பால்கோ கலப்புலோகம்

பால்கோ (Balco) என்பது ஒரு நிக்கல்-இரும்பு கலப்புலோகம் ஆகும், நிக்கல் போன்ற வெப்ப கடத்துத்திறனும் அதைவிட இருமடங்கு அதிக மின் தடையும் கொண்டது ஆகும். இது குறைந்த செலவு வெப்பத்தடை உணர்கருவிகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதுவே இக்கலப்புலோகத்தின் முதன்மையான பயனாகும். 70% நிக்கல் மற்றும் 30% இரும்பு கலந்து இக்கலப்புலோகம் உருவாக்கப்படுகிறது. ஆரிசன் நிறுவனம் இக்கலப்புலோகத்தை ஐட்டம்கோ என்ற பெயரில் விற்பனை செய்கிறது. வெப்பத்தடை உணர்கருவிகள் மின்தடையை வெப்பத்தின் செயலை முன்னறிந்து கொள்ளுமாறு மாற்றியமைத்து ஒரு வெப்பநிலைமானியைப் போல பயன்படுகின்றன.

பால்கோ கலப்புலோகத்தின் வெப்பநிலை குணகம் 0. 00518 ஆகும். கிட்டத்தட்ட தூய நிக்கல் உலோகத்தின் வெப்ப குணகத்திற்கு 0.00672 இணையாக ஆனால் சிறப்பான நேரியல்புடன் காணப்படுகிறது. இயந்திரரீதியாக வலுவானதாகவும் சிறிதளவு அரிப்பை எதிர்க்கும் தன்மையையும் இது பெற்றுள்ளது.

வெப்பத்தடை உணர்கருவி தனிமங்களில் பிளாட்டினம் பரிந்துரைக்கப்படுகிற்து. விலை ஒரு புறமிருந்தாலும் அதன் தாழ் வெப்பநிலை குணகத் தடை மதிப்பு (.00385) இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் நீண்ட நிலைத்தன்மையும், மீள்பயன்பாடும் கூடுதல் காரணங்களாகும்[1].

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Selecting a Temperature Sensor, archived from the original on 2012-01-26, பார்க்கப்பட்ட நாள் 2012-05-31
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்கோ_கலப்புலோகம்&oldid=3220687" இலிருந்து மீள்விக்கப்பட்டது