பாராலி ஆறு
இந்திய மாநிலம் அஸ்ஸாமில் பாயும் பிரம்மபுத்திராவின் கிளை நதி
பாராலி நதி (Bharali) இந்திய மாநிலமான அசாமில் பாயும் பிரம்மபுத்ரா நதியின் துணை நதியாகும். இந்நதி சியா பாராலி [1] என்றும் காமெங் என்றும் அழைக்கப்படுகிறது. பாராலி நதி அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள மலைகளில் உருவாகி பிரம்மபுத்ரா நதியுடன் சங்கமிப்பதற்கு முன்பு தேசுபூரின் மையப்பகுதி வழியாக பாய்கிறது.
பாராலி நதி Bharali River | |
---|---|
பெயர் | ভৰলী নদী (அசாமிய மொழி) |
அமைவு | |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | சோணித்பூர் மாவட்டம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | அருணாச்சல மலைகள் |
⁃ அமைவு | அருணாசலப் பிரதேசம் |
முகத்துவாரம் | பிரம்மபுத்திரா ஆறு |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | பாராலி - பிரம்மபுத்திரா ஆறு |
பாராலி அல்லது பாராலு என்ற பெயர் போலோப்ரி என்ற போரோ மக்கள் வணங்கும் தெய்வத்தின் பெயரிலிருந்து உருவானதாகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jia Bharali River: Latest News & Videos, Photos about Jia Bharali River | The Economic Times". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2020-09-20.
- ↑ Bishnu Rabha (1982). Bishnu Rabha Rachanavali Vol. 1.