பாரதி சாலை, சென்னை

பாரதி சாலை (Bharathi Salai) என்பது தமிழ்நாட்டின் சென்னை நகரின் இராயப்பேட்டையில் உள்ள ஒரு பழமையான சாலையாகும்.[1] இந்தச் சாலை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகம் இருக்கும் ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்புக்கும் மெரீனா கடற்கரை காமராஜர் சாலை கண்ணகி சிலை சந்திப்புக்கும் இடையே நீண்டிருக்கிறது. பாரதி சாலையின் பழைய பெயர் பைகிராப்ட்ஸ் சாலை என்பதாகும். இது ஆங்கோலேய திகாரியான செயின்ட் தாமஸ் பைகிராப்ட்ஸ் என்பவரின் நினைவால் அப்போது வைக்கப்பட்டது. சுப்பிரமணிய பாரதியின் நினைவைப் போற்றும் விதத்தில் தமிழ்நாடு அரசு பைகிராப்ட்ஸ் சாலையின் பெயரை பாரதி சாலை என்று மாற்றியது.

சென்னையின் மிகப் பழமையான இந்தச் சாலைகளில் ஒன்றான இந்தச் சாலையில்தான் ஆற்காடு நவாப்பின் அதிகாரபூர்வ இல்லமான அமீர் மஹால் உள்ளது. தமிழ் மர்ம புதின எழுத்தாளரான வடுவூர் துரைசாமி ஐயங்கார் இந்தச் சாலையில்தான் வீடு வாங்கி வசித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சாலையின் மையத்தில் சென்னையின் மிகப் பழமையான சந்தைப் பகுதிகளுள் ஒன்றாக ஜாம்பஜார் என்ற சந்தை உள்ளது. இந்தச் சந்தை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளின் வர்த்தக மையமாக இருக்கிறது. இந்தச் சாலையில் ஒரு பகுதி ராயப்பேட்டையில் இருக்கிறது. ராயப்பேட்டை மெத்தை, திரைகளுக்கான சந்தை. அதனால் அது தொடர்பான கடைகளும் இந்தச் சாலையில் இருக்கின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bharathi Salai, Royapettah". http://www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2018. {{cite web}}: External link in |publisher= (help)
  2. ச.ச.சிவ சங்கர் (6 சனவரி 2018). "சென்னையின் பழமையான சாலை". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதி_சாலை,_சென்னை&oldid=3577766" இலிருந்து மீள்விக்கப்பட்டது