பாரத் கட்டணம் செலுத்து முறைமை
பாரத் கட்டணம் செலுத்து முறைமை (Bharat Bill Payment System, BBPS) என்பது ரிசர்வ் வங்கியால் கருத்துருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டண முறையாகும். பொதுமக்கள் தொடர்ச்சியாக செலுத்தும் குடிநீர், மின்சாரம் போன்ற கட்டணங்களை ஒரே சாளரத்தின் கீழ் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். கட்டணம் செலுத்தப்பட்டவுடன் குறுஞ்செய்தி வாயிலாக கட்டணம் செலுத்தியதற்கான ரசீது செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு குடையின் கீழ் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பரிவர்த்தனையில் ஏற்படும் புகார்களும் ஒரே இடத்தில் கையாளப்படும்.
இது இந்தியத் தேசிய கொடுக்கல்கள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது [1]
செயல்பாடு
தொகுபாரத் பில் செலுத்தும் முறை கீழ்கண்ட கட்டணங்களை செலுத்தும் வசதியை தருகிறது
- மின்சாரம்
- தொலைத்தொடர்பு
- டிடிஎச்
- எரிவாயு
- குடிநீர்
- காப்பீட்டு சந்தா
- பாஸ்டேக் (FASTag)
- கடன் அட்டை கட்டணம்