பாராம் ஆறு (மலாய்: Sungai Baram; ஆங்கில மொழி: Baram River; இந்தோனேசிய மொழி: Sungai Baram; சீன மொழி: 巴兰河) என்பது போர்னியோ, கிழக்கு மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள ஒரு முக்கியமான ஆறு ஆகும்.

பாராம் ஆறு
Baram River
சரவாக்
ஆசியான் பாலத்தில் இருந்து பாராம் ஆறு
அமைவு
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
சிறப்புக்கூறுகள்
மூலம்மூருட் மலை; கெலாபிட் உயர்நிலங்கள்
 ⁃ அமைவுபோர்னியோ, மலேசியா;
 ⁃ ஏற்றம்2,423
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
மிரி >>> தென்சீனக் கடல்
 ⁃ ஆள்கூறுகள்
04°23′33″N 113°59′10″E / 4.39250°N 113.98611°E / 4.39250; 113.98611
 ⁃ உயர ஏற்றம்
கடல் மட்டம்
நீளம்400 km (250 mi)
வடிநில அளவு22,100 km2 (8,533 sq mi)[2]
வெளியேற்றம் 
 ⁃ அமைவுபாராம், தென்சீனக் கடல்
 ⁃ சராசரி1,590 m3/s (56,000 cu ft/s)[1]
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுதூத்தோ ஆறு, தெமாலா ஆறு, பெலுத்தான் ஆறு, பாத்தா ஆறு, ஆக்கா ஆறு, புவாங் ஆறு, செலான் ஆறு, செருங்கோ ஆறு
 ⁃ வலதுஆராங் ஆறு, திஞ்சார் ஆறு, சூலான் ஆறு, சிலாட் ஆறு, மோ ஆறு

இந்த ஆறு மலேசியாவின் கெலாபிட் உயர்நிலங்கள் (Kelabit Highlands); இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தான் (East Kalimantan) இரான் மலை (Iran Mountains) பகுதியில் உருவாகிறது. அத்துடன் மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் ஓர் இயற்கையான எல்லையாகவும் அமைகிறது.[3]

பொது தொகு

இந்த ஆறு மேற்கு நோக்கி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாகச் சென்று தென் சீனக் கடலில் கலக்கிறது. பாராம் ஆற்றின் கழிமுகம்; கிழக்கு பாராம் கழிமுகம் (East Baram Delta) என்றும் மேற்கு பாராம் கழிமுகம் (West Baram Delta) என்றும் இரண்டு அலகுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[4][5]

1882-ஆம் ஆண்டில் அப்போதைய புரூணை சுல்தான் அப்துல் மோமின் (Sultan Abdul Momin) என்பவர் சரவாக்கின் வெள்ளை இராசா (White Rajah) ஜேம்சு புரூக்கிற்கு பாராம் நதிப் படுகையை (Baram River Basin) வழங்கி இருக்கிறார். 10,000 சதுர மைல்கள் (30,000 km2) பரப்பளவு கொண்ட பாராம் ஆற்றுப் படுகை அப்போது புரூணை சுல்தானகத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[6]

மிரி-பாராம் நெடுஞ்சாலை தொகு

ஜேம்சு புரூக் ஆண்டுக்கு 6000 டாலர்களை ஆண்டு நிதியாக புரூணை சுல்தானுக்கு செலுத்த வேண்டும் எனும் உடன்படிக்கையின் கீழ் கொடுக்கப்பட்டது. அப்போது இருந்து பாராம் ஆற்றுப் படுகை, சரவாக்கின் நிலப்பகுதியாக இருந்து வருகிறது.

2003-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட மிரி-பாராம் நெடுஞ்சாலையில் (Miri-Baram Highway) பத்தாங் பாராம் பாலம் (Batang Baram Bridge) எனும் நீண்ட பாலம் உள்ளது. மலேசியக் கூட்டரசு சாலை 22   (Malaysia Federal Route 22) என்று அழைக்கப்படும் அந்த நெடுஞ்சாலையை அந்தப் பாலம் மூலமாக பாராம் ஆறு கடக்கிறது. பாராம் ஆற்றின் கழிமுகத்தில் இருந்து ஏறக்குறைய 100 கி.மீ. தொலைவில் மருடி நகரம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Prabakaran, Krishnamurthy (2017). "Environmental Geochemistry of the Lower Baram River, Borneo" (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Ministry of Natural Reserves and Environment, Malaysia: National Water Resources Study, Vol. 29 - Sarawak[தொடர்பிழந்த இணைப்பு] (PDF; 72,3 MB) page 74
  3. Reed L. Wadley (2005). Histories of the Borneo Environment. KITLV Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-6718-254-0. 
  4. Louisiana State University
  5. Hutchison, Charles (2005). Geology of North-West Borneo: Sarawak, Brunei and Sabah. Amsterdam: Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-444-51998-6. 
  6. The Pagan Tribes of Borneo, retrieved 22-05-2007 பரணிடப்பட்டது செப்டெம்பர் 28, 2007 at the வந்தவழி இயந்திரம்

இவற்றையும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராம்_ஆறு&oldid=3678993" இலிருந்து மீள்விக்கப்பட்டது