பார்க் கியுங் சிக்

பார்க் ஹ்யுங்-சிக் (ஆங்கில மொழி: Park Hyung-sik, 박형식) (பிறப்பு: நவம்பர் 16, 1991) என்பவர் ஒரு தென் கொரிய நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் மூன்று வருட பயிற்சிக்குப் பிறகு, 2010 இல் தென் கொரிய சிறுவர் பாடகர் குழு சே:ஏ (ZE:A) இன் உறுப்பினராக அறிமுகமானார்.

பார்க் ஹ்யுங்-சிக்
பிறப்புநவம்பர் 16, 1991 (1991-11-16) (அகவை 32)
யோன்கின்
தென் கொரியா
பணிபாடகர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010 (2010)–இன்று வரை
வலைத்தளம்
http://www.ze-a.com

ஒரு நடிகராக, இவர் தி ஹெர்ஸ் (2013), ஹை சொசைட்டி (2015), ஹ்வாரங்: தி பொயட் வாரியர் யூத் (2016), ஸ்ட்ராங் கேர்ள் பாங்-சூன் (2017), சூட்ஸ் (2018), ஹேப்பினஸ் (2021) ஆகிய தொடர்களில் நடித்ததற்காக அறியப்பட்டவர். அத்துடன் இவர் திரைப்படங்கள் மற்றும் இசை நாடக தயாரிப்புகளிலும் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை தொகு

இவர் நவம்பர் 16, 1991 அன்று தென் கொரியாவின் ஜியோங்கி மாகாணத்தில் உள்ள யோங்கினில் இரண்டு மகன்களில் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.[1] இவரது தந்தை பி.எம்.டபிள்யூ கொரியாவின் இயக்குநர் குழுவில் உறுப்பினராக உள்ளார், மேலும் இவரது தாயார் பியானோ ஆசிரியர் ஆவார்.[2]

இவரது தாயும் பாட்டியும் பௌத்தர்கள் என்பதால், இவர் ஒரு புத்த துறவியால் ஹியுங்-சிக் என்று பெயரிடப்பட்டார். இவர் தனது பள்ளியின் இசைக்குழுவில் நடுநிலைப் பள்ளியில் பாடகராக சேர்ந்தார்.

தொழில் தொகு

இவர் தனது தொழில் முறை வாழ்க்கையை 'சே:ஏ' என்ற இசை குழு மூலம் ஒரு பாடகராக அறிமுகமானார், இவர்களின் முதல் ஒன்றை ஆல்பம் சனவரி 7, 2010 அன்று வெளியானது.[3] அந்த ஆண்டு, அவர் பிராசிக்யூட்டர் பிரின்சஸ், மேரி மீ, ப்ளீஸ் மற்றும் குளோரியா ஆகிய தொலைக்காட்சித் தொடரில் கௌரவத் தோற்றத்தில் தோன்றினார். பின்னர் 2011 ஆம் ஆண்டில், பார்க் தனது நாடக வாழ்க்கையை சூப்பர் ஜூனியரின் ரியோவூக்குடன் இணைந்து வோல்வ்ஸ் என்ற இசையில் ஒரு நடிகராகத் அறிமுகமானார்.

இவர் தனது நடிப்பு வாழ்க்கையை 2012 இல் தொடங்கினார், எஸ்.பி.எஸ் தொலைக்காட்சியின் சிறப்பு நாடகமான 'ஐ ரிமெம்பர் யூ' தொடரில் நடித்தார்.[4] அதே ஆண்டு, இவர் எஸ்.பி.எஸ் தொலைக்காட்சியின் 'டம்மி மம்மி'யில் என்ற தொடரில் ஒரு இசைக்குழுவின் பாடகராக நடித்தார்.[5]

 
ஜூலை 23, 2011 அன்று இசை நிகழ்ச்சி விழாவில் பார்க்.

இவர் ஜூன் 2013 இல் 'ரியல் மென்' என்ற நிகழ்ச்சியில் இணைந்த பிறகு பரந்த அங்கீகாரத்தைப் பெற்றார், அங்கு அவர் தனது அப்பாவி, ஆனால் உணர்ச்சிமிக்க உருவத்திற்காக "பேபி சோல்ஜர்" என்று செல்லப்பெயர் பெற்றார்.[6] அதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு தி ஹெர்ஸ் என்ற வெற்றி தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் 2014 ஆகத்தில், குடும்ப நாடகமான 'வாட்ஸ் வித் திஸ் பேமிலி' என்ற தொடரில் ஒரு நிலையான வேலையைத் தேடுவதில் சிரமப்படும் இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த தொடர் இவரின் அடுத்த கட்ட வெற்றிக்கு வழி வகுத்தது.[7]

இவர் 2015 இல், எஸ்.பி.எஸ் தொலைக்காட்சியின் காதல் நாடகமான 'ஹை சொசைட்டி' என்ற தொடரில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார்.[8][9] இந்தத் தொடரில் இவரது நடிப்பிற்காக சாதகமான விமர்சனங்களைப் பெற்றார். பின்னர் திசம்பர் 2016 இல் ஒரு வரலாற்று நாடகமான 'ஹ்வாரங்: தி பொயட் வாரியர் யூத்' என்ற தொடரில், ஒரு இளம் மற்றும் அவநம்பிக்கை கொண்ட அரசனாக சம்மேக்ஜோங் பாத்திரத்தில் நடித்தார்.

இவர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த 'ஸ்ட்ராங் கேர்ள் பாங்-சூன்' என்ற தொடர் பிப்ரவரி 2017 இல் ஜெரிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[10] இந்த தொடரில் இவர் ஒரு ஐன்சாஃப்ட் என்ற நிகழ்ப்பட ஆட்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நடித்தார். இந்த தொடர் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது, மேலும் கேபிள் தொலைக்காட்சி வரலாற்றில் கொரிய நாடகங்களில் மிக உயர்ந்த இலக்கு அளவீட்டு புள்ளியை பெற்றது.[11] பின்னர் ஏப்ரல் 2018 இல், அமெரிக்க சட்ட நாடகத் தொடரான சூட்ஸின் கொரிய மறு ஆக்கத்தில் இவர் நடித்தார்.[12][13] அதைத் தொடர்ந்து, நவம்பர் 2018 இல், பார்க் இசைக் காட்சிக்குத் திரும்பினார், எலிசபெத்தின் மேடை தயாரிப்பில் டெர் டோட் பாத்திரத்தில் நடித்தார்.

மே 2019 இல், பார்க் தனது முதல் திரைப்படமான ஜூரர் 8 என்ற சட்டத் திரைப்படத்தில் அறிமுகமானார்.[14][15] இந்த படத்தில் நடித்ததற்காக 39வது கொரிய திரைப்பட விமர்சகர்கள் விருதுகளில் சிறந்த புதிய நடிகருக்கான விருதை வென்றது. அத்துடன் 40வது புளூ டிராகன் திரைப்பட விருதுகள் மற்றும் 56வது பேக்சாங் ஆர்ட்ஸ் விருதுகளில் சிறந்த புதிய நடிகருக்கான (திரைப்படம்) பரிந்துரைகளைப் பெற்றார்.

ஜூன் 10, 2019 அன்று பார்க் தனது கட்டாய இராணுவ சேவையைத் தொடங்கினார். இவர் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைத் தொடங்க தெற்கு சுங்சியோங் மாகாணத்தில் உள்ள இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி மையத்தில் நுழைந்தார் மற்றும் தலைநகர் பாதுகாப்புக் கட்டளையின் இராணுவ காவல் துறையில் தனது மீதமுள்ள இராணுவப் பணிகளை முடித்தார்.[16][17]

சனவரி 2021 இல் அவர் இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,,[18] இவர் 'ஹேப்பினஸ்' என்ற தொடரில் நடித்தார்.[19][20] அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு, நான்கு அத்தியாயங்கள் கொண்ட இசை காதல் தொடரான 'சௌண்ட்ட்ரக் #1' இல் நடித்தார்.[21] இதில் இயக்குனர் கிம் ஹீ-வோன் மற்றும் இணை நடிகரான ஹான் சோ-ஹீ ஆகியோருடன் பணிபுரிவதற்காக இவர் இந்த தொடரை ஏற்றுக்கொண்டார். இவர் பிப்ரவரி 2023 இல், 'புளூமிங் யூத்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.[22]

மேற்கோள்கள் தொகு

  1. (in ko)Ten Asia. January 23, 2013 இம் மூலத்தில் இருந்து December 22, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151222110306/http://tenasia.hankyung.com/archives/117910. 
  2. Bhagchandani, Umesh (March 23, 2022). "Who is Soundtrack #1's Park Hyung-sik? The ZE:A K-pop idol will appear on the Disney+ series alongside Kim Hee-won and is pals with BTS' V and Park Seo-joon". South China Morning Post. https://www.scmp.com/magazines/style/celebrity/article/3171531/who-soundtrack-1s-park-hyung-sik-zea-k-pop-idol-will?module=perpetual_scroll_0&pgtype=article&campaign=3171531. 
  3. Lee, Soo-hyun (December 28, 2009). (in ko)Star News இம் மூலத்தில் இருந்து January 13, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230113175742/https://www.starnewskorea.com/stview.php?no=2009122814303879041&type=1&outlink=. 
  4. "김병만 이영은 김진우, 설특집 드라마 '널 기억해'로 '안방극장 훈훈'" (in ko). January 13, 2012 இம் மூலத்தில் இருந்து November 11, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131111072554/http://news.naver.com/main/read.nhn?mode=LSD&mid=sec&sid1=106&oid=213&aid=0000171932. 
  5. "'바보엄마' 박형식 "임시완, 너무 바빠 연기조언 구할 시간 없다"" (in ko). March 13, 2012 இம் மூலத்தில் இருந்து July 29, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170729184743/http://entertain.naver.com/read?oid=112&aid=0002279912. 
  6. "Park Hyung-sik to depart 'Real Men'". Korea JoongAng Daily. July 15, 2014. Archived from the original on July 10, 2018. பார்க்கப்பட்ட நாள் July 29, 2017.
  7. "ZE:A's Hyung Sik says His Character Was Written for Him". Mwave. October 17, 2013. Archived from the original on 2017-07-29.
  8. "ZE:A's Park to star in drama". April 11, 2015 இம் மூலத்தில் இருந்து June 5, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220605103414/https://koreajoongangdaily.joins.com/news/article/article.aspx?aid=3002965. 
  9. "Singer Park talks growing TV career". Korea JoongAng Daily. August 18, 2015.
  10. "Park Bo-young, Park Hyung-sik wrap up filming for 'Strong Woman Do Bong-soon'". Kpop Herald. April 12, 2017. Archived from the original on June 5, 2022. பார்க்கப்பட்ட நாள் March 21, 2018.
  11. "'Strong Woman Do Bong-soon' ends with JTBC's top viewership". Kpop Herald. April 16, 2017. Archived from the original on October 10, 2017. பார்க்கப்பட்ட நாள் July 10, 2018.
  12. "Jang Dong-gun, Park Hyung-sik to Star in Remake of U.S. TV Series". The Chosun Ilbo. September 25, 2017. Archived from the original on July 21, 2021. பார்க்கப்பட்ட நாள் March 21, 2018.
  13. "Lawyers to wear tailored 'Suits' in Korea". The Korea Herald. April 24, 2018. Archived from the original on July 15, 2021. பார்க்கப்பட்ட நாள் July 9, 2018.
  14. "THE JURORS Is in Session with MOON So-ri and PARK Hyung-sik". Korean Film Biz Zone. July 23, 2018. Archived from the original on July 11, 2022. பார்க்கப்பட்ட நாள் July 23, 2018.
  15. "Park Hyung-sik Speaks out on Big Screen Debut". The Chosun Ilbo. May 4, 2019. Archived from the original on May 4, 2019. பார்க்கப்பட்ட நாள் May 4, 2019.
  16. "Park Hyung-sik starts mandatory military service". koreatimes (in ஆங்கிலம்). 2019-06-10. Archived from the original on July 26, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-07-26.
  17. "Park Hyung-Sik Has Officially Enlisted For Military Service". E! Online (in ஆங்கிலம்). June 10, 2019. Archived from the original on July 26, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-07-26.
  18. Hwang, Hye-jin (January 4, 2021). (in ko)Newsen இம் மூலத்தில் இருந்து January 3, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210103223228/https://n.news.naver.com/entertain/article/609/0000380927. 
  19. "[단독]한효주·박형식·조우진, tvN '해피니스' 주인공(종합)". n.news.naver.com (in கொரியன்). Archived from the original on April 18, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-12.
  20. 이정현 (2021-05-07). "한효주·박형식·조우진, 드라마 '해피니스' 주연". 연합뉴스 (in கொரியன்). Archived from the original on May 12, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-12.
  21. Jeon, Hyung-hwa (February 4, 2022). (in ko)Star News இம் மூலத்தில் இருந்து February 4, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220204021153/https://entertain.naver.com/now/read?oid=108&aid=0003025946. 
  22. Hong, Se-young (December 27, 2022). (in ko)The Dong-a Ilbo இம் மூலத்தில் இருந்து December 27, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221227011420/https://entertain.naver.com/now/read?oid=382&aid=0001024299. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்க்_கியுங்_சிக்&oldid=3865830" இலிருந்து மீள்விக்கப்பட்டது