பால்யன் (சிற்றிதழ்)

பால்யன் இந்தியா காரைக்காலிலிருந்து 1944ம் ஆண்டு முதல் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

பால்யன் இதழில் தோற்றம்

ஆசிரியர் தொகு

  • உ. அ. அனீபா.

பலர் இணைவு தொகு

இது தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ. கா. அ. அப்துல் ஸமத் நாவலர் அ. மு. யூசுப் சாந்தி விகடன் அ. மு. அலி ஆகிய மூவரும் இவ்விதழை வளர்ப்பதில் இலவசமாக தமது சேவையினை வழங்கியுள்ளனர். இம்மூவரையும் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது பாலியன் இதழே.

உருவாக்கம் தொகு

பாலியன் இதழை முதலில் ஆரம்பித்தவர் காரை எம். ஏ. அலி என்பவராவார். இவர் தான் ஆரம்பித்த இதழை உ. அபூஹனிபாவிடம் ஒப்படைத்துவிட்டு சிங்கப்பூர் சென்றுள்ளார். ஹனிபா இவ்விதழை சிறப்பாக நடத்தியதாக கூறப்படுகின்றது. இது பற்றி 3ம் ஆண்டு தொடக்க இதழில் ஆசிரியர் பின்வருமாறு எழுதியுள்ளார். "நான் பிறந்தது முதல் சமூக சேவையில் சிறந்த முறையில் தொண்டாற்ற வேண்டும் என்பதுதான் எனது அடிப்படையான நோக்கம். என்னைப் பெற்றெடுத்து வளர்ப்பவர்களும் அதே நோக்கத்தையே எனக்கு உணவாக ஊட்டி வந்தார்கள். அதனால், தான் எனது நோக்கத்திலிருந்து சிறிதளவாவது உங்கள்பால் அமுல் நடத்த முடிந்தது, இது வயதுக் குழந்தையான என்னால் எதைச் செய்ய முடியுமோ அதை செய்துவிட்டேன்".

மலர்கள் தொகு

தமிழ்நாட்டில் ஆனந்த விகடன், கல்கி போன்ற இதழ்கள் சிறப்பான தீபாவளி மலர்களை வெளியிடுவதைப் போன்று பாலியனும் மலர்களை வெளியிட்டுள்ளது.

தரமான இலக்கிய சஞ்சிகை தொகு

சிற்றிதழ்களை ஆராயும் ஆய்வாளர்கள் பாலியன் ஒரு தரமான இலக்கிய சஞ்சிகை எனக் குறிப்பிடுவர். மணிக்கொடி சஞ்சிகை ஒரு விசாலமான எழுத்தாளர் வட்டத்தை உருவாக்கியது போன்று பால்யனும் எழுத்தாளர் அணியையொன்றை தோற்றுவித்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்யன்_(சிற்றிதழ்)&oldid=737595" இலிருந்து மீள்விக்கப்பட்டது