hindu இம் மூலத்தில் இருந்து 28 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170528112802/http://www.thehindu.com/thehindu/mp/2002/01/24/stories/2002012400130200.htm. பார்த்த நாள்: 28 May 2017.