பாலியல் பலாத்கார அட்டவணை

பாலியல் பலாத்கார அட்டவணை(Rape schedule) என்பது பெண்ணியக் கோட்பாட்டின் ஒரு கருத்தாகும், இது பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாதல் , பெண்களுக்கு கட்டுப்பாடுகளை வைத்தல் அல்லது அவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகள் மற்றும் நடத்தைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை விவரிக்கப் பயன்படுகிறது. இந்த நடத்தை மாற்றங்கள் அவர்களுக்கு அறிந்தோ அல்லது அறியாமலோ ஏற்படலாம்.[1]

கருத்தின் தோற்றம்

தொகு

கற்பழிப்பு அட்டவணை என்ற சொல் முதன்முதலில் 1998 இல் டயான் ஹெர்மனின் "கற்பழிப்பு கலாச்சாரம்" எனும் கட்டுரையில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.[2] பின்னர் இது ஜெசிகா வலெண்டி என்பவரின் ஃபுல் ஃபிரண்டல் ஃபெமினிசம் என்ற புத்தகத்தில் இடம் பெற்றதன் மூலம் பரவலாக அறியப்பட்டது. [3]

குற்றவியல் நிபுணர் ஜோடி மில்லர், வழக்கறிஞர் கேதரின் மெக்கின்னான் மற்றும் தத்துவஞானி சூசன் கிரிஃபின் உள்ளிட்ட பல துறைகளில் உள்ள பெண்ணிய அறிஞர்களால் இந்த கருத்து மேற்கோள் காட்டப்பட்டு விவாதிக்கப்பட்டது. இவர்கள் பெண்களின் சுதந்திரம், உரிமைகளுக்கான அணுகல், மற்றவர்களுடனான உறவுகள் மற்றும் சுய மதிப்பு ஆகியவற்றில் கற்பழிப்பு அட்டவணையின் தாக்கம் குறித்து நிகழக்கூடிய ஊகங்களைத் தெரிவித்துள்ளனர்.[4][5][6]

பின்னணி

தொகு

புள்ளிவிவர சூழல்

தொகு

பாதிக்கப்பட்டவர்களின் அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புள்ளிவிவர பகுப்பாய்வு அமெரிக்காவில் பாலியல் வன்கொடுமை அதிகமாக இருப்பதாக கூறியது. 2015 ஆம் ஆண்டு தேசிய குற்றத் துன்புறுத்தல் கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, அமெரிக்காவில் 12 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 321,500 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் அல்லது பாலியல் ரீதியாக தாக்கப்படுகிறார்கள். இதில், ஆண்களை விட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது: 6 பெண்களில் ஒருவர் தங்களது வாழ்நாளில் ஒருநாளாவது கற்பழிப்பு போன்ற நிகழ்வுகளில் ஆட்படுகின்றனர். ஆனால் இது ஆண்களைப் பொறுத்த வரையில் 33 ஆண்களுக்கு ஒருவர் எனும் விகிதத்தில் உள்ளது.[7] பாலியல் தொடர்பான நிகழ்வுகளில் பாதிக்கப்படுபவர்களில் 91 சதவீதம் பெண்களே உள்ளனர்.[8]

இந்த புள்ளிவிவரங்கள் பாலுணர்வு விகிதாச்சாரத்தின் தாக்கத்தில் அமைந்துள்ளது:

46.4 சதவீதம் பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் (பெண்விழையாள்) மற்றும் 40.2% ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் (ஆண்விழையான்) , 74.9% பெண் இருபால்விழைஞர் மற்றும் 47.4% ஆண் இருபால்விழைஞர்; மற்றும் 43.4% வற்றுப்பால்புணர் பெண்கள் மற்றும் 20.8% வற்றுப்பால்புணர் ஆண்கள்

தேசிய பாலியல் வன்முறை வள மையத்தின்படி, ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்நாளில் ஏதேனும் ஒரு விதத்தில் ஒருவித பாலியல் வன்முறையை அனுபவிப்பதாக கூறியுள்ளனர்.[9]

வயதும் பாலியல் வன்கொடுமைக்கு ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. எடுத்துக்காட்டாக, ஒட்டுமொத்த பெண்களின் தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது, கல்லூரி மாணவர்களான 18-24 வயதுடைய பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்; மேலும் இதே வயதுடைய பெண்கள் கல்லூரிக்குச் செல்லவில்லை எனில் அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உளாகும் வாய்ப்பு நான்கு மடங்கு உள்ளதாகத் தகவல்கள் கூறுகிறது.[10] கற்பழிப்பு என்பது அமெரிக்காவில் அதிகம் குறிப்பிடப்படாத குற்றங்களில் ஒன்றாகும்.[11]

சிறப்புரிமை

தொகு

ஒரு சிரப்புரிமை என்பது பெருவாரியான மக்களுக்கு வழங்கப்பட்டு சில நபர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகிற உரிமைகளை வழங்குவது ஆகும்.[12] சமூகரீதியாக இது சமத்துவமின்மையினை தகர்த்துவதற்காக வழங்கப்படுவதனைக் காட்டுகிறது.[13]

பின்வருவனவற்றை சலுகைக்கான எடுத்துக்காட்டுகளைக் காணலாம்: [13]

  1. பாலின அடையாளம்
  2. வர்க்கம்
  3. பாலியலும்
  4. ரேஸ்
  5. வயது
  6. திறன்
  7. மதம்
  8. தொழில்

சான்றுகள்

தொகு
  1. Valenti, Jessica (2007). Full Frontal Feminism. Berkeley, CA: Seal Press. pp. 63–64.
  2. D. Herman, "The Rape Culture," in Changing Our Power 260 (J.W. Cochran & D. Langton eds., 1988)
  3. Valenti, Jessica. Full Frontal Feminism: A Young Woman's Guide to Why Feminism Matters. Seal Press, (2007). 63
  4. Catharine A MacKinnon, Sex Equality, Foundation Press (2007) 339
  5. Stephen R. Gold's review of: Sex, Power, Conflict: Evolutionary and Feminist Perspectives, Edited by David M. Buss and Neil M. Malamuth. Oxford University, Press, New York, 1996 as cited in 'Theories of Rape' http://cyber.law.harvard.edu/vaw00/theories_of_rape.html.
  6. "The Rape Culture" (PDF). Archived from the original (PDF) on 2019-06-16. பார்க்கப்பட்ட நாள் 2019-10-31.
  7. "Victims of Sexual Violence: Statistics | RAINN". www.rainn.org (in ஆங்கிலம்).
  8. "Statistics About Violence" (PDF). NSVRC. National Sexual Violence Resource Center. Archived from the original (PDF) on 2018-11-14.
  9. "Statistics About Violence" (PDF). NSVRC. National Sexual Violence Resource Center. Archived from the original (PDF) on 2018-11-14.
  10. "Campus Sexual Violence: Statistics | RAINN". www.rainn.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 February 2018.
  11. "Statistics About Violence" (PDF). NSVRC. National Sexual Violence Resource Center. Archived from the original (PDF) on 2018-11-14.
  12. "Definition of PRIVILEGE". www.merriam-webster.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 February 2018.
  13. 13.0 13.1 "A Structural Definition Of Social Privilege | MSS Research". www.mssresearch.org (in ஆங்கிலம்). MSS Research. பார்க்கப்பட்ட நாள் 21 February 2018.