பாலமீன்

மீன் இனம்
(பால்மீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாலமீன்
புதைப்படிவ காலம்:Early Cretaceous–present
Chanos chanos from பிரெஞ்சு பொலினீசியா
Chanos chanos (locally called bangús) in a பிலிப்பீன்சு மீன் சந்தை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: ஆக்டினோப்டெர்ஜி
வரிசை: கோனோரைங்கிபார்மிசு
குடும்பம்: சன்னிடே
பேரினம்: சன்னாசு
இனம்: சன்னாசு
வேறு பெயர்கள்
  • Butirinus argenteus Jerdon, 1849
  • Butirinus maderaspatensis Jerdon, 1849
  • Chanos arabicus Lacepède, 1803
  • Chanos chloropterus Valenciennes, 1847
  • Chanos cyprinella Valenciennes, 1847
  • Chanos gardineri Regan, 1902
  • Chanos indicus (van Hasselt, 1823)
  • Chanos lubina Valenciennes, 1847
  • Chanos mento Valenciennes, 1847
  • Chanos mossambicus (Peters, 1852)
  • Chanos nuchalis Valenciennes, 1847
  • Chanos orientalis Valenciennes, 1847
  • Chanos salmoneus (Forster, 1801)
  • Chanos salmonoides Günther, 1879
  • Cyprinus pala Cuvier, 1829
  • Cyprinus palah (Cuvier, 1829)
  • Cyprinus tolo Cuvier, 1829
  • Leuciscus palah Cuvier, 1829
  • Leuciscus salmoneus (Forster, 1801)
  • Leuciscus zeylonicus Bennett, 1833
  • Lutodeira chanos (Forsskål, 1775)
  • Lutodeira chloropterus (Valenciennes, 1847)
  • Lutodeira indica van Hasselt, 1823
  • Lutodeira mossambica Peters, 1852
  • Lutodeira mossambicus Peters, 1852
  • Lutodeira salmonea (Forster, 1801)
  • Mugil chanos Forsskål, 1775
  • Mugil salmoneus Forster, 1801

பாலமீன், பால்மீன் அல்லது துள்ளுகெண்டை (Chanos chanos) என்பது சனிடே குடும்பத்தில் தற்போது வாழும் ஒரே இனம் ஆகும். [2] இருப்பினும், கிரீத்தேசியக் காலத்திலிருந்து சனிடே குடும்ப மீன் இனங்களில் குறைந்தது ஐந்து அழிந்துபோன இனங்கள் உள்ளன.

இந்த இனத்திற்கு பல பொதுவான பெயர்கள் உள்ளன. இந்த மீன்களுக்கான ஹவாய் மொழி பெயர் அவா ( Awa), தயீத்திய மொழியில் அவா (ava) என்று அழைக்கப்படுகிறது. இது பிலிப்பைன்சில் பங்காஸ் என்று அழைக்கப்படுகிறது, அங்கு இது தேசிய மீன் என்று பிரபலமாக அறியப்படுகிறது. இருப்பினும் தேசிய கலாச்சாரம் மற்றும் கலை ஆணையம் பிலிப்பைன்ஸ் சட்டத்தில் இது குறித்து எதுவும் இல்லாததால் இது அவ்வாறு இல்லை என்று கூறியுள்ளது. [3] நவூரு மொழியில், இது ஐபியா என்று குறிப்பிடப்படுகிறது. இந்தோனேசியாவில் பால்ஃபிஷ் பாண்டெங் அல்லது போலு என்றும் அழைக்கப்படுகிறது.

பாலமீன்களானது இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் முழுவதும், தென்னாப்பிரிக்காவிலிருந்து ஹவாய் மற்றும் மார்குவேஸ், கலிபோர்னியாவிலிருந்து கலபகோஸ், வடக்கே ஜப்பான், தெற்கு ஆஸ்திரேலியா வரை காணப்படுகிறது. பாலமீன்கள் பொதுவாக 1 முதல் 30 மீ ஆழத்தில், தீவுகளைச் சுற்றியுள்ள வெப்பமண்டல கடல் நீரில் மற்றும் கண்டத் திட்டுகளில் வாழ்கின்றன. இவை அடிக்கடி கழிமுகங்கள் மற்றும் ஆறுகளில் நுழைகிறன. [4]

உடற்கூறியல் தொகு

 
சானோஸ் சேனோஸின் விளக்கம்

பாலமீன்கள் 1.80 மீ (5 அடி 11 அங்குலம்) வரை வளரும், ஆனால் பெரும்பாலும் 1 மீ (39 அங்) நீளத்திற்கு மேல் இருக்காது. இவை சுமார் 14 கிலோ (31 பவுண்ட்) எடைவரை எட்டும். மேலும் 15 ஆண்டுகள்வரை வாழக்கூடியன. உடலானது சிறிய வழவழப்பான செதில்களால் மூடப்பட்டிருக்கும். வாய் சிறியதாகவும் பற்கள் அற்றும் காணப்படும். முன்முகத்தின் மேலும் கண்ணின் அண்மையிலும் ஒரு செறிந்த கூழ் போன்ற பொருள் படர்ந்து இருக்கும். முதுகு சற்று வளைந்தும், ஒற்றைத் துடுப்புடனும் காணப்படும். வால்துடுப்புப் பெரியதாகவும், ஆழ பிளவுபட்டும் இருக்கும். இம்மீன்கள் வெள்ளி மயமாக காணப்படுகிறது. உதன் உடல் மேற்பகுதி ஒலிவ பச்சை நிறத்திலும், உடலின் நடுப்பகுதி வெள்ளி நீறமாகவும் இருக்கும். கடலிலிருந்து பிடிபட்ட மீன்கள் முதுகின் மேல் பளிச்சென்ற நீல நிற பளபளப்பைப் பெற்றிருக்கின்றன. ஆனால் மீன்கள் இறந்த பின்னர் அந்நீலநிறம் மறைந்து விடுகின்றது. இதன் துடுப்புகள் மஞ்சல் சாயல் கொண்டவையாகவும் கருமையாகவும் இருக்கும். முதுகுத் துடுப்பில் 13-17 மென்மையான கதிர்களும், பின் துடுப்பில் 8-10 மென்மையான கதிர்களும், வால் துடுப்பில் 31 கதிர்களும் உள்ளன.

உயிரியல் தொகு

இந்த மீன்கள் பொதுவாக பாசி மற்றும் சிறிய முதுகெலும்பிலி உயிரினங்களை உண்கின்றன. இவை பவளப் பாறைகளுடன் கடற்கரைகள் மற்றும் தீவுகளைச் சுற்றி கூட்டமாக திரிகின்றன. முட்டைகளில் இருந்து வெளிவரும் இளம் குஞ்சுகள் இரண்டு மூன்று வாரங்கள் கடலில் வாழ்கின்றன. பின்னர் இளம் கட்டத்தின் போது சதுப்புநிலங்கள், முகத்துவாரங்கள், சில நேரங்களில் ஏரிகள் போன்றவற்றிக்கு இடம் பெயருகின்றன. வளர்ந்த பின்னர் பாலியல் மற்றும் இனப்பெருக்கம் செய்ய கடலுக்கு மற்றும் திரும்பிவருகின்றன. பெண் மீன்கள் இரவில் ஆழமற்ற நீரில் 5 மில்லியன் முட்டைகள் வரை இடுகின்றன. [4] இவை வேகமாக நீந்தும் ஆற்றல் படைத்தவை. இவை அவ்வப்போது நீரிலிருந்து காற்று வெளியில் துள்ளுவதைக் காணலாம். [5]

மேற்கோள்கள் தொகு

 

  1. Freyhof, J.; Sparks, J.S.; Kaymaram, F.; Feary, D.; Bishop, J.; Al-Husaini, M.; Almukhtar, M.; Hartmann, S. et al. (2017). "Chanos chanos". IUCN Red List of Threatened Species 2017: e.T60324A3098466. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T60324A3098466.en. https://www.iucnredlist.org/species/60324/3098466. 
  2. Eschmeyer, W. N.; R. Fricke, eds. (4 January 2016). "Catalog of Fishes". California Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 25 January 2016.
  3. Pangilinan, Jr., Leon (3 October 2014). "In Focus: 9 Facts You May Not Know About Philippine National Symbols". National Commission for Culture and the Arts. Archived from the original on 26 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.
  4. 4.0 4.1 "{{{genus}}} {{{species}}}". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. {{{month}}} {{{year}}} version. N.p.: FishBase, {{{year}}}.
  5. ரெங்கராஜன், இரா.(2008), மீனின உயிரியல் மற்றும் நீரின வளர்ப்பு, சாரதா பதிப்பகம், சென்னை, ப. 98, 99.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலமீன்&oldid=3596875" இலிருந்து மீள்விக்கப்பட்டது