பர்பரிகன்
(பார்பரிகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பர்பரிகன் இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் பீமனின் மகன் கடோற்கஜனுக்கும் யாதவ அரசன் மூருவின் மகள் மௌர்விக்கும் பிறந்தவனாவான். யட்சனான பர்பரிகன் மனிதனாக மறுபிறவி எடுத்தவன். பாண்டவர்கள் பக்கம் போராட விரும்பினாலும், தோற்கும் கட்சிக்கே ஆதரவு என்ற தனது கொள்கையால் கௌரவர்களுடன் சேர்ந்து கொள்கிறான்.
இராசத்தானில் பர்பரிகன் குருச்சேத்திரப் போரில் தனது தாத்தாக்களான பாண்டவர்கள் வெற்றி காண பலி கொடுக்கப்பட்டான் என நம்பப்படுகிறது. இந்தச் செய்கையால் கிருஷ்ணர் அவனைத் தெய்வமாக்குகிறார். அங்கு பர்பரிகன் கதுஷ்யாம்ஜி என வழிபடப்படுகிறார்.