பாலூர் கோட்டா அருவி
பாலூர் கோட்டா அருவி (Paloor Kotta Falls) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம் கடுங்காபுரம் கிராமத்தில் உள்ள ஓர் அருவியாகும். அங்காடிபுரத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், பெரிந்தல்மன்னா நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த அருவி அமைந்துள்ளது. குளம் போன்ற நீர் ஆதாரத்திலிருந்து உருவாகி ஒரு சிறிய கால்வாய் வழியாக சுமார் 500 அடி உயரத்தில் இருந்து பாறைகள் வழியாக தண்ணீர் பாய்கிறது.[1]
சூன் மற்றும் சூலை மாதங்களில் கனமழை பெய்யும் போது அருவியின் முழு தோற்றம் தெரியும். திப்பு சுல்தானின் பிரச்சாரம் மலபார் முழுவதும் பரவியபோது இந்த பகுதி ஒரு மேடையாக பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த அருவியின் உச்சியில் இருந்து பார்த்தால் கிலோமீட்டர் தொலைவில் எதிரிகள் தாக்க வருவதை காணவும் முடிந்தது. எதிரிகளால் எளிதில் ஏற முடியாததால், திப்பு இந்த இடத்தை மறைவிடமாகத் தேர்ந்தெடுத்தார்.[2]
வழி
தொகுஅங்காடிபுரம்- கொட்டகால் வழித்தடத்தில் கடுங்காபுரம் பள்ளிப் படிக்கட்டுகளில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பயணித்தால் இங்கு அடையலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ R. Rajesh (2019-08-18). "Paloor Kotta Falls". Mathrubhumi. Archived from the original on 2020-08-07. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
- ↑ രാജേഷ്.ആർ, എഴുത്ത്, ചിത്രങ്ങൾ:. "ടിപ്പു ഒളിവിൽ കഴിഞ്ഞ ഇടം... പച്ചപ്പുകൊണ്ട് പ്രകൃതി തീർത്ത പാലൂർ കോട്ട". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2019-08-17. பார்க்கப்பட்ட நாள் 2019-08-18.
{{cite web}}
: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)